“பேய் மாதிரி சிரிக்காதடி…. எனக்கு பயமாக இருக்கு”
“உனக்கு பயமா… கொஞ்சம் நம்பர மாதிரி பொய் சொல்லு செல்லம்… வினி நீ இடையில் இப்படி பேசின நான் சொல்ல மாட்டேன்….” என அவளை மிரட்டினாள்…
சரிம்மா நீ என்னனு சொல்லு….”
“அப்படி வா… அனிதா நடந்ததை சொல்ல….”
“அவ்வளவு தானா... அப்போ கவலை பட வேண்டாம்….” என்றாள் மகிழ்ச்சியுடன்
இருவரும் சித்ராவிடம் என்ன சொல்லி சமாளிப்பது என பேசிய படி அவர்களின் வீட்டிற்கு சென்றனர்…
“வினி கேட்கனும் நினைத்தேன்… அங்க டென்னிஸ் கோர்டில் நீ ஏன் தனியா பேசிக் கொண்டிருந்தாய்…..?”
“இல்லையே நான் சுந்தரம் தாத்தாவுடன் தான் பேசக் கொண்டிருந்தேன்… ம்ம்ம் நீ வறதற்கு முன்னால் தான் அங்கு இருந்து போனார்….”
“சுந்தரம் தாத்தாவா? அது யாரு..? நான் இது வரைக்கும் பார்த்தது இல்லையே….”
“அவர் செக்யூரிட்டி அனிதா… இங்க நைட் ஷிப்ட்ல வேலை செய்கிறார்… நீ அவரை பார்த்தது இல்லையா….?”
இல்லை என தலை அசைத்தவள் மனதில் அமுதா அக்காவிடம் சுந்தரம் தாத்தாவை பற்றி கேட்டனும் என நினைத்துக் கொண்டாள்.
ருபனின் வீட்டில் இருந்து வெளியே வந்த மகேன் நேராக அவனின் வீட்டிற்கு செல்ல பூட்டிய வீட்டை பார்க்கையில் அவனின் மனதில் வேறுமை தோன்றியது.
சாவியை எடுக்க நினைக்கையில் தானாக திறந்த கதவை பார்த்தவன் மென்மையாக புன்னகைத்தான்.
அவன் உள்ளே நுழைந்த சில நோடிகளில் வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளும் தானாக தட்டப் பட்டது.
ருபனின் அம்மா குடுத்த உணவை ஒரு தட்டில் வைத்து அதை டைனிங் மேஜையில் வைத்து அவன் குளிக்க சென்றான்.
குளித்து வேறு உடை மாற்றி அவன் டைனிங் மேஜைக்கு வரும் போது அவன் வைத்த உணவை யாரோ எடுப்பதும் அது மாயமாக மறைவதை பார்த்தவன் அதன் எதிரே அமர்ந்து “குட்டிம்மாக்கு என் மேல் என்ன கோவம்? எப்போதும் என் பைக் சத்தம் கேட்டவுடன் கதவை திறந்துவிடுவ….”
அவன் அருகே பாத்திரம் விழுவதை பார்ததவன்…. “ஒ… மேடம் ரொம்ப கோவமதான் இருக்கிங்க…..” சொல்லி சிரித்தவனின் தலையை நோக்கி ஒரு கரண்டி அந்தரத்தில் பறந்து வந்து அடித்தது.
“குட்டிம்மா இன்னைக்கு நிறைய வேலைடா… நீ இப்படி அடித்தால் நான் கதை சொல்ல மட்டேன்…..” என மிரட்டினான்.
மீண்டும் அந்த உணவை யாரோ எடுப்பதும் அது மாயமாக மறைவதை பார்த்தவன் அன்றைக்கு நடந்ததை சொல்லி முடித்து உறங்க சென்றான்.
அமுதன் மதியம் பார்த்தை நினைத்து பார்த்தான். அது மங்களன ஒர் உருவம். பகல் நேரத்தில் அறைக்குள் நுழையும் போது ஒளி வெளிச்சத்தில் அவன் கண்கள் கூச, கண்களை கசக்கி பார்க்கையில் புகை முட்டமும் அதில் ஒர் உருவமும் தெரிந்தது. இப்பொழுது அதை யோசித்து பார்க்கையில், அது ஒளி வெளிச்சத்தில் அவனுக்கு அப்படி தெரிந்து இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.
“ஏங்க எந்த கோட்டையை பிடிக்க இந்த அத்த ராத்தில் யோசிக்கிரிங்க” அமுதாவின் கேள்விக்கு
“ஒன்னும் இல்ல, வா தூங்க போகலாம்….” அமுதன் இன்னும் இது போல் நிறைய பார்க்க போவது என அறியாமல் உறங்க சென்றான்.
இவர்கள் அனைவரும் அன்றையா நாளில் நடந்தவையை நினைத்து பார்த்து அதற்கு விடை தேடிய படி உறங்க சென்றனர்…. இவர்கள் அனைவருக்கும் மறுநாள் காலைப் பொழுது அமைதியாக விடியும் போது, வினிதாவிற்கும் அமைதியாக விடியுமா
தொடரும்
{kunena_discuss:753}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.