(Reading time: 5 - 9 minutes)

 

நறுமீன் அரசவை நடபடிகள் புத்தகம் படித்தல்

பகற்பொழுதில் கடைவிழியில்

பதி பார்த்து காதல் கசிந்துருகி

இருள் பொழுதில் இவளறையில்

இதற்காய் இவள் சுயம் கடிந்தழுது

நதியானவள் நலிந்திருந்த வேளையிலே

நடபடிகள் பதிவுகள் நயனங்களில்; நற்தாதி செயல்.

நாடி படித்திட்டாள் நாயகன் முதல் திருமண முரண் (8)

 

வஸ்தி திருமண கதை

பால்யம் முதல் பாராளுபவன் பாதியாய்

காலம் முடியும் வரை காவலன் மனைவியாய்

வரியப் பட்டவள் வஸ்தி வைர மங்கை

வரிந்தது செஷாங்கன் தந்தை

வஞ்சி வளர்ந்தது இவன் இல் என்பது உண்மை (9)

 

வஸ்தி வளர்ப்பு முறை

வரி சட்டம், {tooltip}வரைவு {end-link} திருமணம்{end-tooltip} முறைமை

வரல் புகல் நடபடிகள்

பட்டத்து அரசி பதவி செயல்கள்

பலவருடம் கற்றவள் அந்நங்கை

செஷாங்கன் மனைவி என்றே

பகர்ந்தனள் தன்னை

பதவி நினைவு அவளுள் அகந்தை (10)

 

ஏழு நாள் திருமண விருந்து

ஏழு நாள்  {tooltip}கரண{end-link} திருமணம்{end-tooltip} விருந்து

ஏந்திழையும் செய்தாள் நன்று

இறுதி நாள் {tooltip}மன்றல்{end-link}திருமணம்{end-tooltip}  அன்று

இவள் அறை முன் வந்தழைக்க

வரவேண்டும் செஷாங்கன் என்று

வழி பார்த்திருந்தாள் {tooltip}செண்டு{end-link}பூசெண்டு{end-tooltip}

வதுவை முறையில் அஃது உண்டு (11)

 

அவையினர் வஸ்தியை அழைக்க செலல்

சென்றிட்டனர் அவை மேலோர் சூழ்ந்து

செஷாங்கன் வர சொல்லும் ஆணை சுமந்து

வர மறுத்தாள் வஸ்தி வஞ்சினம் கொண்டு

வகையில்லை இஃது அவமானம் என்று

வரி சட்டம் மறந்தாள் அகந்தையால் {tooltip}ஈண்டு{end-link}இவ்வாறு{end-tooltip}

வர சொன்னவன் மன்னன் என்பதை மறந்தாள்

அறிவு மாண்டு (12)

 

திருமண நிறுத்தம்

அவையை அரசாணையை

அவனியை ஆளும் அரசனை

அவமதித்தாள் அகந்தையால்

இவளுக்கில்லை தகுதி இறைவியாய்

இல்லறம் காண துணைவியாய் (13)

 

 

அவை தீர்ப்பு

வரேன் என்றவள் வரல்

வேந்தன் முன் இது முதல்

செப்பிட்டது அவை {tooltip}முரல்{end-link}கதறி{end-tooltip}

செய்கையில் நின்றது மன்றல்

முதல் கண்ட மணம் இதில்

முடிவு காணதே முற்றானது (14)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.