(Reading time: 6 - 12 minutes)

அரசியாய் அரசவையில் நறுமீன்

நாட்டரசி வீற்றிருக்க

  {tooltip}நதி {end-link}நறுமீன்{end-tooltip}பதியும் பார்த்திருக்க

நடபடிகள் தொடங்கியது

நாடாளும் மன்றம். (16)

 

வழக்கு விசாரணை

கல்தியேர் கடுங் குடியும்

கடாலாடி வந்த சில குடியும்

யவன பெருங்குடியும்

எகிப்திய வழி குடியும்

ஏனைய ஏற்ற மிகு குடி பலவும்

சூழ்ந்திருக்க

வந்தது ஒரு வழக்கு

வழங்க வேண்டும் ஷெஷாங்கன் தீர்ப்பு. (17)

 

வழக்கு

யவனரவர் இறந்தோரை எரிக்கின்றார்

இஃதே உயர் முறை என்கின்றார்

பெற்றோரை பிரிவது பாவம்

அவர் உயிர் நீத்த ஊணுடலை மக்கள்

உண்ணவில்லை எனில் வரும் சாபம்

இது எம் குல வழக்கம்

என்கின்றார் கல்தியேர் இனம் யாவும்.

கொற்றவனே நீ கூறு

எது இனி இங்கு சட்டம்? (18)

 

யவனரிடம் அரசன் சொன்னது

அழைத்தான் ஷெஷாங்கன்

வந்தவர் யவனர்

பெற்றோர் சடலம் இனி உன் உணவு

இது மன்னன்  வரைவு

மீறினால் அது பிறழ்வு (19)

 

யவனர் பதில்

கோவென்று கதறி

அழுது சிதறி கெஞ்சினர் யவனர்.

கோவே குறை கூறும்

குற்றம் கடியும்

பிழை சொல்லும்

  {tooltip}திரை {end-link}கப்பம்{end-tooltip}கேளும்

திருத்திக் கொள்வோம்

எதையும் செய்வோம்

எம் உயிர்போயினும் இது கூடாதே

மன்னியும் மன்னியும் மன்னியும் (20)

 

கல்தியேரிடம் அரசன் சொன்னது

கல்தியேர்  வந்தனர் கடுகி

கொற்றவன் ஆணைக்கு இணங்கி

இருந்தோர் இறந்தால்

இனி செய்வீர் சிதை

சடலம் உண்பது வதை

இனி இங்கு அது தடை

மீறினால் வரும் மன்னன் படை

இதுவே என் உரை (21)

 

கல்தியேர் பதில்

கோவென்று கதறி

அழுது சிதறி கெஞ்சினர் அவரும்.

கோவே குறை கூறும்

குற்றம் கடியும்

பிழை சொல்லும்

திரை கேளும்

திருத்திக் கொள்வோம்

எதையும் செய்வோம்

எம் உயிர்போயினும் இது கூடாதே

மன்னியும் மன்னியும் மன்னியும். (22)

 

உயிர் கொடுத்தோர்

ஊணுடல் கொடுத்தோர்

உண்டியும் உதவியும்

உயிர் வாழும் நாளெல்லாம் கொடுத்தோர்

உன்னத பெற்றோர்

உலகு நீர்த்தால்

உற்ற நன்றி மறந்து

எங்ஙனம் இடுவோம் சிதை

அன்பே அதன் அடிப்படை மறை. (23)

 

அடியும் உதையும்

ஆணியால் கடாவும்

ஆழியில் புதையும்

ஆன்றோரை இடமாட்டோம் சிதை

மன்னர் மன்னா மன்னியும் எமை

பாதம் தொழுகிறோம் உமை (24)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.