(Reading time: 5 - 9 minutes)

08. நறுமீன் காதல் - அனு.ஆர்

Narumeen

பழகுதமிழில் புழங்காத சில வார்த்தைகளுக்கு tool tip (கோடிட்ட வார்த்தைகள்) ஆக அருஞ்சொற்பொருள் கொடுத்துள்ளேன். நன்றி 

நறுமீன் செஷாங்கனை விரும்ப தொடங்கல்

அவைதனில் அன்றாடம் சில வழக்கு

தலைமகன் பிறழாது செய்திடும் தீர்ப்பு

வரை மதில் மறைவில் தமையனிடம் அதை பகிர்வு

குறையின்றி அவன் கொள்ளும் வியப்பு

பிறைநுதல் பெண்ணுள் பெருமித தவிப்பு

உரை செய்திடும் உளம்; அது காதல் விதை முளைப்பு  (1)

 

செஷாங்கன் விலகியே இருத்தல்

வாக்கது மாறாமல்

வரேன் என்ற வாய் சொல் மீறாமல்

அரியணையில் அவள் புறம் பாராமல்

அருங்கடியில் அவளறை காணாமல்

தனித்தே நின்றான் யுவன்,

தற்கட்டுப்பாடு தளராமல்

விலகி நின்றவன் செயல் தாளாமல்

வீங்கு காதல் நறுமீன் உளமாதல் (2)

 

நறுமீன் செஷாங்கன் முதல் மணம் நினைத்து மறுகல்

ஆயினும் ஆயினும் ஆயினும்

அவன் அந்நியளை மணந்தவன்

கணவனாகி இணைந்தவன்

பின் குறை சொல்லி பிரிந்தவன்

கோ குடியிடம் குறை காணலாம்

தாய் மகவையே சிரம் கொய்யலாம்

குற்றமிருப்பின். குறையலாகாது நீதியே (3)

 

மாலையிட்டுக் கொண்டவன்

மனைவி என்றான பின்

பிரியலாமோ அவளையே

தண்டனை என்ற பெயரிலே?

மரணம் காதும் மாறாது சொந்தம்

என்ற வாக்குதானே திருமண பந்தம்

மீறலாமோ அதை வழியிலே? (4)

 

தேவன் இணைத்ததாமே மண பந்தம்

மரணம் தவிர மண துணை கூட

பிரிக்க இயலா சொந்தம்

இன்றும் அவளது அவனல்லவா

இறைவன் எதிரில் இவன்?

இடையில் சென்றால் இவள்

உறவின் பெயரென்ன தெய்வம் முன்? (5)

 

நறுமீன் இறைவனிடம் வேண்டல்

தவிர்த்தாள் தன் தளிர்காதலை

வெறுத்தாள் தன் இதயம் அவன் பால் சாய்தலை..

உணர்ந்தாள் முள்ளிடைப்பட்ட கீழ் திசை கொண்டலாய்

எரிந்தாள் எரிதழல் ஏறிட்ட ஆ நெய் தூரலாய்

பகர்ந்தாள் தன் வேதனை குறையாமல்

தெய்வம் தாள் (6)

 

செவி செய்தவன் கேளானோ?

விழி தந்தவன் பாரானோ?

குரல் தந்தவன் பதில் கூறானோ?

செப்பிட்டான் ஓர் விளக்கம்

சேடியர் கொணர்ந்த நடபடிகள் புத்தகத்தில்

செய்திட்டான் நல் இணக்கம்

நறுமீன் வரையில் பதி மேல் விருப்பம் (7)

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.