(Reading time: 25 - 49 minutes)

" ஹான் .. அஆங் ... சொல்லுங்கண்ணா "

" தூங்கமா என்னடா யோசிச்சுகிட்டு இருக்க ?"

" இல்ல ஒண்ணுமில்லை "

" ம்ம்ம் சரி நம்பிட்டேன் "

" அண்ணா "

" ம்ம் சொல்லுடா "

" இன்னைக்கு நடந்ததை பத்திதான் யோசிக்கிறேன் .. அந்த பொண்ணு என்கிட்ட ஒன்னு சொன்னா !"

" எந்த பொண்ணு டா "

" அதான் அவ பேரு என்ன ?....ஹ்ம்ம்.... ஹான் ....சாஹித்யா "  என்று ரொம்ப நேரம் யோசித்து கூறுவது போல  கூறினான் அவன் ..

" ஓஹோ இன்னைக்குத்தான் பார்த்தோம் அதுக்குள்ள   மறந்துடியா டா தம்பி " என்றான் சுபாஷ் கண்களில் சிரிப்புடன். தன் தமையனின் ஆராயும் பார்வையை தவிர்த்தான் சந்தோஷ் ..

" அண்ணா சொல்றதை முதலில் கேளுங்க "

" ம்ம் சரி சரி சொல்லு டா "

" சத்யா சொன்னா. அந்த கொலைகாரன் அவளை குத்த வரலையாம் ..அண்ணியை  டார்கெட்  பண்ணி இருக்கான் .. அதை கவனிச்சு இவ தடுக்குறேன் கத்தி முனையை பிடிச்சுட்டா .. "

" ம்ம் சரி  அப்பறம் ?"

" என்னன்னா இவ்ளோ அசால்ட்டா இருக்கீங்க ? அதை கேட்டதில் இருந்தே எனக்கு ஒரே குழப்பம் .. அண்ணிக்கு  யாரு எதிரி இருக்காங்க "

" அண்ணிக்கு  இல்லாமல் இருக்கலாம் .. ஆனா உன்  புருஷனுக்கு இருக்கலாமே "

" அண்ணா ????"

" அவன் யாரு ? எதுக்காக இதை பண்ணினான் எல்லாமே தெரியும் சந்தோஷ் " என்றவன் நடந்தது அனைத்தையும் அவனிடம் சொன்னான் .

" எனக்கும் நீங்க எடுத்த முடிவு சரின்னு படுது  அண்ணா "

" ம்ம்ம் ... இப்போ  தூங்கு டா "

" அண்ணா "

" சொல்லு சந்தோஷ் "

" நான் வேணும்னா ஆபீஸ் பொறுப்பை ஏற்றுக்கவா  ? உங்களுக்கு ஈசி ஆ இருக்கும் ல "

" டேய் ... உனக்கு எதில் ஆர்வம் இருக்கோ அதை நீ சரியா செய்துகிட்டு இருக்க, ப்ளீஸ் அதை சொதப்ப வேணாம் .. உனக்கு ஒரே இடத்தில் உட்கார்ந்து ஆபீஸ் லே வேலை பார்க்குறது ஒத்து வராது.. "

"..."

" உன்னால முடியாதுன்னு சொல்ல வரல .. ஆனா உனக்கு அது சந்தோஷத்தை கொடுக்காது .. உனக்கு பேரை சந்தோஷ்ன்னு  வெச்சுட்டு சந்தோஷமே இல்லாத வேலையை செய்ய விடுவோமா ?"  என்று நிதானமாய் உரைத்தான்  சுபாஷ் ..

"  ஹீ ஹீ .. நானும் சும்மாதான் டைலாக் விட்டேன் அண்ணா " என்று கண்ணடித்தான் சந்தோஷ் ,,

" போக்கிரி ... போடா ... போ .... போயி தூங்கு ...போ " என்று ஜெயம் படத்தில் வர்ற சதா மாதிரி செய்கை காட்டி சிரிக்க வைத்தான்  சுபாஷ் .. (  அப்படி நம்ம ஹீரோ சார் என்ன பண்ணுறாருன்னு  தெரியனுமா ? அடுத்த எபிசொட் படிக்க மறக்காமல் வந்துடுங்க )

அதே இரவில், நீண்ட நாட்களுக்கு பிறகு தனது மடிகணினியில் " கூகள் கெலண்டெர் (google calendar) " ஐ திறந்தான் கிரிதரன். கவிமதுராவை பார்த்த முதல் நாளில் இருந்து அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்திருந்த இறுதி நாள்வரை இருவரும் இணைந்து தங்களது நினைவுகளை அங்கு பதிவு செய்து வைத்திருந்தனர். இதை அவனும் அவளும் மட்டும் படிக்க முடிந்தபடி அமைத்து இருந்தான் கிரிதரன்... அவர்கள் இணைந்து எழுதி வைத்திருந்த காதல் நினைவுகளை நாமும் கொஞ்சம் வாசித்து பார்ப்போமா ?

9 ஜூன் 2012

" ப்பா இப்போ என் கல்யாணத்துக்கு என்ன அவசரம் ?" என்று இருபதாவது முறை கேட்டிருந்தாள்  கவிமதுரா.. கவிமதுரா, வித்யா-விமலன் தம்பதியரின் ஒரே செல்ல மகள். ஜர்னலிசம் படித்துவிட்டு பிரபல பத்திரிக்கை நிறுவனத்தில் சமூக சீர்குலைவுகளை தொகுத்து செய்தியை தரும் தைரியமான பெண்.. அடிக்கடி ஏதாவது  ஒரு பிரச்சனையை அழையா விருந்தாளியாய் அழைத்து கொண்டு வருவாள். இவளுக்கு எப்படியாவது கால் கட்டு போட்டுவிட வேண்டும்  என்பதுதான் அவர்களின் ஒரே கவலை.

அதனாலேயே அவளிடம் எதுவும் சொல்லாமல்  கிரிதரனின்  குடும்பத்தினரை இன்று பெண் பார்க்க வரும்படி ஏற்பாடு செய்து வைத்திருந்தனர். சரியாய் அவர்கள் வருவதற்கு முதல் நாள்  அவளிடம் உண்மையை எடுத்துரைக்க, அவளது ருத்ர தாண்டவத்தை கட்டுபடுத்த வெகுநேரம் ஆனது .. "  தோழியை பார்க்க சென்று வருகிறேன் " என்றவள் திரும்பி வந்ததுமே திருமணத்திற்கு சம்மதம் என்றாள்  ... " எப்படி இவள் சரி சொன்னாள்  ?" என்று பெற்றோர் மண்டையை குடைந்து கொண்டிருந்த நேரம் , காலையில் மீண்டும் பழைய புராணத்தையே ஆரம்பித்தாள் ..

தாங்கள் என்ன சொன்னாலும் அவள் கேட்க போவதில்லை என்று அறிந்திருந்தலால், வித்யாவும் விமலனும் அமைதியாகவே இருந்தனர்.. "வரட்டும் நீங்க சொன்ன மாப்பிளை .. அவனை ஓட ஓட விரட்டுறேன் " என்று மனதிற்குள் சூளுரைத்தாள். இங்கு அவள் இருக்கும் மனநிலைக்கு எதிர்மாறாய் உல்லாசமாய் இருந்தான் கிரிதரன் .. நேற்று வரை அவனும் திருமண பேச்சை தவிர்த்தவன் தான்.. ஆனால் இன்றோ புன்னகை நிறைந்த முகத்துடன் காரோட்டி கொண்டிருந்தான் .. தனது மகனின் முகத்தையே அடிக்கடி கேள்வியாய்  பார்த்தார் கண்ணபிரான் ...

கண்ணன் - மீரா இருவருக்குமே கவிமதுராவின் புகைப்படத்தை பார்த்ததுமே பிடித்துப் போனது.  என்னதான்  தரகர் மூலம் அவர்களை பற்றி அறிந்திருந்தாலும், இரு குடும்பத்தாருமே தங்களுக்கு தெரிந்த நண்பர்களிடம் விசாரித்த பிறகுதான் இந்த பெண் பார்க்கும் படலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்..இரண்டு நாட்கள் முன்பு கூட

" பாருடா எவ்ளோ அழகா இருக்கா பொண்ணு ?" என்று மீராவதி கேட்டப்போது "அழகா இருந்தா உடனே கல்யாணம் பண்ணிக்கனுமா அம்மா ? அப்படின்னா நான் முதலில் ஐஸ்வர்யா ராயை தான் கல்யாணம் பண்ணிக்கணும் " என்றான் கேலியாய். அவனுக்கு இதில் நாட்டம் இல்லையே என்று வருந்தினார் மீரா ..  ஆனால் இன்றோ அதற்கு எதிர்மாறாய் இருந்தான் கிரிதரன்..

" என்னப்பா  ? அடிக்கடி என்னை பார்த்துகிட்டே இருக்குற மாதிரி இருக்கு ? ஏதாச்சும் கேட்கணுமா ? "

" இல்ல ஒண்ணுமில்ல பா "

" அம்மா , பாருங்கம்மா அப்பா ஏதோ சொல்ல வந்து மறைக்கிறார் .. நீங்கதான் அப்பாவின் மனம் அறிந்து நடக்குற ஆளாச்சே .. அவர் என்ன நினைக்கிரார்ன்னு சொல்லுங்களேன் "

" ..."

" அட நீங்களும் ஏன் மா என்னை இப்படி பார்க்கறிங்க ? "

“நீதானே கிரி உனக்கு இது பிடிக்கலன்னு சொன்ன ?”

“ ஹஹஹா சொன்னேன் தான் ..பட் நீங்க கேட்கலையே ...எப்படியோ நீங்க நெனைச்சது தானே நடக்குது அப்பறம் ஏன் இந்த குழப்பம் ?"

" அப்படி இல்லை கிரி .. இது உன் லைப் ... உன்னை வற்புறுத்தி  நாங்க எதுவும் செய்யுறதா இல்லை கண்ணா "

" அது எனக்கும் தெரியும் அம்மா ..இதை நீங்க சொல்லித்தான் நான் புரிஞ்சுகனுமா என்ன ?? ...இன்னைக்கு நாம ரெண்டு பேரு நினைக்கிறதும் நடக்க போகுது பாருங்க "என்றான் கிரிதரன் இலகுவாய்

" என்னடா ஒரே நாளில் அப்படி பெருசா என்னடா நடந்திச்சு?" என்றார் கண்ணன் கேலியாய்

"  ஹா ஹா வானத்துல இருந்து இறங்கி வந்து ஒரு தேவதை வரம் தந்துடுச்சு " என்றான் கிரிதரன் உல்லாசமாய்.

" தேவதையா என்னடா லவ் ஆ ?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.