(Reading time: 12 - 23 minutes)

வர்கள் கல்லூரி மிகவும் ஸ்ட்ரிக்ட். இவர்கள் கல்லூரி மெயின் ஏரியாவில் இருந்து 5km உள்ளே செல்ல வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதி கேம்பஸ் உள்ளேயே இருக்கும். விடுதியில் இருந்து 5 நிமிடம் நடந்தால் கல்லூரி. விடுதியில் இருப்பவர்களுக்கு வெளியே செல்ல அனுமதியில்லை. இவர்கள் கேம்பஸ்  வெளியில் செராக்ஸ் கடை உள்ளது. அதற்கு மட்டும் அனுமதி உண்டு. வார விடுமுறை நாட்களில் ஒரு நாள் கல்லூரி பேருந்தில் மெயின் ஏரியாவிற்கு செல்லலாம். காலை 10 மணி முதல் 1 மணி வரை  அனுமதி உண்டு. பிறகு அதே கல்லூரி பேருந்தில் திரும்பிடவேண்டும். மாததிற்கு ஒரு முறை வார்டன் அனுமதியுடன் வெளியே செல்லலாம். இரவு 6 மணிக்குள் விடுதிக்கு வரவேண்டும். ஊருக்கு செல்ல வேண்டுமென்றால் வார்டனிடம் அனுமதி பெற்று அவுட்பாஸில் கையொப்பம் வாங்கி செக்யூரிட்டியிடம் சப்மிட் செய்யவேண்டும்.

(சரி சரி போதும் கதைக்கு வான்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது)

சாதுவும் நிஷும் போட்டோகாப்பி எடுத்துக்கொண்டு ஹாஸ்டல் திரும்பும்போது ஒரு சிறுவனை வண்டி இடித்துவிட்டு நிற்காமல் சென்றது. இருவரும் பதட்டதுடன் அவன் அருகில் சென்றனர். அவனுக்கு முதுகிலும் கையிலும் அடிபட்டிருந்தது.

"சாது தண்ணி அவன் மேல் தெளி. அதிர்ச்சியில் மயக்கம் வந்திருக்கும்". சாதனா அவன் மேல் தண்ணீர் தெளித்தவுடன் சிறுவனிடம் அசைவு தெரிந்தது.அவனுக்கு பருக தண்ணீர் தந்தனர். அவனை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். ஆனால் அவர்களுக்கு அனுமதியில்லை. அவர்கள் தவித்து கொண்டிருக்கும்போது வண்டியில் ஒருவன் வந்தான்.

நிஷ் அவனை நிறத்தினாள்.

"சார். இவனுக்கு அடிபட்டிருக்கு. எங்களால் மருத்துவமனை செல்ல முடியாது. ப்ளீஸ் உதவி பண்ணுங்க"

"எப்படி அடிபட்டது" என்றான்.

"உங்கள் கேள்விக்கு பிறகு பதில் சொல்றோம். கேள்வி கேட்டு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க" என்றாள் சாது. அவளே தொடர்ந்து தன் கைபையிலிருந்து கொஞ்சம் பணத்தை கொடுத்தாள்.

அவனோ பணம் வேண்டாம்மென்று சொல்லி  "அவனுக்கு அதிக அடியில்லை. எப்படி அடிப்பட்டது டாக்டர் கேட்டா சொல்லணும். அவன் பெற்றோர்க்கு இன்போர்ம் பண்ணனும். விவாதம் பண்ணாம பதில் சொல்லுங்க"

அவன் சொல்லுவது சரியென்று தெரிந்ததால் நிஷா  நடந்ததை சொன்னாள். இவர்கள் பேசிகொண்டிருக்கும்போதே புதியவன் அந்த சிறுவனின் காயத்தை ஆராய்ந்தான். கைகுட்டை கொண்டு காயத்தை கட்டினான்.

"யாராவது ஒருத்தர் உங்க துப்பட்டாவை கொடுங்க" என்றான். சாதனா தந்தாள். அதை வாங்கி காயத்தில் கட்டினான்.

"ஓகே. நான் அவனை பார்த்துகொள்கிறேன்" என்றான்.

"உங்க நேம். தப்பாநினைக்காதீங்க.  நீங்க இங்க படிக்கறீங்கன்னு தெரியும். சிறுவனை பற்றி விசாரிக்க வேண்டும்" என்றாள் சாதனா.

"சர்வேஷ். என் நம்பர் XX. அவனை பற்றி தெரியனும்னால் கால் பண்ணுங்க இல்லை உங்களை பார்க்கும்போது சொல்றேன்" என்று சொல்லிட்டு கிளம்பினான்.

(இப்போவாது கிளம்பினியே. பாவம் அந்த பையன்)

"ஐயோ. அந்த பையன் பேர் கேட்கவில்லையே" என்றாள் சாது. (உன் ஆள் பெயரை ஞாபகமா கேட்டியே)

"விடு.அவர்கிட்ட பேசும்போது கேட்கலாம்" என்றாள் நிஷ்.

தொடரும்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:855}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.