(Reading time: 27 - 53 minutes)

ம்மா அப்பாக்கு கல்யாணத்துக்கு முன்னால பேசிக்கிறது பிடிக்காது....தேவையில்லாத குழப்பம் வரும்னு சொல்லுவாங்க...இல்ல நான் பேசுவேன்னு சொல்லிருந்தாலும் ஒன்னும் சொல்லி இருக்க மாட்டாங்க...பட் செய்யலை....உண்மைய சொல்லனும்னா மனசு முழுக்க ஃபாக்ட்ரில...எதையும் கண்டுக்க முடியலை...

அடுத்து அன்னைக்கு உன்னை பார்க்க வந்த அந்த நேரம்....என்னமோ இதுதான் உனக்கானவன்னு ஒரு இன்னர் வாய்ஸ்...இன்ஸ்டிங்க்ட் இஃஸ் ஃப்ரெம் த லார்டுனு சொல்லுவாங்க..... என்னமோ என் மொத்த எதிர்காலமும் நீ தான்னு ஒரு உணர்வு...அடுத்து உன்னை இழக்க எனக்கு பெலம்  இல்ல.....

அப்பதான் இது மாதிரி எதுவுமே அதுவரை எனக்கு ஏற்பாடு செய்திருந்த போண்ணு மேல தோணவே இல்லங்கிறதும் புரிஞ்சிது...

.அதே நேரம் உனக்கு பிடிக்கலைனாலும் உன் அம்மா அப்பாட்ட உன்னால நோ சொல்ல முடியாதுன்னு நீ புலம்பிகிட்டு இருந்த...உன்னவிட உனக்கு உன் ஃபாமிலி முக்கியம்...

“பிடிகலைனா சொல்லதான் செய்யனும்...சொல்லாம இருக்கிறத நான் நியாய படுத்த மாட்டேன்...பட்.. அந்த நேர சான்ஸ மிஸ் செய்துட்டா, நீ உன் அக்காவ மீட் பண்ணிட்டாலே உன்னை நான் கல்யாணம் பண்றது கனவுலதான் நடக்கும்னு புரிஞ்சுது...அதான் ...அப்பவே செய்தாச்சு....சாரிடா....உன் இஷ்டம் இல்லாம நடந்த கல்யாணம் தான்...பட்...காதலில்லாம நடக்கலை....அதோட....”

“அப்ப நீங்க என் கால பத்தி யோசிக்கவே இல்லயா...?” அவன் சொன்ன அந்த நேரத்தில் இவள் தன் காலை குறித்து புலம்பிய ஞாபகம் நன்றாக இருக்கிறது வேரிக்கு...

 “கல்யாணத்துல உனக்கு இஷ்டம் இல்லாததற்கு காரணம் உன் கால் பத்தின உன் எண்ணம் ..என்னை புரிஞ்சிகிறப்ப அந்த குழப்பம் உனக்கு சரியாகிடும்ங்கிற அளவுக்கு அதை பத்தி யோசித்தேன்தான்...மத்தபடி இப்ப எனக்கு எதாவது ஆகிட்டுன்னு வையேன்...”

சட்டென அவன் வாயில் ஒரு அடி வைத்தாள் வேரி “ இதென்ன பேச்சு ..ஒழுங்கா பேசுங்க” என்றபடி.

“ஷ்...ஆ...” என முகம் சுழித்தவன்

“ஏடி...நியாயபடி....இந்த சிட்டுவேஷன்ல.....ஐயோ...ஏங்க இப்டிலாம் பேசுறீங்கன்னு, நீ சோக பாவத்தோட என் வாய மூடி இருக்கனும்...நான் ஒரு ரோமாண்டிக் லுக்கோட மெல்ல உன் கைய விலக்கிட்டு பேசுறதை கன்டின்யூ செய்திருக்கனும்....இங்க என்னன்னா எடுத்தவுடனே அடி விழுது....” மெல்ல தன் உதடுகளை தேய்த்துக்கொண்டான்.

“ம்...அது நேத்துவரைக்கும் உள்ள கதை....இனிமே இது இப்படித்தான்...சொல்ல வந்தத ஒழுங்கா சொல்லுங்க...” இப்பொழுது அவள் அடித்த இடத்தை அவளே தேய்த்துவிட்டாள். உலகில் யாருடனும் தோன்ற முடியாத மன இணைவு எப்படி திருமணத்தில் உண்டாகிவிடுகிறது? அவன் அடுத்த உயிராகவே தோன்றவில்லை, அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

அவள் கையை மெல்ல நீக்கினான் “.சொல்ல வந்ததை சொல்லி முடிச்சுறேன்... அப்புறமா அடிக்கிற கைதான் அணைகும்னு ஃப்ரூஃப் பண்ணு....” என்றவன்

“இப்ப எனக்கு எதாவது ஆயிட்டுன்னா..அப்ப உனக்கு என்னை பிடிக்காம போயிடுமா...? ... அன்னைக்கு மனசுல இதுதான் உன் வைஃப்னு தோணின பிறகு...உன் ப்ரச்சனைகள பத்தி வேற எப்டி யோசிக்க தோணும்னு நீயே சொல்லு....” அவன் சொல்ல அடித்த கை அணைத்தது.

ங்கு ஏதென்ஸில் அன்று இரவு....

“ அவன் வர்றான்....வர்றான்......நீ ஓடு.... ஓடூஊ.ஊ....அப்டிதான்.....ஹ ஹ ஹா....ஆங்...அத எடு....அப்டித்தான்.......ஜோரா நாலு போடு...சே ஜஸ்ட் மிஸ்...பிரவாயில்ல..ட்ரை அகெய்ன்..”..

இரண்டு உள்ளங் கைகளையும் மறைத்து பெரிதாக பேண்டேஜ் போடபட்டிருக்க.... அவளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த குவாட்டர்ஸின் வரவேற்பு அறையின் சோஃபாவில் அமர்ந்து துள்ளியபடி தொலைகாட்சியில் ஓடிய டாமுக்கு  ஜெர்ரிரிக்கு எதிராக சப்போர்ட் செய்துகொண்டிருந்தாள் மிர்னா.  

அப்பொழுது அங்கு வந்த வியன் அவளுக்கான இரவு உணவை ஊட்டுவதற்கு ஏதுவாக தயார் செய்ய தொடங்கினான். “அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டுகிடுவேன் வியன்....சொன்னா கேளுங்க....மிஹிருக்கும் கையில கட்டுதான.. அவர் சாப்பிடலையா....?”

“அவரை பார்த்துக்க அவரோட ஆள் வந்தாச்சே.....”

ஆச்சரியமாய் பார்த்தாள் மிர்னா....

“மின்னிக்கு எக்ஸாம்......இங்க மீட் ஆரம்பிச்ச பிறகுதான் வருவான்னு மிஹிர் சொன்னாங்களே...”

“இந்த ஆக்சிடென்ட் நியூஸ் கேட்டதும் மின்மினி அவங்க அப்பாவ கூட்டிட்டு இன்னைக்கே வந்துட்டாங்க...”

“அப்ப எக்ஸாம்..?”. எனக்காக எத்தனை பேர் எதையெல்லாம் சக்ரிஃபைஸ் பண்ண வேண்டி இருக்குது....? “ குற்றமனப்பான்மையோடு கேட்டாள் மிர்னா.

“எந்த ஒரு அச்சீவ்மென்டும் டீம் வொர்க்தான் மிர்னு...அதோட எல்லோரும் அடுத்தவங்க நல்லதுக்காகன்னு செய்றதும் இல்ல...தனக்காக செய்றதுதான்.... மிஹிர்க்கு அஸ் அ கோச் சா ஜெயிக்கனும்னு ஆசை... இது அவர் ஃப்ரஃபஷன்..... மின்மினிக்கு மிஹிர் நல்லா இருக்கனும்னு ஆசை, .........”

“அப்படினா உங்களுக்கு....?” விழி உயர்த்தி அருகில் நின்றவனை யாசக பார்வை பார்த்தாள். இப்பவாவது ஐ லவ் யூ ன்னு சொல்லேண்டா....

அவளருகில் நின்றிருந்தவன் அவள் முகம் நோக்கி குனிந்து தன் கண்களால் அவள் கண்களை ஊடுருவினான்.

பெண் நெஞ்சோடு அவன் வாசமாய்....

மொத்த இவளும் அவன் வசமாய்

காற்றாகி கரைந்து அவனுக்குள் சுவாசமாய்

கண்மூடி அவன் உயிர் ஆழியில் ப்ரவேசமாய்

உருவமற்ற ஓர் அலையாய் அவனுள் இவள் ப்ராவகமாய்...

“இதுவும் அப்படிதான்....ஐ’ம் அ வெரி செல்ஃபிஷ் மேன் யூ நோ.....” அவன் சொல்ல வந்ததை சொல்லி முடிக்கவில்லை அதற்குள்

“ம்கும்...”தங்கள் வருகையை இங்கிதத்தோடு அறிவித்தபடி மிஹிரும் அவனை தொடர்ந்து மின்மினியும் வந்தனர்.. மின்மினி மிஹிரின் ஃபியான்சே...

“சீக்கிரமா வந்து இவட்ட இருந்து காப்பாத்துங்கன்னு சொன்னேன்...ரொம்ப லேட் பண்ணிட்டீங்க பாஸ்...” மிஹிர் தொடங்க அடுத்து பெண்கள் ஒரு குழுவாக ஆண்கள் எதிரணியாக ஒரே ஜாலி கேலிதான்.

ரவில் தூங்கிக்கொண்டிருந்த மிர்னா கைவலி காரணமாக விழிப்புற்றாள். பெயின் கில்லர் எஃப்ஃபெக்ட் முடிந்துவிட்டது போலும். வலி அதிகமாக இருந்ததால் மீண்டும் தூங்க முடியும் என தோன்றவில்லை அவளுக்கு. அடுத்த படுக்கையில் அம்மச்சி ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

மிர்னாவிற்காக ஒதுக்கப்பட்டிருந்தது அந்த இரண்டு படுக்கை அறை கொண்ட அப்பார்ட்மென்ட். அதன் ஒரு அறையை மிஹிரும் வியனும் பகிர்ந்து கொள்ள, அடுத்த அறை இவளுக்கும் அம்மச்சிக்கும். இடையில் வரவேற்பறை.

அங்கிருந்து தொலைகாட்சி பார்க்கலாம் என இவள் தன் அறை கதவை திறந்தால் இவள் அறை வாசலில் பச்சை நிற குல்ட் விரித்து அதில் தூங்கிக் கொண்டிருந்தான் வியன்.

அந்நொடி அவளுக்கு தோன்றிய உணர்ச்சிக் கலவைக்கு பெயரில்லை.

ஆக நடந்ததை கொலை முயற்சி என வியனும் நம்புகிறான்....

எத்தனை வசதிக்கு பழக்கப் பட்டவன்....இளவரசன்...இவளுக்காக தரை மீது... மெத்தை கூட இல்லாமல் வெறும் துணி மீது...

றுநாள் நடந்த முதல் சுற்றில் மிர்னாவை எடுத்த உடன் உலக சாதனை எதற்கும் முயற்சி செய்ய அனுமதிக்கவில்லை மிஹிர். மேலும் உலக தரவரிசையில் முன்னனியில் இருப்பவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததால் போட்டியும் நெக் டு நெக். ஆனால் மிஹிரின் திட்டத்தை பின்பற்றிய மிர்னா முதலில் இருந்து அந்த சுற்றின் இறுதிவரை முதலிடத்தில் இருந்தாள்.

முதலிடத்தோடு அவள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற பிறகே, மிர்னாவை அனுமதி பெற்று அடுத்த வேர்ல்ட் ரெக்கார்ட் உயரத்தை முயற்சி செய்ய சொன்னான் மிஹிர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.