(Reading time: 20 - 40 minutes)

வேறென்ன வேணும் நீ போதுமே – 27 - புவனேஸ்வரி கலைச்செல்வி

ர்ஜுனனின் விரல் பிடித்து அக்கினியை வளம் வந்தாள்  சுபத்ரா. அவள் மீது உயிரையே வைத்திருக்கும் அத்தனை பந்தங்களும் கண்களை நிறைக்க, தனது கணவன் மீது கொண்ட காதல் மனதை நிறைக்க, பூரண நிலவாய் ஜொலித்தது அவளது முகம். அக்கனியை வலம்வந்த பிறகும் அர்ஜுனனின் கரத்தை விடாமல் பிடித்திருந்தாள்  அவள்.. யாருடைய கேலியும் அவள் செவிகளுக்கு மட்டும் கேட்கவே இல்லை .. புதிதாய் அவனை பார்ப்பது போல கண்களால் அவனை படம் எடுத்தாள் ..

அர்ஜுனன் மட்டும் அவளுக்கு சளைத்தவனா ?? பற்றியிருந்த அவளது கரத்தை அழுந்த பற்றி இனி அனைத்தும் நானாய் இருந்து உன்னை காப்பேன் என்று விழிகளால் சொன்னான் .. திருமண ஜோடிகளின் பார்வை பரிமாற்றம் அனைவரையும் கவர்ந்தது .. கிருஷ்ணனும் , ரகுராமும், தத்தம் மனைவியை தோளோடு அணைத்து  கொண்டனர் ..

" என் செல்ல தங்கச்சி .. உன் செல்ல நாத்தனாருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு .. இனியாச்சும் என்னை பக்கத்துல வர விடுவியாடி " என்று ரகசியமாய் கேட்டான் கிருஷ்ணன் .. ஆம், தம்பதியர் நால்வருமே  தங்களது இல்லறத்தை அர்ஜுன்- சுபத்ரா வின் திருமணத்திற்கு  பிறகே தொடங்குவதாய் இருந்தனர் ..

VEVNP

" யோவ் ... அக்கம் பக்கத்துல பெரியவங்க இருக்காங்கனு பார்க்குறேன் .. இல்ல என்ன பண்ணுவேன் எனக்கே தெரியாது " என்று இயல்பாய் எழுந்த வெட்கத்தை போலியான கோபத்திரையில் மறைத்து நின்றாள்  மீரா .. என்ன செய்வது ? பேச்சில் சாதுவாக சரியென்று கிருஷ்ணன் சொல்லி இருந்தாலும் இந்த இரண்டு நாட்களில்  கிடைத்த நேரத்தில் எல்லாம் அவளை அள்ளி அணைத்து  காதல் கதை பேசிக்கொண்டிருந்தானே  அவன் ..

" யோவ்வா அடிப்பாவி .. என் அம்மா நீ என்னை கண்கலங்காமல் பார்த்துக்குவன்னு நம்பி என்னை உன் கையில் பிடிச்சு கொடுத்தாங்க . நீ என்னாடான்னா இப்படி மிரட்டுறியே டீ நீலாம்பரி " என்றான் பாவமாய்...

" ரொம்ப பேசுனிங்க  இன்னைக்கு நைட் தூக்கம் வருதுன்னு சொல்லி நான் சீக்கிரமா தூங்கிருவேன் "என்று மிரட்டினாள்  அவனது தர்மபத்தினி ..

" ம்ம்ம்க்ம்ம்ம்ம் அப்படி உன்னை தூங்க விட்டாதானே " என்று மனதிற்குள் சொன்னவன் ..

" அய்யயோ சரிம்மா நான் ஒண்ணுமே சொல்லலை " என்றான் போலியாய் ..

பெரிதாய் அவனை ஜெயித்து விட்டது போல சிரித்து அவனுக்கு பலிப்பு காட்டினாள்  மீரா.... அவளது அழகில் சொக்கி போனான் கிருஷ்ணன் .. இவளின் புன்னகைக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று எண்ணிக் கொண்டான் ..

" ராம் "

" என்னடா "

" எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா ராம் ? "

" தெரியாமல் என்ன டா? ஒரு பக்கம் அர்ஜுன் இன்னொரு பக்கம் உன் உயிர்த்தோழி சுபத்ரா .. அவங்க இணைஞ்சது உனக்கு எவ்வளவு சந்தோஷம்னு எனக்கு எப்பவுமே தெரியும்டா "

"...."

" ஹே என்னடீ பார்வை தடம் மாறுது "

" ச்சு போங்க அப்படியெல்லாம் இல்லை " என்று தலை குனிந்தாள்  ஜானகி ... உல்லாசமாய் விசில் அடித்துக் கொண்டான் ரகுராம் ...

" ஹெம் அஹெம் அஹெம் அஹெம் "

" என்ன கார்த்தி .தொண்டையில கிச்சு கிச்சா "

" அடிப்பாவி ... உன்னை கூப்பிட்டேண்டி நானு "

" ஏன் எனக்கு பெயரில்லையா ?" என்று இடுப்பில் கைவைத்துக் கொண்டு மிடுக்காய் கேட்டாள்  நித்யா ..

" ..."

" என்னடா உன் பார்வையே சரி இல்லை "

" அதுவா ... இந்த ரெண்டு நாளா ரொம்ப அழகா இருக்க டீ நீ "

" அப்போ அதுக்கு முன்னாடி நான் அசிங்கமா இருந்தேனா ? "

" அட மக்கே.... நிலவுன்னு சொன்னாலே எப்போதுமே அது அழகுதான் .. ஆனாலும் பௌர்ணமியை ஏன் ரசிக்கிறோம் ? "

" ஷாபா நல்ல பேசுற .. பொழைச்சுக்குவ டா நீ "

" ம்ம்ம் எங்க நீதான் நான் மனசு வைக்கவே மாட்டுறியே " என்று கண்ணடித்தான் ..

" ச்சி  போடா " என்று அங்கிருந்து ஓடியே விட்டாள்  நித்யா ..

" க்தி "

" சொல்லு டீ "

" ம்ம்ஹ்ம்ம்ம் ஒன்னுமில்ல"

" கொழுப்பு டீ உனக்கு .. ஷக்தின்னு  கூப்பிட்டுடு ஒன்னும் இல்லன்னு சொல்லுற ? "

" ஏதோ சொல்ல வந்தேன் மறந்துட்டேன் " என்றாள்  மித்ரா ..

" அப்படியா சரி ஓகே " என்று சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்த ஷக்தி சஞ்சயின் பக்கம் நின்று கொண்டான் .... அதற்குள் நம்ம பஞ்ச பாண்டவிஸ் அவளை சூழ்ந்துகொள்ள, அவளை தூரத்தில் இருந்து ரசித்தான் ஷக்தி ..

பெரியவர்கள் அனைவரும் மனம் குளிர்ந்தனர் .. தாத்தா பாட்டி இருவரும் முதலில் தம்பதியரை ஆசிர்வதித்தனர் .. தாத்தா தன் கழுத்தில் இருந்த சங்கிலியை அர்ஜுனனுக்கு அணிவித்தார் ..

" எதுக்கு தாத்தா இதுலாம் "

" சந்தோஷமா இருக்கேன்யா அதான் " என்று அவனை தழுவிக் கொண்டார் .. எத்தனை முயன்றும் அபிராமியால் கண்கலன்காமல் இருக்க முடியவில்லை ..

" அத்தை என்ன இது ??"

" இல்ல மாப்பிளை .. அது .. சுபா சின்ன பொண்ணு "

" தெரியும் அத்தை ... என்மேல நம்பிக்கை இல்லையா ?" - அர்ஜுனன்

" உடனே சூர்யா இடைபுகுந்து " அப்படி இல்லை மாப்பிளை .. அவளை செல்லமா வளர்த்துட்டோம் "

" அடடே நான் விளையாட்டுக்குத்தான் கேட்டேன் மாமா ... நம்ம சுபி எப்பவும் அவளுக்கு பிடிச்ச மாதிரி அதே நேரம் ரொம்ப சந்தோஷமாகவும் இருப்பா ..அதுக்கு நான் கேரண்டி " என்று அவளை தோளில்  கைபோட்டான் .. அருகில் வந்த கிருஷ்ணனும், ரகுராமும் அர்ஜுனனை கட்டிக் கொண்டனர் .. மீரா அன்பாய் சுபத்ராவின் தலை வருட, ஜானகி அவளது கன்னத்தில் முத்தத்தை பதித்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள் ..

ஆயிரம் இரவுகள்

ஏந்திய கனவுகள்

தூண்டிய நினைவுகள்

ஏற்றிய விளக்குகள்

ரகசியமாய் அணைந்தது

என்னை அணைத்தவன் யாரோ ??

ன்றிரவு,

நித்யாவின் கேலி கிண்டலில் சிவந்த முகத்தை மறைத்துக் கொண்டே கிருஷ்ணனின் அறைக்குள் நுழைந்தாள்  மீரா .. ஏற்கனவே அவன் கண்களுக்கு ரதியாய்  தோன்றம் அளிப்பவள், அந்த இளஞ்சிவப்பு நிற புடவையில் மிதமான ஒப்பனையில் வெட்கம் பூசி சிவந்த கன்னங்களோடு  அழகாய் இருந்தாள் ... எதுவும் பேசமால் கிருஷ்ணன் அவளையே பார்க்க, அவளோ தலை குனிந்தாள் .. அவளது செய்கை அவனின் புன்னகையை பெரிதாக்கியது .. அவனும் அவளைப்போல தரையை பார்த்துக் கொண்டே,

" என்ன கண்ணம்மா ஏதாச்சும் தேடுறியா ? என்ன காணோம்னு சொல்லு நானும் ஹெல்ப் பண்றேன் " என்று சொல்லி அவள் கையை பற்றினான் .. அப்போதுதான் அதை கவனித்தவன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.