(Reading time: 13 - 26 minutes)

"லி எப்படி இருக்கு?"

"பரவாயில்லை..."

"சரி!"-சிறிது நேரம் இருவருக்கும் இடையே கனத்த மௌனம் நிலவியது.

"நான் கிளம்புறேன்!"

"வந்த உடனே பறக்கணுமா?"

"................"-அவன் திடீரென்று அவளை அணைத்துக் கொண்டான்.

அவனது செய்கையின் அர்த்தம் விளங்காமல் விழித்தாள் வெண்ணிலா.

"கல்யாணம்       பண்ணிக்கலாமா நிலா?"-அவனது கேள்வியும் ஏன் என்று விளங்கவில்லை.

"ரஞ்சு?"

"ஏன் கேட்கிறேன்னு தெரியலை..ஏதாவது, காரணத்துக்காக நீ என்னை விட்டு போயிடுவியான்னு பயமா இருக்கு!"

"................."-அவன் அவளை விடுவித்தான்.

"கல்யாணம் தானே பண்ணிக்கலாம்.ஆனா, எனக்கு இரண்டு வீட்டோட சம்மதமும் வேண்டும்!"-என்றாள் தலை குனிந்தப்படி,

இதுவரை அவள் மனதில் அவன் இருந்தானா?என்பது அவனுக்கு சந்தேகத்தின் அடிப்படையில் தான் இருந்தது.

ஆனால்,அவளது பதிலில் அச்சந்தேகம் தரை மட்டமானது,

அவளின் மனதில் தான் இருக்கிறேன் என்ற எண்ணமே மனதை வருடியது!!!!

"நீ சரின்னு சொல்லு!இப்போவே இந்த ராஜகுமாரன் உன்னை தூக்கிட்டு போயிடுவான்!"-என்றான் உவகையோடு!!!

அதற்கு பதில் கூறாமல், நாணம் கலந்த சிரிப்பை அவன் மீது வீசிவிட்டு நகர பார்த்தாள் வெண்ணிலா.

அவனது கரம் அவளை செல்ல விடாமல் தடுத்தது.

திரும்பி,"என்ன?"என்றாள்.

"ஒண்ணுமில்லை நீ போ!"-அவன் கையை விடுத்தான்.

ஆனால்,எதற்கோ அவன் தவிப்பது புரிந்தது அவளுக்கு!!

அவள் மெல்ல நிமிர்ந்து,அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

அவன் அவளையே கூர்ந்துப் பார்த்தான்.பின்,

"சீக்கிரமா இங்கிருந்து போயிடுடி! இல்லை....நான் எதாவது செய்துவிட போறேன்!நான் ரொம்ப நேரம் கன்ட்ரோலா இருக்க மாட்டேன்!"

"ச்சீ...புத்தி போகுதுப் பார்!"-என்றுக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

மனம் ஏதோ இலேசானது ரஞ்சித்திற்கு!!!

தன் வாழ்நாளில் இப்படி ஒரு கன்னிகைக்காக தானே தவம் கிடந்தான்.

என்னை புரிந்து,எனக்கென வாழும் இவளை எப்படி இவ்வளவு நாள் தொலைத்தேன்?

வாழ்வில் ஒவ்வொரு ஆண்மகனும் கர்வப்படும் பொழுது ஒன்று வரும்,அது...

தனக்கென சரிபாதியாய் வரப்போகிறவள்.

தன்னை முழுவதும் புரிந்தவள்,தன் குடும்பத்திற்கு ஏற்றவள்.

தன் கோப தாபத்தை ஏற்பவள்,தன் வாழ்வின் இறுதி நொடிவரை தன் கரத்தோடு,அவள் கரத்தைப் பிணைத்தவள் என்றால் அவனைப் போல பாக்கியம் செய்தவன் இவ்வுலகில் இல்லை.

அன்று மாலை சென்னைக்கு கிளம்பும் முன் வெண்ணிலா ப்ரியாவை காண விரும்பி,வீட்டிற்கு சென்றாள்.

"அக்கா!"

"எங்கே வந்த நிலா?"-சஞ்சனா.

"இல்லை ஊருக்குப் போறேன்.உங்களைப் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்கா!"

"நாங்க உயிரோடு தான் இருக்கோம்.நீ    கவலைப்படாதே!"

"அக்கா?ஏன் இப்படி பேசுறீங்க?"

"ச்சீ...அப்படி கூப்பிடாதே!"

"................"-ப்ரியா அவள் பேசுவதைக் கேட்டு அமைதியாக நின்றாள்.

"ப்ரியா உன் கூட எத்தனை வருஷம் பழகி இருப்பா??

எவ்வளவு பாசம் வைத்திருப்பாள்??

இன்னொருத்தன் மேல இருந்த விருப்பதால் எப்படி தான் அவளை விட மனசு வந்ததோ??

அப்படி என்ன தான் இருக்கோ அவனிடம்?"

"அக்கா?"-மனம் உடைந்துப் போனாள் வெண்ணிலா.

இருதயம் சுக்கலாய் உடைந்தது.

அருவருத்துப் போனது அவளுக்கு!!

"பத்தினி மாதிரி வேஷம் போடாதே!!!இத்தனை நாளா ஹாஸ்பிட்டல்ல அவன் கூட தானே இருந்த?நீ நீயா தான் வந்தியா?"

"அக்கா போதும் ப்ளீஸ்..."

"..............."

"இந்த வார்த்தையை விடுறதுக்கு நீங்க என்னை கொன்னு இருக்கலாம்!

நினைத்துப் பார்க்கவே...

ப்ரியாக்கா நீங்க கூட என்னை..."

"பேசாதே நிலா! உன்னை மாதிரி நம்பிக்கை துரோகியை நான் பார்த்ததில்லை!"-செத்துவிட்டாள் நிலா.

"நம்பிக்கை துரோகியா?நானா?நான்...நம்பிக்கை துரோகி?"-மனம் கனத்துப் போனது நிலாவிற்கு!!!

சிந்திய கண்ணீரைத் துடைத்தப்படி வெளியே வந்தாள்.

எதிரே,இரு கரங்களையும் கட்டியப்படி ரஞ்சித் நின்றிருந்தான்.அவர்கள் பேசுவதை கேட்டுவிட்டு தான் நிற்கின்றான்.அவன் தானே அவளை அழைத்து வந்தான்.

"போகலாம் ரஞ்சித்!"-என்றாள் தலைக்குனிந்தப்படி,

"இரு...நீ பேசிவிட்டாய்! நான் பேசிவிட்டு வரேன்!"

"ரஞ்சித்!"-அவன் கேட்காமல் உள்ளே சென்றான்.

"ஹலோ சஞ்சனா மேடம்...ஒரு நிமிஷம்!"-அவனது,திடீர் வருகையால் குழம்பினர் இருவரும்.

"ஒண்ணுமில்லை...உங்ககிட்ட ஒரு தேங்க்ஸ்,ஒரு ஸாரி சொல்ல வந்தேன்!"

"எதுக்கு?"

"நிலா மாதிரி நல்ல பொண்ணை கிடைக்க வைத்தத்தற்கு நன்றி!!!

இப்போ,நான் பதில் சொல்ல போறதுக்காக ஸாரி!"

"............"

"எப்படி?எப்படி?ரஞ்சித்கிட்ட அப்படி என்ன இருக்கோன்னு கேட்டீங்க சரியா?

பெண்ணா பிறந்தவள் எவளும் இந்தக் கேள்வியை இன்னொருத்திக்கிட்ட கேட்க மாட்டா!

அப்பறம்...அவ அவளாக இல்லை தான்.இது வரைக்கும் வெண்ணிலா மகேந்திரன்.இனி, வெண்ணிலா ரஞ்சித் புரிந்ததா?

அவளுக்கு நம்பிக்கை துரோகின்னு பட்டம்னா... உங்களுக்கு என்ன பட்டம் தரலாம்??

கடைசியா...

ஊர்ல,உலகத்துல எவன் உனக்கு கணவனா மாட்டினாலும் சீக்கிரமே கண்டிப்பா ஓடிவிடுவான்.

இது,சாபம் இல்லை சத்தியமான உண்மை!"

"அப்பறம் இதை விட கேவலமா எனக்கும் பேச வரும் மேடம்...பாவம்...என் செல்லத்துக்கு அதுப் பிடிக்காது! அதான்... அமைதியாக போறேன்!

உங்களை அவக்கிட்ட மன்னிப்பு கேட்க வைக்கலாம்.

ஆனால்,அது கங்கை நதிக்கு தான் பாவம்!ஐ ஹோப் யு ஆர் அண்டர்ஸ்டாண்ட்!"-என்று கூறிவிட்டு திரும்பி பார்க்காமல் நடந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.