(Reading time: 14 - 27 minutes)

ர்ஷா புரியாமல் முழித்தான். "நீங்க இரண்டு பேரும் புரியறமாதிரி பேசவே மாட்டீங்களா" என்றான். அனைவரும் சிரித்தனர். "நீங்க இவ்வளவு கெஞ்சரதால சொல்றேன். எங்களை திட்டினதுக்கு தண்டனையா இப்போ நீங்கதான் பில் பே பண்ணணும்" என்றாள் சாது.

"ஓ மை காட்.  என் பாக்கெட்ல கை வெச்சுடீங்களே" என்றான் ஹர்ஷா.

"ரொம்ப பீல் பண்ணாதீங்க. நீங்க திட்டினதுக்கு நாங்க தான் பீல் பண்ணனும்" என்றாள் நிஷ்.

"ஐயோ. நீங்க அதை விடவேமாட்டீங்களா" என்றான் ஹர்ஷா.

"சரி. போனால் போகுதுன்னு விடறேன்" என்றாள் நிஷ்.

"உங்களுக்கு என்ன வேண்டும்னு சொல்லுங்க. நான் வாங்கிட்டுவரேன்" என்றான் ஹர்ஷா.

"எங்களுக்கு ஆர்டர் கொடுத்தாச்சு. சும்மா சொன்னோம். வாங்கிட்டு வரதுக்குள்ள இங்க ஹாசி முகம் சரியில்லைன்னு வந்துட்டேன். நான் வாங்கிட்டு வரேன்." என்றாள் சாது.

சாது,அஞ் வாங்கிட்டு வரசென்றார்கள். நிஷ் ஹர்ஷாவிடம் அவன் இசை ஆர்வத்தை பற்றி பேசிகொண்டிருந்தாள்.

"ஏன் ஹாசி அமைதியா இருக்கீங்க. இன்னும் உங்களுக்கு என் மேல் கோபமா. எப்போதும் விசாரிச்சுட்டுதான் எதையும் செய்வேன். இந்த தடவைதான் கோபத்தில் தப்பு பண்ணிட்டேன்" என்றான் ஹர்ஷா.

"இல்லை. கோபமில்லை" என்றாள் ஹாசி.

"அவள்  ரிசவர்ட்  டைப். அதான் அமைதியா இருக்காள். ஆனால் கோபம்  வந்தது" என்று நிஷா முடிப்பதற்குள் "நானே அதை பார்த்துட்டேனே" என்றான் ஹர்ஷா.

சாது,அஞ் உணவை எடுத்து வந்தனர்.

“ஓகே நான் கிளம்பறேன். காலேஜ்ல பாக்கலாம்”

"நிறையதான் இருக்கு. சாப்பிடுங்க" என்றாள் ஹாசி.

"இல்லை ஹாசி. இன்னொரு நாள் பாக்கலாம்" என்று சொல்லி முடிபதற்கும் அவன் நண்பன் அவனை அழைபதற்கும் சரியாக இருந்தது.

"என்னடா மச்சி. அந்த பொண்ணுகிட்ட பேசிட்டியா"

"இல்லைடா  கரண் . அவள் வரவில்லை"

"என்னது வரலையா. அப்போ நீ   போனதே வேஸ்டா."

"அப்படின்னு சொல்லமுடியாது."

"என்னடா சொல்ற"

"நான் அந்த பொண்ணுன்னு நினைச்சு வேற ஒருத்தர திட்டிட்டேன்"

"அடப்பாவி. உன்னை எல்லோரும் சேர்ந்து டின் கட்டினாங்கள"

"உனக்கு என்ன அவ்வளவு சந்தோஷம் நான் அடி வாங்குறதுல. உன்னை வந்து கவனிச்சுக்குறேன்"

"அதை அப்போ பார்த்துக்கலாம். மீதி கதையை சொல்லு"

"வந்து சொல்றேன்"

"என்னாலையும் வரமுடியலை. நீ  ஆட்டோ பிடிச்சு வந்துடு"

"ம். சரி டா. பை"

"ஓகே. நல்லா  என்ஜாய் பண்ணுங்க. சாரி" என்றான் ஹர்ஷா. அவனுக்கு நால்வரும் ஒரே நேரத்தில் பதில் அளித்தனர். 

"எத்தனை சாரி கேட்பீங்க" என்றாள் நிஷ்.

" சாரிலாம் வேண்டாம். எங்களுக்கு ஒரு புது ப்ரிண்ட் கிடைச்சிருக்காங்க" என்றாள் அஞ்.

" சாரி சொல்லி ஏமாத்தலாம்னு நினைக்காதீங்க. நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணும்போது நீங்க எங்களுக்கு ட்ரீட் தரனும்" என்றாள் சாது.

"பரவால்லை" என்றாள் ஹாசி.

"உங்க டைம் நிறைய நான் வேஸ்ட் பண்ணிட்டேன். அதுக்கும் சாரி" என்றான் ஹர்ஷா (எத்தனை சாரிடா. பாரிவள்ளல் பரம்பரை போல. இதுக்கு பதில் கிளம்பும்போது எல்லாத்துக்கும் சாரின்னு முடிச்சிக்கலாம்ல. நம்மகிட்ட யாரும் ஐடியாவே கேட்கமாற்றாங்க..)

"அப்படியெல்லாம் இல்லை" என்று அவசரமாக சொன்னாள் ஹாசி. அவளை மூவரும் பார்த்தனர். ஹர்ஷவுக்கு வித்தியாசமாக எதுவும் தெரியாததால் அவளிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டுகொண்டான். அவன் விடைபெற்று கிளம்பினான்.

"ஹாசி  சிக்கன் உன்னை வா வான்னு கூப்பிடுது" என்றாள் அஞ்.

"சூப்பரா இருக்கு.  நம்ம விடுதி சமையல் செய்ற அங்கிள இங்கு ட்ரைனிங்க்கு அனுப்பனும்" என்றாள் சாது.

"கத்துகிட்டாலும் செய்யமாட்டாரு. நல்லா செஞ்சா நம்ம இன்னும் நிறைய சப்பிடுவோம்ல" என்றாள் ஹாசி.

"பாவம்டி அவரு. இன்னிக்கு  உங்களுக்கு யாரும் கிடைக்கிலையா" என்றாள் நிஷ்.

 "விடுடி. நம்ம கோபால்  அங்கிள்தான. அவர் முண்ணாடி நம்ம கலாய்ச்சாலும் எதுவும் சொல்லமாட்டார்'' என்றாள் சாது.

"சரி. கிளம்பலாம். நம்ம இதை ஹாஸ்டல்ல தொடரலாம்"என்றாள் அஞ்.

நால்வரும்  விண்டோ ஷாப்பிங் முடித்து கொண்டு சரியாக 6 மணிக்கு ஹாஸ்டல் சென்றனர்.

"6 மணிக்கு ஹாஸ்டல்ல இருக்கணும்னு சொன்னா சரியா 6 மணிக்குத்தான் வருவீங்களோ. லாஸ்ட் மினிட் டென்ஷனை அவாய்ட்  பண்ணலாம் இல்லையா" என்றார்  ஹாஸ்டல் வார்டன் கனிமொழி.

"நீங்க பெர்மிஷன் கொடுக்கறதே மாசத்துக்கு ஒரு நாள். அதையும் எப்படி மேம் வேஸ்ட் பண்றது" என்றாள் சாது.

"நாங்க வரணும்னுதான் நினைக்கறோம் மேம் பட் டிராபிக்ல பஸ் வர  லேட் ஆகிடுச்சு" என்றாள் அஞ்.

"அப்படியும் இங்க பஸ்ஸ்டாண்ட்க்கு வந்துட்டோம். அங்க இருந்து ஆட்டோவில் ஹாஸ்டல் வரதுக்குதன் ரொம்ப நேரம் ஆகிடுச்சு. சீக்கரம் போங்கன்னு டிரைவர்கிட்ட சொன்னால் ரோடு சரியில்லைன்னு சொல்றார் மேம்" என்றாள் நிஷ்.

"போதும். இனிமேல் ரீசன் கேட்கவேமாட்டேன். போங்க" என்றார் வார்டன். அதுதான் எங்களுக்கு வேண்டும் என்று முனுமுனுத்து கொண்டே சென்றனர் நால்வரும். நாலுபேர்கிட்ட கேள்விகேட்டதுகே இப்படி. இந்த  ஹாஸ்டல்ல இருக்கும் எல்லோரையும் எப்படிதான் சமாளிக்கபோறோமோ  என்று பொலம்பிக்கொண்டெ சென்றார் வார்டன்.

(எனக்கு திமிரு படத்தில வடிவேல் வார்டனா  வருவரே அதுதான் ஞாபகம் வருது - இதைமட்டும் கனிமொழி கேட்டாங்க நான் செத்தேன்)

ஊர் சுற்றியதை பற்றி நம்ம சாது மத்தவங்ககிட்டே கதைசொல்லிக்கொண்டிருந்தாள். அவர்கள் அனைவரும் டைனிங் ரூமில் அமர்ந்து பேசிகொண்டிருந்தனர். அவள் ஹர்ஷவை பற்றி சொல்ல சரண்யா அவளிடம் "ஃப்ளுட் வாசிப்பாரே அவரா"

"அவர் தான்" என்றாள் அஞ்.

"சூப்பரா வாசிப்பாரு. காதல் ரோஜாவே சாங் வாசிச்சாரே அப்படியே கேட்டுகிட்டே இருக்கலாம்போல இருந்தது" என்றாள் செலினா.

"ஹ்ம்ம். நல்ல திறமை அவருக்கு" என்றாள் வர்ஷா.

"ஜாலியா பேசுவாரு" என்றாள் சரண்யா.

"என்ன இர்பானா ஆச்சு. அமைதியா இருக்குற" என்றாள் ஹாசி.

"யோசிச்சுட்டு இருந்தேன்" என்றாள் இர்பானா.

"ஏண்டி தேவையில்லாமல் மூளையை வேஸ்ட் பண்ற.  நமக்கு பிறகு அதிகம் யூஸ் செய்யாத மூளைன்னு பொக்கிஷமா பாதுகாப்பாங்க. அதை நீ மிஸ் செய்யாத " என்றாள் சாது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.