(Reading time: 13 - 26 minutes)

ப்போது அவன் என்ன செய்தான்?அவன் கோபமாக பேசவில்லை...சிரித்தப்படி பேசினான்...

அவன் கோபப்பட்டனா?

அல்லது சாதாரணமாக பேசினானா?      புரியவில்லையே...???

வெண்ணிலாவை அவள் வீட்டில் விட்டான் ரஞ்சித்.

அவள் ஊருக்கு செல்லவில்லை.

இன்னும் கண்கள் கலங்கியப்படி இருந்தன.

"வரேன் ரஞ்சித்!"-என்று கீழே இறங்கப் பார்த்தாள்.

அவன் விடவில்லை.

"ஏ...லூசு..!என்னாச்சுடி உனக்கு?"

"ஒண்ணுமில்லை ரஞ்சித்!"-அந்நேரம் திடீரென சிறு சிறு தூரல்களாக தூவி,மழை பெரிதாக வலுத்தது.

"உன் மழை வந்திடுச்சா?சரி..நீ உள்ளே போ! காலையில வரேன்!"

"ரஞ்சு...!"

"ம்?"

"மழை நின்ற பிறகு போ!"

"ஏன்?"

"ப்ளீஸ்!"-அவளுக்கு பயம்,எப்படியும் அவன் வேகம் எடுப்பான்.

மீண்டும் எதாவது நடந்தால்??

"சரி!"-அவனும்,அவளோடு வீட்டிற்குள் வந்தான்.

"செல்லம்...வீட்டை அழகா வைத்திருக்காய்!"

"ம்.."

"மாமா வீட்டிற்கு வந்திருக்கேன்ல?எதாவது தர வேண்டியது தானே!"

"என்ன?"-புருவத்தை சுருக்கினாள் அவள்.

"ஐயோ..நான் டீ,காப்பி அப்படி சொன்னேன்.எப்போ பார்த்தாலும் தப்பாகவே நினைக்கிறது!"

"சரி!"-என்று        சமையலறைக்குள் சென்றாள்.

சிறிது நேரத்தில் காப்பியோடு வந்தாள்.

"ரஞ்சித்!"

"ம்..."

"காப்பி!"-அவன் வாங்கி அருத்திவிட்டு,

"சூப்பரா இருக்குடி! நல்லா சமைப்பியா?"

"ம்..."

"அப்போ எனக்கு கஷ்டமில்லை!"

"............"

"நிலா! என்னாச்சு?ஏன் சரியா பேச மாட்ற?"

"ஒண்ணுமில்லை!"

"சரி நான் இப்போ ஒண்ணு பண்ணுவேன்.அதற்காக,நீ என்னை திட்டக்கூடாது!"

"என்ன?"

"திட்ட மாட்ட தானே!"

"சரி...!"

"உன் வீட்டில பூஜை ரூம் இருக்கா?"

"இருக்கு!"

"வா காட்டு!"-அவள் கரத்தைப் பற்றி இழுத்து சென்றான்.

நேர்த்தியாய்      அமைந்திருந்தது பூஜை அறை!!

"எதுக்கு ரஞ்சு கேட்ட?"-ரஞ்சித் தன் பாக்கெட்டில் இருந்து,சிறு பெட்டியை எடுத்தான்.

"இந்த மழை,இடி,மின்னல், காற்று,அப்பறம் இந்த கடவுள் சாட்சியாய் இப்போ நான் உன்னை கல்யாணம் பண்ண போறேன்!"-அவன்,கூறியதைக் கேட்டு அதிர்ந்தாள் வெண்ணிலா.

"ரஞ்சித்!"-பெட்டியில் இருந்த மாங்கல்யத்தை எடுத்து,அவள் கழுத்தில் கட்டினான்.

வெண்ணிலாவின் தாயாரின் படத்தில் சூடியிருந்த மலர் ஒன்று கீழே விழுந்து அவர்களை ஆசீர்வதித்தது.

"அத்தை ஆசீர்வாதம் பண்ணியாச்சு!"-நிலா,பேச்சிழந்து அவனையே பார்த்தாள்.

"இனி...உனக்கும்,எனக்கும் என்ன சம்பந்தம்னு யாராவது கேட்டால்! இந்த சம்பந்தத்தை நீ தைரியமாக சொல்லலாம்!"-என்றான் அவள் செவிகளில்.

"அப்பறம் என்னமோ பண்ணுவாங்களே?"-என்றப்படி குங்குமத்தை எடுத்து அவள் நெற்றி வகிட்டில் வைத்தான்.

"சரியா பண்ணேனா?"-பதில் பேசவில்லை அவள்.

"பதில் சொல்லுடி!"-அவள்,அவனது மார்பில் தஞ்சம் புகுந்தாள்.

கண்ணீர் விழியில் கசிய அழ ஆரம்பித்தாள்.

அவன் ஆறுதலாக அவளது தலையை கோதினான்.

"என்னடி ஆச்சு?"

"எனக்கு..."-அவளால்,பேச முடியவில்லை.

"நீ வா!"-பூவென அவளை தாங்கி சோபாவில் அமர வைத்தான்.

"ஏ...லூசு!"

"..............."

"இங்கே பாருடி!"

"................"

"ஏ...லூசு ஐ லவ் யூடி!!"-மீண்டும் அழுகை அதிகமானது.

"நான் ஐ லவ் யூ சொல்லும் போது தான் அழுவியா?கண்ணைத் துடை!"-துடைத்தாள்.

"யார் யாரோ என்னமோ பேசிவிட்டு போறாங்க?நீ ஏன் அழுற?நீ நல்லது பண்ற ஆனா,எல்லாருக்கும் கெட்டதாகவே தெரியுது!

உன்னை ஏன் புரிஞ்சிக்க மாட்றாங்கன்னு தெரியலை.

ஆனா,நான் உன்னை புரிந்துக் கொண்டேன். அதான் இது...

சீக்கிரமே...உன் விருப்பப்படி,இரண்டு வீட்டுலையும் சம்மதம் வாங்கி....!"

"மறுபடியும் ஊர் அறிய கல்யாணம் பண்ணிக்கிறேன்.

இல்லை...இப்பவே,மேரேஜ் லைப்பை ஆரம்பிக்கறது என்றாலும் எனக்கு சம்மதம் தான்!"-என்று,அவளருகில் நெருங்கி அமர்ந்தான் ரஞ்சித்.

"ம...மழை...நின்னுடுச்சு ரஞ்சு!"

"இந்த மழை இப்போ தான் நிற்கணுமா?"-பெருமூச்சு விட்டான்.பின்,

அங்கிருந்த காப்பிக் கோப்பையை கண்டவன்,

"ஐயயோ! காப்பி ஆறிடுத்தே!இன்னொன்று போட்டு தாயேன்!"-என்றான் குழந்தை சிரிப்போடு!!!

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:821}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.