(Reading time: 6 - 12 minutes)

அவை நிலை

கூக்குரலும்

கொப்பளிக்கும் அழுகையும்

மன்னர் மனம் மாற மன்றாட்டும்

கல்தியேர் யவனர் இரு குழு நிலை

அதில் சம நிலை. (25)

 

அரச தீர்ப்பு

கொலை செய்ய

கொள்ளையாட

மண துணை இருக்க

மற்றோரை நோக்க

பொய் புரட்டு பிழை சாட்சி பகர

ஓய்வே இன்றி உழைக்க

உடல் தந்த பெற்றோர்

உடல் பேண உணவு உடை

தரா மக்கள் பிழைக்க

இங்கு தடை

இன குல மத முறைமை

எதுவும் தடுக்காது இவ் வரைவு

இது அரச முடிவு. (26)

 

இன்ன பிற

இறை நம்பிக்கை

குல முறைமை

இன வழமை

இதில் பிறர் காண கூடாது குறைவு

அவரவர்க்கு அவரவர் முறைமை உயர்வு (27)

 

கல்தியேன் ஒருவன்

விரும்பினால் பெற்றோருக்கிடலாம் சிதை

கிரேக்கன் ஒருவன்

விரும்பி உண்ணலாம்

முன்னவர் சதை

அது அவன் சுய  {tooltip}விழை {end-link}.விருப்பம்{end-tooltip}

இதில் இடாது இவன் சட்டம் தலை.

சிதை மூட்டினாலும்

புதை மூடினாலும்

தேசத்திற்கு ஏதுமில்லை குறை

இதுவே செங்கோல் நிலை. (28)

 

அவை செயல்

அவை ஏற்றது அரசன் முடிவு

கல்தியேரும் களிப்புற்ற யவனரும்

கட்டியணைத்து மகிழ்வு பகர்வு

செங்கோல் கொண்டவன் முகத்தில் நிமிர்வு

செத்துக் கொண்டிருந்தது அங்கே ஒருவள் காழ்ப்புணர்வு

நறுமீன் மனதில் சுயநிலை உழவு (29)

 

என் குடி

என் குலம்

என் உணர்வு

யாமே உயர்வு

என்னில் இல்லை நீதிக் குறைவு

என்னைப் போல் இல்லை இவன் குறைவு

எண்ணி இருந்தேனே

என் புறமிருந்து கண்டேனே பாவை

இவனைப் போல் நடுநிலமை கொண்டேனா பார்வை? (30)

 

அமைச்சர் உரை

அனைவரும் சமம்

அற்புத சட்டம்

ஆணையிட்டவன் எங்கள் வரம்

பெரும் சுகம் நிரந்தரம்

இவனால் வாழும் பெர்ஷியம்.

உலகு காணும் அவன் சீலம்

  {tooltip} மாதிரம் {end-link}அனைத்து திசை{end-tooltip} எங்கும் செங்கோ புகழ் கீதம் (31)

 

அமைச்சர் கேள்வி

சட்டம் சம்மதம்

இனி ஒரு தனி வினா உதயம்

மன்னன் மனம் விரும்புவது எம்மதம்?

எக் குல முறை உன் இல் வழங்கும்? (32)

 

ஷெஷாங்கன் பதில்

பார் காப்பவனுக்கு இல்லை மதம்

பல குலம் சுமப்பவனுக்கு ஏதுமில்லை குலம்

அரசனுக்கும் இல்லை சுயம்

அது பொதுவாழ்வு.

ஷெஷாங்கனுக்கே உண்டு தெய்வ பயம்.

செய்வதுண்டு ஒரு வகை வழிபாடு

செத்ததும் செல்வேன் தேவன் வீடு

என்பதெல்லாம் உண்டு என் உணர்வோடு

அது என் தனி வாழ்வு

மனைவி மகன் மகள் அறியலாம் அதை

மற்றவர்க்கில்லை அக் கதை

சிரித்திட்டான். (33)

 

சிதறிய ஓர் காதல் விதை

சென்று விழுந்தது

அரசியாய் வந்திருந்தவள்

மன அறை. (34)

 

விளக்கம்: இறந்தோர் இறுதிச் சடங்கு பற்றி இங்கு குறிப்பிட்டுள்ள விவாதம் மற்றும் மன்னனின் முடிவு ஹெரடோடஸ் எழுதிய ஹிஸ்டரி நூலில் குறிக்கப்பட்டுள்ளது. கல்தியே என குறிக்கப்பட்டுள்ள  இனம் சிந்து சமவெளி தாண்டி கிழக்கே இருந்ததாகவும் அந்நூலில் குறிக்கப்பட்டுள்ளது. யவனர் என குறிக்கப்படுபவர் கிரேக்கர் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர். நன்றி

தொடரும்

நறுமீன் காதல் - 06

நறுமீன் காதல் - 08

{kunena_discuss:789}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.