(Reading time: 14 - 27 minutes)

02. வானவில் - அமுதவள்ளி

நிஷாவும் அஞ்சனாவும் ரீசார்ஜ் செய்துக்கொண்டு  சாதனாவிற்கு கால் செய்தனர்.

"எங்கடி இருக்கீங்க சாது" என்று மொபைலில் கேட்டாள் நிஷ்.

"KFCல சிக்கன் வேண்டுமாம் ஹாசிக்கு. சோ மெனு பார்த்துட்டுஇருக்கோம்"

Vanavil

"என்னது சிக்கன்னா?   அடிப்பாவிகளா . அப்போ இன்னிக்கு அங்கிருந்து ஹாசி வரமாட்டாள்ன்னு சொல்லு"

என்கிட்ட மொபைல் தா என்று சொல்லிக்கொண்டே நிஷ்யிடமிருந்து  மொபைலை பறித்தால் அஞ்

"ஏய். வரும்போதே நோ சிக்கன்னு சொல்லிதானே அவளை நான் கூட்டிவந்தேன். அப்புறம் ஏன் KFC போனீங்க"

"நீ அவகிட்ட சொன்னது எனக்கு எப்படி தெரியும் அறிவாளி. சரி விடு இன்னிக்கு பொழச்சி போகட்டும். உங்களுக்கு என்ன வேனும்"

" நீங்களே எதாவது ஆர்டர் பண்ணிடுங்க" என்று சொல்லி மொபைலை ஆப் செய்தாள் அஞ்.

"வா போகலாம்" என்று சொல்லி கொண்டே திரும்பியவள் அங்கு வந்த ஒருவன் மீது இடித்துக்கொண்டாள் (இது போன வாரம் பார்த்த அதே இளைஞன்). "சாரி சார். தெரியாம இடிச்சுட்டேன்" அவன் பதில் சொல்லாது மொபைலில் யாரையோ திட்டிகொண்டே சென்றான். (இவன் என்ன அஞ்ஜை பார்க்காமபோறான். அவளுக்கு இவன் ஜோடி இல்லையோ. அப்ப வேற யாரு. வாங்க பார்ப்போம்)

"வா அஞ் பூட் கோர்ட் போகலாம்"

பூட் கோர்டில் 

"ஹாய் சாதனா. எப்படி இருக்க"

"நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க ஷாலினி"

"நல்லா இருக்கேன். என் ப்ரிண்ட்ஸ் கூட சினிமாக்கு வந்தேன். உன்னை பார்த்துட்டு நான் மட்டும் வந்தேன்"

" ஓ. இது என் ப்ரிண்ட் ஹாசினி. இது என் ஸ்கூல் ப்ரிண்ட் ஷாலினி"

"ஹாய் ஷாலினி"

"ஹாய்  ஹாசினி"

"சரி. நீங்க பேசிட்டு இருங்க நான் ஆர்டர் குடுக்கறேன்" என்றாள் ஹாசி.

"ஹ்ம்ம்" என்றாள் சாது.

அந்த இளைஞன் அங்கு வந்தான். ஹாசி ஆர்டர்  செய்ய  சென்றாள் . இருவரும் பேசிக்கொண்டு இருந்தபோது  அவன் இவர்களை கடந்து சென்றான்.

அவன் அங்கு யாரையோ தேடி கொண்டிருந்தான். ஹாசி ஆர்டர் கொடுத்துவிட்டு ஒரு டேபிளில் அமர்ந்தாள்.  தேடிகொண்டிருந்தவன் ஹாசிஐ நோக்கி வந்தான்.

"நீ என் காலேஜ் ஜூனியர் தானே. உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க. உன் அம்மா,அப்பா உன்னை நம்பி காலேஜ் அனுபிச்சா நீ இங்க  படிக்காம ஊர் சுத்திட்டு இருக்க. என்னை பத்தி என்ன தெரியும் உனக்கு. எதுவுமே தெரியாம லவ்னு சுத்தர. இந்த வயசுல படிக்கணும். அதை விட்டுட்டு லவ்னு சுத்திட்டு இருக்க. இனிமேலாவது ஒழுங்கா இரு. எனக்கு இனிமேல் கால் பண்ண  கொன்னுடுவேன்"

அவளை பேசவிடாது தொடர்ந்து பேசிக்கொண்டே சென்றான். அப்பொழுது அங்கே மற்ற மூவரும் வந்தனர்.

"என்ன ஹாசி? இவர் நம்ம காலேஜ்தான. என்ன ஆச்சு உன் முகமே சரியில்லை" என்றாள் நிஷ்.

இவர்களை பார்த்து அவன் " நீங்க இந்த பொண்ணோட பிரிண்ட்ஸ் தானே. ஒருத்தரை பத்தி ஒண்ணுமே தெரியாம சும்மா காலேஜ்ல பார்த்ததை வெச்சு லவ்னு சுத்தகூடாதுன்னு சொல்றது இல்லையா" என்று அவர்களை திட்ட ஆரம்பித்தான்.

"ஹலோ சார் போதும். எதுக்கு இப்ப தேவையில்லாமல் ஓவரா பேசறீங்க. நீங்க என் காலேஜ்னு எனக்கு தெரியும். ஆனால் நீங்க பேசின எதுவுமே எனக்கு புரியலை. நான் எப்போ உங்களை லவ் பண்ணேன். எப்போ உங்ககிட்ட அதை சொன்னேன். சும்மா லூசு மாதிரி உளறிகிட்டு இருக்கீங்க. இதுல என் பிரிண்ட்சை திட்டறீங்க. நீங்க பெரிய ஆண் அழகன் உங்களை நான் சுத்தி வரேன். நான் படிக்காமல் ஊர் சுத்தறதை நீங்க பார்த்தீங்களா" என்று ஹாசி பொரிய ஆரம்பித்தாள்.

மற்ற மூவரும் அமைதியாக இருந்தனர். அனைவரின் முகத்திலும் கோபத்தின் சுவடு இருந்தது. அவனுக்கு குழப்பமாக இருந்தது.

"போதும் ஹாசி. தண்ணி குடி" என்றாள் நிஷ். சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது. நிஷா அதை கலைத்தாள்.

"சொல்லுங்க சார். யாருன்னு தெரியாமையே கண்டபடி பேசுவீங்களா" என்றாள் நிஷ். ஹாசியே அவனை திட்டியதால் அவனை எதுவும் சொல்லாது அவனை பற்றி விசாரித்தால் நிஷ்.

"சாரி. எனக்கு கொஞ்ச நாளாவே என் மொபைலுக்கு ஒரு பொண்ணு கால் பண்றா. லவ் பண்றாளாம்.ரொம்ப டார்சர் பண்றாள். அதான் இன்னிக்கு மீட் பண்ணி அவளை வார்ன் பண்ணவந்தேன். அவள் சொன்ன ட்ரெஸ் கோடும் உங்களதும் சேம். நீங்களும் என் காலேஜ்தான். தனியா இருந்தீங்க. அதான் நீங்கதான்னு நினைச்சு தப்பா பேசிட்டேன். ஐ அம் வெரி சாரி"

"இட்ஸ் ஓகே சார். இனிமேல் அவங்கதான்னு செக் பண்ணிட்டு திட்டுங்க" என்றாள் சாது.

"வெரி சாரி" என்று தயக்கத்துடன் ஹாசியை பார்த்தான்.

ஹாசி  பதில் சொல்வதற்கு முன்பே  அவனுக்கு கால் வந்தது. அவன் எடுத்து பேசினான்.

"ஹலோ. எங்க இருக்க" அவன் குரலில் எருச்சல் அதிகமாக இருந்தது. அந்த பக்கம் என்ன சொன்னாங்களோ "எனக்கு வேற வேலை இல்லைன்னு நினைச்சியா. இதுக்குமேல கால் பண்ணா நடக்கறதே வேற...சே"

"சாரிங்க. அவள் வரவில்லையாம். சும்மா விளையாடினாலாம். பச். உங்ககிட்ட ரொம்ப ஹார்ஷா நடந்துகிட்டேன்"

அவன் மன்னிப்புகேட்டதாலும் மொபைலில் பேசியதை கேட்டதாலும் ஹாசி அவனை மன்னித்தாள்.

"பரவாயில்லை. உங்க நிலைமை புரியுது"

"ஜூஸ் குடிங்க சார்" அவனிடம் ஜூசை கொடுத்தால் அஞ்.

"சார்லாம் வேண்டாம். ஐ அம் ஹர்ஷா. உங்க காலேஜ்தான். M.E 1இயர் படிக்குறேன்" (இப்போவாது பேர் சொல்லனும்னு தோனுச்சே. ரொம்ப சந்தோஷம். நானும் எவ்வளவு நேரமா அவன்/இளைஞன் சொல்றது)

"ஐ அம் நிஷா. இவங்க சாதனா,அஞ்சனா . நீங்க திட்டினது ஹாசினி. நாங்க 3 இயர் CSE"

"ஏன் நிஷா உங்களுக்கு இந்த கொலைவெறி. அவங்களே சும்மா இருந்தாகூட நீங்களே ஞாபகபடுத்தறீங்க"

அவன் குரலிலும், பாவனையிலும் அனைவரும் சிரித்தனர்.

"அந்த பயம் இருக்கட்டும்" என்றாள் சாது.

"நீங்க நல்லா  ஃப்ளுட்  வாசிக்கறீங்க. எவ்வளவு வருசமா கத்துக்கறீங்க" என்று கேட்டாள் நிஷ்.

"ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க" என்றாள் அஞ்.

"எதுக்கு இப்ப வடிவேல் டயலாக் சொல்றீங்க " என்றான் ஹர்ஷா.

"சாப்பிடவிடாம நம்ம பேசிகிட்டு இருக்கோம்ன்னு அவள் பாஷையில் சொல்றாள்" என்றாள் நிஷ்.

"ஓ சாரி. நீங்க  சாப்பிடுங்க. நான் கிளம்பறேன்"

"இப்படியெல்லாம் சொன்னா நாங்க உங்களை விட்டுடுவோம்மா" என்றாள் சாது .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.