கிரிதரன் " எனக்கு முழு சம்மதம் " என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நடப்பது போல பாவனை செய்ய
" ஹே என்ன சம்மதமா ? இதெல்லாம் ஓவர் .. கல்யாணம் பண்ணிகிட்ட பிறகு என்னை அடக்கிடலாம்ன்னு பார்க்கறிங்களா ? " என்று பொரிந்தாள் கவிமதுரா ...
" ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் " என்று சொல்லி கொண்டே அவள் அருகில் வந்தான் கிரிதரன் ...
" இவ்ளோ நேரம் நீதானே பேசின ? இபோ நான் பேசுறேன் பொறுமையா கேளு " என்றான் அவன் ..
" ம்ம்ம்"
" உனக்கு ப்ளேக் காபி ரொம்ப பிடிக்கும், அதுவும் சக்கரை தூக்கலா இருக்கணும், உன் பெஸ்ட் பிரண்ட் பேரு ஜீவநதி. நீ கவிமதுரா , படிச்சது ஜர்னலிசம் பிடிச்சது நிறைய இருக்கு ..பிடிக்காதது ஒன்னே ஒன்னு கல்யாணம்.. பாரதியார் சொன்ன மாதிரி, சந்தையில் மாட்டை நிறுத்துற மாதிரி பெண் பார்கிரோம்னு சொல்லி காபியோடு நிற்கிறது உனக்கு பிடிக்காது .. மத்தபடி இப்போ நீ சொன்னதுல பாதி நீயே மிகைப்படுத்தி சொன்னது தான் .. உனக்கு கல்யாணம் பண்ணிக்க பிடிக்கல .. சோ மாப்பிளை கிட்ட தனியா பேசுறேன்னு இப்படி லூசுத்தனமா பேசி கல்யாணத்தை நிறுத்துறது தான் உன் பிளான் ...ரைட்டா ?"
" இதெல்லாம் உங்களுக்கு ?"
" ஹா ஹா நானும் இந்த கல்யாணத்தை நிறுத்தனும்னு நெனச்சுதான் உன்னை நேத்து தனியா மீட் பண்ணனும்னு உன்னை தொடர்ந்து வந்தேன் .. நீ தனியா இருப்ப, உன்கிட்ட பேசலாம்னு பார்த்தா உன் பிரண்ட் உன்னோடு இருந்தாங்க ... அண்ட் உன் குரல் இருக்கே, ஹா ஹா உனக்கு லவுட் ஸ்பீகரே தேவை இல்லை .. உனக்கு பின்னாடி டேபளில் இருந்த நான் நீ பேசியது எல்லாத்தையுமே கேட்டுட்டேன் "
" அப்பறம் எதுக்கு இன்னைக்கு வந்திங்க "
" பார்த்தியா ? நீ பேசும்போது நான் இன்டரப் பண்ணேனா ? இப்போ நீ மட்டும் ?"
" ஓகே சாரி சாரி .. பேசுங்க "
" நானும் இதை என் வீட்டுல சொல்லிடலாம்னு நெனச்சேன் .. பட் எனக்கு ஏற்கனவே கல்யாணத்துல இஸ்டம் இல்லை .. சோ நிச்சயமா என் பேச்சை யாரும் நம்ப மாட்டாங்க .. அதான் "
" ஹீ ஹீ "
" என்ன லொள்ளா ?"
" இல்ல நீங்க சொன்ன விதம் காமிடியா இருக்கு "
" சரிதான் ... ஆனா அப்போதான் எனக்கு மைண்ட்ல ஒன்னு ஸ்ட்ரைக் ஆணிச்சு ..பட் சொன்ன கோபபடாமல் கேட்பியா ?"
" சொல்லுங்க சொல்லுங்க " என்றபடி அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தாள் கவிமதுரா .. அவள் அருகில் இயல்பாய் அமர்ந்து பேச ஆரம்பித்தான் கிரிதரன் ..
" இது பாரும்மா, நீ கல்யாணம் வேணாம்னு நினைக்கிறது எல்லாம் தப்பில்லை ..ஆனா அதை நிறுத்துறதுக்கு நீ கையாளுற விதம் இருக்கே அது ரொம்ப ஆபத்து .. இன்னைக்கு நான் பிடிக்கலன்னு சொல்லிட்டு போயிட்டா உடனே உன் வீட்டுல மாப்பிளை பார்க்குறதை நிறுத்திடுவாங்களா ? மே பீ உன் பேச்சை கேட்டு கொஞ்ச மாசம் இதை தள்ளி போடுவாங்க ... அதுக்கு பிறகு ??? இப்படி வர்றவங்க போறவங்ககிட்ட எல்லாம் உன்னை நீயே தப்பா பேசிக்கிறது எந்த விதத்திலும் சரி இல்லை .. இது உன்னை மட்டும் இல்ல, உன் அம்மா அப்பா உங்க குடும்ப கௌரவம் எல்லாத்தையுமே பாதிக்கும் ...
சின்ன பிள்ளைத்தனமா இருக்கும்மா நீ பண்ணுறது !
சரி இப்போ என்னை பத்தி யோசிப்போம்.. உன்னை நான் வேணாம்னு சொன்னாலும் நிச்சயம் இன்னொரு பெண்ணை எனக்கு பார்பாங்க .. உனக்கு இதுல இஸ்டம் இல்லாததால் நான் நோ சொன்னா உனக்கு எதுவும் இல்லை... ஆனா கல்யாண கனவில் இருக்குற ஒரு பெண்ணை நான் ரெஜக்ட் பண்ணின்னா அந்த பொண்ணு மனசு கஷ்டப்படும் இல்லையா ? அதுவும் நம்ம சமூகத்தில் பொதுவா பையன் வேணாம்னு சொன்னாலும் பெண்ணை தான் குறை சொல்லுவாங்க ...சரி தானே ?
" சரிதான் "
" அதுக்குதான் சொல்றேன், பேசாம நாம கல்யாணம் பண்ணிகிட்டா என்ன ?"
" வாட் ?"
"எஸ் .. ப்ரெக்டிகலா இது ஒத்து வரும்...கல்யாணம் பொருத்தவரை எனக்கு உன்னையும் உனக்கு என்னையும் நல்லா தெரிஞ்சு போச்சு... உன்கிட்ட இருந்து நான் அதிகம் எதையும் எதிர்பாக்கல ... நாம கல்யாணம் பண்ணிகிட்டா ரெண்டு அம்மா அப்பா சந்தோஷமா இருப்பாங்க...நாமளும் நல்ல ப்ரண்ட்ஸா நிம்மதியா இருக்கலாம் .... நீ என்ன சொல்லுற ? "
" நான் கொஞ்சம் யோசிக்கணும் " என்றாள் கவிமதுரா ..அவன் முடிவு தனக்கு சரியென்ற போதிலும் ஏதோ ஒன்று அவளை தடுத்தது .. இவனை நம்பலாமா ? என்ற சந்தேகம் அவளுக்கு இல்லை. நேர்கொண்ட பார்வையிலும் தெளிவான பேச்சின் மூலமும் சில நிமிடங்களிலேயே அவளது நம்பிக்கையை பெற்றுவிட்டான் கிரிதரன். இருப்பினும் மிகவும் வேகமாக முடிவு எடுக்கிறோமோ ? என்று குழம்பி போனாள் மதுரா
" ஓகே நீ டைம் எடுத்துக்கோ ...பெரியவங்க கிட்ட நான் எனக்கு டைம் வேணும்னு சொல்லி சாமாளிச்சுகுறேன்... " என்று சொல்லி அங்கிருந்து எழுந்தவன் ஏதோ ஞாபகம் வந்தவனாய் " ஆங் ..... இப்போ சொல்லு நான் மரியாதையா தான் உன்கிட்ட பேசணுமா ? " என்றான் ..
" ப்ரண்ட்ஸ் ன்னு சொல்லியாச்சே இனி அது வேணாம் " என்றாள் கவிமதுரா மலர்ந்த முகத்துடன்..
" ஆனா மனசுல நிறைய மரியாதை இருக்கு உன்மேல " என்று சொல்லி விட்டு முன்னால் புன்னகையுடன் நடந்து சென்றான் கிரிதரன் ... வித்யா-விமல், கண்ணபிரான்- மீராவதி நால்வரும் மிக ஆவலாய் இருப்பது அவர்களது முகத்திலேயே தெரிந்தது.. ஏனோ அவர்களை காக்க வைக்க தோன்றவில்லை அவளுக்கு ..
கிரிதரன் " அப்பா " என்று பேச ஆரம்பிக்கும்போதே
" எனக்கு உங்க பையனை கட்டிக்க முழு சம்மதம் மாமா " என்று சொல்ல இருவரிடமும் ஆசி வாங்கினாள் கவிமதுரா... நால்வருமே இப்போது கிரிதரனை பார்க்க, புன்னகையுடன் அவளுடன் இணைத்து காலில் விழுந்துவிட்டு " மதுராவை தவிர யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" என்றான் ....
அன்றைய நினைவுகள் கண்முன்னே தோன்ற, அதே மகிழ்வில், நீண்ட நாட்களுக்கு பிறகு நிம்மதியாய் உறங்கினான் கிரிதரன் ....
அதே நேரம் உறக்கம் தொலைத்த விழிகளுடன் அமர்ந்திருந்தாள் கவிமதுரா. சற்று முன்பு தான் அவள் பணிபுரியவிருக்கும் இடத்தை பற்றி கூறினாள் வானதி..அத்தோடு நிறுத்தாமல்
" அண்ணி நாளைக்கு நாம ரெண்டு பேருமே வேலைக்கு போக போறோம் ..அதுனாலே ஒரே கலர் புடவை கட்டலாம்னு தேடி புடிச்சு எடுத்து வந்தேன் " என்று சொல்லி அந்த சேலையை அவளிடம் கொடுத்துவிட்டு சென்றாள் வானதி ... அது கிரிதரன் வாங்கி தந்த புடவை !! எந்த ஒரு உணர்வும் இல்லாமல் அதை வருடியவளின் கண்களில் கண்ணீர்... மௌனமாய் கண்ணீர் வடித்தவள் அப்படியே உறங்கியும் போனாள் ...
" சத்யா நில்லு டா ப்ளீஸ் "
" யாரும் என்னை சமாதானம் பண்ண வேணாம் போ "
" ஹே அதான் சாரி சொல்லிட்டேனே லூசு "
" நீ சாரி சொன்னா நான் இறங்கி வரணுமா ? "
" இறங்கி வராதே, நான் இப்படியே கொட்டுற பனியில் விடிய விடிய நனையுறேன்.. எனக்கு காய்ச்சல் வரும் ...வந்தா வரட்டுமே யாருக்கு என் மேல அக்கறை இருக்கு " என்று சோகமாய் சொன்னான் அருள்மொழிவர்மன் ..
" டேய் கேடி போதும் சீன் போட்டது .." என்று சொல்லி அவனுடன் கை கோர்த்து கொண்டு சிரித்தாள் சாஹித்யா .....
" என்னடா என் மூஞ்சிய இப்படி பார்க்குற ?"
" நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும் சத்யா "
" நீ என்னோடு இருக்குற வரை சந்தோசம் என்கூடவே தான் இருக்கும் ...போதுமா ? வா போலாம் எனக்கு தூக்கம் வருது " என்றபடி அவனுடன் நடந்தாள் சாஹித்யா....
மறுநாள் வேகமாக அந்த ஆபீஸ் அறைக்குள் நுழைந்தான் அருள்... அந்த அறையில் இருந்தவளை இருந்தவளைப பார்த்து திகைத்து நின்றான் அருள் ... " நீயா ???" என்ற கேள்வியில் அவளையும் எழுந்து நிற்க வைத்தான் ...
யாரு அங்கே இருந்தா ? நம்ம கவிமதுரா என்ன பண்ணுறாங்க ? சந்தோஷ் -சத்யா எப்போ மீட் பண்ணுவாங்க ? நான் இதுக்கு பதில் தேடிட்டு வரேன் ....
தவம் தொடரட்டும்
{kunena_discuss:838}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.