(Reading time: 42 - 84 minutes)

 

ன்னும் எத்தனை நாள் நீ இப்படி இருக்கப் போற?... அந்தப் பையன் ஆதி பாவம் சாகரி… எதற்காக அவனை இப்படி விலக்கி வைக்குற?...

அன்று என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொன்ன பின்பு தினேஷும் சரி காவ்யாவும் சரி அவளிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை…

ஆனால் இனியும் கேட்காமல் இருப்பது தன் தங்கை   வாழ்க்கைக்கும் தன் தங்கையே வாழ்க்கை என்று எண்ணி வாழும் ஆதர்ஷிற்கும் நல்லதல்ல என்றெண்ணியே அவன் இந்த கேள்வியை கேட்டான் அவள் கோவிலில் இருந்து வந்த உடனே…

எதுவும் சொல்லாமல் அமைதியாக சென்றவளிடம், கேட்கிறேனே பதில் சொல்லும்மா  என்றான் பணிவாக…

“நான் ஏன் சொல்ல வேண்டும்?...” என்றாள் அவள் எடுத்த எடுப்பில்…

“நீதான் சொல்ல வேண்டும் எல்லாம்…: என்றான் அவன் தெளிவாக…

“உங்களிடம் சொல்ல எதுவுமில்லை… புரிந்து கொள்ள வேண்டியவர் புரிந்துகொண்டார்… முடிந்தது எல்லாம்…” என்றாள் விரக்திமிக... சிரித்துக்கொண்டே…

“என்ன செய்தாய்?... அவனிடம் என்ன சொன்னாய்?... இன்று கோவிலுக்குப் போகிறாயே  ஒருவேளை நல்லசெய்தி கொண்டு வருவாய் என்று நினைத்தேனே… இப்படி அதை இல்லை என்று ஆக்கிவிட்டாயே… என்ன செய்தாய்?... சொல்லு…” என்று அவளைப் பிடித்து உலுக்கியவனிடம்…

“நீங்கள் யார்?... உங்களிடம் நான் ஏன் சொல்ல வேண்டும்?...” என்று அவள் கேட்டு முடிக்கும் முன் காவ்யாவின் கை அவளது கன்னத்தில் பதிந்திருந்தது…

கவி..  வேண்டாம்..  சின்னப்பொண்ணு.. எதோ தெரியாம என்று அவன் சொல்லும் முன்பு…

என்ன சின்னப்பொண்ணு… அவள் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து தான் இந்த எட்டு நாட்களாக அவளிடம் ஒன்றும் கேட்காமல் இருக்கிறோம்… இன்னும் என்ன செய்ய வேண்டுமாம் இவளுக்கு… இன்றைக்கும் அவளிடம் அதைப்பற்றி ஒரு வார்த்தை கேட்டிருப்போமா?... அதைக் கொஞ்சம் கூட எண்ணாது நீ யார் என்று கேட்கிறாள்… அதைப் பார்த்துக்கொண்டு எப்படி பேசாமல் இருப்பது நான்?... அவள் காணாமல் போன நாள் முதல் நீங்கள் துடித்ததை பக்கத்தில் இருந்து பார்த்தவள் நான்… என்று கணவனிடம் சொன்னவள்,  என் கணவர் என் முன்னே அழுதாரே… அதை நீ அறிவாயாடி… இவ்வளவு ஏன் அவர் தான் உன் சொந்த அண்ணன் என்பதாவது உனக்கு தெரியுமா?.. என்று கேட்க,

சாகரி அதிர்ச்சியில் அப்படியே நிற்க, காவ்யா அனைத்தையும் சொன்னாள்… இப்போது கேளுடி அவர் யார் என்று… கன்னம் பழுத்துவிடும்… ஜாக்கிரதை… என்று அவள் கோபத்தில் பற்களைக் கடிக்க,

என் அண்ணனா?... என் கூடப் பிறந்தவரா …?... கூடப் பிறக்காத போதே அவரை நான் அண்ணனாக ஏற்றவள் அண்ணி… இப்போது எனக்கு வேறு வழி தெரியவில்லை… அதனால் தான் அண்ணனை அப்படி கேட்டேன்… அப்படியாவது என்னை மேலும் எதுவும் கேட்கமாட்டீர்கள் என்று எண்ணி தான்… என்றவள் அழ, அழாதே சாகரி என்று காவ்யா அவளை அணைத்துக் கொண்டாள்….

அவளிடமிருந்து விலகி தினேஷை நோக்கி சென்றவள்… என்னை மன்னிச்சிடுங்கண்ணா.. நான் என்றவளுக்கு அதற்கு மேல்வார்த்தைகள் வராது போக, கண்ணீரை அடக்கிக் கொண்டு நின்றவளிடம்,

அழாதேம்மா…அண்ணன் இருக்கேன் என்றவன் கையை நீட்ட, அவள் அந்த கையைப் பற்றிக் கொண்டாள்…

அண்ணன் இருக்கேண்டா… நீ கஷ்டப்படும் போது தோள் கொடுக்க… என் தங்கை சிரிச்சிட்டே இருக்கணும்டா… உன் கஷ்டத்தை எங்கிட்ட நீ பகிர்ந்துக்கணும்னு இல்லடா… ஆனா அந்த நேரத்துல உனக்கு ஆதரவா நான் இருப்பேண்டா…. உன் கஷ்டத்தை என் தோளில் இறக்கி வைச்சிடும்மா… அது ஒன்று மட்டும் இந்த அண்ணனுக்கு நீ வரமா கொடுத்தா போதும்… தருவதானே?... என்று கேட்டு முடிக்கும் போது அவள் அவன் தோள் சாய்ந்து அழுது தீர்த்தாள்…

சொல்லி அழ ஆளில்லாது தவித்தவள், இன்றும் சொல்லாமல் அழுது தீர்த்தாள் அவள் உடன் பிறந்தவனின் தோள் சாய்ந்து…

அண்ணா…அண்ணா…. என்ற அவளின் குரலும், கேவலும் மட்டுமே அந்த அறை முழுவதும் ஒலித்தது…

சாரிம்மா… கோபத்தில் அடிச்சிட்டேன் மன்னிச்சிடு சாகரி… என்றாள் காவ்யாவும் வந்து சமாதானம் செய்து…

பரவாயில்லை அண்ணி… என்றாள் சாகரியும்….

அந்த பையன் உன்னை காதலித்ததை தவிர வேறு என்ன பாவம் செய்தார்?... அவரிடம் ஏன் பேச மறுக்கிறாய்?... என்று காவ்யா கேட்க,

அவர் வாழ வேண்டும் அண்ணி… நானில்லாமல் வாழ வேண்டும்… அவர் அதற்கு பழகிக் கொள்ள வேண்டும் அண்ணி…. வேறெதுவும் என்னைக் கேட்காதீர்கள் அண்ணி… கேட்க சொல்லாதீங்க அண்ணா… ப்ளீஸ் என்று தமையனிடம் தஞ்சம் புகுந்தாள் அவள்…

கவி… ப்ளீஸ்… விடு… என்றவன், நீ எதுவும் சொல்ல வேண்டாம்மா.. என்று தங்கையிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது தினேஷ் கை பேசி சத்தம் எழுப்ப, காவ்யா அதை எடுத்து பேசியவள் அப்படியே அதை நழுவவிட்டாள்…

பெற்ற பிள்ளையின் கையால் எல்லா காரியங்களும் முடிந்த திருப்தியில் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தனர் ஜனாவும், செந்தாமரையும்…

தினேஷ் தாய்-தந்தை இறந்து 30 நாள் நிறைவடைந்தது… மூலையில் ஓர் ஓரத்தில் அமர்ந்திருந்த தங்கையை பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு வலித்தது… ஆதர்ஷைப் பார்த்து பேசாமல் அவளுக்குள் சிறை இருந்தாள்… இன்று பெற்றவர்கள் பிரிவு… எத்தனையைதான் தாங்குவாள் என் தங்கை… அவளுக்கு நல்வழி காட்டவே மாட்டாயா?... என்று அவன் புலம்பிய நேரம், அவனுக்கு ஒரு போன் வந்தது…

என்ன தினேஷ்… உன் தங்கை அழுகிறாளா?... இதெல்லாம் சொற்பம் தான்… அவள் அழ வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது…

டேய்… நீ என் கையில் மாட்டின.. செத்தடா… என்று தினேஷ் உறும,

அது உன் கையில் நான் கிடைத்தால் பார்த்துக் கொள்ளலாம்… இப்போது நான் சொல்வதை கவனமாகக் கேள்… உன் தங்கையை விட்டு எங்காவது தொலைவாக சென்று விடு… இல்லையென்றால்..

இல்லன்னா என்னடா பண்ணுவ…

ஒன்னும் பண்ணமாட்டேன்… உன் அம்மா-அப்பா உண்மையில் விபத்தில் இறந்து போனாங்க இல்லையா… அந்த மாதிரி உன் ஒரே ஒரு தங்கையும் நல்லா கவனி, உனக்கென்று இருக்கும் ஒரே ரத்த பந்தமும் விபத்தில் சிக்கி மாண்டு போனதாக ஊர் சொல்லும்… நிஜத்தில் அவள் என் கையால் பலியாகி இருப்பாள்…

டேய்… பாவி… அப்படி எதுவும் செய்து விடாதே என்று துடித்துப் போனான் தினேஷ்…

அடடா… தினேஷ்… நான் சொல்லதான் செஞ்சேன்… அதுக்கே இப்படியா… நல்லது… சீக்கிரம் பிரிந்துவிடு…. இல்லையென்றால் நான் சொன்னதை செய்ய வேண்டி வரும்… என்றவன் அதற்கு மேல் பேசவில்லை…

அன்று காவ்யாவிடம் தினேஷும் சாகரியும் என்னவென்று கேட்க, அவள் சொன்ன தகவலில் முற்றிலும் உறைந்து போயினர் இருவரும்…

திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பி வரும் வழியில் நடந்த விபத்தில் அவர்களுடன் பயணித்த சிலர் பலத்த காயங்களோடு உயிர் திரும்ப, சிலர் மாண்டு போயினர்…

மருத்துமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவரின் அருகே நின்ற தினேஷிற்கு தான் என்ன தவறு செய்தோம்.. ஏன் இப்படி என் வாழ்க்கை ஆனது என்ற கேள்வி எழுந்தது… பெற்றவர்கள் இருந்தும் இல்லாமல் ஆசிரமத்தில் வளர நேர்ந்த நிலை, சரி சொல்லிக் கொள்ள உறவென்று இரு தாய் தந்தையர் கிடைத்தனரே என்று அவன் மகிழ்ந்த நேரம், அவர்களில் ஒருவர் தான் உண்மையில் தனக்கு உயிர் கொடுத்தவர்கள் என்று அறிந்தான்… அதற்குள் அந்த சந்தோஷம் மறைவதற்குள், இப்படி இருவரையும் இந்த நிலையில் பார்க்க நேர்ந்த விதியை எண்ணி அவன் மிக நொந்து போனான்…

அவர்கள் இருவரின் கண்களும் நிறைவாக மகனையும் மருமகளையும் பார்த்ததும் மூடிக் கொண்டன…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.