(Reading time: 10 - 20 minutes)

" மை லார்ட் , என் கட்சிக்காரர் முகத்தை இந்த வழக்கில் முன் வைத்து தயவு செய்து தீர்ப்பு கூறாதீர்கள்.. உலகில் உள்ள அத்தனை  தில்லாலங்கடி வேலைகளையும் செய்பவன் போன்ற முகத்தை கொண்ட இவனை நம்புவது இந்த கேசுக்கே பெரிய இழுக்கு, அதனால் அனு  சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறொன்றுமில்லை  என்பதை நம்பி , எங்களுக்கு சாதகமான தீர்ப்பை தருவீர்கள் என்று பெரிதும் எதிர்பார்கிறேன் " என்றபடி இடைவரை குனிந்தாள்  அனு .. அதுவரை பிடித்து வைத்திருந்த கோபம் எல்லாம் அவளது வாலுத்தனதில்  மறைந்திட

" வானரமே , இது என்ன கோர்ட்டா ? " என்றாள் ..

" பின்ன நீ மட்டும் , மெடிகல் ஸ்டுடண்டா இல்லாமல் இப்படி லா பேசினா பாவம் நானும் தான் என்ன செய்வேன் ?" என்றாள்  அவளும் பாவமாய் ... அதன் பிறகு, அனைவரின் பார்வையும் அருண் மீது பதிய , அடுத்து வந்த  நிமிடங்களில் கிடைத்த ஆப்புகளை எல்லாம் கண் கலங்காமல் வாங்கி மற்றவர்களை சிரிக்க வைக்கும் பணியை ஏற்றுகொண்டான் அவன் ..

அனு தனது பார்வையினாலே அனைவரின் வாயையும் மூடிவிட, இருந்த கொஞ்ச கோபமும் மொத்தமாய் ரெக்கை கட்டி பறந்திட இயல்புநிலைக்கு திரும்பினாள்  ஜெனி..

அன்றிரவு, விடுதியில் தனதறையில்  தூங்காமல் விழித்திருந்தாள்  நந்து .. அருகில் இருந்த பெட்டில்  நன்றாய் உறங்கி கொண்டிருந்தாள் தீப்தி .. கண் விழித்தால், இருக்கும் கள்ளமும் கபடமும் உறங்கும் அவள் முகத்தில் இல்லை .. இவளது திட்டம் தான் என்ன ? அனைவரையும் விடுத்து இவள் கவீனை பழி வாங்குகிறாலோ ? மதியம் இறுதியாய் அனு சொன்னது ஞாபகத்திற்கு வந்தது ..

" ஜெனி சொல்றதிலும் உண்மை இருக்கு .. கவீன்  நம்ம ப்ரண்ட் .. அவனை நாமலே நம்பலைன்னா யாரு நம்ப போறா ? ஆனா அதே நேரம் அவனை இவகிட்ட தனியாகவும் விட முடியாது .. சோ இனி என்ன ப்ளான்  போட்டாலும் ஜெனிக்கு தெரியாமல் அதே நேரம் அது கவீனையும் பாதிக்காமல் இருக்கணும் " என்றாள் .. அதன்படி இதோ அவர்களது முதல் திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு தொடக்கி வைக்க போகிறாள் நந்து ..

இயல்பாய் தண்ணீர் குடிக்க எழுந்தது போல எழுந்து நின்றவள் அருகில் இருந்த கண்ணாடி குவளையை தரையில் போட்டு உடைத்தாள் .. அந்த சத்தத்தில் தூக்கம் களைந்து, லேசாய் கண் விழித்தாள்  தீப்தி .. இருளில் நந்து அந்த  கண்ணாடி துகள்களை அகற்றுவது அவள் கண்ணில் பட்டது .. தூக்கம் களைந்து விட்டாலும் நந்துவிற்கு உதவ அவளுக்கு மனம் வரவில்லை .. இதை எதிர்பார்த்ததுதான் என்பதுபோல, அனைத்தையும் சுத்தம்  செய்தவள் தீப்தியின் வெகு அருகில் அமர்ந்து அவள் முகத்தை உற்று நோக்கினாள் .. அவள் தனக்கு மிக அருகில் இருப்பதை உணர்ந்த தீப்திக்கும் படபடப்பாய் இருந்தது ..அதைவிட தான் தூங்கி கொண்டிருக்கும்படி போட்டிருக்கும் வேஷம் களைய கூடாதே என்ற ஜாக்கிரதை உணர்வு !

சொல்ல வந்ததை சொல்லி கொடுத்தது என்னவோ அனு  தான் .. ! ஆனால்  நந்து உதிர்த்த வார்த்தைகளோ , தன்னையும் மீறி தன் மனதில் வந்த வார்த்தைகள் .. ! அப்படி என்ன சொன்னா ? வாங்க கேட்போம் !

" தீப்தி .. நீ எவ்வளவு அழகு தெரியுமா ? .."

" .."

" ஆனா , நீ தூங்கும்போதுதான் நிஜம்மா அழகா இருக்க ..ஏன் தெரியுமா ? தூங்கும்போதுதான் நம்முடைய உண்மையான முகம் வெளில வருமாம் .. நீயும் நல்லவ தான் .. ஆனா நாங்கதான் உன்னை மாத்திட்டோமா ? நீயும் மனசுல எதையும் வெச்சிகாமல்  சமாதானம் ஆகிட்டா எவ்வளவு நல்லா இருக்கும் தீப்தி ? காலேஜ் லைப் எல்லாம் ஒரு வரம் ..எத்தனையோ பேரு அந்த நாட்களை திருப்பி வாழ முடியாதான்னு பீல் பண்றாங்க .. நம்ம அந்த அழகான வசந்த காலத்தில் இருக்கோம் .. எவ்வளவு சந்தோஷமா கழிக்க வேண்டிய நாட்களை கோபம் , பொறாமை , போட்டி , வன்மம்னு கழிக்கனுமா ? நாளைக்கு நம்ம வாழ்க்கையை திரும்பி பார்த்தா இந்த நினைவுகள் கசப்பா தானே இருக்கும் தீப்தி .. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் .. எனக்கொரு தங்கச்சி இருந்தா , உன்னை மாதிரி இருந்திருப்பாளோ தெரியல .. உன்கிட்ட அழகு இருக்கு , நல்ல அறிவும் கூட இருக்கு , ஆனா உறவுகளை பேணி காக்க தெரியலையே .. திட்டிகிட்டே இருந்தாலும் கவீன்  எங்க எல்லாருக்கும் எவ்வளவு ஸ்பெஷல் ? அவனை போயி நீ பிரிக்கலாமா தீப்தி ?? சில மணி நேரத்துலேயே இருளான உலகம் ஒழி பேருர மாதிரி, இருண்டு இருக்குற உன் மனசுலயும் வெளிச்சம் பரவினா நாம எவ்வளவு சந்தோஷமா இருப்போம் தெரியுமா ? இதேயல்லாம் என்னால உன் முகம் பார்த்து பேச முடில .. ஏன்னா உன் கண்ணில் உண்மை இல்லை ..அன்பு இல்லை .. அதனால எனக்கு பேச புடிக்கல .. அதான் இப்போ சொல்லுறேன் " என்றவள் தீப்தியின்  கரத்தை ஒருமுறை அழுத்திவிட்டு மீண்டும் படுத்து கொண்டாள் .. அவள் ஸ்பரிசத்தில் சிணுங்குவது போல  அவளுக்கு முதுகு காட்டி திரும்பி படுத்தாள்  தீப்தி .. தன்னையும் மீறி விழிகளில் கண்ணீரின் சாயல் .. நந்துவிற்கோ ஏதோ பாரத்தை இறக்கி வைத்த உணர்வு .. அவள் இறக்கிய பளு இவள் மனதில் ஏறி கொண்டது .. அடுத்து வரும் நாட்களாவது பளுவில்லாமல் வலுவடையுமா ??

ஹாய் ப்ரண்ட்ஸ்.. நினைத்தாலே இனிக்கும் பொருத்தவரை நான் முதலில் இந்த கதையின் ரசிகை தான் .! அழகான நினைவுகளில் தாக்கப்பட்ட நானும் வாசகியில் ஒருவராய் நின்று கதையோடு பயணிக்கத்தான் விரும்பினேன் .. எனினும் அழகிய ஓவியம் இன்னும் பூர்த்தியாகவில்லையே என்ற எண்ணம் மனதிற்குள் அவ்வப்போது வந்து கண்ணாமூச்சியாட " பொறுத்தது போதும் பொங்கி எழு  " என்று கீபோர்டில் விரல்களை புதைத்து விட்டேன் ... இப்படி கவிநயமா சொல்லனும்னு எனக்கும் ஆசைதான் ... ஹா ஹா

விஷயம் என்னன்னா, நம்ம நினைத்தாலே இனிக்கும்க்கு நிறைய வாசகர்கள் இருக்கோம் நான் உட்பட ! அழகாய் தொடங்கிய கதைக்கு அற்புதமாய் ஒரு முடிவு கொடுக்கணும்னு ஆர்வமாய் இருக்கு .. அதை பூர்த்தி செய்வேனா என்பதை இன்னைக்கே சொல்லிட முடியாதுதான் எனினும் எல்லாரும் சந்தோஷ படுற மாதிரி நிறைவை கொடுப்பேன்னு நம்பிக்கை இருக்கு .. உங்களுடைய கருத்துக்கள் தான் இந்த கதையை வலுவாக்கிட எனக்கு ஊன்றுகோளாக  இருக்கும் ..அதனால் ஆவலாய் அதற்காக காத்திருக்கேன் ..

நம்ம கதையில் வரும் ஒவ்வொரு கதாப்பதிரங்களுக்கும் தனித்தனி பாணி இருக்கிறது ..அதில் பிசுறு ஏற்படாமல் எழுதணும் என்பதால் கொஞ்சம் அதிகப்படி நேரம் தேவைபடுகிறது ..அதனால்தான் இந்த எபிசொட் கொஞ்சம்  குறைவான பக்கங்களில் இருக்கு .. கூடிய விரைவில் அதிக பக்கங்களோடும் உங்களது அபிமான கதாபாத்திரங்களோடும்  வருகிறேன்.. நன்றி 

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 19

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 21

நினைவுகள் தொடரும்...

Buvaneswari is continuing the story from where it was let off... Appreciate your comments but no comparisons between the three writers please...

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.