(Reading time: 13 - 26 minutes)

08. வாராயோ வெண்ணிலவே - சகி

"நீ எதற்கும் கவலைப்படாதே ப்ரியா!"-ஆறுதல், கூறுகிறாளாம் சஞ்சனா ப்ரியாவிற்கு!!!

"ஒரு வார்த்தை என்னிடம் சொல்லி இருக்கலாம்ல?

ரஞ்சித் அவ மனசுல இருக்காருன்னு?தேவை இல்லாமல் என் மனசுல எந்த ஆசையும் வளர்த்திருக்க மாட்டேன்ல?"

Vaarayo vennilave

"வெண்ணிலா பற்றி இப்போதாவது புரிந்ததே!!!

இங்கேப் பாரு... கவலைப்படாதே!

செய்த தவறுக்கு அவ நிச்சயம் தண்டனை அனுபவிப்பாள்!"-

ப்ரியாவின் கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே,

அவள் சஞ்சனாவை தடுக்கவோ,மறுக்கவோ இல்லை.

அவளை பொறுத்தவரை

வெண்ணிலா தன் காதலை

சாகடித்துவிட்டாள்.

தவறிழைத்தாள்.

பேதை மனம் வெதும்பியது,

உண்மை அறியாமல்...!!

மருத்துவமனையில்...

இன்னும் ரஞ்சித்தின் நிலை கவலைக்கிடமே!!!

அவனைவிட்டு விலகாமல் இருந்தாள் வெண்ணிலா ஒரு நடைப்பிணமாய்!!!

அவளது உயிரை அவன் அல்லவா வைத்திருக்கிறான்?

"நிலா!"-கார்த்திக்கின் குரல் அவளை இவ்வுலகிற்கு இழுத்தது.

"எதாவது சாப்பிடும்மா!"-அவள்,ரஞ்சித்தைப் பார்த்தாள்.

"வேண்டாம் கார்த்திக்!"

"நிலா!உனக்கு தெம்பு வேண்டாமா?நீயும்,ரஞ்சித் மாதிரி புரிஞ்சிக்காம பண்றீயே?"

"இவரே இப்படி இருக்கும் போது,நான் எப்படி இருந்தா என்ன?இந்த உயிர் போகணும்னா,போகட்டும் கவலை இல்லை!"

"நிலா?"

"ப்ளீஸ் கார்த்திக்!"-பதில் பேச முடியாமல் நகர்ந்தான் கார்த்திக்.

நிலா ரஞ்சித்தின் கரத்தை அழுந்தப்பற்றினாள்.

கண்ணீர்த்துளி அவனுக்காக வெளி வந்தது.

"நீ என்னை மன்னிக்கவே மாட்டியா?உன்னை கஷ்டப்படுத்தினது தப்புதான்,

அதுக்காக,எனக்கு கொடுக்க வேற தண்டனையே இல்லையா ரஞ்சு?

இதுக்கு,என்னை இறந்துவிடுன்னு சொல்லி இருக்கலாம்!!

சந்தோஷமா அதை பண்ணி இருப்பேன்.

நான் பண்ணதுக்கு பிராயசித்தமே இல்லையா?

ரஞ்சு...

ஐ லவ் யூடா!!!

ஐ லவ் யூ!!!எழுந்திரிடா!"-

மனம் கனக்கிறது,காதலின் ஆழமான அர்த்தம்...!

நிச்சயமாக கண்ணீர் தான்.

காதலில் விழுந்த இதயம் அது ஆணோ! பெண்ணோ!

தன் இணைக்காக ஒருத்துளி கண்ணீர் விடுகிறார் என்றால்,அக்காதல் உயிரோடு இருக்கிறதோ!

இல்லையோ!

ஆனால்,வெற்றி பெற்றது என்று பொருள்.

ரஞ்சித்தின் காதல் இங்கே வெற்றியடைந்தது.

ஆனால்,அதை கொண்டாட அவன்???

எழுவானா??

பாருங்கள்...அவன் கரங்களில் அசைவு தெரிகிறது!!

அவன்,கண்களில் கண்ணீர் எழுகிறது.

வெண்ணிலாவின் காதலும் வெற்றியடைந்ததா???

காதலில் மட்டும் தான் போரிடும் இரு நெஞ்சங்களும் வெற்றியை  அடைகின்றன.

தனது கரத்தில் திடீரென ஏற்பட்ட அழுத்தத்தினை உணர்ந்தவள் நிமிர்ந்தாள்.

"ரஞ்சு?"-அவன்,தன் தலையை இடமிருந்து வலமாக மெல்ல ஆட்டினான்.

"ரஞ்சித்!"-இம்முறை திரை நல்ல முன்னேற்றத்தினை காட்டியது.

"கார்த்திக்! இங்கே வாங்களேன்!"-அவளின் குரலில் ஓடிவந்தான் கார்த்திக்.

"ரஞ்சித்! டேய்! இங்கே பாருடா!"-தன் அநுஜனின்

நிலையைக் கண்டு மருத்துவரை அழைக்க விரைந்தான் கார்த்திக்.

மருத்துவர் விரைந்து வந்து,ரஞ்சித்தை சோதித்தார்.

"நீங்க கொஞ்சம் வெளியே இருங்க!"-கார்த்திக் கண்ணசைக்க,நிலா வெளியே வர எத்தானித்தாள்.

ஆனால்,ரஞ்சித்தின் கரம் அவளை போக விடாமல் அவள் கரத்தை அழுந்தப் பற்றியது.

"மிஸஸ்.ரஞ்சித்! நீங்க இங்கேயே இருக்கலாம்!"-என்றார் அவள் நிலையை கண்ட மருத்துவர்.

கார்த்திக் வெளியே சென்றான்.

2 மணிநேரம் கழித்து,

"மிஸஸ்.ரஞ்சித்,இனி, பயப்பட வேண்டாம்!

உண்மையை      சொல்லணும்னா இது ஒரு மெடிக்கல் மிராக்கல்.

உங்க ஹஸ்பண்ட்க்கு இவ்வளவு சீக்கிரம் சரியாகும்னு நினைக்கவே இல்லை.

கொஞ்சம் மயக்கத்துல இருக்கார்...3 மணி நேரத்துல மயக்கம் தெளிந்துவிடும்!"

"நன்றி டாக்டர்! ரொம்ப நன்றி!"

"நன்றியை அந்த தெய்வத்திற்கு சொல்லுங்க.ஆ...அவருக்கு காலில் சின்ன ஃபிராக்சர்! அதனால, கொஞ்ச நாள் நடக்க கஷ்டப்படுவார்!

நீங்க,அதை கொஞ்ச கவனமாக பார்த்துக்கோங்க!"

"சரிங்க டாக்டர்!"-அவர்,வெளியே வந்ததும்,

வெண்ணிலா ரஞ்சித்தின் நெற்றியில் முத்தமிட்டாள்.

"இனி,உனக்கு எந்த கஷ்டமும் தர மாட்டேன் ரஞ்சு!செத்துப் பிழைக்க வைத்துவிட்டாயே!"- இப்போதும் கண்ணீர் சிந்தினாள்.ஆனால்,ஆனந்தக் கண்ணீர் அல்லவா அது???

இரு தினங்கள் கடந்தன...

வெண்ணிலா ப்ரியா, சஞ்சனாவை விட்டு தனித்து வந்துவிட்டாள்.

தனியே,வீடு எடுத்து தங்கினாள்.

அதனால்,அவர்கள் முகத்தில் விழிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று.

ஆனால்,இதில்,சற்று வருத்தப்படும் செய்தி என்ன என்றால்...

ரஞ்சித்,அவளிடம் பேசவில்லை.

அவளோடு இருக்கும் பொழுதினை அவன் விரும்பினான்.

ஆனால்,அவளோடு பேசவில்லை.

வெண்ணிலா இதனால் சற்று வருத்தமடைத்தாலும்,

அவள்,அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அவனது எந்த    செய்கையையும்,அவள்,

குழந்தைத் தனமாகவே எடுத்துக் கொண்டாள்.

அன்றிரவு...

ரஞ்சித்திற்கு ஒரு இடத்தில் அமர விருப்பமில்லை என்பதால்,சற்று அவனே எழுந்து நடக்கப் பார்த்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.