(Reading time: 6 - 12 minutes)

07. நறுமீன் காதல் - அனு.ஆர்

Narumeen

பழகுதமிழில் புழங்காத சில வார்த்தைகளுக்கு tool tip (கோடிட்ட வார்த்தைகள்) ஆக அருஞ்சொற்பொருள் கொடுத்துள்ளேன். நன்றி 

நறுமீனின் வேதனை கலந்த நிம்மதி

போயின் போயின்

நாடு போயின்

நல் இல் போயின்

எந்தை என் குலம் எல்லாம் போயின்

இழப்பதற்கு ஏதுமில்லை

இன்று நீயும் போயின்

நிம்மதி நிறைவே! (1)

 

நறுமீன் அழுகை

நீண்டது இரவு

நிம்மதி தராமல்

நகர்ந்தது பெண்கால்

  {tooltip}ஓங்கு நிலை வரைக்கு {end-link}உயர்ந்த மதில் {end-tooltip}

அண்ணன் நினைவால்

அழுது புலம்புவதற்கு (2)

 

மனதிற்குள் மன்றாட்டு

ஏது கண்டாய் என்னில் பிழை

என் தெய்வமே உன் நெஞ்சின் {tooltip}உளை {end-link} உளைச்சல் {end-tooltip}

என் தீங்கு கண்டால் தீருமோ உரை?

அனைத்தும் இழந்தேன் அழவில்லை      

அண்ணன் மொர்த்தகன் அவனே தேவை

யாசிப்பது வேறில்லை; என்னையும் நினை! (3)

 

மொத்தகன் ஆறுதல் மொழிதல்

கண்ணீர் தூவல் தூவலின்

கண மௌனம் மரிக்க, பிறந்தது கேவல்.

அஃது தருவியது ஒரு பதில். (4)

 

மன்னர் மனைவி அழுததாய் வரும் சேதி

கொள்ளுமோ மரியாதை இதனால் உன் பதவி

கேட்டது தமையன் அவன் தான் மொர்தகன்

காத்திருந்தான் வெளிப்புற மதில் பால்

அவன் பாசக் கொள்கலன்.

அணங்கிவள் அழுகை அடையாளம் கண்டனன். (5)

 

அதிகரம் பதவி ஆண்டவன் தருவது

உலகில் உண்டு ஓராயிரம் வித அதிகாரம்

கோடி தாண்டும் பதவி விதம் தோறும்

அஃதில் ஒன்றும், அகிலாளும் அரியணையும்

இறை தராமல் கூடாது மனுவிற்கு ஒருநாளும். (7)

 

  {tooltip}மண்டிலம் {end-link}சூரியன் {end-tooltip}முதல்  மாஞாலம்  வரை

மாண்புற செய்திட்ட மாதேவன்

  {tooltip}இறையின் {end-link}மன்னன் {end-tooltip}இறைவன்

இங்ஙனம் செய்திட்டான்; உன்னை  {tooltip}இறைவி {end-link}அரசி {end-tooltip}என்றான். (8)

 

உலகம் செப்பிற்று

ஆதஷை அடிமை என

தெய்வம் செய்திட்டு

நறுமீன் அரசி என

அன்னையன்றோ இனி நீ

அரியணைக்குட்பட்ட அனைத்து குடிகளுக்கும்

உறவுறு (9)

 

ஓர் இல்

ஓர் குடி

ஓர் தேசம்

இழந்தாய்

சிலுவை சுமந்தாய்

ஆயிரமாயிரம் குடும்பம்

அநேக வகை குலம்

தேசமது நூற்றி இருபத்தி ஏழு

திருப்பி தந்தானே தேவன்

அவன் அன்பன்

நன்றியுறு. (10)

 

செய்தொழிலும் சிறு சிரிப்பும்

செவ்வரி கண் மீது ஆடும்

சிப்பி இமை செய் துடிப்பும்

செய்வது எதுவாயினும்

செய்திடுவாய் மாநாயகன் மகிமைக்கே

மறை சொல்லும் இவ்வுண்மை அறிவாயே! (11)

 

செய் செயலில்

பரிசுத்தம் பரிபூரணம்

இவை தவிர கேட்பானோ

ஏதேனும் காணிக்கை

அவன்  தானோ? (12)

 

தலைவி என அழைத்தவன்

பார் படைத்தவன்

தகுதியாய் நட

அவன் பார்த்திருப்பான்.

தன்னை நினைப்பவன்

தனிமையில் அழுவான்

தயாளனாய் இருப்பவன்

தன்னிறைவு கொள்வான். (13)

 

தன்னிரக்கம் ஒழி

மன எல்லை விரி

அன்னை செயல் புரி

அன்பே தெய்வ வழி

அறம் அவன் மொழி

நீதி அவன் விழி

செய்வாய் பெண்ணே இனி

நீ உலகின் ஒளி (14)

 

நறுமீன் அரச கடமை ஆற்ற முடிவு செய்தல்

நள்ளிரவில் பெண் மனதில் ஞாயிறு உதயம்

நறுமீன் உயிரில் தாய்மை அது  {tooltip}உகளும்{end-link}விளையாடும்{end-tooltip}

நின்றது விழி நீர்

நின்றல் அன்றது பதி பால் சினம்.

பெர்ஷியம் பெற்றது நற்குண நாயகி

நாயகனுக்கோ இல்லை இன்னும் காதல் வழி.

{tooltip}அருங்கடி{end-link}அந்தபுரம்{end-tooltip}ஏகினாள் அரசியாய் நறுமீன் கன்னி. (15)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.