(Reading time: 20 - 39 minutes)

 

ப்போதும் மார்டண் மங்கையாய் வலம்வரும் யாழினி மிக நேர்த்தியாக வெள்ளை பின்னனியில் நீல நிறப்பூக்கள் பிரின்ட் செய்யப்பட்ட காட்டன் புடவையில் ஏற்ற அலங்காரங்களுடன் வந்து சேர்ந்தாள்!

'ஏய் யாழ் இந்த புடவை குழலிது தானே' என்றாள் மதி.

யாழ் இந்த புடவை உனக்கு ரொம்ப அழகா இருக்குடா என்று அவளை அனைத்து கொண்டாள் குழலீ!

இதை பார்த்த அனைவரும் ஒன்றாக நகைத்துவிட்டனர். என்ன டீ உங்க லவ்சு தாங்க முடியல்ல.. இத நிறுத்தியே ஆகனும்.

நாங்க எல்லாரும் இங்க தான் இருக்கோம். ஒரே வீட்டில் தான் தங்கியிருக்கோம்.. குழல் எங்க எல்லாருக்குமே நல்ல நெருங்கிய தோழிதான். ஆனா யாழ் என்ன டீ அவ்வளோ ஸப்பேஷல்... நீங்க இருவரும் இவ்வளோ உயிர்த்தோழிகளா மாரியது எப்போ??- டீனா கேட்டேவிட்டாள்!!!

கவி...'உன் பொருளை உன்னை கேட்காமல் யார் எடுத்தாலும் உனக்கு பிடிக்காதே குழல்.. இப்போ யாழ் உன்னிட்ட கேட்காம தான இந்த புடவையை எடுத்து கட்டிக்கிட்டா?? என்ன டீ அப்படி பாக்கிற??'

ஏய் நிறுத்துங்க டீ... எல்லாரும் என்னுடைய கிளோஸ் friends’ தான். யாழ் நானும் ஒரே அறையில் தங்கியிருக்கோம்ல அதுதான் என்றாள் குழலீ.

'நம்பிட்டோம்!!!'

இல்லடா. நாம் எல்லாரும் ஒரே கம்பெனியில் வேலை பார்க்கிறோம். எப்பவும் ஒன்னா தான் இருக்கிறோம். இவ மட்டும் தனியா தானே இருக்கிறா..

டீனா..'நானும் தான்டீ தனியா வேலை பார்கிறேன். உங்கக்கூட இல்லியே??'

குழல் குறுக்கிட்டாள். 'டீனா உன்கூட டேவிட் இருக்கிறார். உன்னை எனக்கு இவங்களுக்கு முன்னமே தெரியும் ல. நம்ம தோழமை வேறடா.. குடும்ப நண்பர்கள்.. முன்னமே ஒன்னா வேலை பார்த்தோம். பின்ன ஏன்டீ இப்படி பேசற?? கவி, மதி, ராம், நானு எல்லாரும் ஒன்றாக எட்டு மணி நேரம் செலவிடுறோம். யாழ், வெற்றி மட்டும் தான் ஒன்னா வேலை பண்றவங்க. அவளுக்கு வேறு தோழிகளுமில்ல... மத்த ப்ரண்டஸ் எல்லாம் பக்கத்து ப்ளாட்ல தானே இருக்காங்க.. இவ தனிமையில் இருக்கிறோம்னு பீல் செய்யக்கூடாது. அது எவ்வளவு கொடுமையானது னு எனக்கு தான் தெரியும்..' அவள் குரல் உடைந்திருந்தது. யாழினி இமைக்க மறந்து கலங்கிய கண்களுடண் குழலீயை பார்த்தாள்!

அந்த இறுக்கமான சுழலை கலைத்தது டீனா தான். 'இப்படியே சோக கீதம் பாடினா எப்போ shopping போறது. ஆனா நான் வரலடீ.. டேவிட் இன்னும் எழும்பல..அதான்...' அனைவரும் சிரித்தபடியே பார்வையை பறிமாறிக்கொண்டர்.

சரி சரி.. டேவிட் அண்ணா எழுந்தா அவரையும் கூட்டிடு போகலாம் னு பார்த்தோம். நான் போய் அவரை எழுப்பவா?? - குழல்.

'வீக்எண்ட் தான் இங்க இருக்கார்.. அது கூட பொறுக்கலையா உனக்கு.. பார் கல்யாணமாகி நீயும் உன் கணவரும் இப்படி தனித்தனியா இருந்தா தான் இந்த வேதனை உனக்கு புரியும்.'

'கல்யாணமானா அப்போ பாக்கலாம் உன் சாபம் பலிக்குதா இல்லையானு!' என்று சிரித்தாள் குழலீ.

டீனா விளையாட்டாக கூறியது தான் உண்மையாக போகிறது என்று அப்போது இருவரும் அறியவில்லை! இறைவன் விதித்தது என்று இருவருக்குமே தெரியாதே!

வ்வளவு கலாய்ச்சிட்டல... உனக்கு தண்டனை கண்டிப்பா இருக்கு..
இன்றைக்கு குழல் நீ தான் சமைக்க போற.. நாங்க மெனு தயார் செய்றோம். நீ சமைக்கிற! நாங்க சாப்பிடறோம்!என்றாள் டீனா.

டீனா...! ப்ளீஸ்...

அக்கா.. டீனாகா... தெரியாம பேசிட்டேன்!

இல்ல முடியாது டியர்.. நீதான் செய்ற நாங்க வேணா கொஞ்ச...மா... உதவி செய்றோம்... நீ சுப்பரா சமைக்கிறதை எல்லாருக்கும் தெரிய வேண்டாமா.... இவ்வளவு நாள் உன்னை யாராவது டிஸ்டர்ப் பண்ணோமா.. பேய் மாதிரி ராத்திரி விழிச்சு படிக்கற.. தினமும் நாலு மணி நேரம் தான் துங்கற.. மற்றபடி ஆபீஸ் இல்லனா படிப்பு.. அதையும் தான்டி அதிசையமா வெளிய போவ.. உனக்கு ஒரு டிவியேஷன் வேணும்லல... ம்ம் நீ சமைக்கிற நாங்க சாப்பிடறோம். அவ்வளவு தான்.

ப்பா.. டி...வி..யேஷன் இதுவா?? சரி. நமக்கு மட்டும் தானே.. பரவாயில்லை.. பாத்துக்கலாம்!

இல்ல.. நம்ம friend’s எல்லாருக்கும் தான்..

அய்யோ!!! 15 பேருக்கா!!! சரி ஓகே!

'சரி...எப்ப பாத்தாலும் வெளிய போகும்போது புடவையே கட்டற.. தனியாவும் போகமாட்ற.. ஒரு சோரி சிறங்கு படைய கூட்டிடு போற...என்ன தான் பிரச்சனை உங்களுக்கு??' என்றாள் கவி

ஆமாம் நானும் கேட்கனும்னு நினைச்சேன் என்றனர் மதியும் யாழும்.

சரி சரி.. சொல்லறேன். இப்ப கிளம்பளாம் வாங்க என்று அனைவரையும் இழுத்துக்கொண்டு கிளம்பிளாள் குழல் என்கிற பூங்குழலீ!

குழலீ.. பூங்குழலீ சுப்ரமணியன். யார் பெயர் கேட்டாலும் இப்படித்தான் சொல்லுவாள்! பெற்றோரிட்ட பெயர் பூங்குழலீ மட்டும் தான். இந்த மாற்றத்திற்கு காரணம் ஒரு வாக்குவாதம்! திருமணத்திற்கு பின் முதல் எழுத்தாக அல்லது பெயருக்கு பின்னால் கணவன் பெயர் இருக்க வேண்டும் என்று வாதிட்ணர் ஒரு தரப்பு. இதை மறுத்து பேசினர் இவளும் தோழி ஆர்த்தியும். பேச்சு முற்றி எப்போதும் என் தந்தை பெயர்தான் என்னுடன் இருக்கும் என்று கேசட்டில் கொடுத்து பெயரை மாற்றிக்கொண்டாள்! ஆனால் கடந்த ஐந்து வருடங்களில் இதுவே அவளுக்கு ஒரு ஆத்ம பலம். ஊணோடும் உயிரோடும் தன் பிரிய தந்தை இவ்வுலகில் இல்லை என்றாலும் அவர் பெயரை யாரவது நபர் இவள் மூலமாக கூற கேட்டு ரசிப்பாள்! தந்தையின் செல்லமான 'சக்தி' இவள். பிறந்து வளர்ந்தது, பூர்வீகம் அனைத்தும்  சென்னை. முன்கோபி. சட்டென்று வந்தாலும் உணர்ந்தால் வந்த வேகத்தில் திரும்ப போய்விடும். பிடிவாதம் ஆனால் எல்லாவற்றிலும் அல்ல. தேவையானவற்றில் விட்டுக்கொடுத்து வாழ இவளுக்கு பாடம் கற்றுக்கொடுத்தது பெற்றோர் மட்டுமல்ல. வாழ்க்கையும் தான்! நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பம். தாய் லஷ்மியும் தம்பி அருள்மொழியும் சென்னையில் வாசம். இவர்களிடம் சண்டையிட்டு இங்கு வந்து சேர்ந்தாள் ஒரு வருடத்திற்கு முன்பு. பயோடேக்னாலஜி, மேலாண்மை இரண்டிலும் முதுகலை பட்டம் பெற்று பண்ணாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் டீம்லீட் வேலை! 28 வயதிலும் திருமணத்தை மறுக்கும் யுவதி. பேரழகி இல்லை என்றாலும் குடும்ப பாங்கான களையான முகம் புன்னகை இருந்தால் மட்டுமே. பெயருக்கு ஏற்றார் போல் முழங்கால் வரையுள்ள பட்டு போன்ற நீண்ட கார்குழல். மற்றபடி இஞ்சி திண்ற குரங்குதான்! பர்வக்சனிஸ்ட். அலங்கார பொம்மையல்ல. நேர் பார்வை, கம்பீரமான நடை, பொய்யில்லாத நடத்தை, அறிவான பேச்சு, கூடுதலாக திறமைசாலி வேறு!

யாழினி..அனிதா யாழினி. குழலீக்கு நேர் எதிர். சென்னையில் பிறந்து வளர்ந்து அங்கேயே எலக்ட்ரானிக்ஸ் இஞ்சினியரிங் இளங்கலை பட்டம் பெற்றவள். அமேரிக்காவின் டேக்ஸாஸ் மாகாணத்தினுள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் எம்பட்டட் சிஸ்டம்ஸ் முதுகலை பட்டம் வேறு. புகழ்பெற்ற ரோபாட்டிக்ஸ் கம்பெனியில் வேலை. பூர்விகம் கோவை. வீட்டிற்கு ஒரே மகள். துறுதுறு என இருக்கும் குணம். தாய் பத்மாவதியும் தந்தை சீனிவாசனும் ஒன்றாக குடும்பத்தொழில் பார்க்கின்றனர். பேரழகி. மாடலிங் இவள் கனவு. இவள் வைத்தது மட்டுமே சட்டம். கேட்டது எல்லாம் கிடைக்க வேண்டும். எல்லாமே கிடைத்தது கடலேன இருந்த செல்வத்தால்!! இவ்வளவு இருந்தும் என்றும் மாறாத ரணம்... தனிமை!! யாழினியும் தனிமையும் பிரியாத வரம் பெற்றனர். இவளுடைய சுபாவத்திற்கு நண்பர்கள் அமைவது சற்று கடினமானது. 26 வயதிலும் பிடிவாதம் மறையவில்லை!

டீனா. குழலீயின் தோழி. திருமணம் முடிந்து அமேரிக்காவில் வசிப்பவள். கணவன் டேவிட் பேன்சில்வேணியா பிட்ஸ்பர்கில் வேலை. திருமணத்திற்கு பின்பும் தனிமை இருவருக்கும்!

கவிதா, மதிவதனி, ராம் குழலீயின் குழுவில் பணிபுரியும் நண்பர்கள். சென்னையிலுள்ள அலுவலகத்திலிருந்து 6 மாத பயிற்சிகாக வந்துள்ளனர்.

சலீம், அருண் டீனாவுன் பணிபுரியும் தோழர்கள். வெற்றியும் யாழினியும் ஒன்றாக பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரும் வெவ்வெறு அலுவலகம் என்றாலும் நெருங்கிய நட்புறவு பாராட்டுவது குழலியால்!

மற்றவர்களை பற்றி வாழ்க்கையின் ஓட்டத்திலேயே பார்க்கலாம் வாங்க!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.