(Reading time: 13 - 26 minutes)

காலில் பயங்கர வலி.

அவனது,செய்கையை நிலா ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனது கால் ஒரு சமயத்தில் இடறியது.

"ரஞ்சு!பார்த்து!"-பதறியடி வந்து தாங்கினாள்.

"என்ன ரஞ்சு நீ?இப்ப என்ன அவசரம் நடக்கறதுக்கு?காலைக் காட்டு!"-அவனை அமர வைத்தாள்.

மேசையில் மோதியதால், கால் சுண்டு விரலில் சிறிது இரத்தம் வெளிவந்தது.

"ரத்தம்! போதுமா?காட்டு!"-வழிந்த இரத்தத்தை பஞ்சில் துடைத்து,மருந்திட்டாள்.

அவன்,அவ்வளவு நேரமும் அவளையே பார்த்தப்படி இருந்தான்.

"இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்! அப்பறம் நடக்கலாம்!"-அன்பான, கண்டிப்போடு கூறினாள் அவள்.

அவனிடம் பதில் இல்லை.அவனைப் பார்த்தப் போது தான் அவளுக்கு நினைவு வந்தது.

அவள் அவனிடம்,

அவனாய் விருப்பப்பட்டு பேச வேண்டும் என்றால் ஒழிய,அவள் பேச மாட்டாள் என்றாள்.

ஆனால்,பேச மட்டுமல்ல பதறி விட்டாள்.

இது தான் காதலா????

"ஸாரி...நான்!"-என்று விலகி செல்ல முயன்றவளை வலுவான அவனது கரம் தடுத்தது.

திடுக்கிட்டு திரும்பியவளை மென்மையாக தன் எதிரே அமர வைத்தான் ரஞ்சித்.

அவன் அவள் முகத்தைப் பார்க்கவில்லை.

வேறு எங்கோ வெறித்தப்படி,

"இப்போ மட்டும் எங்கிருந்து இவ்வளவு பாசம்?"-அவன்,

பேசி விட்டான் என்று ஆனந்தம் கொள்வதா??

அல்லது...இப்படி ஒரு கேள்வி கேட்டானே என்று

அழுவதா??

தலை குனிந்தாள் வெண்ணிலா.

"என்ன பண்றது?எனக்கு மனசுல இருக்கிற வலியை தான் புரிஞ்சிக்க முடியாது!

உடல்ல இருக்கிற வலியை புரிஞ்சிக்க முடியும்! நான் ஒரு டாக்டர் இல்லையா?"-என்றாள் கசப்பான புன்னகையை விடுத்தப்படி,

ரஞ்சித் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

"ரெஸ்ட் எடு! நான் காலையில வரேன்!கார்த்திக் வெளியே தான் இருப்பார்."-என்று கூறிவிட்டு கிளம்பினாள்.

அவள்,செல்வதையே வெறித்துப் பார்த்தப்படி இருந்தான் ரஞ்சித்.

இரவெல்லாம் உறக்கம் வரவில்லை.

அவள் பேசிய வார்த்தைகள் செவிகளில் ஒலித்தது.

கஷ்டப்படுத்தி விட்டோமோ??

கண்கள் கலங்கியதே அவளுக்கு??

தவறிழைத்து விட்டானே!!!

மனம் வருந்தினான் அவன்.

இரவு வெகு நேரம் விழித்திருந்தான்.

மணி 2 என்றது..

தன் கைப்பேசியை எடுத்தான்.

நிலாவிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.

வெண்ணிலாவிற்கு அழைப்பு விடுத்தான்.

அவள்,அப்போது தான் உறங்கி இருந்தாள்.

"ஹலோ!"என்றாள்.சிறு குழந்தையை போல ஒலித்த அந்த குரலில் சொக்கி தான் போனான் ரஞ்சித்.

"ரஞ்சித் பேசுறேன்!"

"ரஞ்சித்??என்னாச்சு ரஞ்சித்?என்ன இந்த நேரத்தில்?"-உறக்கம் கலைந்தது அவளுக்கு.

"ஒண்ணுமில்லை அது..."

"என்ன?"

"ஐ லவ் யூ சொல்லணும்னு தோணுச்சு!யார்கிட்ட சொல்றதுன்னு தெரியலை.அதான்...

உன்கிட்ட சொல்லலாம்னு போன் பண்ணேன்!"-என்றான்.சுத்தம்...

மீதம் இருந்த உறக்கமும் கலைந்துப் போனது அவளுக்கு!!!

அவன் மன்னிப்பு கேட்கவில்லை.

ஆனால்,மன்னிப்பு கேட்டுவிட்டான் தன் காதலால்!!!

"சொல்லலாமா?"

".................."-மௌனமே சம்மதமாய் பதில் வந்தது.

"ஐ லவ் யூ!"-என்றான்.

அவளிடமிருந்து இரு கண்ணீர்த்துளிகள் சிந்தின.

"அழ வேண்டாம்! எனக்கு அழுதாப் பிடிக்காது!"-எப்படி தெரிந்தது அவனுக்கு?

"எனக்கு தெரியும் தான்!"-பதில் வந்தது      அவனிடமிருந்து!!!

அவள் மனதை படிப்பவன்.இல்லை...

வடிப்பவன் போல பதில் கூறினான் ரஞ்சு.

இப்போது கூறுங்கள்...

பெண்களின் மனதை படிக்க முடியும் தானே???

"எதாவது சொல்லணுமா?"-ரஞ்சித்.

"இ...இல்லை!"

"நல்லா தூங்கு!"-என்று இணைப்பைத் துண்டித்தான் ரஞ்சித்.

இப்போது அவன் நிம்மதியாக உறங்கினான்.

அவள்,உறக்கம் கெட்டது.

கெடுத்துவிட்டான் நம் கதாநாயகன்.

ஒரு வாரத்தில் ரஞ்சித் குணமாகி வீட்டிற்கு வந்துவிட்டான்.

நிலா அடிக்கடி வந்து அவனைப் பார்த்துவிட்டு சென்றாள்.

அவர்கள் இருவருக்கும் இடையே காதலானது, ஆழமாக வளர்ந்து இருந்தது.

ஆனாலும்,முன்பு போல இல்லாமல் ரஞ்சித் அவளிடம் சிறிது இடைவேளை விட்டிருந்தான்.

"நான் கொஞ்ச நாளைக்கு இங்கே வர மாட்டேன் ரஞ்சித்!"

"ஏன்?"

"சென்னைக்கு போறேன்"

"எதுக்கு?"

"அப்பாவை பார்க்க!"

"அவரை வேணும்னா இங்கே வர சொல்ல வேண்டியது தானே!"

"சொல்லலாம் ஆனா.."

"சரி...எப்போ வருவ?"

"10 நாள் ஆகும்!"-அவன் முகம் வாடியது.

"முடிந்த அளவிற்கு சீக்கிரமா வந்துவிடுகிறேன்!"

"எப்போ கிளம்புற?"

"நாளைக்கு!"

"ம்..."

"மாத்திரை எல்லாம் சாப்பிட்டியா?"

"ம்..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.