(Reading time: 42 - 84 minutes)

 

கோவிலில் இருந்து திரும்பியவர்களிடம் யாரும் எதையும் சொல்லவில்லை... சொன்னால் மயூரிக்கு தன் தந்தைக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்ற உண்மை தெரிந்துவிடும் என்று அஞ்சி யாரும் எதைப் பற்றியும் பேசிக்கொள்ளவில்லை... அன்றிரவே பெரியவர்கள் நால்வரும் ஊருக்கு கிளம்ப முடிவெடுத்தனர்...

செல்வியையும், ராசுவையும் அவர்கள் ஊருக்கு செல்லும் ரயிலில் அனுப்பிவைத்துவிட்டு ஜனாவையும், செந்தாமரையையும் தினேஷ் அழைத்தபோது, மாப்பிள்ளையை வர சொன்னேனே... சொன்னியாப்பா.... என்று கேட்டுக்கொண்டிருக்கும்போது, இதோ வந்துட்டேன் மாமா சொல்லுங்க... என்று ஆதர்ஷே அவர்கள் முன் நிற்க, செந்தாமரைக்கு ஆதர்ஷைப் பார்த்த மாத்திரத்திலே பிடித்துவிட்டது... தன் கணவன் சொன்ன அத்தனை குணங்களுக்கும் சொந்தக்காரனாய் அவன் இருந்தான்...

ஆதர்ஷின் கையைப் பிடித்துக்கொண்ட ஜனா, மயூரியும் என் பொண்ணு தான் மாப்பிள்ளை... அவளுக்கு நல்லது நடந்த பிறகே சாகரிக்கும் நடக்கட்டும் என்றவர், ராசுவை நான் சமாதானப் படுத்துறேன் என்று உறுதி அளித்தார்... பின், தினேஷ் தன் சொந்த மகன் என்ற உண்மையை அவனிடத்தில் சொல்லியவர், எனக்கும் தாமரைக்கும் பல வருடம் கழித்துப் பிறந்தவள் தான் சாகரி என்றவர், அவள் பிறந்த கதையை சொல்ல ஆரம்பித்தார்...

பல கோவில்களுக்குச் சென்று பல விரதம் இருந்து தான் சாகரி எங்களுக்கு கிடைத்தாள்... அப்படிதான் ஒருமுறை ஒரு கோவிலில் நீராடி ஈரச்சேலையுடன் கடவுளை தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று ஒரு பெரியவர் கூறினார்... அதனால் நானும் என் மனைவியை அழைத்துக்கொண்டு அந்த லக்ஷ்மி ஆலயத்திற்குச்சென்றேன்... அப்போது கடலில் குளிக்கச்சென்ற செந்தாமரை அலையின் சீற்றத்தில் நீரின் ஆழத்தில் ஆழ்ந்து போனாள்... மகனைப் பறிகொடுத்தது போதாதா?... இப்போது குழந்தை வேண்டி வந்த என் மனைவியையும் என்னிடமிருந்து ஏன் பறிக்கிறாய் கடவுளே... என்று நான் வாய் விட்டு கூறிய மறுநிமிடமே என் மனைவியை ஒரு பெண்மணி காப்பாற்றிக்கொண்டு வந்து என்னிடம் ஒப்படைத்தார்...

நீங்கள் பயப்படத் தேவையில்லை இனி... உங்கள் வேண்டுதல் நிறைவேறப் போகிறது... கடலுக்கே இளவரசி தான் உங்கள் மனைவியின் உயிரை மீட்டு தந்திருக்கிறாள்... வருகிறேன் என்று சென்றுவிட்டார் அந்த பெண்மணியும் காற்றில் கலந்த புகை போல்... அந்த சம்பவமும் எனக்கும் என் மனைவிக்கும் மட்டுமே தெரியும்... என் அன்னைக்கு கூட தெரியாது...

அதன் பின் குழந்தை பிறந்ததும், ஜாதகம் எழுத வேண்டுமென்று அம்மா சொன்னதைக் கேட்டு அந்த பெரியவரிடம் சென்றேன்... அவர் உன் மகள் அந்த மகாலக்ஷ்மியின் அவதாரம்... அவள் தான் ஜனித்துவிட்டேன் என்பதையே நீரின் மூலம் தான் உங்களுக்கு தெரியப்படுத்தியிருப்பாள்... அவள் பரந்து விரிந்திருக்கும் அந்த பெரும் கடலின் இளவரசி... அதனால் அவளுக்கு சாகரிகா என்று பெயரிடு... (சாகரிகா என்றால் பெருங்கடலின் இளவரசி என்று பொருள்...).. அந்த ராமனின் சீதை எப்படி துன்பங்களுக்கு விதி விலக்கானவள் இல்லையோ, அதே போல் தான் உன் மகளும்... அவளை அவளுடன் இருப்பவர் யாரும் சீதை என்று அழைக்க மாட்டார்கள்... அவளின் ஸ்ரீராமனைத் தவிர... அவனை நீ இரண்டாம் முறை சந்திக்கும்போது, நீ சொல்ல வேண்டியது... அவன் தன் மனதை திடப்படுத்திக்கொள்ள வேண்டும்... நடப்பவைகளை ஏற்றுக்கொள்ள, விதியின் சுழலில் அகப்பட்டுக்கொள்ள அவன் தயாராக வேண்டும்... இது தான்... அவர் சொல்ல சொன்னார்... அதன் பின் இதற்கு மேல் என்னால் சொல்ல இயலாது... முதன் முறை ஜாதகம் எழுதும் போதே இப்படி சொல்கிறேனே என்று எண்ண வேண்டாம்... நீ தொலைத்த சொத்து ஒன்று உன் கை வந்து சேரும்... இந்த நிறைவுடன் நீ செல்... மற்றதை அந்த நாராயணன் பார்த்துப்பான் என்று அந்த பெரியவர் சொன்னதை அப்படியே மகனிடத்திலும் மருமகனிடத்திலும் சொல்லிவிட்டு, எனக்கு மனதிற்கு எதுவோ நடக்கப் போவதாக தோன்றுகிறது... அவள் இனி எனக்கு மகள் என்பதை விட, உனக்கு தங்கை என்று தினேஷிடமும், இனி அவளுக்கு எல்லாம் நீங்கள் தான் என்று ஆதர்ஷிடமும் கூறிவிட்டு, இனி அவள் உங்கள் இருவரின் பொறுப்பு... நான் வருகிறேன்... என்று சென்றுவிட்டார் மனைவியை அழைத்துக்கொண்டு...

பரந்து விரிந்திருந்த சோலையில் தன்னவன் அந்த இடத்தையே அழகாக்கும் வண்ணம் சிரித்துகொண்டிருக்க, அவளை இரு கரம் நீட்டி வா என கண் அசைவில் அவன் அழைக்க, முதலில் நாணம் கொண்டு வர மறுத்தவள், பின் அவனின் காதலில் மெய்மறந்து அவனை நோக்கி அடியெடுத்து அவன் அருகில் செல்ல முயற்சிக்கும்போது, அந்த இடம் கடும் இருள் பரவி அவன் நிற்கும் இடத்திலுள்ள மலர்கள் எல்லாம் கருகி, அவனையும் அந்த நெருப்பு சூழ்ந்துவிட, ஒரு உருவம் அவளைக் கடந்து செல்கிறது... அது யார் என்று அந்த நிலவொளியில் அவள் தெரிந்து கொள்ள முயற்சிக்கும்போது, வேண்டாம் என்னை விட்டு போகாதே... என் காதலை எரிக்காதே... என்னுள் இருக்கும் என் சகிக்கு வலிக்கும் என்று அவன் கெஞ்ச கெஞ்ச அந்த உருவம் அவளை நோக்கி வருகிறது... தன்னவனுக்கு வலிக்கிறதே, தன்னவன் கதறுகிறானே... நான் செல்ல வேண்டும் என்று இவள் ஓரடி எடுத்து வைக்கையிலே அந்த உருவம் இவள் எதிரில் நிற்கிறது வழி மறித்து... கலைந்த கேசம், கசங்கி ஆங்காங்கே கிழிந்த ஆடை, ஓய்ந்த கால்கள், உடல் முழுவதும் காயங்கள்... என அந்த உருவம் பார்ப்பதற்கு ஒரு பெண் போல் தோற்றமளிக்க, யாராக இருக்கும் என்று இவள் கூர்ந்து பார்க்கையில், அதிர்ந்து விழிக்கிறாள்... தன் எதிரே நிற்கும் உருவம் தன்னுடையது... தன்னை அந்த கோலத்தில் பார்க்க அவளாலே முடியவில்லை... கண்ணீர் கோடுகள் முகத்தில் பதிந்திருக்க, அந்த உருவம் அப்படியே அவளுள் பாய்ந்த நேரம் சீதை என்று அவன் அலற, ராம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... என்று இவள் இங்கே விழிக்கவும் சரியாக இருந்தது...

நல்ல வேளையாக அங்கு அப்போது மயில் இல்லை... மயில் அவளது அறையில் உறங்கிக்கொண்டிருந்தாள்... சாகரிக்கு சுவாசம் சீராக இல்லை... இருதயம் வேகமாக துடித்தது... கோவிலில் அந்த சுவாமி சொன்னது நினைவுக்கு வர, கண்கள் கலங்க, உதடு துடிக்க, இன்னும் துடித்தாள்... இல்ல.. என் ராமிற்கு எதுவும் இல்லை... எதுவும் நடக்கக்கூடாது... ராம்...ராம்... என்று அரற்றியவளின் கவனத்தை அவளின் செல்போன் சிணுங்கல் கலைத்தது...

திரையில் ஒளிர்ந்தது சாட்சாத் அவளின் ராம் எண் தான்…. செல்போனை நெஞ்சோடு சேர்த்து இறுக்கி அணைத்தவள்… அவனை யாரிடத்திலும் தர மறுப்பது போல், நான் போகமாட்டேன்… நான் போகமாட்டேன்… என் ராம் விட்டு போகமாட்டேன் என்று பிதற்றினாள்…

மூன்றாவது தடவையாக அவனது எண் திரையில் ஒளிர… அழைப்பை ஏற்றவள், ராம்…. ரா……………ம்… ரா…………………………….ம்……. என்று அழத்துவங்கிவிட்டாள்…

சீதை!!!!.... என்னாச்சும்மா… சொல்லுடா….. ஏண்டா அழற?.... என்று கேட்க கேட்க அவளின் அழுகை நீண்டது… உங்களை நான் யாருக்கும் தர மாட்டேன் ராம்… தரமாட்டேன் என்று கதற ஆரம்பித்தாள்… நான் உனக்கானவன் மட்டும் தாண்டா… அழாதடி சகி… என்ன நடந்ததுன்னு சொல்லுடாம்மா… என்று கேட்டதும், அவள் அந்த கனவை நினைக்க, மீண்டும் மனம் பதற ஆரம்பித்தது அவளுக்கு…. இல்ல ராம்… நீங்க…… நீங்க…. நான்….. உங்களை…. என்றாள் மீண்டும் உளறியபடி…

சொல்லுடா சகி... எனக்கு என்ன?... கெட்ட கனவு கண்டியா?... என்ற அவனின் கேள்விக்கு... ரொம்ப கெட்ட கனவு தர்ஷ்... எனக்கு பயமாயிருக்கு... நீங்க என்னை விட்டு போகமாட்டீங்க தான?... நீ..ங்க... இல்....லாம.......... என்....னா.....ல வா...ழ..... மு...டி...யா...து...தர்ஷ்... நீங்க எனக்கு வேணும்... எனக்கு வேணும் தர்ஷ்... என்று கதறியவள், உங்களை யாருக்கும் நான் தரமாட்டேன்... என் தர்ஷ் யாருக்கும் தரமாட்டேன்... அய்யோ... உங்க மேல நெருப்பு.... நான் பார்த்துட்டு இருந்தேனே... இல்ல நீங்க... உங்களுக்கு எதுவும் ஆகாது... ஆக கூடாது... நீங்க நல்லா இருக்கணும்... என் ராம் நல்லா இருக்கணும்... என்று அழுதவளிடம், அழாதேடா குட்டிமா... நான் நல்லா இருக்கேன் சகி... பாரு... உங்கிட்ட கூட இப்போ பேசிட்டிருக்கேன்ல... அழாம சொல்லுடா சகி, என்ன நடந்துச்சுன்னு... என் சகி என்னிடம் சொல்லுவாள் தானே எல்லாம்???.... என்று அவன் கேள்வியாய் நிறுத்த...

அவள் அந்த கனவை திக்கி திணறி அழுது தீர்த்து சொல்லி முடித்தாள்… அதைக் கேட்டவனுக்கு அவள் நிலைமை புரிந்தது… அவள் பயந்து அழுவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை என அவன் உணர்ந்தான்…

ஜனா சொல்லிவிட்டு போனதிலிருந்து அவனின் மனதில் இனம் புரியா பயம் சூழ்ந்தது… அவன் அவளைப் பாத்த நொடியிலிருந்து அவளின் பாதுகாப்புக்கு தகுந்த ஏற்பாடு செய்தான் தான்… இருந்தும் ஜனா வார்த்தைகளை கேட்ட தருணத்திலிருந்து அவளிடம் அவன் ஒன்று செய்ய சொன்னான் தினமும்… அவள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போதும் திரும்ப வீட்டிற்குள் நுழையும்போதும் அவனுக்கு அவள் மிஸ்ட் கால் கொடுக்க வேண்டும்… அது மட்டுமல்லாது அவள் வெளியே சென்றாலும் வீட்டிற்கு வந்தாலும் அவளை கவனமாக இருவர் பின் தொடர செய்தான் ஆதர்ஷ்… அவள் மிஸ்ட் கால் மூலம் தெரியப்படுத்தும் முன்னமே அவன் அவளைப் பாதுகாக்க வைத்த இருவரும் அவனுக்கு தகவல் அனுப்பிவிடுவர்… இந்த மூன்று மாதங்களாக அவளை கண்ணுக்குள் வைத்து பாதுகாத்து வருகிறான் அவளுக்கும் தெரியாமல்…

அவன் நிம்மதியாக உறங்கவேயில்லை ஜனாவிடம் பேசிய பிறகு… எந்த நேரமும் அவளின் நினைவு தான்… ஏனோ இப்போது சில நாட்களாகவே அவன் மனதை இனம் புரியா பயம் கவலை ஆக்கிரமித்தது…

அவள் கனவு கண்டு கத்திய அதே நேரம் இங்கு இவனிடமிருந்து யாரோ அவளைப் பிரிப்பது போல் இருந்தது… ஆம்… அவளின் நினைவில் கண் மூடி அமர்ந்திருந்தவனின் கண்களில் சில காட்சிகள் தோன்றி மறைந்தது… அவள் அவனை விட்டு விலகி செல்வது போல்…

அதன் காரணமாக தான் அவன் இந்த அதிகாலையில் அவளுக்கு போன் செய்தது… அவனின் மனக்கலக்கத்தை தீர்க்கத்தான் அவன் போன் செய்தான்… ஆனால் இப்போது அவளின் கண்ணீரை, கவலையைத் தீர்ப்பதே தனது முதல் கடமை என்று புரிந்து கொண்டான்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.