(Reading time: 12 - 23 minutes)

03. வானவில் - அமுதவள்ளி

"சாப்பிட போகலாமா" என்றாள் சாது.

"கரெக்டா 8 மணிக்கு சைரன் ஊதியாச்சா" என்றாள் நிஷ்.

"பாவம் நம்ம பிரிண்ட்ஸ் படிச்சி படிச்சி டையர்டா இருபாங்க எனெர்ஜி வேண்டுமேன்னு சாப்பிட கூப்பிட்டா என்னை சொல்லணும்"  என்றாள் சாது.

Vanavil

"உனக்கு  எனெர்ஜி வேண்டும்னு சொல்லு" என்றாள் அஞ்.

" நாம படிச்சு டையர்டாணோம். இதை யாரும் நம்பமாட்டாங்க. பேசின்னு சொல்லு" என்றாள் நிஷ்.

'"சொப்பன சுந்தரியாள டையர்டாணோம். அதுதான் கரெக்ட்" என்றாள் அஞ்.

"ஹர்ஷா பத்தி கேக்க முடியாம போய்டுச்சு" என்றாள் ஹாசி.

"சாப்பிடும்போது கேட்களாம்" என்றாள் சாது. அனைவரும் சாப்பிட கிளம்பினர். அஞ் பாடி கொண்டிருந்தாள். அவள் பாடின பாட்டை கேளுங்க.

“”நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி 

சின்னச்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி””

"அஞ். இந்த பாட்டுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்" என்றாள்  சரண்யா.

"உனக்கு இதுக்கு அர்த்தம் தெரியுமா" என்றாள் செலினா.

"தெரிஞ்சா அவ எதுக்கு பாடப்போறா" என்றாள் நிஷ்.

"இந்த பாட்டே என்னை போன்ற  நல்ல பிள்ளைக்குதான்" என்றாள் அஞ்.

"நாராயணா. இதையெல்லாம் நான் கேட்கனும்னு என் தலையில எழுதியிருக்கு" என்றாள் வர்ஷா.

இவர்கள் பேசிக்கொண்டே தேவையான உணவை எடுத்துகொன்டனர். அனைவரும் அமர்ந்ததும் ஹர்ஷாவை பற்றி ஹாசி கேட்டாள்.

"அவருக்கு நடந்த ஒரு விபத்தில் வலது கால் ரொம்ப அடிபட்டிருக்கு. நிறைய சர்ஜெரி பண்ணிருகாங்க. இப்பகூட அவர் காலுக்கு ஏத்தமாதிரி சூ ஆர்டர் பண்ணி போட்டிருக்கார்" என்றாள் இர்பான.

சிறிது நேரம் கழித்து "பார்த்தால் அப்படி தெரியலையே" என்றாள் சாது.

"ஹ்ம்ம். நல்லா பார்த்தா தெரியும். அவருக்கு ஆஸ்திரேலியால படிக்க இடம் கிடைத்தும் அவரால போக முடியலை" என்றாள் இர்பான.

"ஹி இஸ் கிரேட். தன்னோட கஷ்டத்தை பெரிசா நினைத்து அதிலே உழலாமல் வெளியே வந்து சாதிக்கராறே" என்றாள் சரண்யா.

"எப்போ விபத்து நடந்தது" என்றாள் நிஷ்.

"தெரியலை. என்னோட பெரியப்பா 6 மாசம் முந்திதான அங்க போனார். இதுவே எங்க அண்ணன் படிக்கலைன்னு பெரியம்மா ஹர்ஷா பத்தி சொன்னாங்க. வேற எதுவும் நான் கேட்கலை" என்றாள் இர்பான.

அனைவரும் ஹர்ஷா பற்றியே பேசினர். ஹாசி எதுவும் பேசவில்லை. அவள் நிலைமை தோழியருக்கு புரிந்தது. ஹாசி எப்பொழுதும் அவள் மனதை பாதிக்கும் விஷயம் நடந்தால் அமைதியாக இருப்பாள். கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனதும் தோழியரிடம் அதை பகிர்ந்துகொள்வாள்.

அப்பொழுது ப்ரீத்தி அவள் தோழியுடன்  யாரையோ கிண்டல் செய்து சிரித்து கொண்டிருந்தாள். நிலைமையை மாற்ற நிஷ் பாடினாள்.

"அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு

 இங்கே நீ சிரிக்கும் பொன் சிரிப்போ ஆனந்த சிரிப்பு "

அனைவரும்  சிரித்தனர்.  ப்ரீத்தி இவர்களை முறைத்து விட்டு சென்றாள்.

"எதுக்கு இப்ப ரெண்டு பேரும் எம்.ஜி.ஆர் பாட்டு பாடறீங்க" என்றாள் வர்ஷா.

"என்னமோ தெரியலை என்ன மாயமோ புரியலை, எம்.ஜி.ஆர் பாட்டு ஞாபகத்துக்கு வருது" என்றாள் அஞ்.

"உனக்கு என்ன அஜீத்ன்னு நினைப்பா, மங்காதா படத்தில அவர் சொல்ற டயலாக் சொல்ற" என்றாள் சாது.

"அவர் சொல்ற டயலாக் நான் சொன்னா  அவர் சந்தோஷபடுவார்'' என்றாள் அஞ்.

"என்னால இதுக்குமேல இதையெல்லாம் கேட்க முடியாது. சேன்ஜ் தி டாபிக்" என்றாள் செலினா.

 ஹர்ஷாவை தற்காலிகமாக மறந்தனர்.  அடுத்த இரண்டு வாரம் எப்பொழுதும்போல் சென்றது. அவர்கள் யாரும் ஹர்ஷாவை பார்க்கவில்லை.

அனைவரும் காலேஜ் கான்டீன் சென்றனர்.

"நான் சாப்பிட எதையாவது வாங்கிட்டுவரேன்"  என்றாள் அஞ்.

"நானும் வரேன் அஞ்" என்றாள் நிஷ். ஆர்டர் கொடுத்துவிட்டு இவர்கள் பேசி கொண்டிருந்தனர்.

 "ரிவால்வர்  எங்களுக்கு அசைன்மெண்ட் கொடுத்தாங்க. உங்களுக்கு கொடுத்தாங்களா" என்றாள் அஞ்.

"ஹ்ம்ம். நெக்ஸ்ட் மன்டே சப்மிட் பண்ணனும்"

"எப்படியும் உங்க கிளாஸ்ல எல்லோரும் முடித்தும்தான் சப்மிட் பண்ணுவீங்க. எங்க கிளாஸ் மாதிரியா"

"எங்களை மாதிரி இருங்க. யாரு வேண்டாம்ன்னு சொன்னது"

"உங்க ஆர்டர் ரெடி மேம்"

"நீங்க புதுசா இங்க வேலைக்கு சேர்ந்திருகீங்களா" என்றாள் அஞ்.

"அதை தெரிஞ்சு நீங்க என்ன பண்ணபோறீங்க" என்றான் அந்த புதியவன்.

அவனின் பதிலில் இவர்கள் திகைத்தனர். எப்பொழுதும் அனைவரிடம் நட்பாக பேசுவர் தோழிகள் நால்வரும். அதைப்போலவே அவனிடம் அஞ் பேசினாள். அவனின் பதிலால் அவள் முகத்தில் அவமானத்தின் வலி தெரிந்தது. அவள் எதுவும் பேசாமல் கிளம்ப நிஷ் தோழிக்காக அவனிடம் பேசினாள்.

"இப்போ எதுக்கு தேவையில்லாமல் எரிஞ்சு விழறீங்க. கஸ்டமர்ஸ் கிட்ட எப்படி பேசறதுன்னு உங்களக்கு தெரியாதா. அதுகூட தெரியாம என்ன வேலைசெய்யறீங்க. எதோ பிரின்ட்லியா பேசினால் இப்படிதான் ரெஸ்போன்ஸ் பண்ணுவீங்களா" என்று பொறிந்துதள்ளினாள்.

 இவர்கள் மெதுவாக பேசவே யாருக்கும் கேட்கவில்லை.  உள்ளேயிருந்து ஒரு பெரியவர் வந்தார்.

"தாத்தா எப்படி வியாபாரம் பண்ணனும்னு இவருக்கு சொல்லிகொடுங்க."

"என்ன பிரச்சனை நவீன் தம்பி"

"ஒண்ணுமில்லை தாத்தா" என்றான்.

"நான் சொல்றேன் தாத்தா. இவர் இங்க புதுசா வேலைக்கு  சேர்ந்திருகாறான்னு அஞ் கேட்டா நீங்க அதை தெரிஞ்சு என்ன  பண்ணபோறீங்கன்னு எரிஞ்சுவிழறார்" என்றாள் நிஷ்.

"உங்களை பத்தி அவருக்கு தெரியாது பாப்பா. கொஞ்சம் நேரம் முந்தி ஏதோ சுந்தரின்னு சொல்லுவீங்களே அந்த பெண்ணும் அவள் தோழியரும் தம்பிகிட்ட பேசினாங்க பாப்பா. அதான் அப்படி கோவமா உங்ககிட்ட பேசிட்டார்"

"ஓ. பரவால்லை தாத்தா. சொப்பனசுந்தரிகிட்ட பேசினால் யாராயிருந்தாலும் கோவம் வரும்" என்றாள் நிஷ்.

"ஐ எம் சாரி. நீங்க அப்படி பேசி அஞ்ஜை ஹர்ட் பண்ண கோவத்தில அதிகமா பேசிட்டேன்"

அவன் அவளை ஆச்சிரியமாக பார்த்தான். ப்ரீத்தியும் அவள் தோழியரும் அவனிடம் வழிந்ததில் அவன் கோபமாக இருந்தான். அதனால் அஞ்சிடம் கோபமாக பேசினான். ஆனால் நிஷ் முதலில் கோபப்பட்டதும் பிறகு சாரி சொன்னதும் அவனை பாதித்தது.

"ஐ எம் சாரி." என்றான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.