(Reading time: 10 - 19 minutes)

 

"சொல்லுங்க..."

"அது!"-ஷைரந்தரி பார்வதியை உற்று நோக்கினாள்,திடீரென்று அவள் இதழில் புன்னகை தெரிந்தது.

"சிவா! வயலுக்கு போயிருக்கான்.இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான்!"-அப்போது,

"அம்மூ!"

"அர்ஜீன்?"-ஷைரந்தரியோடு பார்வதி இருந்ததை பார்த்து தயங்கினான்.

"என்னடா?"

"அது...வந்து!"

"சுத்தம்,உங்க யாருக்கும் வேற டயலாக்கே தெரியாதா?"

"என்ன?"

"ஒண்ணுமில்லை...என்ன விஷயம்?"-அவன் பார்வதியை பார்த்தான்.

"என்னண்ணா விஷயம்?"-பார்வதி.

"சொல்லேன்டா!"

"பார்வதிக்கு வீட்ல கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றாங்க!"-கேட்டவள் ஆடி விட்டாள்.வேறு யாரு நம்ம பார்வதி தான்!

"என்னடா சொல்ற?"-நடந்தவற்றை கூறினான்.

"இது அவருக்கு தெரியுமாண்ணா?"-அவளுக்கு என்ன பதில் அளிப்பது?தெரியும் என்றா?தெரியாது என்றா?அவனது மௌனம் அவளுக்கு அனைத்தையும் புரிய வைத்தது.

"அவர்,எதையும் கேட்கலையா?"-

"............."-அவள் கண்களில் நீர்த்துளி சேர்ந்தது.

"அண்ணி!நீங்க டென்ஷன் ஆகாதீங்க..."

"இல்லை ஷைரு! அவர்,சரியில்லை... என்னமோ நடக்குது! இன்னிக்கு,இவ்வளவு தூரம் வந்தும் அவர்     எல்லாத்தையும் அலட்சியமா விடுறார்!"-பார்வதி,அழுதுக் கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டாள்.

ஷைரந்தரிக்கு இதை எப்படி சரிக்கட்டுவது என்ற வழி விளங்கவில்லை.

"எங்கடா அவன்?"

"வயல்ல இருக்கான்!"

"அப்பாக்கு போன் பண்ணி வர சொல்லு அர்ஜீன்!"

"ஷைரு சிவாக்கிட்ட..."

"அப்பாவை வர வை! நான் பார்த்துக்கிறேன்!"

"என்ன பண்ண போற?"

"இவங்க இரண்டுப் பேரும் சேரணும்னு நான் தீர்மானித்தேன்.என்ன நடந்தாலும்,இதுல எந்த மாறுதலும் இருக்காது!"

"அம்மூ!"-ஷைரந்தரி கோபமாக சென்றுவிட்டாள்.

னிமையில் அமர்ந்து கொண்டு எதையோ சிந்தித்து கொண்டிருந்தான் சிவா.

'இப்போது என்ன தான் செய்வது?தங்கையின் வாழ்வினை பற்றி சிந்திக்கும் பட்சத்தில்,தன் வாழ்க்கை கேள்வி குறியாகி உள்ளதே??என்ன நடந்தாலும் சரி,ஷைரந்தரியின் நிழலைக் கூட எந்த சக்தியும் நெருங்க அனுமதிக்க மாட்டேன்!எனது தீர்மானத்தை யாரும் மாற்ற முடியாது!"-அப்போது,

"சிவா!"-கண்களை திறந்தான்.

"அப்பா?"

"என்னடா எதாவது பிரச்சனையா?"

"இல்லையேப்பா! நீங்க எப்போ வந்தீங்க?என்னாச்சு?ஏன் இப்படி கேட்கிறீங்க?"

"2 நாட்களுக்கு முன்னாடி தான் சென்னைக்கு வந்தேன்.காலையில,அச்சு (அர்ஜீன்) போன் பண்ணி,வீட்டு வர சொன்னான்.என்னடான்னு கேட்டா,ஷைரு வர சொன்னதா சொன்னான்!"-சிவாவிற்கு புரிந்துவிட்டது.ஷைரந்தரிக்கு விஷயம் தெரிந்துவிட்டது என்று!!!

"எதாவது பிரச்சனையா?"

"பிரச்சனை தான்பா!"-என்றப்படி உள்ளே நுழைந்தாள் ஷைரந்தரி.

"குட்டிம்மா?என்னாச்சுடா?"

"கேளு...உன் பையன்கிட்டயே கேளு!"

"என்னடா பண்ண??"

"............"

"அவன் சொல்ல மாட்டான்,எப்படி சொல்வான்?"

"என்னம்மா ஆச்சு?"

"சிவா,பார்வதியை லவ் பண்றான்பா!"

"என்ன?என்னம்மா சொல்ற?"

"ஆமாப்பா!"

"நிஜமாவா சிவா?"-அவன்,மௌனம் சாதித்தான்.

"இதுக்கா என்ன ஊர்ல இருந்து வர வைச்ச?நல்ல விஷயம் தானே??உன் அண்ணனுக்கு லவ் பண்ண வரும்னு தெரியாம பேச்சே??"-என்றார் சிரித்தப்படி,

"அப்பா?"-சிவா.

"விடுடா! அந்தக் காலத்துலயே நானும் உன் அம்மாவும் லவ் மேரேஜ் தான்!"

"அப்பா...இப்போ அப்போ அது இல்லை பிரச்சனை..."-என்றப்படி முழு விவரத்தையும் கூறினாள் ஷைரந்தரி.

"அப்படியா?கொஞ்சம் கஷ்டம் தான்! ஏன்டா,அந்தப் பொண்ணுக்கு தெரிஞ்சா எவ்வளவு கஷ்டப்படுவா?எந்த முயற்சியும் பண்ணலையாடா நீ?"

"நல்லா கேளுப்பா!"

"அப்பா,கொஞ்ச நாளுக்கு எந்த முயற்சியும் எடுக்க முடியாது!"

"நீ என்னடா சாமியார் கணக்கா பேச ஆரம்பிச்சிட்ட?"

"இதெல்லாம் வேலைக்கு ஆகாது,சிவாக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிடணும்!"

"ஷைரு...நீ என்னம்மா பைப்ல வர தண்ணியை படக்குன்னு நிறுத்திடனும் மாதிரி சொல்ற?"

"அப்பா...காமெடி எல்லாம் வேணாம்.சிரிக்கிற மாதிரி நான் இல்லை.அவனுக்கு கல்யாணம் நடந்தா அது பார்வதிக் கூட தான், இல்லைன்னா அவன் பிரம்மச்சாரி தான்!"

"ஐயோ...குட்டிம்மா...என் வம்சம் விருத்தியாகணும்!"

"அப்போ சீக்கிரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க!"-பொரிந்து தள்ளிவிட்டு வேகமாக சென்றுவிட்டாள் ஷைரந்தரி.

ழுது அழுது கண்கள் சிவந்து போயிருந்தன பார்வதிக்கு!!

அவள் எதிர்ப்பார்த்து  இருந்தாளா?இப்படி எல்லாம் நடக்கும் என்று??எதற்கு இவள் சிவாவை பார்க்க வேண்டும்?தன் மனதை அவனுக்கு தானம் அளிக்க வேண்டும்??இப்படி,ஒரு சிக்கலில் தவித்து ஏன் அவதிப்பட வேண்டும்??ஒருமுறை மனதில் ஒருத்தனை தலைவனாக வைத்துவிட்டு,அவனை தூக்கி எறியவும் முடியவில்லை.-பலவாறு சிந்தித்து               கொண்டிருந்தவளின் தோளில் கை வைத்தாள் ஷைரந்தரி.

"அண்ணி!"

"வாங்க..."-கண்களை துடைத்துக் கொண்டாள்.

"கவலைப்படாதீங்க அண்ணி! எல்லாம் சரியாயிடும்!"

"இல்லைங்க...எனக்கு அந்த நம்பிக்கையே இல்லை!"

"ஏன் இல்லைம்மா?"-என்றப்படி வந்தார் பாட்டி,அவரை தொடர்ந்து யுதீஷ்ட்ரன்.

"பாட்டி?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.