(Reading time: 12 - 23 minutes)

விடு கௌரி, அவா நிலைலேர்ந்து யோசிச்சுப் பாரு. அவா பண்ணினது சரின்னு தோணும். எப்பவுமே கல்யாண விஷயத்துல தாங்கள் கடன்படறதை அந்தக் குழந்தைகளுக்கு தெரியக் கூடாதுன்னுதான் பெத்தவா நினைப்பா”, லக்ஷ்மி நடுவில் புகுந்து சமாதானம் செய்தார்.

இதுவரை அமைதியாக அனைவர் பேசுவதையும் கண்கள் கலங்க கேட்டுக் கொண்டிருந்த ராமன், கௌரி அருகில் அமர்ந்து, “கௌரி மறுபடியும் உன்கிட்ட சொல்லாம மறைச்சதுக்கு சாரி கேட்டுக்கறேன். வட்டிக்கு ஆசைப்பட்டு அதுல பணம் போட்டதுதான் நான் பண்ணின பெரிய தப்பு. அதால உன் கல்யாணத்துக்கு பாதிப்பு வரப்போறதுங்கறதைத் தவிர வேறெதுவும் தோணலை. உன்கிட்ட சொல்லி நீ கல்யாணத்தை நிறுத்திடலாம்ங்கறா மாதிரி பேசிட்டா அதைக் கேக்கற சக்தி அப்போ நேக்கு இல்லை. அதனால நான்தான் அம்மாகிட்டயும், ஹரிகிட்டையும் நோக்கு விஷயம் தெரிய வேண்டாம்ன்னு சொன்னேன். ஹரி சொன்னா மாதிரி உன்னை ஒதுக்கி வச்சுப் பண்ணலை கௌரி. பயத்துலதான் அப்படி பண்ணினோம்”, என்று விளக்க ஆரம்பித்தார்.

“என்னப்பா இது கண் கலங்கிண்டு. விடுங்கோ. டக்குன்னு நேக்கு விஷயம் தெரிஞ்சோன கோவம் வந்துடுத்து. மத்தபடி ஒண்ணும் இல்லை. நீங்க கவலையேப் படாதீங்கோ. நேக்கு இப்போ கௌஷிக் ஆத்துல எல்லாரையும் ரொம்பப் பிடிச்சுப போனதால இனிமே, நீங்களே கல்யாணத்தை நிறுத்தறேன்னு சொன்னாலும் நான் கேக்க மாட்டேன். கௌஷிக்கோட ஓடிப் போயானும் கல்யாணம் பண்ணிப்பேன்”, என்று அவரை ஆறுதல் படுத்த கௌரி உளற, ஜானகிக்கு மறுபடி BP எகிற ஆரம்பித்தது. இது என்ன இந்தப் பொண்ணு தத்து பித்துன்னு பேசுகிறதே என்று. லக்ஷ்மி அவள் பேசுவதை விளையாட்டாக எடுத்துக் கொண்டு சிரிக்க ஜானக அப்பாடா என்று இழுத்த மூச்சை விட்டார்.

“அப்பா, நீங்க ஏதோ உங்க friend கிட்ட பெசினேள்ன்னு அம்மா சொன்னா. அவர் என்ன சொன்னார்?”, என்று பத்துவைப் பார்த்து கௌரி கேட்க பத்து பாலுவிடம் பேசிய விஷயத்தை அவளிடம் சொன்னார்.

கௌரி ராமனிடம் திரும்பி, “ஹ்ம்ம் அப்பா என்கூட வேலை செய்யற மணியோட மாமனாரும் ACP யாதான் இருக்கார். நான் ஆபீஸ்லேர்ந்து கிளம்பறதுக்கு முன்னாடி அவர்கிட்ட பேசினேன். அவரும் இப்போ பத்து அப்பா சொன்னதையேதான் சொல்றார். மணி இன்னைக்கு சாயங்காலம் ஒரு ஏழு மணிக்கு மேல அவாத்துக்கு வர சொன்னார். அவரோட மாமனாரை நேருலப் பார்த்து பேசலாம்ன்னு சொல்லி இருக்கார். போய் பேசி பார்க்கலாம்.

“சரிம்மா, நாம போய் பார்க்கலாம் நோக்கு அப்பா மேலக் கோவம் இல்லை இல்ல”

“கோவம்லாம் எப்பவுமே இல்லைப்பா, வருத்தம்தான். அதுவும் இப்போ இல்லை. தெரியலை, நாளைக்கு நேக்கு இந்த மாதிரி ஒரு நிலை வந்தால் நானும் இப்படித்தான் யோசிப்பேனோ என்னவோ”, என்று ராமனிடம் கூறி விட்டு, பத்துவின் புறம் திரும்பிய கௌரி, “சாயங்காலம் மணி சார் ஆத்துக்கு நீங்களும் வரேளாப்பா”, என்று கேட்க அவரும் வருவதாக ஒத்துக் கொண்டார்.

ரிப்பா இப்போ மெயின் விஷயத்துக்கு வரலாம். இப்போ அந்தப் பணத்தை மறந்துடுங்கோ. அது கிடைக்கறப்போ கிடைக்கட்டும். இப்போ எத்தனைப் பணம் கல்யாணத்துக்கு தேவைப்படறது. மறைக்காம உண்மையான தொகையை சொல்லுங்கோ?”

“அது ஒரு நாலு லட்சம் தேவைப்படறது கௌரி”

“என்னண்ட இன்னும் ஒரு ரெண்டு லட்சம் இருக்கு. இன்னும் ஒரு ரெண்டு லட்சம் அட்ஜஸ்ட் பண்ணினாப் போருமே”, என்று கௌரி கூறிக்கொண்டிருக்கும்போதே நடுவில் புகுந்த ராமன், “இல்லை கௌரி அதை எடுக்க வேண்டாம்”, என்று கூறினார்.

“அப்பா முன்னாடி நீங்க பணம் வச்சுக்கணம்ன்னு சொன்னது ஓகே. அப்போ நம்மாத்துல கௌஷிக் ஆத்துல எல்லாரும் எப்படி இருப்பான்னு தெரியாது, எனக்கும் வேலை கிடைக்குமான்னு தெரியாத நிலை. ஆனால் இப்போ அப்படி இல்லை. வேலையோடதான் சிங்கப்பூர்க்கே போகப் போறேன். அப்படியே இல்லாட்டாலும் உங்க மாப்பிள்ளை சம்பாதிக்கப் போறதே நான் செலவழிக்கதான். அதனால நீங்க கவலைப்படாதீங்கோ. நான் நீங்க வாங்கிக்கறேளான்னு கேள்வியா கேக்கவே இல்லை. வாங்கிண்டுதான் ஆகணும்ன்னு கண்டிஷனா சொல்றேன். நான் இந்த இருந்து இப்போ வேலையை விட்டுட்டு அங்க புதுசா ஜாயின் பண்றதால என்னோட PF அக்கௌன்ட் இந்தியால க்ளோஸ் பண்ணிடுவா. அதுல நேக்கு ஒரு ரெண்டு லட்சம் வரும். ஆனா அது வர்றதுக்கு ஒரு ஆறு மாசம் ஆயிடும். சோ நீங்க போடறதா சொன்ன அந்த எக்ஸ்ட்ரா நகையை மட்டும் அந்தப் பணம் வந்த உடனே போடுங்கோ. இப்போதைக்கு கல்யாண செலவை மட்டும் பார்க்கலாம்”, என்று கூறி முடிக்க, லக்ஷ்மி பெருமையுடன் தன மாட்டுப்பொண்ணை பார்த்தாள். ஜானகிதான் சம்மந்தி மனுஷா இவ பேசறதைப் பார்த்து என்ன நினைப்பாளோ என்று கிளியுடன் கௌரியைப் பார்த்தாள்.

ராமன் வருத்தத்துடன் கௌரியை நோக்கி, “இதுனாலதான் கௌரி நோக்குத் தெரிய வேண்டாம்ன்னு நினைச்சோம். பாரு உன் பணத்தை எடுத்து உனக்கே கல்யாணம் பண்றா மாதிரி இருக்கு. பெத்தவாளோட கடமைலேர்ந்து என் பொறுப்பில்லாத்தனத்தால விலகிட்டேனோன்னு இருக்கு”

“அப்பா இன்னொரு வாட்டி பொறுப்பில்லாம அப்படின்னு பேசாதேங்கோ. இத்தனை வருஷம் எங்களுக்காகத்தான் நீங்க கஷ்டப்பட்டுருக்கேள். அதனால அந்தப் பேச்சை விடுங்கோ. இப்போ என்ன உங்களுக்கு கஷ்டமா இருந்தா, உங்கப் பணம் வந்த உடனே இது எல்லாத்தையும் திருப்பி கொடுத்துடுங்கோ . வெளில எவன் கிட்டயோ கடம் வாங்கறதுக்கு வெட்டியா பாங்க்ல இருக்கப் போற பணத்தை யூஸ் பண்ணலாம் இல்லை”

“கௌரி சொல்றது ரொம்ப சரி. Infact நீங்க அந்த நகையை போடவே வேண்டாம். இப்போதைக்கு கல்யாண செலவை மாட்டும் பார்த்தாப் போறும்”, என்று லக்ஷ்மி சொல்ல,

“இல்லை மாமி, நாங்க சொன்ன பேச்சை தட்டினதா இருக்க வேண்டாம். இப்போதைக்கு கௌரி சொல்றா மாதிரி அவகிட்ட இருந்து வாங்கிக்கொண்டு பணம் வந்த உடனே அதைத் திருப்பி கொடுத்துடறோம். கௌரி இப்போ நீ சொல்றதை அப்பா கேக்கறா மாதிரி நாளைக்கு நாங்க பணத்தைத் திருப்பறத்தையும் மறுபேச்சு பேசாம வாங்கிக்கணும். மாமி நீங்கதான் சாட்சி”, என்று ராமன் கூற, கௌரி சரி, மாட்டேன் என்று எல்லாப் பக்கமும் தலையை ஆட்டினாள்.

லக்ஷ்மி மாமி ராமனிடம், “பாருங்கோ என் மாட்டுப்பொண்ணு எத்தனை சமத்துன்னு. இத்தனை நாளா பணத்துக்கு என்ன பண்றதுன்னு மண்டையை உடைச்சுண்டு இருந்த விஷயத்தை ஒரே நிமிஷத்துல சரி பண்ணிட்டா”, என்று கூறி கௌரியை ஆசையுடன் நெட்டி முறித்தார். (ரொம்ப சரி மாமி. ராமன் சார் அப்போவே விஷயத்தை சொல்லி இருந்தா நானும் நாலைந்து அப்டேட்ஸ் மண்டையை உடைச்சுண்டு எழுதி இருக்க மாட்டேன். டும் டும் டும் கொட்டி இருப்பேன். என் கஷ்டம் எங்க அவருக்குப் புரியறது)

“நன்னா சொல்லுகோ அம்மா. எப்பவுமே நான்னா இவாளுக்கு எல்லாம் கிள்ளுக் கீரைதான்”, என்று வராதக் கண்ணீரை கௌரி துடைத்துக் கொள்ள, ஜானகி கௌரியை முறைத்தார். பின் நடக்க வேண்டிய கல்யாண விஷயங்களை பேசிவிட்டு, ராமன், பத்து, கௌரி மூவரும் கிளம்பி மணி வீடு செல்ல, ஹரி லக்ஷ்மியை விட அவர்கள் வீடு சென்றான். (ஸ்வேதா be ரெடி. உன்னைப் பார்க்க உன் ஆளு வரான்)

 தொடரும்

Episode # 15

Episode # 17

{kunena_discuss:780}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.