(Reading time: 24 - 47 minutes)

றுநாளே, அவ்னீஷ் நான் ஊருக்கு சென்று வருகிறேன்… சில காலம் அண்ணனுடன் இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது… நான் போயிட்டு வரேன்… சரியா… என்றாள் அவள்…

சரி சூர்யா… போயிட்டு வா… சீக்கிரம் வந்துடு சரியா… என்று அவனும் அவளை வழி அனுப்பி வைத்தான்… இவள் கிளம்பி இலங்கேஷைப் பார்க்க சென்ற நேரம், ஆதர்ஷ் லண்டனுக்கு வந்து சேர்ந்தான்…

தன்னை தேடி வந்தவளை வியப்புடனும் உவகையுடனும் வரவேற்றான் இலங்கேஷ்…

ஆனால், அவள் முகம் அந்த வரவேற்பை ஏற்பதாய் இல்லை… எதையோ யோசித்தவளாய் இருந்தாள்… அவனுக்கு தங்கையின் அந்த நிலை பிடித்தமாய் இல்லை..

என்னடா… முகம் ஏன் வாடிப் போய் கிடக்கிறது?... உடம்பு எதும் சரி இல்லையாம்மா என்றவன் அவள் நெற்றியில் கை வைத்துப் பார்க்க, அது அவளுக்கு ஒன்றுமில்லை என்று தெரிவித்தது….

எனக்கு எதுவுமில்லைண்ணா, கொஞ்சம் அசதியாக இருக்கிறது… என்றதும்,

நீ போய் தூங்குடா… அண்ணன் கொஞ்ச நேரம் கழித்து சாப்பாடு எடுத்து வருகிறேன் என்றவன் அவளை அவளின் அறைக்கு அனுப்பி வைத்தான்…

அதன் பின் அவள் வந்து நான்கு மாதங்கள் முடிவடைய இருக்கும் தருணத்தில், ஒரு நாள் தங்கையிடம் மெல்ல விசாரித்துப் பார்த்தான்…

அவளோ, மெல்ல சிரித்து, உன்னை அகற்ற சொன்னேன்.. நீ செய்யவில்லை… ஆதலால், நானே அகற்ற ஏற்பாடு செய்து விட்டேன் என்றாள் புன்னகை மாறாமலே…

சது…. என்ன சொல்கிறாய்… என்றவன் சற்றே அதிர்ச்சியில் கேட்க…

உண்மைதான் அண்ணா… இந்நேரம் அவன் கதை முடிந்தாலும் முடிந்திருக்கும்… என்று அவள் சொல்லி முடிக்கும் முன்,

என்ன காரியம் செய்துவிட்டாய் சது… நீ ஏன் இப்படி இருக்கிறாய்… அவன் வளர்ச்சி என்னைப் பாதிக்க போவதில்லை என்று அத்தனை தடவை நான் சொன்னேனேம்மா… நீ ஏன் என் விஷயத்தில் மட்டும் இப்படி பிடிவாதம் பிடிக்கிறாய்?...

என் அண்ணன் நீ… அதனால் தான்… உலகத்தில் அனைத்தையும் விட நீ எனக்கு முக்கியம்… உனக்கு எதிராக என்ன, உன்னை பாதிக்கும் வண்ணம்,உன் பக்கத்தில் ஒரு தூசி, துரும்பு கூட நான் வர விட மாட்டேன் நான் உயிரோடு இருக்கும் வரை…. என்றாள் அழுத்தமாக…

அவளின் பாசத்தில் அவன் திகைத்து நின்றாலும், தங்கையின் நிலைக்கு, இந்த பிடிவாத குணத்திற்கு தானும் ஒரு காரணமோ என்ற எண்ணம் அவன் மனதில் லேசாக கேள்வியாக எழுந்தது…

அவளை மாற்ற முயற்சிக்க வேண்டும் என்றெண்ணினான் ஒரு தமையனாக… தன் தங்கையிடம் இந்த பிடிவாதம் ஒன்று மட்டும் தான் சற்று உறுத்தலாக அவனுக்கு தோன்றியது… மற்றப்படி அவள் போல் ஒரு நல்ல பெண்ணை பார்க்க முடியாது தான் என்பதில் அவனுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை…

றுநாளே, அவள் ஏவிய ஆட்களின் முயற்சி தோல்வியடைந்ததை கேள்வியுற்ற அவள் வெறி கொண்டவளாக அனைத்தையும் தூக்கி உடைக்க முயற்சித்த போது, இலங்கேஷ் அவளை சமாதானம் செய்தான்…

மெல்ல அவளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தவன், அவளிடத்தில் அவ்னீஷ் பற்றிய பேச்சை எடுத்தான்…

அவ்னீஷ் பேச்சை எடுத்ததும், அவளுக்கு அவள் மனதில் அன்று வரை புதைந்திருந்த ஆதர்ஷின் முகம் மெல்ல தலைத்தூக்க, அவள் முகம் செம்மையுற்றது… முகம் பல்வேறு உணர்ச்சிகளை கலவையாக காட்டியது…

அதை இலங்கேஷ் குறித்துக்கொண்டான்… அவன் மனம் பலவித யோசனையில் மூழ்கியது….

சது… சதும்மா… என்று அவன் அவளை உலுக்க… அவள் அமைதியாக இருந்தாள்…

பின் தன் தமையனிடம், மெல்ல அன்று நிகழ்ந்த நிகழ்வை சொன்னாள்…

உன்னிடம் இப்படி சொல்வது தவறா சரியா என்று எனக்கு தெரியவில்லைண்ணா… ஆனால், எனக்கு உன்னை விட்டால் யார் இருக்கிறார்கள்… நான் உனக்கு தெரியாமல் எதுவும் செய்தது கிடையாது… உன்னிடம் தெரியப்படுத்தாமலும் இருந்தது கிடையாது…

பார்த்த மாத்திரத்திலே எனக்கு அவரைப் பிடித்துவிட்டதுண்ணா… ஆனால், அவரின் பெயரை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தும் தெரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டேன்… உன்னிடம் சொல்லி, உனக்கு சம்மதம் என்றால் மட்டும் என் மனதில் மேலும் ஆசைகளை வளர்க்க முடிவெடித்திருந்தேன்… இங்கு வந்தது கூட உன்னிடம் அதை தெரிவிக்கத்தான்… ஆனால், என்னால் சொல்ல முடியாது போயிற்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்…

அவரைப் பற்றி நீயும் விசாரித்துக்கொள் அண்ணா… அவ்னீஷின் அண்ணன் தான் அவர்… ஆனாலும், அவரைப் பற்றிய தகவல்கள் உனக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே நான்… நான்… என்றவளுக்கு அதன் பின் பேச்சு வரவில்லை…

தங்கையின் பதிலும், தன் முடிவிற்காக காத்திருக்கும் தங்கையின் குணமும் அவளது பிடிவாத குணத்தை மறைய வைப்பதை தெரிய வைத்தது…

ஆனாலும், தன் மேல் வைத்திருக்கும் மரியாதைக்கும், பாசத்திற்கும், தான் அவளின் சந்தோஷத்திற்கு எந்த விதத்திலும் இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்… அதனாலே, அவ்னீஷின் குடும்பத்தைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான் மேலும் ஆழமாக…

ஏற்கனவே தங்கை அவ்னீஷ் பற்றி சொல்லிய போது, அவனைப் பற்றி மேலோட்டமாக விசாரித்ததில் திருப்தி ஏற்படவே, அவனுடனான தங்கையின் நட்புக்கு அவன் மறுப்பு தெரிவிக்கவில்லை…

இப்போது தங்கையின் விருப்பத்தை நிறைவேற்றும் எண்ணத்தில், அவளுக்கு வாழ்வை அமைத்து கொடுக்கும் நினைவில், ஆழமாக விசாரிக்க, அவனுக்கு ஒரு பக்கம் பேரதிர்ச்சியாகவும், மறுபக்கம், மிகுந்த நிறைவையும் கொடுத்தது…

நிறைவுடன் தங்கையைப் பார்க்க சென்றவன், அவளிடத்தில் சம்மதத்தை சொன்னபோது,

அவள் அவனை மகிழ்வுடன் அணைத்துக்கொண்டாள் கண்ணீருடன்… எங்கே நீ மாட்டாய் என்று சொல்லிவிடுவாயோ என்று பயந்து போனேன் அண்ணா, நீ சரி சொல்லி விட வேண்டும் என்று எத்தனை முறை கடவுளிடம் வேண்டிக்கொண்டேன் தெரியுமா??... என் வேண்டுதல் நிறைவேறி விட்டதுண்ணா, இனி நான் கவலை இல்லாமல் இருப்பேன்… என்றவள் சிறுபிள்ளையாய் அவனிடம் அழுது கொண்டிருந்த போது, அவளுக்கு ஒரு போன் வந்தது…

எடுத்துப் பேசியவள், சரி, அனுப்புங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றாள்…

என்னடா யார் போனில்… என்றான் இலங்கேஷ்…

அதைவிடுண்ணா… அப்புறமா நானே சொல்கிறேன் என்றவள், அண்ணா, அவர்…. அவர்…. அவரின் பெயர் என்னண்ணா?.... என்றாள் தலை கவிழ்ந்து கொண்டே…

வெட்கம்… பெண்களுக்கு எங்கிருந்து தான் வருமோ இது… தனக்குப் பிடித்தவனைப் பற்றி பேசும் போது வெட்கம் வந்துவிடுகிறது போலும்… என்றெண்ணியவன், தங்கையின் முகத்தில் தோன்றிய சந்தோஷத்தை ரசித்தான்….

நீ அவனுடன் சேரத்தான், உன் பெயரிலும் அவன் பெயர் சேர்ந்திருக்கிறதோ என்னவோ… என்றான் மெல்லமாக…

என்ன சொல்கிறாய்… என்றபடி புரியாமல் அவள் அவனைப் பார்த்த பொழுது…

சதும்மா… அவன் பெயர் ஆதர்ஷ் ராம்… ஆதர்ஷ் என்பது அந்த ஒளி கொடுக்கும் கதிரவனின் பெயர்… உன் பெயரிலும் அதே தானடா இருக்கிறது… அதை தான் சொன்னேன்… என்றான் அவன் சிரிப்புடன்…

ஆதர்ஷ் ராம்… ஆதர்ஷ்….. என்று அவன் பெயரையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தவள் மெல்ல முகம் மறைத்து புன்னகைத்துக்கொண்டாள்…

தங்கையின் புன்னகை அவனுக்கு நிறைவாக இருக்க, விரைவில் அவளுக்கு நல்லதை நடத்திப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த போது,

அவள் இல்லை………….. என்று கதறுவது கேட்டது…

என்னாயிற்று என்ன கலவரத்துடன் அவன் அவளருகே சென்ற போது, அவள் செல்போனில் இருந்த ஆதர்ஷின் புகைப்படத்தைப் பார்த்து கதறி அழுது கொண்டிருந்தாள்…

சது… சதும்மா… என்னாச்சுடா… சது… இங்கே பாரு… என்று அவன் அவள் முகம் பற்றித்திருப்ப…

அவள் அண்ணா, நான் அவரைக்கொல்லுறதுக்கா ஆள் அனுப்பினேன்… அய்யோ… அவருக்கு எதுவும் ஆகியிருந்தா நான் என்ன பண்ணியிருப்பேன்… ?... என்னோட பிடிவாதம் அவரோட உயிரையே கொன்னுருக்குமே… அய்யோ… நான் இனி இருக்கக்கூடாது என்றவள் வேகமாக அவனிடமிருந்து விலகி, வீட்டின் சுவரில் மாட்டியிருந்த அந்த கூர்மையான கத்தியைக் கொண்டு அவளை மாய்த்துக்கொள்ள முயற்சித்தாள்…

சது…. என்ற அலறலுடன் அவளை நோக்கி ஓடினான் இலங்கேஷ்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.