" விளையாடுறியா சுபாஷ் ? இது எவ்வளவு பெரிய விஷயம் ? அவனை வெளியே விட்டா சைந்தவிக்கு மறுபடி ஏதும் ஆகாதா ? உன் குழந்தையை பற்றி நெனச்சு பார்த்தியா ?" என்றான் வெற்றிமாறன் .. தனது வயிற்றை மெல்ல பயத்துடன் வருடினாள் சைந்தவி .. சுபாஷோ இன்னமும் பதட்டம் அடையாமல் பொறுமையாய் பேசினான் ..
" தெரியும் டா.. தெரிஞ்சுதான் சொல்லுறேன் .. முதலில் நீ சில விஷயங்களை புரிஞ்சுக்கணும் வெற்றி .. பணம் கொடுத்து கொலை செய்ய தூண்டிய விக்ரமுக்கு, பணம் தந்து இருக்குற சாட்சிகளை பொய்யாக்கி விட ரொம்ப நேரம் ஆகாது .. பணமும் அந்தஸ்தும் இல்லாதவங்களே சட்டத்தின் முன் ஈசியா தப்பிக்கும்போது, விக்ரமுக்கு இதில் இருந்து வெளிய வர்றது கஷ்டமா சொல்லு ?"
" இல்லைதான் "
" அப்படி வெளில வருபவனுக்கு என்னாலத்தான் அவன் உள்ளே போனான் என்பது தெரியாமல் போகாது .. அவனுக்கு கோபமும் பழி உணர்வும் அதிகம் ஆகும் .. அது சைந்தவியை தான் பாதிக்கும் ,,சரிதானே ?"
" ரைட் "
" குழந்தையை விடு டா ... நான் குழந்தையை எதிர்ப்பார்த்து சைந்தவியை கல்யாணம் பண்ணிக்கல ... எங்களுக்கு குழந்தை இல்லாமல் கூட போனாலும் நான் வருத்தப்பட மாட்டேன் .. இன்னொரு குழந்தையை மகன், மகள்ன்னு கூப்பிட எனக்கு தைரியமும் மனமும் இருக்கு ? ஆனா இன்னொரு பெண்ணை என்னால சைந்தவியின் இடத்தில் வெச்சுக்க முடியாது .. "
" ...."
" எனக்கு என் மனைவியின் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் " என்றான் சுபாஷ் உண்மையாய் . கணவனின் முகம் பார்க்க முடியாத அளவு உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டில் இருந்தாள் சைந்தவி .. இவனை எனது கணவனாய் பெற " என்ன தவம் செய்து விட்டேன் ?" என்று எண்ணிக் கொண்டாள் அவள் .. அவளை தன் மீது சாய்த்துக் கொண்டு ஆறுதலாய் கூந்தலை கோதி விட்டு கொண்டே பேசினான் சுபாஷ் ..
" இப்போ என்னதான் பண்ண போகிற சுபாஷ் ?"
" இதை பண்ணினது விக்ரம்ன்னு நான் அனுமானிச்ச போதே , இதை எப்படி சரி செய்யணும்னு முடிவு பண்ணிட்டேன் வெற்றி .. அண்ட் இதை பத்தி அப்பாகிட்டயும் பேசிட்டேன் .. "
" ம்ம்ம்ம் "
" விக்ரமுக்கும் எனக்கும் பெர்சனலி எந்த பகையும் இல்ல வெற்றி .. இப்போதான் ஒரு பெரியா ப்ராஜெக்ட் ஒன்னு நம்ம கம்பனிக்கு கிடைச்சது .. அதை விக்ரம் தான் ரொம்ப எதிர்ப்பார்த்தான் .. பட் டெண்டர் ல அது எங்களுக்கு வந்துருச்சு .. பிசினஸ் விஷயத்துல நான் எப்பவும் அவனை ஜெயிச்சுகிட்டே போகுறது தான் அவனுக்கு கோபத்தை உண்டு பண்ணி இருக்கு .. " என்றவன் ஒரு பெருமூச்சு விட்டு சைந்தவியை பார்த்தான் .. ஏற்கனவே அசதியாய் இருந்தவள் அவனது கதகதப்பில் சிறு பிள்ளை போல கண் மூடி உறங்க ஆரம்பித்து இருந்தாள் ... அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு பேச தொடங்கினான் சுபாஷ் ..
" ஹோனஷ்ட்லி ஸ்பீகிங் வெற்றி, எனக்கு அவனை மாதிரி பணம் ஆசை எல்லாம் இல்லை .. முன்னேறனும்னு நெனச்சுதான் அவனை நான் ஓவர்டேக் பண்ணேனே தவிர, இன்னும் வசதியாகனும்னு எனக்கு எண்ணம் இல்லை .. அண்ட் செய்து சைந்தவிய விட எனக்கு இது பெருசும் இல்லை ... சொந்த வாழ்க்கையை பணையம் வெச்சு நான் பிசினசில் ஜெயிக்க விரும்பல .."
" சோ ?"
" சோ , நான் நாளைக்கே அவனை நேரடியா மீட் பண்ணி அந்த ப்ரொஜெக்ட் அவன்கிட்டயே கொடுக்க போறேன் "
" வாட் ?? நீ சொல்றது உனக்கு சரின்னு படுதா சுபாஷ் ? அவன் பண்ணுறதேதப்பு ! இதில் நீயும் அவனுக்கு துணை போகுற மாதிரி இருக்கு "
" அப்படி ஒன்னும் இல்ல ! நான் நல்லா யோசிச்சுதான் சொல்லுறேன் .. "
" அப்போ பாஸ்கர் ?"
" ஒரு போலீசா விக்ரமை இழுக்காமல் நீ என்ன செய்யணுமோ அதை மட்டும் பாரு டா "
" நல்லா யோசிச்சுதான் சொல்லுறியா சுபாஷ் "
" எஸ் மச்சான் "
" சரி டா .... நான் இதை ஹென்டல் .. பண்றேன் நீ நிம்மதியா இரு "
" ஓகே டா .. தேங்க்ஸ் டா "
" நமக்குள்ள எதுக்குடா "
" தெரில டா... இவளை அந்த நிலையில் பார்த்ததும் நான் கொஞ்சம் உடைஞ்சுதான் போயிட்டேன் டா"
"சுபாஷ் ... என்னை விட நீ தைரியமானவன் .. அதை நான் நிறைய தடவை உணர்ந்து இருக்கேன் ... தயவு செஞ்சு உன் மனவலிமையை இழக்காதே டா "
" ம்ம்ம்ம்ம் "
" நீ கொஞ்ச நேரம் இத பத்தி யோசிக்காமல் ரெஸ்ட் எடு டா .. எல்லாம் சரி ஆகிடும் " என்றான் வெற்றிமாறன்
" ஓகே டா ... டெக் கேர் " என்று சொல்லி போனை வைத்தான் சுபாஷ் .. எந்த ஒரு கவலையும் இல்லாமல் அவனது மார்பில் நிம்மதியாய் விழி மூடி இருந்த சைந்தவியை பார்த்தான் அவன் ..
" என் மேல அவ்வளோ நம்பிக்கையா கண்மணி உனக்கு ?" என்று முணுமுணுத்தவன் அவளை தன்னோடு இறுக்கி கொண்டான் .. கொஞ்ச நேரம் கழித்து அவளை விலகி அவன் எழ முயல, பாதி உறக்கத்தில்
" என்ன சுபாஷ் ? " என்றாள் சைந்தவி
" நீ இன்னும் பால் குடிக்கலை டா . இரு நான் கொண்டு வரேன் " என்றான்
" ம்ம்ம்ம் " என்று கண் மூடினாள் அவள் ...
அவசரமாய் செல்போனை எடுத்து கொண்டு வந்து வெற்றியை அழைத்தான் சுபாஷ் ..
" ஹெலோ சுபாஷ் .. "
" வெற்றி " என்றான் ரகசிய குரலில்
" சொல்லுடா "
" ( ரகசியம் ஹா ஹா ஹா )" சுபாஷ் தனது திட்டத்தை வெற்றியிடம் கூறினான் ..
" நெனச்சேன் டா ... என்ன புலி ரொம்ப பதுங்குதேன்னு .. உன்னால இப்படி அடங்கி இருக்க முடியாதே ! அதுவும் சிஸ்டர் க்கு ஒண்ணுன்னா நீ சும்மா இருப்பியா ? "
" ஹா ஹா புரிஞ்சா சரி .. ஓகே டா .. ரொம்ப நேரம் இத பத்தி பேச வேணாம் .. நான் போனை வைக்கிறேன் " என்று போனை வைத்தான் சுபாஷ் .. ( என்னம்மா இப்படி பண்ணுறிங்களே மா !!!)
அன்றைய இரவு சந்தோஷுக்கும் தூங்கா இரவு தான்.. அவனது நினைவை ஆக்கிரமித்து கொண்டிருந்தாள் சைந்தவி .. ( ஹா ஹா ஹா நீங்க எல்லாரும் சாஹித்யான்னு தானே நினைச்சிங்க ..நம்ம ஹீரோ சார் கொஞ்சம் மண்டு தான் .. சோ மன்னிச்சு விட்டுடலாம் )
" அவன் எதுக்கு என்னை கொல்ல வரணும் .. நான் என்ன ஜான்சி ராணியா ?" என்று சத்யா கேட்டது அவனுக்கு ஞாபகம் வந்தது. அப்படி என்றால் அவன் கொல்ல வந்தது சைந்தவியை தானே ? சைந்தவி, நம்ம விக்ரமன் சார் படத்துல வர்ற மாதிரி அன்பும் அமைதியும் மட்டுமே நிறைந்த குடும்ப பின்னணியில் இருந்து வந்தவள். அதனால் அவளுக்கு எதிரிகள் இருப்பார்கள் என்பதை யோசித்து பார்க்கவே அபத்தமாக இருந்தது..
" உங்களை நம்பி வந்த பெண்ணுக்கு நீங்கள் தரும் பாதுகாப்பு இதுதானா ? " என்று சாஹித்யா அவனை கேட்ட கேள்வி அவன் மனதை மிகவும் பாதித்து இருந்தது .. ஒருவேளை தானும் கொஞ்சம் பொறுப்பாக இருந்திருக்க வேண்டுமோ ( பாஸ் நீங்க மேல் மாடியை , ஐ மீன் உங்க மூளையை ரொம்ப குடையுரிங்க )
சந்தோஷின் அறையில் விளக்கு எரிவதை பார்த்து அறைக்குள் வந்தான் சுபாஷ் ..
" சந்தோஷ் "
" ..."
" டேய் .... "