(Reading time: 25 - 49 minutes)

என்ன தவம் செய்து விட்டேன் – 05 - புவனேஸ்வரி கலைச்செல்வி

கோபமாய் போனை பார்த்து முறைத்தாள்  வானதி. அவளுக்குள் எழுந்த முதல் கேள்வியே " யாருன்னு தெரியாதவங்க கிட்ட இப்படியா நாகரீகம் இல்லாமல் பேசுவாங்க ?" என்பதுதான் ..  ஆனால்  அவளுக்குள்  இருக்கும் சீர்தூக்கி பார்க்கும் குணமானது அவளது கோபம் வளர்வதுக்கு முன்பதாகவே அதை தடுத்துவிட்டது.. இதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை . தன் வீட்டை விட்டே இந்த வேலையை நம்பி வந்தவள். அப்படி வருவதற்கு முன்பே தான் பணிபுரியும் இடத்தை பற்றி நன்கு விசாரித்து வைத்திருந்தாள்.. நேரில் பார்க்கவில்லை என்றாலும் அவள் அருள்மொழிவர்மனை பற்றி ஓரளவு தெரிந்துதான் வைத்து இருந்தாள் . மேலும், சத்யா சொல்வது உண்மையாகவே இருந்தாலும் கூட, அதை சமாளிக்கும் திறன் தனக்கு இருக்கிறதென்று நம்பினாள்  வானதி. இங்கு அருளோ சத்யாவின் கைகளில் இருந்து செல்போனை பறித்து விட்டு முறைத்தான்..

" உன் விளையாட்டுக்கு அளவே இல்லையா சத்யா ?"

" அது இப்போதான் உனக்கு தெரியுமா அருள் ?"

Enna thavam seithu vitten

" எல்லாம் என்னை சொல்லணும் "

" சொல்லிக்கோ டா "

" ச்ச உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து வெச்சு  இருக்கோம் " என்றான் அவன் எரிச்சலான குரலில். அவ்வளவுதான் " டான் டா டைன்  " என்று அவளது கண்களில் இருந்து எட்டி பார்த்தது கண்ணீர்..

" நானா உங்களை என்னை தலைமேல வெச்சு கொண்டாட சொன்னேன் ? யாரும் எனக்கு செல்லம் கொடுக்க வேணாம்  போங்க " என்று முறுக்கி கொண்டாள்  அவள் ..

" ஹே சத்யா இங்க வா !"  என்ற அவன் அழைப்பு காற்றில் கரைந்ததே தவிர தோட்டத்திற்கு ஓடி சென்ற அவளை நிறுத்தவில்லை.. வானதிக்கு மறுபடி அழைக்க வேண்டும் என்ற என்ணத்தை  கை விட்டுவிட்டு சாஹித்யாவை தேடி  ஓடினான் அருள்..

 

அதே இரவு நேரம்,  தன்  மனைவியின் மடியில் படுத்து கொண்டே அவளது மேடிட்ட  வயிற்றை   வருடித்  தந்தான்  சுபாஷ்.. சில்லிட்ட அவனது கைகளும் கலங்கிய விழிகளும் அவனது மனநிலையை மிக துல்லிதமாக உணர்த்தியது. அவர்கள் வீடு திரும்பியதில் இருந்தே அடிக்கடி அவள் முகத்தை பார்ப்பதும் பிறகு வேறெங்கோ வெறிப்பதுமாய்  இருந்தான் சுபாஷ் .. கணவனிடம் மனம் விட்டு பேச அவளும் இந்த தனிமைக்காக காத்திருந்தாள் .. ஆறுதலாய் அவன் கேசத்தை வருடினாள் ..

" சுபாஷ் "

" ம்ம்ம்ம்ம்ம் "

" என்னாச்சு சுபாஷ் ? ஏன் இப்படி இடிஞ்சு போயிருக்கிங்க ? "

" இடிஞ்சுதான் போயிருப்பேன் சைந்து ... உனக்கு ஏதாவது ஆகி இருந்தா ?"

" அதெல்லாம் ஒன்னும் ஆகி இருக்காது .. நீங்க இருக்கும்போது  எனக்கென்ன ஆகபோகுது "

" இன்னைக்கு நடக்கலையா ? அந்த பொண்ணு மட்டும் இல்லன்னா ?"

" இல்லன்னா நான் அலறின வேகத்தில்  நீங்களே வந்து அவனை உண்டு இல்லைன்னு  பண்ணிருக்க மாட்டிங்களா ? "

" ..."

" இப்போ மட்டும் அவனை சும்மாவா விட்டிங்க ?" என்றாள்  சைந்தவி ஆராயும் பார்வையுடன்.. மனைவியின் முகத்தை பார்ப்பதை தவிர்த்தான். அதை அறிந்து கொண்டு அவன் முகத்தை தன் புறம் திருப்பி நெற்றியில் இதழ் பதித்தாள் .. பிறகு மெல்லிய குரலில் அவன் பொய் சொல்லும்போதெல்லாம் அவனுக்காக அவள்  பாடும் அந்த பாடலை  பாடினாள் ..

" பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த

 புலவர் பெருமானே

உம்மை புரிந்து கொண்டாள் 

உண்மை அறிந்து கொண்டாள் 

இந்த பூவையர் குலமானே "

" இதெல்லாம் அநியாயம் சைந்து .. நீ மட்டும் பூவையர் குலமான்..நான் மட்டும் பொய் சொல்லுற புலவனா "

" அப்பப்பா இந்த பேச்சை மாத்துற வித்தை எல்லாம் உங்க கிட்ட தான் கத்துக்கணும் சுபாஷ் " என்றாள்  சைந்தவி பெருமூச்சுடன்..

" ஹீ ஹீ ... அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல டா .. நிஜம்மாவே அவனை நான் ஒன்னும் பண்ணல .. வேணும்னா நீ வெற்றியை கேளேன் "

" யாரு உங்க நண்பரை தானே ? நீங்க நல்ல பாம்பு பறந்து போகுதுன்னு சொன்னாலும் அவர் சூப்பரா ஆமா சாமி போடுவாரே "

" அடிப்பாவி, நேரில் பார்க்கும்போதெல்லாம் அண்ணா அண்ணான்னு கொஞ்சிட்டு இப்போ  அவனை இப்படி எல்லாம் சொல்லுறியா நீ ..இருடி உன்னைய " என்று அவன் ஆசையாய் அவளை நெருங்கி வரும்போதே  சுபாஷின் செல்போன்  சிணுங்கியது .. செல்போன் திரையில் " வெற்றி " என்று பெயர் காட்டவும்

" அண்ணாவுக்கு ஆயுசு நூறு " என்றாள்  சைந்தவி .. அவனது அழைப்பை எடுக்காமல் யோசனையாய்  அமர்ந்திருந்தான்  சுபாஷ் ..

" என்னங்க ? தனியா பேசணுமா ? நான் வேணும்னா வெளில போகவா ? இல்லன்னா நீங்களே தோட்டத்துக்கு போயி பேசிட்டு வாங்களேன் " என்றாள்  சைந்தவி கணவனின் மனம் அறிந்த மனைவியாய் .. தன் முகம் பார்த்தே தனது தேவைகளை  அறிந்து கொள்ளும் மனைவியின் கண்டு அவன் மனம் காதலில் உருகியது ..

" ம்ம்ம்ம்ஹ்ம்ம்ம் " என்று மறுப்பை தலை அசைத்தவன், எழுந்து அவள் அருகில் அமர்ந்து அவளை தன் மார்பில் சாய்த்து   கொண்டே போனை எடுத்தான் ..

" மச்சான் "

" சொல்லு டா ... "

" சிஸ்டர் எப்படி இருக்காங்க ? பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லையே " 

" அதெல்லாம் ஒன்னும் இல்லைடா ...சைந்தவி நல்லா இருக்கா .. நீ எங்க இருக்க ?"

" ஸ்டேஷன்ல தான் ... அவனை கேட்குற விதத்தில் கேட்டு உண்மையை வாங்கிட்டேன் சுபாஷ் .. அது விவரமாகத்தான் உனக்கு கால் பண்ணினேன்  .. "

" ம்ம்ம் சொல்லுடா "

" நீ சந்தேகப்பட்டது தான் சரி ! இவன் வெறும் காசுக்காக உயிர் எடுக்கும் கூலிப்படை ஆள் .. வெறும் அம்புதான் "

" அப்போ இந்த அம்பை எய்தவன் ?"

" வேற யாரு ? நீ சொன்ன அதே விக்ரம் தான் ..! "

" ......"

" ஹெலோ .. ஹெலோ டேய் இருக்கியா ?"

" ஹான் .. இருக்கேன் டா .. சோ நெக்ஸ்ட் என்ன பண்ண போற நீ ?"

" என்னடா கேள்வி இது ? கையில ஆதாரம் கிடைச்ச பிறகு நான் சும்மா இருப்பேனா ? அடுத்து அவனை அரஸ்ட்  பண்ண போறேன் ... உன் பேரில் கேஸ் பைல் பண்ணாமல் நாங்களே கொலை முயற்சியில் பாஸ்கரை கைது பண்ணின மாதிரி  கேஸ் போட்டுடலாம் "

வெற்றி சொன்னதை சைந்தவியும் தான் ஸ்பீக்கரில் கேட்டு கொண்டு இருந்தாள் .. இதற்கு கணவன் என்ன சொல்ல போகிறான் ? என்று கேள்வியாய்  அவன் முகம் நோக்கினாள் .. சுபாஷோ மிகப்பொறுமையாய்

" வேண்டாம் வெற்றி , விட்டுட்டு " என்றான் சுபாஷ் .. அவன் அப்படி பதில் உரைப்பான் என்று அவள் எதிர்ப்பார்க்கவில்லை  என்பதை அவளது முகமே காட்டி கொடுத்தது ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.