(Reading time: 21 - 41 minutes)

17. உள்ளம் வருடும் தென்றல் - வத்ஸலா

வரை எழுப்பி அமர வைக்க முயன்றான் பரத். மு.. முடிய..லை...டா.....  நெஞ்சு ... ரொம்..... வி.. விஷ்..வா கூ..ப்..பி... மூச்சு திணற திணற தடுமாறி வெளி வந்தன அவர் வார்த்தைகள். மறுபடி படுத்து விட்டிருந்தார் அத்தை.

'கூப்பிடறேன் அத்தை. நாம முதலிலே ஹாஸ்பிடல் போயிடுவோம்'. என்றான் பரத்.

அத்தை இருக்கும் நிலை மனதிற்கு சரியாக படவில்லை. மனம் பதறி துடித்துக்கொண்டிருக்க உடனே மருத்துவரை அணுக வேண்டுமென்று அறிவு ஆணையிட்டது அவனுக்கு.

Ullam varudum thendral

அவர்கள் வழக்கமாக செல்லும் மருத்துவரை அழைத்தான் பரத். ஆம்புலன்சை வரச்சொல்லி விட்டு, அத்தையை நெருங்கினான் பரத்.

அஸ்...வி... என்றன அவரது உதடுகள்.

அடுத்த நொடி அ...ஸ்...வினி.... அதிர்ந்து ஒலித்த அவனது குரலில் அடுத்த சில நொடிகளில் எல்லாருமே அத்தையின் அருகில் இருந்தனர்.

பதறித்தான் போனார் தாத்தா. 'என்னாச்சுடா?'

'தெரியலை தாத்தா. எனக்கு கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. ஆம்புலன்ஸ் இப்போ வந்திடும். ஹாஸ்பிடல் போயிடலாம்' என்றான் பரத்.

அம்மாவின்  அருகில் அமர்ந்தாள் அஸ்வினி. 'என்னமா செய்யுது?

மகளின் கன்னங்களை மெல்ல வருடிக்கொடுத்தார் மைதிலி.  ஏதோ ஒரு பயம் அவரை அழுத்த துவங்கியது. அவள் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு சொன்னார் 'பத்..தி..ர..மா இருந்..துக்கோ..மா'

அம்மா என்னம்மா? உனக்கு ஒண்ணுமில்லைமா' அஸ்வினியின் கண்களில் நீர் சேர்ந்தது.

வலியின் தாக்கத்தில் கிட்டத்தட்ட அரை மயக்க நிலையில் இருந்தார் மைதிலி. அவர் உதடுகள் விஷ்வாவின் பெயரையே தொடர்ந்து உச்சரித்துக்கொண்டிருந்தன.

அவர் தவிப்பை பார்த்த மாத்திரத்திலேயே, பரத்தின் விரல்கள் விஷ்வாவின் எண்ணை அழுத்தி விட்டிருந்தன..

'கண்ணன் பேசறேன்டா'

'ம். சொல்லு'  யோசைனையுடனே ஒலித்தது விஷ்வாவின் குரல்.

'அத்தைக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லைடா.......

விஷ்வாவினுள்ளே எல்லாம் குலுங்கியது. நேற்று நன்றாக இருந்தாரே.!!!!!!!!!!! 'என்னாச்சுடா?' என்றான் குரலில் சேர்ந்த பதற்றத்துடன்.

'தெரியலைடா. உன்னை பார்க்கணும்னு சொல்றாங்க. நாங்க இப்போ ஹாஸ்பிடல் போறோம். நீ அங்கே வந்திடு'. மருத்துவமனையின் பெயரை சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான் பரத்.

'நீங்க எல்லாரும் இருங்க. நான் அங்கே போயிட்டு போன் பண்றேன்.' எல்லாரிடமும் சொல்லிவிட்டு ஆம்புலன்ஸில் அவருடன் பரத் மட்டும் கிளம்ப எத்தனிக்க

அஸ்வி..னி... நீ... வா... சிதறின அவர் வார்த்தைகள். பெற்ற பிள்ளைகளின் அருகாமைக்காக ஏங்கியது அந்த தாயின் மனம். ஆம்புலன்ஸில் ஏறிக்கொண்டாள் அஸ்வினி.

மருத்துவமனையை நோக்கி ஆம்புலன்ஸ் சென்றுக்கொண்டிருக்க, அரை மயக்க நிலையில் மைதிலியின் மனதில் பலநூறு எண்ணங்கள்.

அவரின் அருகில் பரத் அவர் தலையை வருடியபடி அமர்ந்திருக்க, அவர்  கையை பற்றிக்கொண்டு அமர்ந்திருந்தாள் அஸ்வினி. 'உனக்கு ஒண்ணுமில்லைமா சரியாயிடும்'. திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தாள் அவள்.

மைதிலியின் கண்முன்னே பலநூறு காட்சிகள் வந்து வந்து போவதை போலே ஒரு உணர்வு. எதை நோக்கியோ தான் இழுத்து செல்லப்படுவதைப்போல் ஒரு பயம். அவர் மனமெங்கும் விஷ்வா நிறைந்திருந்தான்.

நிழல் உருவமாக அவர் கண்முன்னே வந்து வந்து போனான் விஷ்வா.

'அ....ம்....மா' . கண்ணீரில் கலந்து, உடைந்து அவர் காதில் அவன் குரல் கேட்பதை போல் இருந்தது.

'வி...ஷ்வா ஏன்டா என் நிம்மதியை கெடுக்கறே? இங்கே இருந்து போயிடு' அவர் குரல் ஒலிக்கிறது.

உடைந்து போய் திரும்பி நடக்கிறான் விஷ்வா.

'வி....ஷ்....வா... போ....கா....தே'  அரை மயக்கத்தில் வாய்விட்டு சொன்னார் அவர்.

அவர் படும் அவஸ்தையில் பரத்தின் கண்களில் வெள்ளம். 'விஷ்வா வந்திடுவான் அத்தை. கொஞ்சம் அமைதியா இரு' மெல்ல சொன்னான் பரத்.

வந்துவிடுவானா விஷ்வா? என் மகன் வந்துவிடுவானா? வந்து எனைப்பார்த்ததும் அழுவானா அவன்? சுவாசம் தடுமாறிக்கொண்டிருந்தது அவருக்கு.

கண்முன்னே அவனது தந்தையின் மரணத்தின் போது அவன் அழுதுக்கொண்டே சென்ற காட்சி வந்தது போலே இருந்தது.

அழா ...தே... வி..ஷ்.... என்றார் அவர்.

அவன் அழும்போது அவன் கண்ணீரை துடைக்கவில்லை நான். அவன் வலிகளை புரிந்துக்கொள்ளவில்லை நான்.

நான் நினைத்திருந்தால் என் மகனை எப்போதோ என்னுடன் சேர்த்துக்கொண்டிருக்க முடியாதா? என் பிடிவாதத்துக்கும், கோபத்துக்கும் மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டனே!!!!!!!!  வாழும் போது கிடைத்த அழகான நிமிடங்களை எல்லாம் தவற விட்டு விட்டேனே.!!!!!!!!!!!!!!

எங்கே என்று சொல்ல முடியாத வகையில் அவள் உடலெங்கும் வலி  பிரவாகங்கள். என் மகனை நான் பார்க்க வேண்டும். தவித்தது அவர் உள்ளம் எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறேன் நான்?

என் மகனுடன் நான் இன்னும் கொஞ்ச நாள் வாழ வேண்டுமே. நான் அவனுக்காக வாழ வேண்டுமே. எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்காதா?

வி...வி..வி.... ஷ்.... வா... உச்சரித்தன அவர் உதடுகள்.

'அத்தை உனக்கு ஒண்ணும் ஆகாது தைரியமா இரு.' அவர் கையை அழுத்தியபடியே சொன்னான் பரத்.

மருத்துவமனையை அடைந்து அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க படுவதற்குள் வந்து விட்டிருந்தான் விஷ்வா.

அம்மா ..... அவர் அருகில் ஓடி வந்தான் அவன்

விஷ்.... வா... உச்சரித்தபடியே மயங்கிவிட்டிருந்தார் அவர்.

அவரை உள்ளே கொண்டு சென்றுவிட்டிருந்தனர்.  திகைத்து நின்றிருந்தனர் அனைவரும்.

அதே நேரத்தில். அன்று கல்லூரி விடுமுறை என்பதால் தனது அண்ணனை பார்க்க கிளம்பினாள் அபர்ணா.

முதல் நாள் இரவு விஷ்வா கைப்பேசியில் பேசிய சந்தோஷமான வார்த்தைகளே அவள் காதில் ஒலித்துக்கொண்டிருந்தன.

'எங்க அம்மா கையாலே சாப்பிட்டேன் அப்பு' திரும்ப திரும்ப அதையே சொல்லிகொண்டிருந்தான் அவன்.

இந்த சந்தோஷம் நிலைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டபடியே தனது வண்டியை செலுத்திக்கொண்டிருந்தாள் அவள்

அப்போதுதான் விஷ்வா அதையும் சொன்னான் 'காலையிலே பைக்கை எடுத்திட்டு போய்  உங்க அண்ணன் மேலே .மோதிட்டேன் அப்பூ. உன்கிட்டே சொல்ல  மறந்துட்டேன்.. கீழே விழுந்திட்டார் பாவம். அடி எதுவம் படலை

தனது அண்ணன் தங்கி  இருக்கும் ஹோட்டலை அடைந்தாள்.

'ஹாய் பெரிய குரங்கு ஹாப்பி நியூ இயர் ' அழகாய் சிரித்தாள் அபர்ணா.

ஹாப்பி நியூ இயர்டா புன்னகைதான் அஷோக். ஆனால் அவள் முகத்தை ஏனோ நிமிர்ந்து பார்க்கும் தைரியமில்லை .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.