நான் வந்த அதிரும் ஆட்டுக்கே வால் முளைக்கும்
நான் செல்லும் பாதிகள் எல்லாம் பூ உதிரும்
ஸ்டைலிஷ் தமிழச்சி
நெஞ்சுக்குள்ளே இங்க்லீஷ் தமிழ் கட்சி....
என்ற பாடல் வீடே அதிரும் அளவு ஒலிக்க, போனில் மூழ்கி இருந்த ஆதிரா காதுகளை பொத்தி கொண்டு மாடிக்கு சென்று விட்டாள்.
நைட் ட்ரஸில் இருந்து வெள்ளையும் நீளமும் கலந்த ஸ்லீவ்லெஸ் டாப்சும் வெளிர் நீளத்தில் டைட்டான ஜீன்ஸும் அணிந்தவள். ஹேர் டிரையரில் தலையை உலர வைத்தாவாறே மீதி பாடலையும் பாடி முடித்தாள்.
இடுப்பிற்கு கொஞ்சம் மேலே அலைபாயும் கூந்தல் அசைந்தாட மெலிதான ஒப்பனையுடன் கிளம்பி தன் ஹீல்ஸ் வைத்த செப்பலில் கால்களை நுளைத்தவாறு,
"ஆதிரா, நான் போயிட்டு வரேன்" என அந்த அபார்ட்மண்ட் முளுன்வதும் எதிரொலிக்கும் கணீர் குரலில் கத்தி விட்டு, ஹாண்ட்பேக் டிரைவிங் கிளாஸ் சகிதம் தன் செல்ல புனை குட்டியிடமும் டெட்டி பியரிடமும் விடை பெற்று கொண்டாள்.
ஹாண்ட்பேக்கை தன் ஸ்கூட்டியில் மாட்டி விட்டு டிரைவிங் க்ளாசை மாட்டி கொண்டு காதில் ஹெட்போனை போட்டு கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.வண்டியை நகர்த்தாமல் பாடல்களை தேர்வு செய்ய சில வினாடிகள் செலவழித்தாள்.
சில பாடல்களை புறகணித்த பின் அந்த பாடல் திரையில் வர, முகத்தில் தோன்றிய பெரிய சிரிப்புடன் அப்பாடலை ஒழிக்க விட்டாள்.
பாடலின் இசை துவங்க வண்டியை ஓட்ட துவங்கினாள். தனிமையில் இதத்தை நாடும் அடிப்படையில் துள்ளும் அணில் போல் ஓடும் பற்ற வைத்த பட்டாசை போல பேசும் அதிரடியும் அமைதியும் கலந்த அனன்யா!!
இது தான் அவள் இயல்பு. வாழ்வின் பரிணாமங்கள் அவளுக்கு பிடிக்கும். இயற்கையின் பரிணாமங்கள், இசையின் பரிணாமங்கள், கலைகளின் பரிணாமங்கள். இவை அனைத்தும் அவளுக்கு பிடிக்கும். ஒரு விஷயம் பல விதமாய் பார்க்க கூடியதாகவும் பல விதமாய் ஒரு விஷயம் இருக்கும் ஆயினும் அவளுக்கு பிடித்தம்.
அதே விளக்கம் தான் அவளுக்கும்... அனன்யா அவளின் நிழல் கூட அவளுக்கு நிகரில்லை... பெயரின் விளக்கத்தை தன்னுள் கொண்டிருப்பவள்..!! நிகரில்லாதவள்..!!!
பாடல் தொடங்கி விட்டது.. அவள் பயணமும் குதுகலத்துடன் தொடங்கி விட்டது..!!!
டங்கா மாறி ஊதாரி புட்டுகின நீ நாரி..
ரூட்டேடுத்து கொடு போட்டேன்
கொட்டு மேல ரோடு போட்டேன்
ரோட்டு மேல ஆட்டம் போட்டேன்
ஆடம் போட்டு ஆள போட்டேன்...............................
ஊஞ்சல் ஆடுறதுன்னா யாருக்கு தாங்க பிடிக்காது அதுலயும் காதல் மாதிரி ஒரு அழகான ஊஞ்சல்ன்னா? வாங்க சேர்ந்தே ஆடலாம்.. ஊஞ்சல் எப்படி மேல போய் கீழே வருமோ அதே மாதிரி தான் இந்த கதையும் இது நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்னு நம்பி எழுதறேன்... படிச்சுட்டு கமெண்ட்ஸ் பண்ணுங்க டியர்ஸ்.... :)
ஊஞ்சல் ஆடும்..!!!!
{kunena_discuss:884}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.