(Reading time: 10 - 19 minutes)

 

"னக்கு வீட்டில மாப்பிள்ளை       பார்த்திருக்கிறோம்!"

"பாட்டி?"

"பையன் பார்க்கிறதுக்கு லட்சணமா இருக்கான்.யுதீஷ் கூட பார்த்தான் அவனுக்கூட பிடிச்சிருக்கு!"-பார்வதி முகத்தில் இருந்த சிறிது நம்பிக்கையும் மறைந்தது.ஷைரந்தரி,யுதீஷ்ட்ரனை ஒரு பார்வை பார்த்தாள். அது,கோபமா?ஏக்கமா?அவநம்பிக்கையா?வெறுப்பா?என்ன பார்வையோ?ஆனால்,ஒன்று அவனால்,அதில் இருந்து மீள முடியவில்லை. ஸ்தம்பித்துப் போனான்.

"பார்வதி!"

"ஆ...சொல்லுங்க பாட்டி!"

"என்ன ரெண்டுப் பேரும் பேச மாட்றீங்க?"

"அது...பாட்டி!சிவா..."

"சிவாக்கு கூட தெரியுமே! அவனுக்கு இதில சம்மதம் தான்!"

"என்ன பாட்டி சொல்ற?"-ஷைரந்தரி.

"ஆமாம்மா!முதல்ல என்னன்னு தெரியலை... அவன் முகம் கொஞ்சம் மாறிச்சு,அப்பறம் உங்க இஷ்டம் பாட்டின்னு போயிட்டான்!"-பார்வதி,வெடித்து விடுவாள் போல் ஆனாள்.தலை குனிந்தப்படியே நின்றிருந்தாள்.

"பையன் பேர் முதற்கொண்டு உனக்கு பொருத்தமா இருக்கு!"

"................"

"அவன் பேரு சிவா!"-சரக்கென்று நிமிர்ந்தாள் பார்வதி.

"என்ன முழிப்பு??"

"பாட்டி?"

"அவன் கூட நம்ம ஷைரந்தரிக்கு அண்ணன் முறை தான்!"-ஷைரந்தரி முகத்திலும்,ஆச்சரியக்குறி!!!

"யுதீஷ் எல்லாத்தையும் சொல்லிட்டான்!"

"................."

"அவன்,உன் கல்யாண பேச்சை நான் எடுக்குறேன்னு சொன்ன போதே சொல்லிட்டான்.இன்னிக்கு, இவ அப்பா வந்து இருந்த சந்தேகத்தையும் தீர்த்து வச்சிட்டான்!"

"அப்பாவா?"-ஷைரு.

"ஆமாம்மா....ரகு வந்து பொண்ணு கேட்டுட்டான். என்ன பாரு??சந்தோஷமா?""பாட்டி!"-அவள்,அவரை அணைத்துக் கொண்டாள்.

"என்னம்மா இது?குழந்தை மாதிரி?உன் சந்தோஷம் தானே,எனக்கு முக்கியம்?"

"................."

"கல்யாணப் பொண்ணு ஆகப்போற,அழக்கூடாது!இங்கே பார்..."-நிமிர்ந்தாள்.

"யுதீஷ்...வந்து உன் தங்கச்சியை               சமாதானப்படுத்து வா!"

-அதுவரையில் கையை கட்டிக்கொண்டு மனதுள் சிரித்துக் கொண்டிருந்தவன்,வாய்விட்டு சிரித்து விட்டான்.

"பாரு...பயந்துட்டியா?"

"போண்ணா!இப்படியா பயமுறுத்துவ?"

"ஹே...சும்மா தான்டா!நான் தான் அன்னிக்கே சொன்னேன்ல?அது எப்படி உனக்கு விருப்பம் இல்லாததை செய்வேன் சொல்லு?"

"அண்ணா!"-மீண்டும்,அவன் மீது சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.

"ஹே...அழாதே!செல்லம்ல!"

"இல்லை..."

"தங்கம்!"-ஒரு வழியாக சமாதானப்படுத்தினான்.

"ம்...இப்போ,மிஸ்... விஜயராகவன்,நாளைக்கு மிஸஸ்.சிவா இல்லை?"

"போண்ணா!"-சிணுங்கினாள் பார்வதி.

"வெட்கமா?வாரே...என் கண்ணே பட்டுவிடும் போல இருக்கே?"

"போண்ணா!"-அங்கிருந்து ஓடியேவிட்டாள் பார்வதி.அவரை பின்தொடர்ந்து பாட்டியும் சென்று விட்டார்.

ஷைரந்தரியும்,யுதீஷ்ட்ரனும் மட்டும் இருந்தனர். அதுவரையில்,கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தவன் அமைதியானான்.மெதுவாக ஷைரந்தரியின் பக்கம் திரும்பினான்.

அதுவரையில்,அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள்,சட்டென்று,வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

சிறிது நேரம் மௌனம் தான் இருந்தது.பின் நிதானத்திற்கு வந்தவளாய்,

"தேங்க்ஸ் யுதீஷ்!"என்றாள்.

"எதுக்கு?"

"சிவா விஷயத்தை எடுத்து சொன்னதுக்கு!"

"நான் பார்வதிக்காக தான் சொன்னேன்!"

"அப்போ,என் அண்ணி விஷயத்தை சொன்னதுக்காக தேங்க்ஸ்!"

"வெல்கம்!"-ஷைரந்தரி மெல்லிய சிரிப்பை அவனுக்கு பரிசளித்தாள்.

"உன்கிட்ட ஒண்ணு சொல்லட்டா?"

"சொல்லுங்க..."

"நீ சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்க...கோபப்படும் போது அதைவிட அழகா இருக்க!"-அவனது இந்த வர்ணிப்பை அவள் எதிர்ப்பார்க்கவில்லை.

"அப்போ! இனி நான் உங்கக்கிட்ட        கோபப்பட்டுட்டே இருக்கேன்!"

"நோ ஃப்ராப்ளம்! நான் அதுக்கும் தயார் தான்!"-ஷைரந்தரி மீண்டும் சிரித்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.அவளின் அந்த மர்ம சிரிப்பினை நினைக்கும் போது யுதீஷ்ட்ரனுக்கும் தானாய் புன்னகை அரும்பியது.

தொடரும்

Go to Episode # 10

Go to Episode # 12

{kunena_discuss:751}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.