(Reading time: 5 - 9 minutes)

றுமீன் உள நிலை

நடந்தேறவில்லை திருமணம்

நங்கை வஸ்தி சதியாகவில்லை முழுவதும்

இவள் பதிக்கே என்றதும் உளம்

இரண்டாய் இவளில்லை இங்ஙனம்

இனி அவனுடன் நறுமீன் {tooltip}ஏகம்{end-link}ஒன்று{end-tooltip}

இயம்பும் காதல் மகள் மனம். (15)

 

நறுமீன் தயக்கம்

செவ்வதனம் சூழ்ந்து கவ்வும்

{tooltip}கங்கன்ன{end-link}தீ கங்கு போன்ற{end-tooltip}  செங்கோபம்

செப்பிடத்தான்

சொல் கொண்டு சிதறிடத்தான்

இயலும் இந்த

பொன்னன்ன பெண்பாவைக்கு (16)

 

கொண்டவன் மேல் கொற்றவன் மேல்

குல பேதம் காணாது கோலேச்சும்

தன்னவன் மேல் கொண்டுவிட்ட

{tooltip}துமியன்ன{end-link}துளி அளவு{end-tooltip}  {tooltip}தண்{end-link} குளிர்ந்த{end-tooltip}  காதல்

துடி இடை துவண்டு விழ

துயில் இன்றி கண் நோக

கைவளை கழன்றுருவ (17)

 

மலையன்ன {tooltip}மாமேதகு{end-link}பெரிதும் மேன்மையுமானதுமான{end-tooltip}

நிலை கொண்ட நாள் பின்னும்

தலைவன் பால் தலை குனிந்து

தன்னிலை உரைந்திட 

தயங்குநிலை. (18) 

 

விளக்கம்: செஷாங்கனுக்கு வஸ்தியுடனான திருமண விழா நிறைவு பெறாமலே இறுதி நாளில் ரத்தாகிவிட்டது என்ற ஒரு கருத்தும் சில வரலாற்று வல்லுனர்களிடம் நிலவுகின்றது. அதை நான் இங்கு எடுத்து பயன்படுத்தி உள்ளேன்.

 மற்றபடி பெரும்பாலோனரின் கருத்து திருமணம் நடந்து மனைவியாய் வாழ்ந்து, அரசியாய் ஆண்டு கொண்டிருந்த வஸ்தி அரசவைக்கு வரச் சொன்ன அரசாணையை மீறியதால் அரசன் முன் அவள் வரவே கூடாது என தண்டணை பெற்றாள். அதனால் முறிந்தது  விவாகம் என்றே நம்புகின்றனர்.

எப்படி இருந்தாலும்  நறுமீன் நிஜத்தில் இதற்காய் வருந்தி இருக்கும் வாய்ப்பு மிக குறைவே. அவளது காலத்தில் அவளது தேசத்திலும் மன்னர் பல மணம் காணும் முறை இருந்து வந்ததால் இதை அவள் ஓரளவு இயல்பாகவே ஏற்றிருப்பாள் என்று தான் நம்புகின்றேன். ஆனால் என் வரையில் இதை இப்படி பார்க்க பிடித்திருக்கிறது. அதனால் இக்கோணத்தில் எழுதியுள்ளேன்.

 

 

வெகு காலம் பின்பு மீண்டுமாய் தொடங்கியுள்ளேன் நறுமீன் காதலை. மன்னிக்கவும் இத்தனை கால தாமதத்திற்கு.

இடையில் விடாமல் முடிந்தவரை வாரம் ஒரு முறையாவது நறுமீனை எழுதி இன்னும் சில வாரங்களில் முடித்துவிட முயல்கின்றேன்நன்றி

தொடரும்

நறுமீன் காதல் - 07

நறுமீன் காதல் - 09

{kunena_discuss:789}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.