காலை மணி நான்கை தொட்டிருந்தது.
மறுபடியும் ஒலித்தது பரத்தின் கைப்பேசி. நல்ல உறக்கத்தில் இருந்தவன் திடுக்கிட்டு விழித்தான்
மறுபடியும் அபர்ணாவாக இருக்குமோ என்று நினைத்தப்படியே கைப்பேசியை எடுத்தான். அதன் திரையில் ஏதோ ஒரு புது எண் ஒளிர்ந்தது.
யோசனையுடனே கைப்பேசியை அழுதியவன் 'ஹலோ பரத் ஹியர்' .என்றான்.
'சாரி டு டிஸ்டர்ப் யூ என்றது மறுமுனை. நான் அஸ்வினி பேசறேன்.
மெல்ல எழுந்து அமர்ந்தான் பரத், பதில் சொல்லவில்லை அவன்.
ஹலோ நான் அஸ்வினி பேசறேன் என்றாள் மறுபடியும்.
ம். சொல்லு. என்றான் பரத். விஷ்வாவின் மேல் காட்டும் கோபத்தை ஏனோ அவள் மீது காட்ட தோன்றவில்லை அவனுக்கு.
இவளுக்கு என்ன தைரியம் இருந்தா நமக்கு போன் பண்ணுவான்னு தோணுதா பரத்.?
விஷயம் என்னனு சொல்லுமா. என்றான் பரத்.
நான் இப்போ ட்ரைன்லே சென்னை வந்திட்டிருக்கேன். என்னை வந்து கொஞ்சம் நீங்க பிக் அப் பண்ணிக்க முடியுமா? கேட்டாள் அஸ்வினி..
என்னடா அண்ணனை விட்டுட்டு நமக்கு போன் பண்றாளேன்னு நினைக்காதீங்க. எனக்கு அம்மாவை பார்க்கணும். திடீர்ன்னு வீட்டுக்குள்ளே வந்தா அம்மா என்ன சொல்வாங்களோன்னு பயமா இருக்கு. உங்களோட வந்தா அம்மா ஒண்ணும் சொல்லமாட்டாங்க அதான்.
ட்ரைன் எத்தனை மணிக்கு சென்னை வரும்.? கேட்டான் பரத்.
அடுத்த அரை மணி நேரத்தில் ரயில் நிலையத்தில் இருந்தான் பரத்.
ரயில் வந்து நின்றது. கதவின் அருகில் வந்து நின்றாள் அஸ்வினி.
நடைமேடையில் இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தவன் மெல்ல எழுந்து அவள் அருகில் வந்தான்.
அவள் இறங்க கொஞ்சம் சிரமப்பட அவளுக்கு உதவும் எண்ணத்தில் அவளை நோக்கி கை நீட்டினான் பரத்.
அவன் கையை பற்றிக்கொண்டு கீழே இறங்கினாள் அஸ்வினி.
இறங்கி நடைமேடையில் நின்றவள், அவளது பையை தூக்கிகொண்டு அவள் பக்கம் திரும்பியவனின் கண்களை ஆழமாக ஊடுருவினாள்.
தொடரும்...
{kunena_discuss:726}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.