(Reading time: 20 - 39 minutes)

 

சுவாரசியமாக மூவரும் பேசியபடியே வந்தனர். ஏய் பானு... என்றபடி அவளை வந்து தழுவிக்கொண்டாள் டீனா.

'சரி சரி சாப்பிடலாம் வாங்க. யாழ் எங்க டீனா?? வெற்றி??? எனக்கு எதாவது ஆர்டர் பன்னியா??? உங்களுக்கு??'

'இல்ல பாரதி மேடம். நாங்க கிளம்பறோம். அப்புறம் பார்க்கலாம்' - பானு.

'இல்ல நீ இப்போ வர்ற. என் பிரண்ட்ஸ் எல்லாம் இருக்காங்க. வா'

'இருங்க. உங்களுக்கு எதாவது வாங்கிட்டு வர்றேன்'

குழல் திரும்பி வந்தபோது அவர்கள் அமர்ந்திருந்த டேபிளில் ஒரே ஆரவாரமாக இருந்தது. புதிதாக யாரோ ஒருவன் அமர்ந்திருந்தான்.. குழலிக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தான். அவர்களை நெருங்க நெருங்க அந்த புதியவனின் பின்புரம் பார்த்தே படபடப்பு அதிகமாகியது குழலீக்கு!

'அ..அவனாக இருக்கக்கூடாது. கிடையாது. இத்தனை நாளும் அவனை பின் உருவத்தை பார்த்தே கண்டுபிடித்துவிடுவாள்.. ஆனால் இவை அனைத்தும் தொலைவில் நடப்பவை.. ஆனால் இன்று இவன் இவர்களுடன் எப்படி??? இருக்காது அது அவன் கிடையாது.. இருக்கக்கூடாது... கடவுளே!! முருகா!'

படபடப்பை அடக்கியபடியே சிரித்துக்கொண்டு வந்து சேர்ந்தாள். அந்த புதியவனின் ஒரு பக்கத்தில் யாழினியும் மறுபக்கம் வெற்றியும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு எதிர் சீட் காலியாக இருக்க அவர்களை சுற்றிக்கொண்டு பானு அருகே அந்த சீட்டில் அமர்ந்து வாங்கி வந்தவற்றை இருவருக்கும் கொடுத்தாள்.

ஹலோ பிரதர்.. ஒரு முக்கியமான ஆள் பத்தி சொன்னோமில... இவங்கதான்.. என்றாள் டீனா.

இது என் பிரண்ட் பூங்குழலீ! வெற்றியும் யாழினியும் ஒரே சமயத்தில் கூறினர். அப்போதுதான் எதிரில் இருந்தவரை நிமிர்ந்து பார்த்தாள் குழலீ!

பானு சம்பந்தமே இல்லாமல் 'எங்க குழலீ சம பிரிலியண்ட் சார்.. தைரியசாலி.. பாரதி கண்ட புதுமைப்பெண் சொன்னா அது தவறு.. பாரதியின் பெண் உருவம் சார்'

டேவிட் 'ஆமா ஆமா.. ரொம்ப புத்திசாலி தான்' என்று குழலீயை கலாய்க்க தொடங்கினார்.

குழலீக்கோ பேரதிர்ச்சி! இவனை என்றைக்கு நேராக பார்த்தாலும் அன்றைக்கு அவன் தீர்ந்தான் என்று பொருமியவள்!! என்றைக்குமே இவனை பார்க்கவே கூடாது என்று நினைத்தவள். வேண்டியது என்றைக்கும் நடந்ததில்லை!! அவன் தான். யாராக இருக்கக்கூடாது என்று நினைத்தாளோ.. அவனே தான்.

வெற்றி 'குழலீ.. இவன் என்னுடைய பிரண்ட் பிரபு.. பிரபு கனகராஜ்!'

யாழினியோ தன் பங்கிற்கு 'குழல்.. நான் காலையில் சொன்னேனே அது இவர்தான்' என்று கண்சிமிட்டினாள்! பூங்குழலீயின் முகத்தில் ஏற்பட்ட உணர்ச்சி மாற்றங்களை பிரபுவும் வெற்றியும் கவனிக்கத்தவறவில்லை! எல்லா உணர்ச்சிகளையும் சமணப்படுத்தி பிரபுவை பார்த்து சிறு புன்னகை தந்து கைக்குளுக்கினாள். ஆனால் அவளுக்குள் இருந்த கேள்வித்தீ உயிர் பெற்று எரிந்துக்கொண்டு இருந்தது.  பின்பு எல்லோரும் சிரித்தபடியே உணவை உண்டனர்.

'சத்தியன்.. எக்ஸாமுக்கு தயாரா'- டீனா

'ஆம் டீனா. ஓரளவுக்கு! நீ குழலீ??' என்றான்.

'ஏன் கேட்கற.. இன்னைக்கு தான் கஷ்டப்பட்டு இவளை தள்ளிக்கிட்டு வந்திருக்கிறோம்... நீ வேற' என்று சலித்துக்கொண்டார்கள் யாழினி, கவி, மதி.

'ம்ம்.. ஓரளவுக்கு சத்தியா.. ஆனாலும் பயம் இருக்கதான் செய்யுது! அதனால்தான் நாளைக்கே கிளம்பறேன்'-குழல்

'எங்க??' என்றான் பிரபு பரபரப்பாக.

'இன்னும் இருபது நாளில் இவளுக்கு எக்ஸாம்.. இந்தியன் சிவில் சர்வீஸ் மேயன்ஸ். இருவரும் எழுதுராங்க!' என்றாள் டீனா. லேசாக புன்னகைத்தாள் குழலீ. பானு மீண்டும் அவள் புகழ்பாடத் தொடங்கினாள். 'ஏய் பானு.. கொஞ்சம் நிறுத்து.. அறுவையா இருக்கு. அவள் சொல்வது போல் எதுவும் இல்லை. சும்மா கதை விடுறா' - குழல்.

ஏனோ அவன் மீது இருந்த வெறுப்பு இன்னும் அதிகமாகியது. அதற்கு பிறகு குழலீயின் படபடப்பு அடக்கி கலகலப்பாக இருந்தாள். பிரபு என்றோருவன் எதிரில் இல்லாது போல் காட்டிக்கொண்டாள். அனைவரும் உற்சாகமாக உணவை உண்டு முடித்தனர்.

குழலீ.. நீ ஐஸ்கிரீம் பில் கட்டிடு என்று கண்சிமிடினாள் மதியும் கவியும். டீனாவை முறைத்த குழலீ... 'சரி ஒகே.. நைட் டின்னர் நீங்க தயார் பண்றீங்களா?? அப்ப எனக்கு ஒகே' ஏய் இல்ல குழல்... எல்லோரும் கொடுக்கலாம்.

பிரபு இடைமறித்தான். 'நான் கொடுக்கிறேன். என்னோட டிரீட் இது!'

'இல்லை வேண்டாம். விருந்தாளிகள் கிட்ட இருந்து பணம் வாங்கி சாப்பிடக்கூடாது' – குழலீ

பிரபு 'என்னையும் உங்களில் ஒருவனாக சேர்த்துக்கொள்ளாமே. அப்போ நான் விருந்தாளி இல்லை ல?? என்ன டீனா, டேவிட், வெற்றி?? நான் சொல்வது சரிதானே?'

'இல்லை நானே கொடுத்தடுறேன்.'

யாழ் 'இப்ப நீ என் டிரீட் தரனும் பிரபு?? Anything special??'

ம்ம்ம்ம்... என்ற யோசனையோடு இரண்டு நொடி மௌனத்தில் ஆழ்ந்தான். பின்னர் 'என் வாழ்க்கையின் மிக முக்கியமான விஷயமா சென்னைக்கு கிளம்பறேன் நாளைக்கு. திரும்பவும் யு ஸ் தனியா வருவேனா தெரியலை....'

எல்லோரிடமும் அமைதி. யாழினிதான் பேசியது முதலில். 'என்ன பிரபு திடீரென கிளம்புற. என்ன விஷயம்??'

அவன் கண்கள் சிரித்தது. யாழ் 'ஏய் படம் கமீட் ஆகறியா?? சூப்பர்மேன். கங்ராட்ஸ்!' 'மச்சான் சூப்பர்டா' என்று வெற்றி அவனை கட்டிக்கொண்டான்.

'ம்ம்ம்ம்... ஆமாம் கமீடாகிறேன்... மற்றது எல்லாம் சஸ்பன்ஸ்.. உறுதியான பிறகு சொல்லறேன்!' பின்னர் எல்லோரும் ஆர்பரித்துக்கொண்டனர்! குழலீ பதிலுக்கு வெளியே மெல்லிய புன்னகையுடன் 'உங்கள் இனிய வருங்காலத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்!' என்றாள்.

புரியாத புன்னகை அவன் கண்களிலும் உதட்டிலும்.. 'Wish you the same' என்றான். 'என்ன இவன்?? இவனை எல்லாம் ஒரு ஆளுனு பேசறேன் பாரு என்னை சொல்லனும்.. இங்க நீ இல்ல நா எவன் அழுதான்' என்றவாறு மனிதனுள் அவனை அர்ச்சித்துக்கொண்டேயிருந்தாள் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று உணராமல்!

'கண்டிப்பா வர்ரேன் டீனா டேவிட். வெற்றிக்காகவும் யாழினிகாகவும் வர்ரேனோ இல்லையோ... ம்ம்.. நம்ம கலெக்டர் மேடம்காக நிச்சயமாக வருகின்றேன். என்ன கலேக்டர் மேடம்?? சரியா??' – பிரபு. தன்ணுர்வு பெற்று திரும்பிய குழல் அவன் பேசில் திகைத்தாள். 'என்ன???' 'இல்லை கலேக்டர் மேடமுகாக இன்றைக்கு அவர்கள் கொடுக்கும் டின்னர் வர்ரேன். யாருக்கு அவங்க தயவு இருக்கோ இல்லையோ... எனக்கு அவங்க தயவு... கருணை பார்வை வேண்டும்!' என்று முடித்தான்!

மனதில்...யாரு இந்த சதி வேலை செய்தது...? யாழினி அவளை பார்த்து சிரித்தாள். கடவுளே.. இத்தோடு இவனை நான் இன்னைக்கு பார்க்கக்கூடாது! என் கோபத்தை கட்டுக்குள் வை!!

'வெற்றி உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயமா பேசனும் தான் உன்னை இங்க வர சொன்னேன். ஆனா பேச முடியல்ல. இன்னைக்கு டின்னருக்கு பிறகு கொஞ்சம் வெய்ட் பண்ணு. ஒரு முக்கியமான முடிவு எடுக்கணும்!' – குழலீ ‘சரி குழல். கண்டிப்பா. நானும் உன்கிட்ட ஒரு விசயம் சொல்லனும் - வெற்றி.

யார் இந்த பூங்குழலீ..யாழினி..?? அப்படி என்ன நட்பு இவர்களுடையது??வெற்றிக்கும் யாழினிக்கும் என்ன பிரச்சனை? குழலீயின் வாழ்க்கையில் யார் இவர்கள்?? ஆர்யனை பற்றிய பேச்சு அவளுக்கு ஏன் இவ்வளவு கோபம் கொடுத்தது?? பிரபு என்ற பெயர் குழலீயை ஏன் இவ்வளவு சலனப்படுத்தியது?? அவனை பார்த்த குழலீக்கு ஏன் இவ்வளவு கோபம். ஏன் குழலீ திருமணத்தை மறுக்கிறாள்?? இவர்கள் வாழ்க்கையில் இன்னும் என்னென்ன சிக்கல்கள்... காத்திருப்போம் இறைவன் இன்னும் என்னென்ன முடிச்சுகள் போட்டிருக்கிறான் என்று!

தொடரும்...

Episode # 02

{kunena_discuss:833}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.