(Reading time: 14 - 27 minutes)

"நீ சொல்றது சரி. அதுக்கு நிறைய பேரு இருக்கும்போது நாம ஏன் வேஸ்ட் செய்யணும்" என்றாள் சரண்யா.

"என்ன அறிவு,என்ன அறிவு. எனக்கு புல்லரிக்குது" என்றாள் ஹாசி.

"நல்ல வேளை இங்க ஆடு,மாடு இல்லை" என்றாள் அஞ்.

இர்பானா இந்த பேச்சுக்கள் எதுவும் பாதிக்காதவலாய்  தன் சிந்தனையை தொடர்ந்தாள்.  நிஷா அவளை யோசனையாக பார்த்தாள். அவள் சிந்தனையை கலைக்கும் விதமாக

"இர்பானா. என்ன ஆச்சு. இஸ் எனிதிங் ராங்" என்றாள் நிஷ்.

"இல்லடி.  ஹர்ஷாவை நினைச்சு பார்த்தேன்"

"என்னது" என்று தன் ஆச்சரியத்தை வெளிபடுத்தினர் அனைவரும்.

"ஏய். திஸ் இஸ் டூ பேட். நாங்க இங்க பேசிட்டு இருக்கோம். நீ என்னடானா அவரை பற்றி யோசிச்சுட்டிருக்க" என்றாள் சாது.

"அவரை பற்றி என்ன யோசிச்சுட்டிருக்க. உன் முகமே சரியில்லை" என்றாள் அஞ்.

"என் பெரியப்பா வீடு ஹர்ஷா வீட்டு பக்கத்தில் தான். அவரை அங்க நிறைய பார்த்திருக்கேன். தன்னோட பிராப்ளமை பெரிசா நினைச்சுகிட்டு முடங்கிருக்காம அதிலிருந்து வெளிவந்து இப்போ நிறைய பேர் பாராட்டுறமாதிரி இருக்காரே ரியலி ஹி இஸ் கிரேட்." அவளின் வார்த்தைகளை அனைவரும் உள்வாங்கி அதன் அர்த்தத்தை புரிந்து வெளிவரும்போது பல நிமிடங்கள் கடந்திருந்தது. அந்த மௌனத்தை கலைத்தது வர்ஷாவின் கேள்வி

"என்னடி சொல்ற. அவருக்கு என்ன பிராப்ளம்".

"அது" அவள் சொல்ல ஆரம்பிக்கும்போது வார்டன் குரல் அவளை தடுத்தது. "ஆயா. இன்னும் 5 நிமிஷத்தில் அனைவரும் இங்கிருக்கணும். லதா மேடமை மைக்கில்  அறிவிக்க சொல்லுங்க" என்றார் வார்டன். இவர்களின் பேச்சு தடைப்பட்டது. (வார்டன்தான் அவளை சொல்லவிடலை. என்னை திட்டாதீங்க. மீ பாவம்)

எதற்கு இங்கவரசொல்றாங்க. என்ன பிரச்சனை. அனைவரும் நம்ம நால்வர் குழுவிடம் கேட்டார்கள். நால்வரும் வாலுங்கதான் ஆனால் மற்றவர்களை கஷ்டபடுத்த மாட்டார்கள். இவர்களால் வார்டன்னுக்கு எந்த ப்ரச்சனையும் வராது. தேவையான உதவியும் செய்வார்கள். அதனால் இவர்களுக்கு வார்டனிடம் நல்ல பெயர் உண்டு. (ஹாஸ்டல் உள்ள வந்ததும் வார்டன் பொலம்பினாங்கலேன்னு  நீங்க கேட்கறது எனக்கு புரியுது. இதுகூட செய்யலனா அவங்க காலேஜ் ஸ்டுடென்ட்ஸ்னு யாரும் ஒத்துக்க மாட்டாங்க )

அதனால் எந்த பிரச்சனைனாலும் இவங்ககிட்ட ஷேர் பண்ணுவாங்க.  அதான் எல்லோரும் இவங்களை கேட்டாங்க. ஆனால் இவங்கதான் ஹர்ஷா பத்தி சுவாரசியமா பேசிட்டிருந்தாங்களே அப்புறம் எங்க அவங்களுக்கு தெரியபோகுது.  

5 நிமிடத்தில் அனைவரும் அங்கே வந்தனர். வார்டன் பக்கத்தில் ப்ரீத்தி இருந்தாள்.

"என்ன நிஷ்  இந்த சொப்பன சுந்தரிதான் ஏதோ சொல்லிருக்கு" என்றாள் அஞ்.

"ஆமாம். இவளுக்கு வேற வேலையில்லை. எப்போ பார்த்தாலும் யார் மேலையாவது கம்ப்ளைன்ட் கொடுத்துட்டேஇருக்கறது" என்றாள் நிஷ்.

"அவளுக்கு பொழுது போகலைன்னா உடனே கம்ப்ளைன்ட் லெட்டர் எழுதவேண்டியது" என்றாள் ஹாசி.

"தமிழன் படத்தில் விஜய் எப்ப பார்த்தாலும் பேப்பரோட அலைவாறே அது மாதிரி" என்றாள் சாது.

"இன்னிக்கு யார் மேல கம்ப்ளைன்ட் தெரிலையே" என்றாள் ஆஷா.

இவர்களின் சந்தேகத்தை போக்கும் விதமாக வார்டன் பேசினார்.

"மைதானத்தில் சாப்பிடறதால அங்க விளையாடமுடியலைன்னு கம்ப்ளைன்ட் பண்ணிருகாங்க ப்ரீத்தி. அவங்க 3இயர் ஸ்டுடென்ட்ஸ் மேல கம்ப்ளைன்ட் கொடுத்திருகாங்க" என்றார்.

"எவ்வளவு திமிரு இவளுக்கு" என்றாள் ஆஷா.

"இவ 3 இயர் இல்லையாமா" என்றாள் ஹாசி.

"இவ விளையாடி நான் பார்த்ததே இல்லையே" என்றாள் சரண்யா.

"நாம அங்க சாப்பிடறதை இவ பார்க்கும்போதே நினைச்சேன் இந்தமாதிரி ஏதாவது இவ செய்வாள்ன்னு" என்றாள் சாது.

"3 இயர் ஸ்டுடென்ட்ஸ் யாராவது  இதுக்கு பதில் சொல்லுங்க. உங்க ரீசன் பொறுத்து நான் முடிவு செய்றேன்" என்றார் கனி.(முழுபெயர் சொன்னா வாய் வலிக்குது)

"மேம் நான் சொல்றேன்" என்றாள் நிஷ்.

"எஸ்" என்றார் கனி.

"மேம் நாங்க அங்க சாப்பிடறது நைட் மட்டும்தான். அதுவும் த்ரோபால் கிரௌண்ட்ல சாப்பிடுவோம்" என்று நிஷ் பதில் சொல்லிகொண்டிருக்கும்போது இடைமறித்தால் நம்ம சொப்பன சுந்தரி

"மேம். த்ரோபால் கிரௌண்ட்னாலும் சாப்பிடகூடாது. அங்கமட்டும் நாங்க எப்படி விளையாடறது"

"நிஷாவை பதில் சொல்லவிடு ப்ரீத்தி. டோன்ட் டிஸ்டர்ப்" என்றார் கனி.

மனதிற்குள் பொருமினாலும் "ஓகே மேம்" என்றாள்.

"நம்ம ஹாஸ்டல் ரூல்ஸ்படி  4 டு 6  விளையாடலாம். 6 டு 8 ஸ்டடி ஹார்ஸ். சண்டே நோ ஸ்டடி டைம், அன்னிக்கு மட்டும் 6 டு 8 விளையாடலாம். 8 மேல இன்டோர் கேம்ஸ்,ஷட்டில் விளையாடலாம்.  த்ரோபால்  விளையாடகூடாது.  அந்த டைம்ல நாங்க சாப்பிட்டால் யாருக்கும் டிஸ்டர்ப் ஆகாது. மோர்னிங் ஆயா கிரௌண்ட்ட கிளீன் பண்ணிடுவாங்க. சோ 4-6 விளையாடினாலும் எந்த பிரச்னையுமில்லை மேம்"

நிஷாவின் பதில் திருப்தியளித்ததால் கம்ப்ளைன்டை  ரிஜெக்ட் செய்தார் கனி.

அனைவரும் அவர்களின் ரூமிற்கு சென்றனர்.

"இவளோட தொல்லை தாங்கமுடியலை" என்றாள் ஹாசி.

"சொப்பன சுந்தரி ஒழிகன்னு கோஷம் போடணும்" என்றாள் சாது.

அதை நினைத்து பார்த்து சிரித்தனர்.

“நாம அவளை டிஸ்டர்ப் செய்யாம இருந்தாலும் நம்மகிட்ட வம்பு பண்ணிட்டே இருக்கா” என்றாள் நிஷ். 

“அவ நாம எதை செய்தாலும் அதிலிருந்து பிரச்சனை ஆரம்பிக்கமுடியுமான்னுதான் பார்க்கிறாள். நாம சந்தோசமாய் இருந்தால் இவளுக்கு பொறுக்காதே.” என்றாள் ஹாசி.

"இந்த சொப்பன சுந்தரி பிரச்சனையில் நம்ம ஹர்ஷாவை பத்தி இர்பானாகிட்ட கேட்கலை" என்றாள் அஞ்.

"அவள் மொபைல்ல பேசிட்டிருக்கா. இப்ப டைம் 7.30. சாப்பிட கிழபோகும் போது கேட்கலாம்" என்றாள் நிஷ்.

சொப்பன சுந்தரியாள நானும் டையர்ட்  ஆகிட்டேன். அதனால் ஹர்ஷாக்கு என்ன பிராப்ளம்ன்னு அடுத்த வாரம் பார்க்கலாம்.

என்னை நீங்க வசவறது  கேட்குது. இதெல்லாம் எனக்கு சாதாரணம் பா

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:855}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.