(Reading time: 27 - 53 minutes)

வர் பில்டப் உடம்புக்கு ஆகாது மிர்...நீ பாடி மலை ஆடிச்சுன்னு சீன் போடுறதுக்கு வேற ஆள பாரு...இங்க உனக்கு பாட முடியலை. பயத்துல வாய் தந்தியடிக்குதுன்னு  உண்மைய ஒத்துக்கோ.....” மிஹிர் எப்பொழுதும் போல்  அவளை சீண்டினான்.

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்....டின் டின் டின்

பாவை உன்னை ஓட ஓட துரத்த வந்தேன்... டின் டின் டின்

பாட தொடங்கினாள் மிர்னா.

சட்டென இறுகியது அவள் பிடித்து இறங்கிக் கொண்டிருந்த கயிறு. நொடி நேரத்திற்குள் விஷயம் புரிந்துவிட்டது மிர்னாவிற்கு. அவளது கயிறு அறுந்து கொண்டிருக்கிறது.

70மீட்டர் உயர அந்த மலையில், ஏறத்தாழ பாதியில் இருந்தனர் மிஹிரும் மிர்னாவும். தரையிலிருந்து கிட்டதட்ட பத்தாவது மாடியிலிருப்பதற்கு சமம். கயிறு அறுந்து விழுந்தால் எலும்பும் மொத்த உடம்பும் நிச்சயம் திரும்ப கிடைக்கும்தான். உயிர் மட்டும்தான் ஓடிப்போயிருக்கும்.

நொடி கூட விரயம் செய்யாமல் பாறையில் வலுகொடுத்து மிதித்து,   தன் கயிறை ஊசலாட செய்தாள் மிர்னா. கயிறு இப்பொழுது வலபுறமாக மிஹிரின் கயிறுக்கு மிக அருகில் செல்ல, அவனை விட சற்று முன்னதாக கீழிறங்கிக் கொண்டிருந்தவள், அவனுக்கு கீழாக தொங்கிய அவனது கயிறை பற்றிக்கொண்டு தன் கயிறை விட்டாள்.

திடீரென மிர்னா தன் கயிற்றுக்கு தாவியதைப் பார்த்த மிஹிர் “ஹேய்...”என சொல்லி முடிக்கும் முன் மிர்னாவின் கயிறு மொத்தமாய் அறுந்து தரை நோக்கி விழ ஆரம்பித்தது.

ஹான்...அப்போ  எம்எம் ராக் மியூசிக் கேட்டு ராக் வந்ததுன்னா.... இப்ப ரஅப் மியூசிக் கேட்டு  ரோப் அந்துட்டா...?? நம்ம பாட்டோட மகிமை பலமா இருக்கும்போலயே....

மிர்னா இப்படி நினைத்து பெருமித பார்வை பார்க்க..., மிஹிர் ஏறத்தாழ அலறினான்.

“மிர் வேகமா கீழ இறங்கு...மேல ஏற ட்ரை பண்ணா ரொம்ப டைம் எடுக்கும்....அடுத்து என் ரோப்பை அறுக்கிறதுக்குள்ள முடிஞ்சவரை கீழ போயிடனும்...”

கயிறை அறுக்காங்களா...? யாரு...? எதுக்கு...? நம்பமுடியவில்லை மிர்னாவால். ஆனாலும் மிஹிர் சொன்னதற்காக வேகமாக தரை நோக்கி கயிறை பிடித்தபடி வேக வேகமாக வழுகினாள். அவளைப் பின்பற்றி மிஹிரும்.

சில நிமிடங்களில் தரையை அடைந்தனர் இருவரும். கைதான் நரகமாக வலித்தது. பின்னே அத்தனை முரட்டுகயிறில் கைபிடித்து வழுக்கினால்.....

மிஹிர் எதையும் கண்டு கொள்ளவில்லை. ஓடிச்சென்று இவர்களுக்கு முன்னாக விழுந்துகிடந்த கயிறைத்தான் கையால் தொடாமல் பார்த்தான்.

“கண்டிப்பா யாரோ வெட்டி இருக்காங்க” என்றான்.

ஆனால் கடைசி வரை மிஹிரின் கயிறு அறுந்து விழவில்லை.

“போங்க மிஹிர்...உங்களுக்கே இது ஓவரா தெரியல....நம்மள போய் யாரு ...எதோ ரோப் வீக்கா இருந்திருக்கும் அறுந்துட்டு....” பேசியபடி அந்த கயிறை தொட போனவளைப் பார்த்து அதட்டலாக கத்தினான் மிஹிர்.

“தொடாத மிர்னா..அறிவிருக்கா உனக்கு...? அதுலதான ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் இருக்கும்...இந்த ரோப் அதா அறுந்துபோகாது...” என்றவன்....அவசரமாக தன் மொபைலை எடுத்தான்..

“பாடுனா பாறை வரும்....அக்ரோபோலிஸே ஆடிப்போயிடும்னு....அவ்ளவு சொன்னேன்...இதெல்லம் ஜுஜுபி. மேட்டர்.... நாங்க டெட் சீக்கே குட் நியூஸ் கொடுப்போம்...ரெட் சீய...ரெண்டா பிளப்போம்னு.....சீன் போட்டுட்டு... இப்ப சேம்பிள் டெமோக்கே... அறிவு இருக்கா..? அரை கிலோ என்ன விலைன்னு பேரம் பேசுறாங்க.....நம்மட்டதான் நிறையா இருக்கே...கொஞ்சம் இல்லாதவங்களுக்கு கொடுப்போம்னு நினைச்சாலும் இதெல்லாம் கொடுக்க முடியுற விஷயமா....இது கூட தெரியாத சின்ன பிள்ளையா இருக்காங்களே இந்த மனுஷங்க...” மிர்னா பேசிக்கொண்டு போக

அவசரமாக அலைபேசியில் உதவி வேண்டி வியனை அழைக்க இருந்த மிஹிர் வாய்விட்டு சிரித்தான்... 

“மிர் இந்த விஷயம்தான் எனக்கு உன்மேல எக்கசக்க நம்பிக்கைக்கு காரணம்.....எந்த சிஷுவேஷன்லயும்...டென்ஷனே ஆக மாட்ட...ஒலிம்பிக் ப்ரெஷர பூன்னு ஊதிட்டு போயிடுவ...”

 அவன் மிர்னாவை பாராட்டி முடிப்பதற்குள், மிர்னா வியனுக்கு அழைத்திருந்தாள்.

“நான் தான் ஃபர்ஸ்ட்....நான் தன் ஃபர்ஸ்ட்...எப்பூடி.... ??”

“இப்பவுமா...???” அசந்துபோய் பார்த்தான் மிஹிர்.

அங்கிருந்து பிறர் உதவியின்றி வெளியேற முடியாத இடம் அது.

வியன் தன் வேலை முடிந்து அப்பொழுதுதான் அக்ரோபோலிஸ் வந்திருந்தவன், காவல் துறை உதவியுடன் இவர்களை விரைவாக மீட்டான். உடனடி மருத்துவ உதவி.

மிஹிர் இது கொலை முயற்சி என்ற தன் சந்தேகத்தை தெரிவிக்க, வழக்கு பதிவு செய்தது காவல் துறை.

ன்று வேரிக்கு ஒரு நேரம் மகிழ்ச்சியாகவும் மறு நேரம் இது நிரந்தர தீர்வா என்று தவிப்பாகவும் கழிந்தது. அதனால் கவினுடன் அலுவலகம் சென்றிருந்தாலும் அன்று முழுவதும் வேரி எந்த வேலையிலும் மனம் செலுத்தவில்லை. ஆனால் நேர்மாறாக கவின் படு மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருந்தான்.

இரவு உணவை வழக்கத்தைவிட சற்று முன்னதாக முடித்துவிட்டு,  “ஒரு ஃபங்க்ஷன் போகனும் கொஞ்சம் க்ராண்டா  கிளம்பேன்..” என கவின் சொன்ன போது வேரிக்கு கொஞ்சம் வித்யாசமாக தோன்றினாலும்...போகிற வீட்டில் சாப்பிட வேண்டாம்னு நினைக்கிறான் போலும் என தான் எண்ண முடிந்ததே தவிர,

சின்னதாக ரோஜா வர்ண பார்டருடைய அந்த பாசி பச்சை நிற  லைட் வெயிட் சில்க் சாரி உடுத்தி சிறு நகைகளுடன் அவள் தயாரானதும், அவளை தன் கைகளில் அள்ளிக்கொண்டு மல்லிகையாலும் ரோஜாவாலும் சில செண்பக பூக்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்த தங்கள் வீட்டிலிருந்த அந்த அறைக்குள் கவின் நுழைந்த பின்புதான் அவன் சொல்லிய ஃபங்ஷன் என்னவென புரிந்தது அவளுக்கு.

மாலையில்  வேலை என அவளை அலுவலகத்தில் விட்டுவிட்டு அவன் மட்டுமாக கிளம்பி சென்றது இந்த ஏற்பாட்டுக்குதானா...?

நேற்று படுக்கை அறைக்குள் நுழையும் முன் இருந்த அத்தனை உணர்வும் இப்பொழுதும் வந்து அவளை ஆட்கொண்டாலும் அதை எல்லாம் தாண்டி அவளுக்குள் ஒரு குதுகலம், கொண்டாட்டம், நிறைவு.

அவளை அவன் வாழ்வில் வரவேற்கும் விதம் காரணம்.

அதுவரை வார்த்தையில் இருந்த திருமணம்,  வைபவமாய் அரங்கேற்றம்.

காதல் கடுமழை முடிந்த சாரல் பொழுதில், தன்னவன் தோளில் தலை வைத்து  அவன் மார்பிலாடிய சிறு பொன் சங்கிலியை உருட்டியபடி கேட்டாள் வேரி....

 “கொஞ்ச நாள் போட்டும்னு சொன்னீங்க.....”

“அதான் நம்பிக்கை கூடிகிட்டேதான் இருக்கும்னு சொல்லிட்டீங்களே..........என் கல்யாணம் என் பேரண்ட்ஸ் இஷ்டபடி  அதுக்குபிறகு ஒவ்வொன்னும் என் செல்ல பொண்டாட்டி இஷ்டபடின்னு முதல்லயே முடிவு செய்து வச்சிருந்தேன்... பெரியவங்க நீங்களே பெரிய மனசுபண்னி க்ரீன் சிக்னல் காமிச்ச பிறகு.....செய்றத திருந்த செய்தடுனுமில்லையா..... கல்யாணத்துல தான் உன் இஷ்டம் எதுன்னு பார்த்து செய்ற சூழல் இல்ல...இதுலயாவது இருக்கனுமே...”

“என்னை எதுக்காக கல்யாணம் செய்தீங்க...?” அவள் குரல் குழைந்தது.

“இன்னுமா உனக்கு தெரியலை...?”

“ம்....புரியுது...ஆனாலும் நீங்க சொல்லி கேட்டா அது ஒன்னும் கசக்காது.....”

அவளை தேடி எதற்காக சென்றான், அவள் ஜெபம் இதை குறிப்பிட்ட கவின் தொடர்ந்தான்.

“எனக்கு அம்மா அப்பா மேரேஜ் லைஃபை பாத்துதான் கல்யாணத்துல மேல ஆசை மரியாதை எல்லாமே. அதனால அவங்களே எனக்கான பொண்ணை முடிவு செய்யனும்னு முதல்ல இருந்தே ஒரு எண்ணம். நம்ம ஃப்யூயல் ஃபாக்ட்ரினால ரொம்ப டைட்டான இந்த சிஷுவேஷன்ல அவங்க பொண்ணு பார்த்திருக்கோம்னு சொல்லுவாங்கன்னு நான் எதிர் பார்க்கலை...பட் அதை தடுக்கவும் விருப்பம் இல்ல.......சரின்னு சொல்லிட்டேன்....ஆனா அதை தாண்டி எதையும் யோசிக்க கூட எனக்கு டைம் கிடையாது.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.