(Reading time: 12 - 23 minutes)

"ட்ஸ் ஓகே. டைம் ஆகிடுச்சு நிஷ் போகலாம். பை சார், பை தாத்தா" என்றாள் அஞ்.

"பை தாத்தா, பை சார்" என்றாள் நிஷ்.

அவர்கள் கிளம்பி சென்றதும் நவீன் அவன் வேலையை தொடர்ந்தான்.

"எவ்வளவு நேரம்டி இதை வாங்கிட்டு வரதுக்கு" என்றாள் ஸ்ரீ.

"உங்களை அனுப்பி வைச்சதுக்கு நாங்களே போயிருக்கலாம்" என்றாள் தீபா.

"நீங்க அமைதியாயிருந்தால் உனக்கு ஒரு நியூஸ் சொல்றேன்" என்றாள் நிஷ்.

"என்னடி சீக்கரம் சொல்லுங்க. என் தலை வெடித்திடும்" என்றாள் சாது.

"இது ரொம்ப நல்ல இருக்கு. தலை வெடிச்சு நாங்க யாரும் பார்த்ததேயில்லை" என்றாள் நிஷ்.

"அடிப்பாவி. நீ எல்லாம் ஒரு நண்பியா" என்றாள் சாது.

"இப்போ சொல்ல போறீங்களா இல்லையா" என்றாள் ஹாசி.

"புதுசா நவீன்னு ஒருத்தர் இங்க வேலைக்கு  சேர்ந்திருக்கார்" என்றாள் அஞ்.

"ஆள் எப்படி" என்றாள் மது.

"அது தெரிஞ்சு நீ என்ன பண்ணபோற" என்றாள் அஞ்.

"எல்லாம் ஒரு ஜெனரல் நாலெட்ஜ் வளத்துக்கத்தான்" என்றாள் மது.

"இது மட்டும் சதீஷ் கேட்டான் அவ்வளவுதான்" என்றாள் ஹாசி.

"இப்போ எதுக்கு இந்த பேச்சு" என்றாள் மது.

"நான் ஒரு  கோக் வாங்கிட்டு வரேன்" என்றாள் ராதிகா.

"எதுக்கு" என்றாள் நிஷ்.

"சைட் அடிக்கத்தான்" என்றாள் ராதிகா.

"நல்லா போய் திட்டுவாங்கு" என்றாள் அஞ். தொடர்ந்து அங்கு நடந்ததையும் சொன்னாள்.

"இந்த சொப்பனசுந்தரி யாரையும் விட்டு வைக்கரதேயில்லை" என்றாள் சாது.

"ஏண்டி. உனக்கு நிஷ் என்ன மௌத் பீசா. நீயே அவரிடம் பேசவேண்டியதுதானே" என்றாள் ஹாசி.

"அப்போ எதுவும் தோணலை" என்றாள் அஞ்.

"முடிஞ்சதை பத்தி பேசாதே. விடு" என்றாள் நிஷ்.

அனைவரும் அசைன்மெண்ட் பற்றி பேசினர். உணவு இடைவேளை முடிந்து அனைவரும் அவர்களின் வகுப்புக்கு சென்றனர்.

(நிறைய பேர் வந்து உங்களை குழப்பரோமா?? 

ஸ்ரீ, மது   (சாது,நிஷ் கிளாஸ்) தீபா, ராதிகா (அஞ்,ஹாசி கிளாஸ்)  - இவங்க காலேஜ் பிரிண்ட்ஸ்.

ஆஷா,சரண்யா,செலினா,வர்ஷா,இர்பானா - இவங்க ஹாஸ்டல் பிரிண்ட்ஸ். இப்ப ஓகே வா)

நிஷ் வகுப்புக்குள் செல்ல குரு அவளிடம் "அசைன்மெண்ட்டை  முடிச்சதும் எனக்கு தா நிஷா" என்றான்.

"இன்னிக்கு காலையில்தான சொன்னாங்க. பொறுமையா எழுதலாம்" என்றாள் நிஷ்.

"நீ முடிச்சு கொடுத்த பிறகு நாங்க காப்பி பண்ணனும் நிஷா" என்றான் பாலு.

"நான் காப்பி பண்ணதும்தான் தருவேன்" என்றாள் சாது.

"நீ ஹாஸ்டல்ல எழுது" என்றாள் ஸ்ரீ.

"ஹ்ம்ம். சே வர வர சின்ன பொண்ண எல்லோரும் மிரட்டறாங்க" என்றாள் சாது.

"இன்னிக்குதான் நீ உண்மையை பேசியிருக்க சாதனா. நீ ரொம்ப சின்ன பெண்தான்" என்று அவள் உயரத்தை கிண்டல் செய்தான் குரு.

"டேய். உன்னை" அங்கு என்ன நேர்ந்திருக்குமோ அதற்குள் அவர்களின் எச்.ஒ.டி தேவி கிளாஸ்சிற்கு வந்தார்.

வகுப்பு முடிந்து கிளம்பும்போது சாதனாவிடம்

"அஞ்சனாவை பிசிகல் எசுகேஷன் டைரக்டரை இன்று மாலை பார்க்க சொல்" என்றார் .

"ஓகே மேம்"

அன்று மாலை ஹாசி அஞ்சனாவிற்கு துணையாக காலேஜில் இருக்க சாதனாவும் நிஷாவும் ஒரு புக் போட்டோகாப்பி எடுக்க கடைக்கு சென்றனர்.

அஞ்சனா பிசிகல் எசுகேஷன் டைரக்டரை பார்க்க  செல்ல ஹாசி அங்கு மைதானத்தில் விளையாடி கொண்டிருந்தவர்களை பார்வையிட்டாள். அவளை பார்த்துவிட்டு ஹர்ஷா அங்கு வந்தான். அவன் நடையை அப்பொழுது கவனித்தாள். மெதுவாக நடந்தான். ஆனால் அது யாருக்கும் தெரியாதவாறு கம்பீரமாக நடந்தான்.

"ஹாய் ஹாசினி. எப்படி இருக்கீங்க"

அவனை 2 வாரம் கழித்து பார்த்த சந்தோஷமும் அவனை பற்றி தெரிந்ததால் அதை வெளிபடுத்தாது பேசவேண்டிய கட்டாயமும் அவளை நெருக்கடித்தது.

"ஹாய் ஹர்ஷா. நல்லா இருக்கேன். நீங்க"

"நல்லா இருக்கேன். என்ன இங்க தனியா இருக்கீங்க"

"அஞ்சனாக்கு வெயிட் பண்றேன். நீங்க"

"லைப்ரரில கொஞ்சம் ரெபெர் பண்ணஇருந்தது. முடிச்சிட்டு வரேன்”

(இவர்கள் என்ன பேசினாங்கன்னு அடுத்த அப்டேட்ல சொல்றேன்.)

பிசிகல் எசுகேஷன் டைரக்டர் அங்கு குழுமியிருந்த வாலிபால் பிளேயர்ஸிடம்

"உங்களுக்கு இனிமேல் நம்ம காலேஜ் சீனியர் வாலிபால் பிளேயர் அத்வைத்தான் கோச்."

அறிமுகம் செய்துவிட்டு அவர் சென்றார். 

"சூப்பரா இருக்கான். ஆனால் சரியான சிடுமூஞ்சி. சிரிக்கறதுக்கு காசு கேட்பான்" என்றாள் அங்கிருந்த ஒருத்தி.

"என்னடி இப்படி பயம்புறுத்துறாங்க" என்றாள் ராதிகா.

"விடுடி. நம்ம வேலையை பார்த்தால் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை". அது தவறு என நிருபிக்கும் நிகழ்ச்சி உடனே நடந்தது.

"ஹாய் பிரிண்ட்ஸ். எந்த விஷயத்தை செய்தாலும் முழு மனதுடன் செய்யுங்க. அது படிப்பானாலும் சரி விளையடனாலும் சரி இது பொருந்தும். உங்களக்கு எந்த உதவி தேவைபட்டாலும் தயங்காம கேளுங்க."

அனைவரிடமும் ஒன்று இரண்டு வார்த்தைகள் பேசினான். அப்பொழுது ஒரு கும்பல் இதனை கவனிக்காது பேசிகொண்டிருக்க இவன் கோபத்தில் "யார் யார்க்கு இதில் விருப்பமில்லையோ அவங்க கிளம்பலாம்" அவன் சொல்லி கொண்டிருக்கும்போது போன் ரிங் சத்தம் வர அவன் இன்னும் கடுப்பாகி எங்கிருந்து என்று பார்க்க அது அஞ்சனா பக்கதில் சத்தம் கேட்க அஞ்சனவை தப்பாக நினைத்து

 "ஹலோ..உனக்கு இதில் கவனம் இல்லையென்றால் கிளம்பு. சும்மா பெருமைக்கு இதில் இருந்தால் இப்பொழுதே கிளம்பு."

யாரையோ திட்டுகிறான் என்று இருந்தவள் தன்னை அவன் சொல்கிறான் என்று தெரிந்துகொள்ளவேயில்லை.

"உன்னை தான் சொல்கிறேன். யாருக்கு வந்த விருந்தோன்னு அமைதியா நிக்கற" என்றான் தொடர்ந்து. அப்பொழுத்தான் அதை உணர்ந்தவளாக மதியம் நவீன் அவமானப்படுத்தியதும் சேர்ந்துகொள்ள அவள் வெகுண்டாள்.

"மிஸ்டர் அத்வைத். போதும். இதுக்கு மேல எதுவம் பேசாதீங்க" என்றாள்.

"பண்ணறதை பண்ணிட்டு இப்போ எதிர்த்து வேற பேசற" என்றான்.

"நான் காலேஜ்க்கு மொபைல் எடுத்துட்டு வர மாட்டேன். என் பக்கத்தில் ரிங் கேட்டால் அது நான்னு எப்படி முடிவு பண்ணீங்க. யார்னு கண்டுபிடிக்காம நீங்களே எப்படி டிசைட் பண்ணலாம்."

இருவரும் சண்டை கோழியாக பார்த்து கொண்டிருந்தனர். இதுவரை அவனை எதிர்த்து யாரும் இப்படி பேசாததால் அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். 

(இவர்கள் சண்டையை  அடுத்த அப்டேட்ல  கன்டிநியூ  பண்றேன். மூன்று பேரோட ஜோடியை பார்த்தாச்சு. சாதனா அவள் ஜோடியை இன்னும் சொல்லவில்லைன்னு கோவபடறாள்  இப்போ அவரை மீட் பண்ணலாம் வாங்க)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.