(Reading time: 13 - 25 minutes)

திடீரென வானம் மஞ்சளாய் வெளுக்க,

இரவு நேரத்தில் ஆதவனை போன்ற பிரகசத்தோடு சந்திர பகவான் ஒளி வீசினார்.

ஷைரந்தரி சுயநினைவு அடைந்தாள்.

டமாருக்க ஒலி கேட்டது.

இரண்டு நிமிடமும் தீர்ந்து போனது.

'கோரா"

"வேறு வழியில்லை பஞ்சாக்ஷரியின் வஸ்திரத்தை நீக்கு!"-வினய் அதை நிறைவேற்ற வர,

அக்னி வளையம் அவளை சூழ்ந்தது.

ஒன்றல்ல,இரண்டல்ல ஐந்து அடுக்கு வளையம்!!!

ஊரே திரண்டது.

அந்த அக்னியானது கோராவை பீடித்தது.

அவன் அந்த நெருப்பிற்கு இரையானான்.

ஷைரந்தரி நிமிர்ந்து அக்னி நேத்திரத்தை பார்த்தாள்.

அதில் இருந்து அக்னி பரவ,வதனத்தில் அக்னியின் தேஜஸ் கொண்டவள் அக்னியில் ஐக்கியமானாள்.

"ஷைரந்தரி!"

"ஷைரந்தரி!"-பல குரல்கள் கதறின.

அவள் சாம்பலும் அம்மண்ணில் படவில்லை.

சிவா அப்படியே மண்டியிட்டான.

எதற்காக இவ்வளவு பாடுப்பட்டானோ அனைத்தும்  வீணாணது.

"அம்மூ!"-அழுதே விட்டான்.

அனைத்தும் இயல்பானது.

விஷயம் அறிந்து நீலக்கண்டாச்சாரியார் 

அங்கே வந்தார்.

நீண்ட நேரம் மௌனம் நிலவியது.

"கடைசியில உங்க பரமேஷ்வரன் ஜெயித்துவிட்டார்ல?"-கோபமாய் கேட்டான்.

"சிவா?"

"என்ன கிடைத்தது அவருக்கு?அவருக்கு அவர் பஞ்சாக்ஷரி அவருக்கு கிடைச்சிட்டா!

என் தங்கச்சி....."

".............."

"எதுக்கு அவ என் தங்கச்சியா பிறக்கணும்??அவளை நான் ஏன் பாசமா வளர்க்கணும்???இப்பி போகறதுக்கா???

அவளை என் அம்மாவோட மறு ஜென்மமாய் பார்த்தேன்!

பிரிச்சிட்டார்!!!தாய் பாசம்னா என்னன்னு  தெரிந்தா தானே!!!திருப்தி அடைந்தாரா??

இல்லை...என் உயிரும் அவருக்கு வேணுமா?

என்னை கொன்னு இருக்கலாமே!இனி,என் தங்கச்சி இல்லாம எப்படி  வாழப் போறேன்?"-அங்கிருந்த அனைவர் கண்களிலும் கண்ணீர் கல்மனதும் கரைந்தது.

"சிவா!இதுதான் விதி!"

"எது விதி???ஒருபாவமும் பண்ணாத உயிரை கொன்னு தியாகிப் பட்டத்தை வாங்குவது தான்  விதியா?"

"அம்மூ!"-அவனால் பேச முடியவில்லை.

நடந்த நிகழ்வுகளால் சூரியன் உதிக்க தயாரானார்.

திடீரென யாக குண்டத்தில் அக்னி வளர்ந்து வானை தொட்டது.

திகைப்பாக பார்த்தனர்.

எங்கோ சங்கு முழங்கும் சப்தம்!!!

அந்த அக்னியில் ஒரு ஸ்திரியின் பிம்பம் தெரிந்தது.

அவள் கரம் குவிந்திருந்தது,

கண்கள் மூடி இருந்தது.

வேள்வியானது வானை தொட்டது.

அக்கன்னிகை தன் இமைகளை திறந்தாள்.

"சிவ பஞ்சாக்ஷரி!"-தாண்டவப்ரியனின் குரல் கேட்டது.

சிவா திரும்பினான்.

"உண்மையில் காலத்தை உன் பாசம் வென்றது."

"மஹாதேவருக்கு தாயில்லை தான்!அதான் உனக்கு உன்னுடைய தாயை அவர் திருப்பி தந்துள்ளார்!

தவறானது விதியின் மேல் இல்லை!அந்த மகேந்திரன் மேல் தான்!அதான்...செய்த தவறுக்கு பிராயசித்தம் செய்தார்!"-அக்கன்னிகை வேள்வியை துறந்து ஷைரந்தரியாய் வெளியே  வந்தாள்.

தாயானவள் கருவில் சுமக்கவில்லை.

தமையனாளன் பிறந்திருக்கிறாள்.

அதனால் அண்ணனும் அன்னையானான்!!!!

சிரித்தப்படி வந்தாள் ஷைரந்தரி!!

"அம்மூ!"-அவளை அணைத்து கொண்டான் சிவா!!!

அவள் நாக்கை மடித்து அவனை வெறுப்பேற்றினாள்.

"அழுதா அடிப்பேன்!"

"............."

"அடிப்பேன்டா"-அவன் சிரித்தான்.

"நான் என் சிவாவிட்டுட்டு போக மாட்டேன்!"-புதுவித இதிகாசம் இலக்கை உடைத்துக் கொண்டது விதியை மாற்றியது.

சிவா தாண்டவப்ரியனை தேடினான்.

அவர் தூரமாய் நின்றார்.

அவன் கரம் மன்னிப்பை வேண்டின.அவர் சிரித்தப்படி மறைந்தார்.

அடுத்து வினய்யின் நிலை என்ன???

நடந்தவற்றை பார்த்தவன் உயிர் பிழைக்க ஓடி ஒளிந்தான்.

ஓடியவனை தடுத்து நிறுத்தியது ஒரு உருவம்.

சற்று கூர்ந்தால் அது கல்பனா.

அவள் கண்களில் குரோதம் மிளிர்ந்தது.

அவன் திரும்பி ஓடினான்.

கல்பனா ஒரு வலுவான கட்டையை அவன் தலையில் தாக்கினாள்.

அவன் தடுமாறி விழுந்தான்.

அவனருகே வந்தவள் அவன் தலை கேசத்தைப் பற்றி இழுத்தாள்.சுவற்றின் மேல் மோதினாள்.

இவ்வாறு தானே அவனும் செய்தான்.

அவனை கோவிலுக்குள் இழுத்து சென்றாள்.

நடந்தவற்றை வேடிக்கை பார்த்தனர் அனைவரும்.

"சொல்லு!எல்லார் முன்னாடியும் உண்மையை சொல்லு!"

"சொல்றேன்...கல்பனாவை கொன்னது நான் தான்!

அவ வாழ்க்கையை நாசமாக்குவது நான் தான்!பழியை அசோக் மேல போட்டேன்!"-அனைத்தையும் உளறினான்.

"என்னை விட்டுவிடு!"

-அவள் அவனை உயரத்தில் தூக்கி தலைக்கீழாய் விட்டாள்.

உயிர் துடித்து பிரிந்தது.

அந்த மணியின் கடைசி முத்தும் அறுந்து விழுந்தது.

அசோக்கின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

அவள் கரம் கூப்பி வணங்கி காற்றில் கரைந்தாள்.இதற்கு மேல் கதையை தாமே ஊகிக்கலாம்!!!

நான் கூறினேன் அல்லவா???

நான் மட்டும் அல்ல  கீதையும் அதை தான் கூறுகிறது.

தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்!!! 

நான் இன்னொன்றையும் கூறினேன்.

இக்கதையானது நம் வாழ்வில் பல நேரங்களிலும் இக்கட்டான சமயங்களிலும் நமக்கு உதவும் என்று!!!

இப்போது அதன் அர்த்தம் விளங்கி இருக்கும் என்று எண்ணுகிறேன்.

ஷைரந்தரி என்ற நாமம் கொண்ட கன்னிகை ஒவ்வொரு பெண்ணின் பிரதிபலிப்பாவாள்!!!

ஒவ்வொரு பெண்ணின் இருதயத்திலும் பஞ்சிக்ஷரி பிறப்பெடுகிறாள்.

பெண்ணானப்பட்டவள் மகத்துவம் வாய்ந்தவள்.

அவள் உலகிற்கே தாயாவாள்!!!

இறைவனுக்கு அந்த பாக்கியம் இல்லாததால் தான்!

பிரம்ம தேவர் ஸ்ரீ கலைவாணியை தன் நாவிலும்,வாசுதேவர்  ஸ்ரீ லட்சுமியை இருதயத்திலும்,

மஹாதேவர் ஸ்ரீ பார்வதியை உடலிலும் சரிபாதியாய் ஏற்றனர்.

பெருமையாக தான் உள்ளது நானும் ஒரு பெண் அல்லவா???

இக்கதையை படிக்கும் பெண்களுக்கு எப்படி??

முற்றும்!

Go to Episode # 19 

{kunena_discuss:751}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.