(Reading time: 20 - 39 minutes)

 

தி' ரிங்க் போகுது அனா எடுக்க மற்றான் இந்த அருண். என்ன பண்றாங்க??'

'நீ கூப்பிட்டல அதான் போன் எடுக்கலை.. இரு நான் கூப்பிடறேன்' -யாழ்.

'ஏய் யாழ் வண்டியை பார்த்து ஓட்டு... போனை இப்படி கோடு' என்று பறித்தாள் குழலீ.

'உன்னை நம்பி இந்த காரில் வந்தது எங்க தப்புதான் தாயே! ஓரமாக நிறுத்து நான் டிரைவ் பண்றேன்...இதில் புடவை வேற' குழலீ.

'ஏன் நீ மட்டும் தான் புடவை கட்டலாமா? நாங்க உடுத்தக்கூடாதா?? சரி சரி.. எல்லாரும் இறங்குங்க.. நான் பார்க் பண்ணிட்டு வர்றேன்' என்று எல்லோரையும் விட்டு பார்க்கிங் நோக்கி காரை செலுத்தினாள் யாழினி.

'பார்த்து டீ.. நாங்க உள்ள இருக்கோம். சீக்கிரம் வா'- மதி

உள்ளே செல்லும் போதே மீண்டும் அந்த கேள்வியை கேட்டாள் கவி. அதற்குள் அருண், சலீம், வெற்றி வந்துசேர்ந்தனர். சும்மா தான்டீ புடவை கட்டறேன்.. எப்பவுமே சல்வார் ஜின்ஸ் தானே போடறேன்.. எனக்கு புடவை ரொம்ப பிடிக்கும் அதனால் தான். மேலும் இதுக்கு ஒரு மரியாதை இருக்கு... அப்புறம் ஏன் ஒரு படையை கூட்டிட்டு வரேன்னா.. ஒரு பயம். கடந்த நாலு மாசமா என்னை யாரோ பாலோ பண்ற மாதிரி இருக்கு.. யாருனே தெரியல... டீனாகிட்ட சொன்னா ஏதோ உன்னோட கற்பனைனு சொல்லறா...அதுதான்!' என்று நிறுத்தி அனைவரின் முகத்தையும் பார்த்தாள்.

'உன்னையேல்லாம் ஒருத்தன் பாலோ பண்றானா?' என்று சிரித்தபடி அங்கு வந்து சேர்ந்தாள் யாழினி. மற்றவர்கள் அனைவரும் அவளை முறைத்தனர். 'ஆமா அன்னைக்கு கூட யாரையோ பார்த்து அப்படியே நின்னுடீங்களே! அந்த ஆளை நாங்க போகிற இடத்தில எல்லாம் இரண்டு மூன்று தடவை பார்த்திருக்கிறேன். அவர் தான் பாலோ பண்றாரானு தெரியல... இதுக்கு முன்னமே பார்த்தா மாதிரி இருக்குனு சொன்னேனே! குழல் கூட தெரிந்தவர் போல இருக்கு என சொன்னாங்க!' என்றான் ராம்.

'தெரியல ராம். ஆனா யாரோ பின் தொடராங்க...' நடந்தவாரே பேசிக்கொண்டு வந்தனர். அப்போதுதான் வெற்றி இருப்பதையே கவனித்தாள் யாழினி!

வெற்றியோ வேறு எதையும் கவனிக்காமல் யாழினியை பார்த்துக்கொண்டு வந்தான். 'எப்போதுதான் இவ என் காதலை புரிஞ்சிக்கப்போறாளோ?? அவ மனசு அவளுக்கே புரிய மாடிங்குது!' மனதில் நினைத்துக்கொண்டே வந்தான்.

யாழினியோ குழலியிடம் சென்று 'இவன் எதுக்கு இங்க வந்தான்' என்றாள் சற்றே கடுமையான குரலில்!

உனக்கு பிடிக்கலனா நீ பேசாதே!

குழல்!!! சரி ஓகே!

`ஆங்ங்ங்...என்ன டீ ஆச்சு?? ஒன்னுமில்லையே!

பேசியபடியே வாங்க வேண்டியவற்றை வாங்கினார்கள்.

'என்டீ அருள் தான் இன்னும் ஒரு மாசத்தில் இங்க வரப்போறானே. அப்புறம் என்டீ இதை வாங்கிட்டுப்போற?' என்றாள் யாழினியும் மதியும்.

'என்ன தான் இருந்தாலும் ஒரு அக்காவா நான் வாங்கி தந்தா மாதிரி இருக்குமா??' குழல். எல்லோர் கைகளிலும் பைகள் நிறைந்திருக்க குழல் மட்டும் ஒரே ஒரு பையுடன் வந்தாள். ஷாப்பிங் வந்தது நான் வாங்கியது மட்டும் நானில்லை! அவர்கள் வழக்கமாக செல்லும் அந்த இந்திய உணவகத்திற்கே வந்தனர். வரும் போதே மதியின் கைபேசி ஒலிக்க அதை எடுத்து பேசினாள் குழலீ.

ம்ம்.. சொல்லு டீனா..

....
டேவிட் எழுந்தாச்சா???!

....
சரி சரி ஒகே.

.....
ஆமாம் அங்க தான் இருக்கோம்...

....

நைட் சமைக்கிறேன்... போதுமா?

....
இப்போ வரீங்களா.. பச்ச் நீங்க என்ஜாய் பண்ணுங்க டா. நாங்க பொறுமையாக வர்ரோம்...

.....
வந்துடீங்களா... சரி வாங்க… என்று வைத்துவிட்டு.. மற்றவர்களை நோக்கி திரும்பினாள். யாருமே அங்கே இல்லை. சரி இன்னும் இரண்டு கடை தான் என்று எண்ணியவாறே நடந்தாள்.

தோ ஒரு பரிச்சியமான குரல். சுற்றும் தேடினாள்.. யாருமில்லை பச்ச்...

பாரதி... லேடி பாரதி...! கூறியவாறு யாரோ குழலீயின் கண்களை அழுத்த பற்றினார்கள். அதற்குள் அவள் வரவேண்டிய உணவகத்தின் வாசலில் இருந்தாள். மதியம் பசி வேறு வயிற்றை கிள்ளியது.

ஹலோ.. பாரதி மேடம்...யாருனு கண்டுபிடிங்க பார்ப்போம்!!

யார் நீங்க தெரியலையே.. முதலில் என் பெயர் பாரதி இல்ல.. கொஞ்சம் கையை எடுங்க ப்ளிஸ்... என்றவாறு கையை எடுக்க முயற்சித்தாள்.

என்ன பூங்குழலீ தானே நீங்க.. அப்போ நான் சரியாக தான் கூப்பிட்டேன். யாருனு கண்டுபிடிங்க..

கையை துழாவினாள் குழலீ.. தெரியலையே ???

பாரதி... லேடி பாரதியார்..!

'உங்க பக்கத்தில் யாரோ நிக்கராங்க... '

ஆமா!
யாரு??
என் ப்ரண்ட்!

ஆமாம். நான் இவளோட பிரண்ட்!

மீண்டும் கையை தொட்டாள்! ஒரு நிமிடத்துக்கு பிறகு

ம்ம்ம்ம்... பானு?? சத்தியன் தானே பக்கத்தில்!!

எப்படி குழலீ!!!! என்று கையை விடுவித்தாள் பானு. அருகில் இருந்தது அவள் கூறிய சத்தியன் தான்!

ஏய்!!!

இருவரும் ஆற தழுவிக்கொண்டனர்..

எப்படி இருக்க பானு?? நீ இங்க என்ன பண்ற சத்தியன்??? நீ எங்க டீ இருக்க??

இருங்க இருங்க சொல்லறேன்.. நான் நல்லா இருக்கேன். ஆன்சைட் வந்திருக்கேன். இன்னும் டேன் டேஸ் தான். அப்புறம் சென்னை. அதனால் தான் சும்மா சுத்தில்பக்கலாம்னு வந்தோம்.

நீ சென்னைல தானே இருக்கனும். இங்க என்ன பண்ற. போன வாரம் சாட் ல கூட எதுவும் சொல்லை. என்ன சத்தியா??

இல்ல அது வந்து...!

'சரி விடு.. எக்ஸாம் எழுதுற இல்ல ??? நான் நாளையே சென்னை கிளம்பறேன். அப்ப அங்க பார்ப்போம். நான் எதுவும் கேட்கலை சரியா?? இப்ப வாங்க எதாவது சாப்பிடலாம்' என்று பேசிக்கொண்டே உள்ளே நுழைந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.