(Reading time: 13 - 25 minutes)

"யா!"-நீலக்கண்டச்சாரியர் அழைத்தார்.

"உங்களை ஷைரந்தரி பார்க்கணும்னு வந்திருக்கா!"

"வரேன்!"

"நானே வந்துட்டேன்!"-பஞ்சாக்ஷரி குரல் கொடுத்தாள்.

அவள் முகத்தில் ஆனந்தம் கரைப்புரண்டது.

நீலக்கண்டச்சாரியார் அவ்விடம் நீங்கினார்.

வந்தவள் புன்னகைத்தப்படி கரம் கூப்பி,

"வதனத்தில் அக்னியின் தேஜஸ்!சுவாசத்தில் அக்னியின் தாக்கம்!

மேலும் இருதயத்தில் அக்னியின் பவித்ரத்தை ஏற்று அவதரித்த நான் தம்முடைய புதல்வியாவேன்!தேவர் அளித்த இந்த வரம் தங்கள் பாதத்தில் தன்னையே அற்பணிக்கிறது!"-என்று அவர் பாதம் பணிந்தாள்.

"சர்வ மங்கல பிராப்திரஸ்து!"

"திருமண வாழ்வை தொடங்க இருக்கிறாய்!

மாங்கல பலம் பெறுவாயாக!மேலும்,திவ்ய தேஜஸ் கொண்ட புத்திரனையும் ஸ்வீகரிப்பாய்!"-அவள் தலை குனிந்தாள்.

"நான் இன்னொன்றையும் கூறுகிறேன் பஞ்சாக்ஷரி!"

"கூறுங்கள்!"

"இன்றைய தினம் நீ வெகு கவனமாக இருக்க வேண்டும்!

இன்றைய பொழுதானது உன் பிறவி பாக்கியத்தை உனக்கு தரும்.அதற்கு பல இடர்கள் வரும்!"

"தாம் இருக்கிறீர்கள் அல்லவா?எக்கவலையும் எனக்கில்லை!"

"எப்பொழுதும் இருப்பேன் மகளே!இது மகேந்திரனின் வாக்காகும்!"

"பின்....மற்றொரு நபரிடம் நீ சில காலங்கள் அதீத கவனம் கொண்டிருக்க வேண்டும்!அவரை என்னால் தடுக்க இயலாது!"

"யார் அவர்?"

"மகேந்திர  குமாரியின் மனம் கவர்ந்தவர்!"-ஷைரந்தரி முகம் சிவந்து போனது.

"அவரிடம் ஒன்றை கூறு!

மகேந்திரன் தம்மை மீண்டும் பிரிக்க மாட்டான் என்று வாக்களித்தான் என்று கூறு!"

"தாம் என்னை கேலி செய்கிறீர்கள்!"

"காதலில் விழுந்தவர்களுக்கு உண்மையை உரைப்பது என்பது கேலி செய்வதா?"-அவள் தலை குனிந்தாள்.

"நான் புறப்படும் நேரம் வந்தது பஞ்சாக்ஷரி!"-இறுகியது அவள் முகம்.

"தம்மை நான் செல்ல விட மாட்டேன்.தாம் என்னுடனே இருக்க வேண்டும்!"

"அது நியாயமல்ல!இவ்வுலகில் காலம் எனக்கு விதித்த கடமை ஏராளம்!நான் செல்ல வேண்டும்!"

"இயலாது!அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்!"

"உனக்காகவே நான் இவ்விடம் வந்தேன்.வந்த காரியம் ஈடேறியது!நான் செல்ல வேண்டும்.நான் உன் நிஜத்திற்கு என்றும் நிழலாய் இருப்பேன்!நீ என்றும் சிவ பஞ்சாக்ஷரி தான்!"

"தாம் என்னை காண மீண்டும் வர மாட்டீர்களா?"

"எனது நேத்திரம் என்றும் உன்னை ஸ்பரிசித்தப்படியே இருக்கும்!கவலை கொள்ளாதே...மனதின் கவலையை போக்கி வருங்காலத்தை குறித்து இன்பம் கொள்!

காரிருள் விலகி உதிக்கவிருக்கும் பிரகாசமான விடியலை குறித்து ஆனந்தம் கொள்.

காத்திருந்த விடியல் தோன்றிவிட்டது."-என்று ஆதவனை காண்பித்தார்.

அதுவரை மேகத்தின் பால் தன்னை மறைத்த ஆதவன்,பிரகாசமான விடியலை வழங்கினார்.

அன்று மாலை....

கூறியப்படி இரு இணைக்கும் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தவண்ணம் இருந்தன.

ஊரே திரண்டிருந்தது.

பெண்கள் இருவரும் தங்களின் வருங்காலத்தைக் குறித்த கனவுகளை கண்களில் நிரம்பவிட்டிருந்தனர்.

ஆதிசக்தியின் வீரம் இருதயத்தில் இருந்தாலும் ஆதிதேவரின் முன் சக்தி தேவிக்கும் நிலை தடுமாறும் அல்லவா???

"பத்திரிக்கையை படிக்கலாமா?"-அந்தணர் கேட்டார்.

"படிக்கலாம் சுவாமி!"-பதில் வந்தது.

அவர் படிக்க ஆரம்பிக்க,அந்நேரம் துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டது. 

அனைவரும் திகைத்தனர்.

கண் இமைக்கும் நேரம் அங்கிருந்தோரை தன் வசம் கொண்டிருந்தனர் புதியதாக உள்ளே பிரவேசித்தனர்.

அசோக்,சிவா,யுதீஷ் மூவர் மட்டும் எவ்வளவு தான் சமாளிப்பர்???

ஒருக்கட்டத்தில் அவர்களும்  தடுமாறினர்.

அனைவரும் பதறினர்.

ஒருகட்டத்தில் அங்கே வினய் வந்தான்.

அவன் முகத்தில் எதையோ வென்ற ஆணவம் மிளிர்ந்தது.

சிவாவிடம் வந்தவன்,

"உன் தங்கச்சியை காப்பாற்ற என்ன பாடுப்பட்ட இப்போ???என்னாச்சு???"-என்றான் நகைத்தப்படி,

யுதீஷ்ட்ரனிடத்தில்,

"என்ன மாப்ள சார்??சர்ப்ரைஸ் நல்லா இருக்கா???-இருவரின் முகத்திலும் கோபத்தின் உச்சம் மிளிர்ந்தது.

"இதோ பாருங்க!!!எனக்கு தேவை உங்க உயிர் இல்லை! எனக்கு தேவை இதோ இந்த சிவ பஞ்சாக்ஷரி தான்!"-என்று உரக்க கூறினான்.

அவளருகே சென்று,

"சிவ பஞ்சாக்ஷர ஜெனனி சிவ பஞ்சாக்ஷரி!

மகேந்திரனின் புதல்வி மகேந்திர குமாரி!

கலியுக திரௌபதி  ஷைரந்தரி!இப்போ சுற்றி ஊரே இருந்தாலும் காப்பாற்ற  நாதி இல்லாம இருக்கா!"-என்று பலமாக சிரித்தான்.

அவள் அமைதியாக இருந்தாள்.

"வாடி!"-அவள் தலைக்கேசத்தை பற்றி இழுத்து சென்றான் வினய்.

ஒரு அமானுஷ்யமான இடத்திற்கு அவளை அழைத்து சென்றான்.

அங்கே கோரா ஏதேதோ யாகங்களை வளர்த்திருந்தான்.

அவன் இதழ்கள் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தன.

அவன் ஷைரந்தரியை வேள்வியின் முன் அமர செய்தான்.

அவள் கட்டுப்பட்டு போயிருந்தாள்.

அவளிடம் சுயநினைவு இல்லை.

அப்படியென்றால் மகேந்திர குமாரியின் நிலை???

அழிவுசக்தியானது உலகம் முழுதும் தனது வேரை விடுகிறது.

எங்கும் அவலமே காட்சி தருகிறது.கண்ணீரும்,

கவலையும் கண்களுக்கு விருந்தாகிறது.

பெண்கள் அவமதிக்கப்படுகின்றனர்.உழைப்பாளிகளின் உழைப்பு சுரண்டப்படுகிறது.

வான்மழை பொய்தது.

சிவப்பெருமான் உக்கிர தாண்டவம் ஆடுகிறார்!!!

உலகம் பெரும் நாசத்தை சந்திக்கிறது...

சற்றே சிந்தியுங்கள்...

இவற்றை ஆக்க சக்தி வேடிக்கை பார்க்குமா என்ன???நிச்சயம் இல்லை...

தெய்வசக்தியை காட்டிலும் துர்சக்தியானது வலிமை வாய்ந்து தான் போகுமா??இல்லை...

காலமானது அதற்கு தான் இடம் வழங்குமா???

நிச்சயம் இல்லை....

அங்கே பஞ்சாக்ஷரி கட்டுப்பட்ட அதே நேரம் இங்கே நீலக்கண்டச்சாரியார் மாபெரும் வேள்வியை சித்ரா பௌர்ணமியின் சிறப்பிற்காக நிகழ்த்தினார்.

அவருக்கு என்ன நடக்கிறது என்று தெரிய வாய்ப்பில்லை.

ஆனால் காலம் அதை நடத்தியது.

கோரா நிகழ்த்திய வேள்வியின் பலனாய் திங்களை பாம்பு கொண்டற்று,அதாவது சந்திரனை ராகுவானவன் விழுங்கினான்.

சித்ரா பௌர்ணமிக்காக அம்மன் ஆலயத்தில் விஷேச அபிஷேகங்களும்,ஆராதனைகளும் நிகழ்ந்தன.

"வினய்!"

"கோரா!"

"இந்த நொடி ஆரம்பித்து சரியா இரண்டு நிமிஷத்துக்குள்ள ஷைரந்தரியை கொன்னாகணும்!"

"இரண்டு நிமிஷம் தேவையில்லை கோரா!இரண்டே நொடி போதும்!இவளை காப்பாற்ற எவன் இருக்கிறான்!"-கத்தியை பஞ்சாக்ஷரியின் கழுத்தருகே கொண்டு வந்தான்.

கோவிலில் சங்கு முழங்கிற்று!!!

அங்கே வானை மூடிய கரும் பிம்பம் சிவனின் ஆக்னிய நேத்திரம் அதாவது நெற்றிக்கண்ணின் உருவத்தை தரித்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.