(Reading time: 9 - 18 minutes)

 

னால் அவர் கண்களில் பாசம் மட்டுமே.

அவர் கைகளைத்தான் தன் பார்வையால் துளாவினான். கனவில் கண்டது போல் அதுவெட்டபட்டு இல்லை. அப்படியானால்?

ஆனாலும் இவன் தந்தையையும் எதிரில் நிற்பவரையும் மனதிற்குள் ஒப்பிட்டான். தந்தை செல்வ செழிப்பிலும் இவர் இப்படி ஒரு வறிய நிலையிலும்.....என்றதாக ஓடியது மனது.

அவமானமாய் உணர்ந்து தலை குனிந்தான்.

ஆனால் அவரோ இவனை இனம் கண்டு அணைத்துக் கொண்டார்.

வருடனும் பர்வத்துடனும் அவரின் அழைப்பை ஏற்று தயனியும் அபிஷேக்கும் அவரது வீட்டிற்கு சென்றனர்.

ஒற்றை படுக்கை அறை கொண்ட அந்த வீட்டின் நிலை மத்திய தர வர்க்கத்திற்கு சாதாரணமாக தான் தெரிந்திருக்கும் ஆனால் இத் தம்பதியனருக்கு அது மிகவும் வேதனை தரும் வறிய கூடமாக பட்டது.

 நடந்தது இதுதான். கூட்டுக் குடும்பம். அபிஷேக் பெற்றோருக்கு குழந்தை இல்லை. ஆனால் அவனது சித்தபாவிற்கு மகன் மற்றும் மகள். அது ஒருவித பாதுகாப்பற்ற உணர்வை தூண்டிவிட்டது அண்ணனுக்கும் அவன் மனைவிக்கும்.

சொத்து முழுவதும் இளையமகனுக்கும் அவன் தலைமுறைக்கும். மூத்த சகோதரனும் அவன் மனைவியும் உயிருடன் இருக்கும் வரை அவர்களை பராமறிக்கும்பொறுப்பு இளையவன் குடும்பத்திற்கு என பாகபிரிவினை நடக்க வாய்ப்பு இருப்பதாக அவர்களுக்கு தோன்றியது.

ஆக நம்ப செய்வது போல் செய்து தம்பியிடம் தகப்பன் சொத்தில் தன் பாகத்திற்கு நிகராக பணத்தை வாங்கிக் கொண்ட்து போல் பத்திரம் வாங்கிக் கொண்டு அவர்களது குடும்பத்திற்கு மொத்த உரிமையான அந்த ஹோட்டல்களை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டார் அபிஷேக்கின் அப்பா.

தம்பிக்கு தருவதாக சொன்ன பணத்தையும் தரவில்லை. இப்பொழுது இவர்கள் இருக்கும் ஊரில் அண்ணன் தரும் பணத்தில் புது தொழில் தொடங்கும் திட்டத்தில் தான் தன் பாகத்தை கொடுத்திருந்தார் அபிஷேக்கின் சித்தப்பா.

கடைசியில் சொத்தும் போய் புது தொழில் தொடங்க முதலும் போய் தெருவிற்கு வந்து விட்டார். அதிர்ச்சியில் அவரது அப்பா அதாவது அபிஷேக்கின் தாத்தா இறந்தே போனார்.

அடக்கத்திற்கு கூட வரவில்லை மூத்தவர் குடும்பம்.  சட்டபடி போராட வழி வகையோ வகை தொகையோ இல்லை இளையவருக்கு.

இரு குழந்தைகள், மனைவி கை நிறைத்த வறுமை. இப்படியாய் இளையவர் தன் வாழ்க்கையை தொடர மூத்தவர் மேலும் வளர்ந்தார். இதன் பின் பிறந்தவன் அபிஷேக். ஆதலால் அவனுக்கு இக் கதை எதுவும் தெரியவில்லை.

கையிடும் தொழிலை பறித்ததைத்தான் கையை வெட்டியதாக இவன் கண்டிருக்கிறான் கனவில்.

பிஷேக் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டான்.

“நீ என்னப்பா செய்வ இதுக்கு?”

“இல்ல சித்தப்பா எப்படியும் நான் இந்த பாவ சம்பாத்யத்தை அனுபவிச்சிருக்கேன்...சாப்பிட்டு...உடுத்தி...இன்னும் என்னன்னமோ....இப்போ என் குழந்தை இந்த பாவத்தில் நான் வளர்த்த உடம்பிலிருந்துதான் உடலெடுத்து வருது....ஆக உங்க கஷ்ட படுத்தி பலன் அனுபவிச்சவங்க நாங்களும் தான்....”

அப்போதே என்ன செய்ய வேண்டும் என்று முடிவும் செய்து விட்டான் அபிஷேக்.

அன்றே தன் மனைவியுடன் தன் தாய் தந்தை வாழ்ந்த ஊருக்கு சென்றவன், முதல் வேலையாக அந்த ஹோட்டல்களை தன் சிறிய தகப்பன் குடும்பத்திற்கு மாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்தான். அதாவது தன் தகப்பனின் பாகத்தையும் சேர்த்து கொடுக்க முடிவு செய்தான்.

ஹோட்டல் தொழிலை நிர்வகிப்பதில் அவன் அம்மாவிற்கு உறுதுணையாக இருந்தவர்தான் இப்பொழுது மொத்த நிர்வாகத்தையும் பார்த்துக் கொள்வது. சேந்தன் என்பது அவர் பெயர்.

அவர் இவன் இப்படி தொழிலை பெயர் மாற்றுவது சரியில்லை என தன் எதிர்ப்பை தெரிவித்தார். அவருக்கு குடும்ப விஷயம் எதையும் தெரிவிக்கவில்லை அபிஷேக். ஆக சேந்தன் அபிஷேக் ஏமாறுவதாக எண்ணினார்.

ஆனால் அபிஷேக் தன் நோக்கத்தில் தெளிவாக இருந்தான். தான் மனம் வருந்தினால் மட்டும் மன்னிப்பு கேட்டதாகாது. திருடியதை திருப்பியும் கொடுக்க வேண்டும். திருப்பி கொடுக்க முடியாத இழப்பு ஒன்று இருக்கிரது. அது அவர்களுடைய காலம். அனுபவித்த வறுமை. அவர்கள்துன்பம் கண்ட காலத்திற்கு இணையாக இன்ப நாட்களைத் தாரும் என வேண்டுவதைத் தவிர இவன் என்ன செய்யமுடியும்?

இவனால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்ய தாயாராயிருந்தான் அபிஷேக்.

அபிஷேக் நினைத்தது ஒன்று நடந்தது வேரொன்று.

அபிஷேக் எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு தன் சித்தப்பாவிற்கும் விஷயம் சொன்னான். அவர் மறுத்தாலும் பின் சம்மதிக்க அவர்கள் நாட்டு முறைப்படி மிக எளிதாக தன் லாப்டாப் மூலம் அவனது சித்தப்பாவின் வீட்டில் வைத்தே  சட்டபடி மாற்றத்தை பதிவு செய்தனர் அபிஷேக்கும் அவனது சித்தப்பாவும்.

எங்கு சென்றாலும் தயனியை விட்டு பிரியாத அபிஷேக் அன்றும் அவளுடன் தான் சென்றிருந்தான்.

இப்பதிவு முடிய உறவினர்கிடையே இனிய உரையாடல் தொடர அன்று மாலை தன் பெற்றோர் வாழ்ந்த வீட்டை நோக்கி பயணத்தை தொடங்கினான் அபிஷேக்.

மனதில் ஒரு இலகு உணர்வு. இனி எல்லாம் சுகமே.

சித்தப்பாவின் ஊரை கடந்ததும் வரும் அப் பாலம். தயனிக்கு மிகவும் பிடித்த இடம். இன்று மாலை சூரியன் மயங்க மஞ்சள் வெயிலில் மனம் மயக்கியது. இலகு மனம் இன்னும் சுகம் கூட்ட,

தனது காரைநிறுத்தி விட்டு மனைவியுடன் இறங்கினான் அபிஷேக்.

பால விளிம்பு சுவற்றில் சாய்ந்தபடி இருவரும் ஆனந்த கதை பேச ஆக்ரோஷமாய் விழுந்தது ஒரு ஆழ கத்தி குத்து அபிஷேக்கின் முதுகில்.

குமிழி சிந்தியது ரத்தம்.

தொடரும்

Episode # 10

Episode # 12

{kunena_discuss:762}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.