(Reading time: 9 - 18 minutes)

11. காற்றாக நான் வருவேன் - Anna Sweety

ன் மனைவியுடன் தன் தாய்வீட்டை நோக்கி கிளம்பினான் அபிஷேக். காலை மனதை ஆக்ரமித்திருந்த அக் கனவு தந்த உணர்வு மட்டுபட்டு....இதமாகவே இருந்தது இப் பயணம்.

பயணத்தின் பாதியில் ஒரு நகரத்தைக் கடக்க வேண்டும். புறவழியாய் போய்விடத்தான் திட்டம். ஆனால் அதன் அருகில் வரும் பொழுது “மாதுளம் பழம் சாப்பிடனும் போல இருக்குது...” என்ற தயனியின் வார்த்தையில் அவள் மறுப்பையும் மீறி நகரத்திற்குள் காரை செலுத்தினான்.

“இங்க உள்ள ஒரு ஆர்ட் கேலரி நல்லாருக்கும்னு சொல்லுவாங்க.....நான் பார்த்தது இல்லை...” தயனியின் அடுத்த ஆசைக்காக நகரத்தின் ப்ரதான சாலையை அடைந்தனர். இருபுறமும் கடைகள் நிறைந்த சாலை அதில் ஒரு இடத்தில் அந்த கேலரி.  சற்று தொலைவில் இருந்த பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு கேலரி நோக்கி நடக்க நடக்க அபிஷேக்கிற்கு உள்ளுணர்வில் தெளிவாக தெரிந்த்து அவன் கனவை நேரில் எதிர் கொள்ள போகிறான் என.

Katraga naan varuven

என்ன நடக்க போகின்றது?

அந்த கேலரிக்கு எதிராக வந்ததும் முழுதுமாய் உணர்ந்தான் அவன் கனவில் ஒருவர் பிச்சை எடுத்தாரே அதே இடம் இதுதான் என. ஒரு கூட்ஸ் கேரியர் வேறு நின்று கொண்டிருந்தது அவன் கனவில் பார்த்த அதே இடத்தில். ஆனால் அவன் பார்த்த பிச்சை எடுக்கும் உருவம் மட்டும் அங்கு இல்லை. மாறாக ஒரு வணிக வளாகம்.

உள்ளே சென்று பார்க்கலாம் என்றது ஒரு உணர்வு. வேண்டாம் தயனியுடன் செல்ல வேண்டாம் என்றது மறு உணர்வு.

வணிக வளாகத்திற்கு எதிரில் இருந்த ஆர்ட் கேலரிக்குள் நுழைந்தனர் தம்பதியினர். திரும்பி வெளி வரும் போதும் அபிஷேக்கின் மனம் அந்த வளாகத்திற்குள் சென்று நுழைந்தது.

தயனியை விட்டு இவன் தனியாக எங்கு செல்லவும் இப்போதைக்கு வரப் போவது இல்லை காலம் என்று அவன் மனதுக்கும் தெரியும்.

“ உள்ள போய்ட்டு வரலாமா தயூ?” ம் அவள் ஆமோதிப்பாக தலை அசைக்க அவள் கையை பற்றிய படி நுழைந்தான்.

ஏறத்தாழ அத்தனை தளமும் மனைவியுடன் அலசினான். துவண்டு போனாள் அவள். ஆனாலும் ஒரு ப்ரயோஜனமும் இல்லை. மீண்டும் தரை தளத்தை அடைந்து அவர்கள் வெளியேறும் தருணம், நுழைவு பெருவாயிலில் படி இறங்கிக் கொண்டிருந்த போது பின்புறம் நோக்கியபடி கவனமின்றி ஒடி வந்த ஒரு சிறுவன் எதிர் பாராதவிதமாக தயனியின் மீது மோதி விழ, தயனி படிகளில் தடுமாற அபிஷேக் ஒரு கையால் அவளையும் மறுகையால் அச்சிறுவனையும் தாங்கினான்.

ச்சிறுவன் முகம் பார்த்த தயனிதான் முதலில் சத்தமிட்டாள். “அபி ...இது...நீங்க...உங்க சின்னவயசு....மாதிரியே இருக்கான் இந்த பையன்”

உண்மைதான் அந்த சிறுவன் ஒரு குட்டி அபிஷேக் என்பது போல்தான் இருந்தான். எதோ பதில் கிடைப்பதாய் அபிஷேக்கிற்கு தோண அவன் எதிரில் வந்து நின்ற அந்த உருவம் அபிஷேக் தயனியை ஒரு வெற்று பார்வை பார்த்துவிட்டு “அவங்கட்ட சாரி சொல்லிட்டு வா” என்ற படி அந்த சிறுவனை கை பற்றி உள்ளே இழுக்காத குறையாக இழுத்துக் கொண்டு சென்றது. அதன் உடல் மொழியில் என்ன பயம்? பதற்றம்?

அந்த உருவம் சற்றே குண்டான இவனை விட வயது முதிர்ந்த இன்னொரு அபிஷேக்.

இந்த உருவ ஒற்றுமை அந்த நபருக்கும் புரிந்திருக்கும், ஆக அவர் நடந்து கொள்ளும் விதம் அவருக்கு அபிஷேக்கை பற்றி அதுவும் குறிப்பாக அந்த கனவில் சுட்டபட்ட அந்த நிகழ்வை பற்றி எதோ தெரிந்திருக்கிறது.

தயனியை இழுத்துக் கொண்டு அந்த உருவத்தை நோக்கி ஓடினான் அபிஷேக். கூட்டத்தில் அவரை தவறவிட கூடாதே.

இவர்தான் அபிஷேக் கனவில் கண்ட அண்ணனா?

சிறுது ஒளிந்து பிடித்து விளையாட்டுக்கு பின் இவன் எதிரில் வந்து நின்றார் அந்த பெரிய அபிஷேக். “இன்னும் என்ன வேண்டும் நிகரில்...?” என்றபடி.

“நீங்க...உங்களுக்கு என்னை தெரியுமா? ...நீங்க யாரு? எனக்கு நீங்க எப்படி சொந்தம்?” இவன் கேள்விக்கு ஒற்றைபார்வை பதில் அந்த அவரிடம் இருந்து.

“அப்பா அம்மா ரெண்டு பேரும் இப்போ இல்ல..”

“தெரியும் நியூஃஸ் கேள்விபட்டேன்...”

“நீங்க எனக்கு ரத்த சம்பந்தம், உருவமே சொல்லுது...ஆனா நீங்க வரலை..”

“ம்ம்”

“நல்லதுக்கு இல்லனாலும் துக்கத்தில சேர்ந்துகிடும் சொந்தம்....இருந்தும் நீங்க வரல....”

“......................”

“அப்படின்னா அந்த அளவுக்கு எதோ நடந்திருக்கு...”

“..........................”

“எங்க அம்மா உங்கள எதுவும்....?”

“........................”

“சாரி அண்ணா...வெரி சாரி...என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது.....ஆனால் என்னால முடிஞ்ச அளவு சரி செய்ய...”

“சரி செய்யவா.....? அத விடு. எதுவுமே தெரியாமா தப்பு உங்க அம்மா பேர்லதான்னு நீயா நினைக்கிறதுன்னா....” பெரு மூச்சுவிட்டான் அவன்.

ருநாள் வீட்டுக்கு வா நிதானமா பேசலாம்...இது எனக்கு வேலை நேரம்...” பில்லிங் செக்க்ஷனை அவன் பார்வை தொட்டு திரும்பியது. அது அவன் வேலை என்பதும் புரிந்தது.

“அப்ப நீங்க என் அண்ணன் தான் இல்லையா?”

அவன் முகத்தில் இப்போது சிறு புன்னகை வந்தமர்ந்தது. அதில் சகோதரம்.

“நான் உனக்கு சித்தப்பா அதாவது உன் அப்பாவின் தம்பி மகன், வயதில் மூத்தவன்...அண்ணன் “ என்றவன் தூரத்தில் நின்றிருந்த அந்த சிறுவனை அழைத்தான் “ இது என் மகன் பர்வத்”

தன் மகனை அறிமுகபடுத்தினான்.

“அப்பா  இப்போ கிளம்புவாங்க...அவங்க கூட இவன அனுப்பிடுவேன்” என்றான்.

“அப்பா....சித்தப்பா இங்கயா...?” சுற்று முற்றும் பார்வையால் அழைந்தான் அபிஷேக். இங்கு என்ன வேலை?

“ஃஸ்டாக் ஷெக்சன்ல தாத்தா இருப்பாங்க....”பர்வத் பதில் சொல்ல அனுமதியாய் தன் சகோதரனைப் பார்த்தான்.

அண்ணன் சம்மத்ததுடன் பர்வத் முன் செல்ல தயனியுடன் தன் சித்தப்பாவை காண இவன் திரும்ப அந்த அண்ணன் சொன்னான்...”ப்ரச்சனைக்கு காரணம் உன் அம்மா இல்ல உன் அப்பா....இங்க அப்பாட்ட பழசு எதையும் கிளறாதே...”

பதிலின்றி வயதில் பெரியவனைப் பார்த்துவிட்டு கிளம்பினான் அபிஷேக்.

ஆக தனக்கும் தன் தலைமுறைக்கும் தன் அம்மாவும் அப்பாவும் போட்டி போட்டு பாவம் சம்பாதித்து வைத்திருக்கின்றனர் என்பது அபிஷேக்கின் நினைவாய் இருந்தது. அப்படியானால் இவன் கனவில் இவனை பழங்காலத்திலிருந்து பின் தொடர்வதாக தெரிந்த உருவம் இந்த சகோதர துரோகம் எனும் பாவம் தான் போலும்.

பாவத்தின் தண்டனை மூன்று அல்லது நான்கு தலைமுறை தொடரும் என்கிறதே பைபிள்.

ஆக இவனது இப்போதைய ப்ரச்சனைக்கும் இதற்கும்  எதோ சம்பந்தம் இருக்கிறது.

இதை சரி செய்ய வேண்டும்.

இதே நினைவுடன் அவன் பர்வத் கூட்டிச்சென்று காண்பித்த தன் தந்தையின் இளைய சகோதரனைப் பார்த்தான்.

தந்தைக்கு தம்பி ஒருவர் இருப்பதே இவனுக்கு இப்பொழுதுதான் தெரிகிறது.

தன் சாயலாகவும் தன் தகப்பனின் சாயலாகவும் நின்ற அந்த மனிதனைப் பார்க்க மனம் வலித்தது அபிஷேக்கிற்கு. அவரது இந்நிலைக்கு இவன் முன்னோர் அல்லவா காரணம். என்ன தான் தவறு செய்தது இவனில்லை எனினும் மனம் குற்றக் குறுகல்கொள்வதை தவிர்க்க இயலவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.