(Reading time: 10 - 20 minutes)

"துக்கு மேல ஒரு அடி எடுத்து வைத்தால்???அவ பிணத்தைக் கூட பார்க்க முடியாது!!!!"-பார்வதியை

காப்பாற்ற வந்த யுதீஷ்ட்ரனின் பின்தலையில் இரும்பைக் கொண்டு தாக்கினர்.

அவர் அப்படியே மண்டியிட்டான்.

"நீ இதுக்கு மேல போகணும்னு நினைத்தால்...

இவளை கொன்னுடுவேன்!!!"-பார்வதியின் கழுத்தில் கத்தியை வைத்தான் வினய்.

அவள் பயந்தப்படி பதறினாள்.

சிவா அப்படியே நின்றான்.

இன்னும் 5 நிமிடங்களே உள்ளன.

"அவனை அடித்தே சாகடிங்கடா!"-கட்டையைக் கொண்டு பலமாக தாக்கப்பட்டான்.

நெற்றியில்,வாயில்,கைகளை,கால்களில் இரத்தம் கசிய தாக்கினர்.

இதை ஆத்மாவாக நின்று பார்த்துக் கொண்டிருந்த கல்பனாவாலும் ஏதும் செய்ய முடியவில்லை.

தெய்வீக சக்தி பொருந்திய பொழுது அல்லவா???

"அம்மா!!!!காப்பாற்றும்மா!!!"-அவளால் வேண்ட மட்டுமே முடிந்தது.

"இவனை தூக்கி கல்பனாவை கொன்ன அதே இடத்துல போடுங்கடா!!!"-அவன் ஆணைப்படி நடந்தது.

பார்வதி கதறினாள்.

வினய் அதை பார்த்து பலமாக சிரித்தான்.

இன்னும் ஒரே நிமிடம்.

தாண்டவப்ரியன் கடைசி முடிச்சை அவிழ்த்தார்.

சிவா,மெல்ல கண் விழித்தான்.

அவன் கண் விழித்ததை பார்த்த ஒருவன் அவனை தாக்க வர,அவன் கழுத்தைப் பிடித்து அப்படியே திருப்பி விட்டான் சிவா.

எப்படி பிழைத்தான் இவன்??என்று வினய்யின் முகத்தில் கேள்வி...

சிவா,ஏளன புன்னகையை விடுத்து,கைகளை மேலே தூக்கி  பூமியில் அழுத்தினான்.

ஏற்கனவே வலிமை இழந்த இடம் ஆதலால்,மண்ணை பிளந்து உள்ளே சென்றது அவன் கரம்.

பலம் கொண்டு கையை தூக்க ஒரு கயிறு மேலே வந்தது.

அதை தன் முழு பலத்தையும் பயன்படுத்தி இழுத்தான்.  கயிறு அறுந்தது.

அம்மன் சந்நிதானத்திற்கு குறுக்கே கட்டப்பட்ட இருந்த மெல்லிய கயிறும் தானாக அறுந்தது.

பிரகார கதவுகள் திறந்தன.

விளக்குகள் எரிந்தன.

அம்மனின் ஒளி பொருந்திய முகம் பளீரென தெரிந்தது.

அந்த இடமே ஒரு குலுக்கு குலுக்கியதை போல ஆனது.

"இது தேராது!!!இவளும் ஒழுக்கமில்லாதவ தான் போல!!!வாங்க போகலாம்!!!"-ஈஸ்வரியின் பேச்சில் மனம் உடைந்து அனைவரும் தலை குனிய,

ஒரு சிறுமி (சிவாவிடம் பேசிய அதே சிறுமி) வந்து ஷைரந்தரியை

"அம்மா!"-என்று உலுக்கினாள்.அதுவரை கண்களை மூடியிருந்த அவள்,

உடல் முழுதும் மின்சாரம் பாய்ந்ததைப் போல சிலிர்க்க ஆரம்பித்தாள்.

பஞ்சாக்ஷர திதியின் கடைசி பாகமாக நவ கிரகங்களும் கலையும் முன் விழுந்த ஒளி ஷைரந்தரியின் மீது பட்டது.

அவள் கண்களை வேகமாக திறந்தாள்.

அதில்,கருவிழி இல்லை.

நெருப்புக்கனலாக இருந்தது.அதை பார்த்தவர்கள் மிரட்சியுடன் நின்றனர்.

ஷைரந்தரியின் பார்வை முதலில் ஈஸ்வரி மீதே விழுந்தது.

"அம்மா உங்களை தான் கூப்பிடுறாங்க போங்க!"-பூசாரி எடுத்து விட்டார்.

பயத்தோடு வந்து அவள் எதிரே நின்றார் ஈஸ்வரி.

ஷைரந்தரி ஏதும் பேசவில்லை.

அவர்,கையை நீட்டும்படி சைகை செய்தாள்.

நடுங்கிய கரத்தை நீட்டினார்.

பத்து முத்துக்கள் கோர்த்த மாலையை அவருக்கு தந்தாள்.

கோபமான கண் அவரை எரித்து சாம்பலாக்கிவிடும் போல பார்த்தது.

சிறிது சிறிதாக மயக்க நிலைக்கு சென்றவள் அப்படியே சரிந்தாள்.

மறுநாள் காலை....

சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்தவள்,சூரியன் உதித்து வெகு நேரமாகியும் உறங்கி கொண்டிருந்தாள்.

"குட்டிம்மா!"-சிவாவின் அன்பான குரலில் சிணுங்கினாள்.

"இன்னும் கொஞ்ச நேரம் சிவா!!!தூக்கம் வருது!!!"

"சரிதான்...உன் தங்கச்சி இப்படி பத்து மணி வரைக்கும் தூங்கினால்??

என் நிலைமை என்ன?"-யுதீஷ்ட்ரனின் குரலில் எழுந்து உட்கார்ந்தாள்.

திருதிருவென விழித்தாள்.

எனக்கும் விழிப்பாக தான் இருக்கிறது.

அவர்கள் எப்படி காயமின்றி பிழைத்தார்கள்???

என்ன நடந்தது??

பார்த்தே ஆக வேண்டும்...

கயிறு அறுந்தது...

கோவிலின் நிலையே மாறியது.

பின்,அங்கே வந்தது யார்???

சற்று கூர்ந்து பார்த்தால்...

ரிஷபன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் தான்.

கயிற்றை அறுத்த பின் மயங்கி கிடந்த சிவாவின் முன் பார்வதி அமர்ந்திருக்க...அவர் அங்கே வந்தார்.

"ம்....தாய் தாயாய் வளர்த்தவனும்,வாழ்வின் துணையாய் வந்தவனும் இப்படி கிடக்கிறார்களே என்று கவலையா பெண்ணே!"-சிரித்தப்படி கேட்டார்.

அவள் மிரட்சியுடன் பார்க்க,

"ஆ...என் பெயர் ரிஷபன்.நான் மாடு மேய்பவன்.என்னை பார்த்து பயப்பட வேண்டாம்!!!

நான் இவர்களுக்கு வேண்டியவன் தான்!!!"-அவள் கண்களில் கண்ணீர் மட்டுமே!!!

"கவலைப்படாதே!!!!இவர்கள் இருவருக்கும் இணையான தைரியம் படைத்தவர் இன்னொருவர் உலகில் இல்லை.

அப்படிப்பட்ட வீரர்களை தான் இந்த பூமிமாதா இழப்பாளா???

அல்லது..உன்     குங்குமத்திற்கும், பஞ்சாக்ஷரியின் குங்குமத்திற்கும் தான் பங்கம் விளைவிக்க இந்த ராஜகாளி நினைப்பாளா???"-அவள் புரியாமல் விழிக்க,

"இரு!!! இரு!!!"-என்று ஒரு விபூதி பையை எடுத்து சிவாவின் நெற்றியில் பூசினார்.

என்னடா நடக்குது இங்கே???

அவன் காயம் அணுவளவும் இல்லாமல் மறைந்தது.

அதையே யுதீஷ்ட்ரனுக்கும் செய்தார்.

அவன் பழைய நிலைக்கு திரும்பினார்.

"திருமணமாக போகும் பெண்களுக்கு திருநீறு வழங்குதல் நியாயம் இல்லை.

அதனால்,ஆசி வழங்குறேன்.

நலமோடு வாழ்வாயாக!"-என்றார்.பார்வதி உடலில் இருந்த காயம் காணாமல் போனது.

அவள் கை எடுத்து அவரை வணங்க,அவர்,நீ கொடுத்த வேலையை நிறைவேற்றி விட்டேன் மஹாதேவா என்றார்.பார்வதி நிமிர்வதற்குள் காணாமல் போய்விட்டு இருந்தார் ரிஷபன்.

எனில்,அவர் யாராய் இருக்கும்???

தெரிந்தால் சொல்லுங்களேன்...

இதான் நடந்ததா!!!!!

சிவாவை உற்றுப் பார்த்தாள் ஷைரந்தரி.

"என்ன அம்மூ???"

"எப்போ கல்யாணம் சார்???"-அவள் கேட்டதற்கான காரணம் அவன் மாலையை கழற்றி விட்டிருந்தான்.

அவன் வெட்கத்தோடு,

"முதல்ல உனக்கு முடியட்டும் அப்பறம் தான்!!!"-அவள் பார்வை தன்னிச்சையாக யுதீஷ்ட்ரனை தொட்டது.

அவள் குறும்பாக அவளை பார்த்துக் கொண்டிருக்க, நாணத்தில் தலை குனிந்தாள் பஞ்சாக்ஷரி!!!

"யுதீஷ் வா போகலாம்!!!"

"ஏன்டா??"

"இப்போ அவ என் தங்கச்சி அது ஞாபகமிருக்கட்டும்!!!"

"இல்லைன்னா??என்ன பண்ணுவ???"

"இல்லைன்னா..உன்னை..."-சண்டை போட போகிறார்களோ???

மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த ஷைரந்தரி

"முதல்ல இரண்டு வெளியே போங்க!!"-இருவரும் கோரஸாக,

"நான் கூடவா???"-என்றனர்.

சிவா கூறுகிறான் என்றால் அதில்,அர்த்தம் உண்டு.

இவன் ஏன் கூற வேண்டும்??

சரியில்லையே...!!!!

ஷைரந்தரி கொடுத்த மாலையை அந்த அகோரியிடம் காட்டினார் ஈஸ்வரி.

"இனி,ஒண்ணும் பண்ண முடியாது.இது அவ நமக்கு தந்த எச்சரிக்கை.

இந்த பத்து முத்தும் பத்து நாளை குறிக்கிறது.

சித்ரா பௌணர்மி அப்போ நமக்கு முடிவு என்பதை சொல்லாம சொல்லி இருக்கா!!!"

"அவ்வளவு தடை செய்தும் சிவா எப்படி வந்தான்???"-அகோரி சிறிது நேரம் கண்ணை மூடினார்.

பின்,

"பரமேஷ்வரா!"என்றார்.

"தன்னோட வாரிசை காக்க அந்த ஈஸ்வரன் உதவாம உதவி இருக்கான்."

"அப்போ அவளை அழிக்க முடியாதா???"

"ஒரு வாய்ப்பு இருக்கு!!!"

"சித்ரா பௌர்ணமி!!!"-

கண்களை மூடி தியாணித்திருந்த தாண்டவப்ரியன் கண்களை திறந்தார்.

தொடரும்

Go to Episode # 17

Go to Episode # 19 

{kunena_discuss:751}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.