(Reading time: 20 - 40 minutes)

 

" னக்கு உன் குடும்பம் முக்கியம் .. உன் அம்மா, உன் அப்பா, உன் அண்ணா .. அப்போ அர்ஜுன் ??? அவருக்கு அவர் அம்மா முக்கியம் இல்லையா ?? நீ எப்படி இப்படி சுயநலமாய் இருக்கலாம் சுபா .. இதைதான் உனக்கு நான் கத்து கொடுத்தேனா ??" தன் தாயின் கேள்வியில் உண்மையை உணர்ந்தாள்  சுபத்ரா .. கொஞ்ச நேரத்தில் என்னென்ன பேசிவிட்டேன் ??? எனினும் ???? அவள் மனம் ஆறவில்லை .,...தன் தாயின் தோளில்  சாய்ந்து கொண்டு சிறுபிள்ளை ப போல கேட்டாள்  அவள்..

" ஏனம்மா ... ஏன் பெண்கள் மட்டும் கல்யாணம் ஆனா இப்படி இடம் மாறனும் ? "

" நீ ஏன் அதை இடமாற்றம்னு நினைக்கிற டா " என்றவரின் குரலும் தன்மையானது .. அவளின் தலையை வருடிக் கொண்டே பேசினார் ..

" ஒரு செடி நல்லா வளரணும்னு நாம அதை இன்னொரு இடத்தில் நட்டு வைக்கிறதில்லையா ?? அப்படித்தான் பெண்களும் .. பிறந்தவீட்டில் வளர்க்கபட்டு புகுந்தவீட்டில் விதைக்கபடுறாங்க .. எல்லாம் கொஞ்ச நாள்தான் .. அதுக்கு பிறகு உனக்கே அந்த வீடு சொந்தம் ஆகிடும் .. "

".."

" உனக்கின்னும் ஒரு உரிமை உணர்வு வரலை .. அது வந்துட்ட சரி ஆகிடும்டா .. அது இனி உன் வீடு .. பானு இனி உன் அத்தை .. உன் அத்தை உனக்கு அம்மா மாதிரி .. இனி அவங்களுக்கு நீதான் மகள்... அர்ஜுன் உன் கணவர் .. இனி அவரின் வாழ்வில் ஒவ்வொரு செயலிலும் நீயும் சென்றது இருப்ப டா .. அர்ஜுன் நம்ம வீட்டுக்கு வந்தா என்ன நடக்கும் சொல்லு ?? அவருக்குன்னு ஒரு அடையாளம் போய்டும் இல்லையா ??? சரி அப்படி உன் பேச்சையே எடுத்துகிட்டு அர்ஜுனும் பானுவும் நம்மோடு  இருந்தா, உங்க அப்பாவும் பெரியப்பாவும் சுதந்திரமாய் இருப்பாங்களா ?? "

" ..."

" மாப்பிள்ளை தங்கமானவர் .. நான்  இல்லைன்னு சொல்ல மாட்டேன் .. ஆனா அவர் நம்ம வீட்டுக்கு வந்த நம்ம வீட்டு இயல்பு மாறிடும் .. உங்க அப்பாவும் பெரியப்பாவும் நிறைய விட்டு கொடுப்பாங்க .. மரியாதை என்கிற பெயரில் அவங்க இயல்பை விட்டு கொடுப்பாங்க .. இது ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது .. மறுவீட்டுக்கு  மாப்பிளை வரும்போது அந்த வீட்டில் ஒரு இயல்புநிலை இருக்காத்து .. பொண்ணுடைய வாழ்க்கையை கருதி மாப்பிளையை தாங்கு தாங்குன்னு தாங்குவாங்க .. அங்க அவங்க இயல்பினை இழப்பாங்க .. ஆனா பொண்ணு அவ மாமியார் வீட்டுக்கு போனா எதுவும் மாறாது ..சொல்ல போனா நீயும் கொஞ்ச நாளில் அவங்களில் ஒருத்தி ஆகிடுவ .."

" ..."

" ஒரு பெண்ணால் மட்டும்தான் ஒரு குடும்பத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக முடியும் .. நீ மருமகள் ஆகும்போது , அம்மாவை இருந்த அவங்க மாமியார் ஆகுவாங்க, மகனாய் இருந்த அர்ஜுன் கணவர் ஆகுவார் .. நீ தாயாகும்போது பானு பாட்டி ஆகுவாங்க , அர்ஜுன் தந்தை ஆகுவார் .. உன்னாலதான் இந்த மாற்றத்தை கொண்டு வர முடியும் .. பெண் என்பவள் ஷக்தியின்  மறு உருவம், ஐஸ்வர்யத்தின் மறு உருவம் ... அதுனாலத்தான்டா பெண் இடம் மாறுறா " என்றார் அவர் .. அவரின் பேச்சில் மனம் தெளிந்தாள்  சுபத்ரா .. இருந்தாலும் வேண்டுமென்றே

" ஹ்ம்ம் நான் கல்யாணம் பண்ணி போக போறேன் .. இப்போதான் உனக்கு பாசம் வருது பார்த்தியா ..இல்லன்னா என்னை திட்டதானே நீங்க வாயை திறப்பிங்க " என்றாள் ...போடி பைத்தியம் என்றவர் அவளை கட்டிக் கொண்டு அடக்கி வைத்திருந்த கண்ணீருக்கு விடுதலை தந்தார் ..

" அம்மா "

" அம்மாதான் டீ .. நான் உனக்கு அம்மா .. என் மகளை நான் அப்படி விட்ருவேனா ?? நீ நல்லா இருக்கணும் .. செல்லம் கொடுக்குறது உன்னை கெடுக்குறதுக்கு  இல்லை ..அதுனாலத்தான் நான் கண்டிப்பா இருந்தேன் .. எனக்கு மட்டும் உன்னை திட்டிகிட்டே இருக்கணும்னு ஆசையா ???இந்த வயத்தில் தானேடி உன்னை பெற்றன் " என்றவர் அவளை அணைத்து  அழுதார் ..

" சாரி மா "

" அச்சோ விடுடா .."

" நிஜம்மா மன்னிச்சிருங்க மா "

" விடுடா கண்ணா ... வா தூங்கலாம் "

" அம்மா ...."

" ம்ம்? "

" உங்க மடியில படுத்து தூங்கவா ?"

" கேட்கணுமா ??? வாடா "என்றவர் அவளை மடி சாய்த்து தட்டிக் கொடுத்தார் ..

" கல்யாணத்துக்கு பிறகு நான் இதே மாதிரி பானு அத்தை மடியில் படுத்துப்பேன் " என்றாள்  சுபா ஏக்கமும் கனவும் போட்டியிட ...

" ம்ம்ம் " என்று சொல்லி புன்னகைத்தார் அவர் .. இதை எல்லாம் அர்ஜுனனும் கேட்டிருந்தான்.. மறுநாளே தன் தாயிடம் பேசி அனைவரும் ஒன்றாய் இருக்கவும் திட்டமிட்டான் .. அதை இப்போது சுபாவிடம் சொல்ல, அவளோ அதை மறுத்தால்...

"நோ ... நாம நம்ம வீட்டில் தான் இருப்போம் "

" இது பாரு கண்மணி"

" இப்போ நீ பேச்சை மாத்த போறிங்களா இல்லையா ??" என்று கோபமாய் அவளை கேட்க , கோபத்தில் முகம் திருப்பியவலிம் முகத்தை கைகளில் ஏந்தினான் அர்ஜுனன் .. இதுவரை எல்லைகளை அவ்வபோது மீறியவன் இன்று காதல் தந்த ஆசையில், திருமணம் தந்த உரிமையில் , சுபத்ராவின் எழல் தந்த கிறக்கத்தில், அவள் முகம் முழுதும் முத்தமிட்டான் ... அவனது மனதை திருடியவளுக்கு தன் காதலின் மூலம் தண்டனைகளை வாரித் தந்தான்.. அவனது உள்ளம் திருடிய கள்ளியோ  மீண்டும் அவனை திருட தொடங்கினாள் .....

( கதை ரொம்ப சுமூகமா போகுதுல .. ஹா ஹா நான் எதுக்கு இருக்கேன் ??? )

று மாதங்களுக்கு பிறகு சென்னையில் ,

எப்பவும் சுபத்ரா வீடுன்னு சொல்வேன் .. ஆனா இப்போ சுபத்ரா அர்ஜுனனின் வீட்டில் தன் உரிமையை நிலைநாட்ட சென்றாச்சே, இப்போ யார் வீட்டுன்னு சொல்றது ??

சரி நம்ம சூர்யா சார் தானே குடும்ப தலைவர் .. அவர் வீடுன்னு சொல்வோம் வாங்க ...

ஆபிசிற்கு கிளம்பிய ஜானகியை யோசனையை பார்த்தார் அபிராமி .. ஏதேதோ யோசனையில் இருந்தவர் சட்டென முடிவெடுத்துவிட கிருஷ்ணனை அழைத்தார் .. அவங்க முதல் பாதி என்ன பேசினாங்கன்னு இப்போ சொல்ல மாட்டேனே ..ஹஹஹ .. என்ன பேசினாங்கன்னு கேட்போம் வாங்க ..

" ஹெலோ அம்மா "

"................."

" என்னம்மா சொல்றிங்க ???"

" ........"

" அதான் இப்போ ஒன்னும் இல்லையேம்மா  "

"......."

" இது பாருங்கம்மா என்னால இதுக்கு சரி சொல்ல முடியாது ... அப்படியே எனக்கு ஓகே னாலும்   மீரா முகத்தை பார்த்து நான் அதை சொல்ல மாட்டேன் ...அவ பாவம்மா .. எப்படி அவளால் இதை தாங்க முடியும் ??  "

" நீ ஏற்பாடு பண்ணு .. நான் அவகிட்ட சொல்லிகிறேன் " என்று போனை வைத்தவர் மீராவை தனதறைக்கு அழைத்தார் ..

" கூப்பிட்டிங்களா அத்தை ??"

" ஆமா மீரா "

" உன்கிட்ட ஒன்னு சொல்லணும்"

" சொல்லுங்க "

 சொல்ல வந்ததை சொன்னார்..

" அத்தை என்னால எப்படி முடியும் அத்தை ?"

" இது பாரு மீரா நீ போய்தான் ஆகணும் .. நீ என் பேச்சை கேட்பண்ணு  நம்பித்தான் உங்க கல்யாணத்துக்கே நான் சரி சொன்னேன் .. என்னை ஏமாத்திடாதே " என்றார் அபிராமி கண்டிப்புடன் .. கண்ணீர் மல்க மீரா

"போய்டுறேன் அத்தை " என்றாள்  ...

( என்னதான் நடக்குது ???? அதை அடுத்த வாரம் சொல்றேன் .... திட்டாதிங்கன்னு சொல்ல மாட்டேன் .. ஏன்னா இதை எழுதும்போது எனக்கே கோபம்தான்  வந்தது .. மன்னிச்சிரு மீரா ... நடப்பதெல்லாம் நன்மைக்கேன்னு அந்த கிருஷ்ணன் மீதும் உன் கிருஷ்ணா மீதும் நம்பிக்கையை வை .. பாய் பாய் .. )

தொடரும்

Episode # 26

Episode # 28

{kunena_discuss:734}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.