(Reading time: 15 - 30 minutes)

ஹ்ம்ம்…கும்....”

“…..”

“ஹ்ம்ம்… காஃபி…”

“…..”

“காஃபி வேண்டாமா?... எழுந்திரிங்க…” என மைவிழியனை எழுப்பிக்கொண்டிருந்தாள் மஞ்சரி…

அவள் எழுப்ப, எழுப்ப, அவன் அசந்து தூங்கி கொண்டிருப்பதைப் பார்த்தவளுக்கு கோபம் தலைக்கேறியது…

“ஒருத்தி மெனக்கெட்டு காஃபி போட்டுக்கொண்டு வந்து கொடுத்தா, அசையாம படுத்திருக்கீங்களா?... ராத்திரி முழுக்க நான் தூக்கம் வராம தவிச்சு போய் இருந்தா, நீங்க கும்பகர்ணன் மாதிரி விடிய விடியவா தூங்குவீங்க… இருங்க… உங்களை இப்போ என்ன பண்ணுறேன்னு பாருங்க…” என்றவள் தண்ணீரைக்கொண்டு கணவனை எழுப்பினாள்…

சில்லென்ற நீர் தன் மேல் பட்டதும், “அய்யோ மழை… மழை… மழை பெய்யுது… அம்மா… எங்க இருக்குற…” என்றபடி எழுந்தான் மைவிழியன்…

பதட்டத்துடன் எழுந்து அமர்ந்தவன், “சே… மழை இல்லையா?.. அப்புறம் எப்படி என் மேல ஈரமாச்சு?...” என வெளிப்படையாகவே கேட்க…

“ஆ… நான் தான் தண்ணீர் எடுத்து ஊற்றினேன்…” என்றாள் மஞ்சரி அவனின் முன்னே வந்து…

“அடிப்பாவி… ராட்சஸி… உனக்கு என்னடி நான் பாவம் பண்ணினேன்??... இப்படி தூக்கத்தை கலைச்சிட்டியேடி…”

“என்னது… ராட்சஸியா???... ஓஹோ… ஆமா… ஆமா… அப்படித்தான் தெரியும் உங்களுக்கு… ஏன் சொல்ல மாட்டீங்க?... உங்களுக்கு போய் காஃபி எடுத்துட்டு வந்தேன் பாருங்க… என்னை சொல்லணும்….” என அவள் நகர,

“ஹேய்… நில்லுடி… காஃபி எடுத்துட்டு வந்தா, எழுப்பி கொடுக்க வேண்டியது தான…. அதை விட்டுட்டு இப்படி நீ எடுத்துட்டு வந்த காஃபியை நீயே எடுத்துட்டு போற?...”

“காஃபி கொண்டு வந்து கொடுக்கலாம்னு தான் நானும் வந்தேன்… வந்து பார்த்தா தான் தெரியுது… கும்பகர்ணன் மாதிரி தூங்கிட்டிருக்கீங்க… நானும் எவ்வளவு தான் சொல்லி எழுப்புறது?... அதான் தண்ணியை ஊத்திட்டேன்… சிம்பிள்….”

“அடிப்பாவி… சொல்ல சொல்ல எழுந்துக்கலைன்னா, தொட்டு எழுப்ப வேண்டியது தானடி…”

“என்னது?... ஓ… அந்த ஆசை வேற உங்களுக்கு இருக்கா மனசுல… நேத்து ராத்திரி சொன்னது நியாபகம் இருக்கா இல்லையா???...”

“விடிய விடிய அதை நினைச்சுத்தாண்டி தூக்கமே வரலை… ஏதோ விடிஞ்சப்பின்னாடி தான் கொஞ்சம் கண் அசந்தேன்… அதையும் இப்படி தண்ணீ ஊத்தி கெடுத்துட்டியேடி….”

“இதோடா… நீங்க மட்டும் தான் தூங்கலையா?... நானும் தான் தூங்கலை… எனக்கும் தான் தூக்கம் வரலை… அதுக்காக நான் என்ன உங்களை மாதிரி தூங்கிட்டா இருக்கேன் இப்போ??...” என அவள் சட்டென்று உண்மைகளை சொல்லிவிட,

அவன் கண்ணில் மின்னல் வந்து போனது…

சட்டென்று போர்வையை தூக்கி எறிந்தபடி அவன் எழுந்துகொள்ள, அவள் திருதிருவென முழித்தபடி பின் நகர்ந்தாள்…

“சோ… நீயும் தூங்கலை…????...” என்றபடி அவன் அவளருகில் செல்ல முற்பட, அவள் பின் சென்றாள்…

“சொன்னது நியாபகம் இல்லையா?... கிட்ட வராதீங்கன்னு சொல்லியிருக்கேன்…”

“எல்லாம் நினைவு இருக்கு… இப்போ சொன்னியே தூங்கலைன்னு அதுவும் நினைவு இருக்கு,,,,” என்றவன் மேலும் முன்னேற, அவள் சுவரில் மோதி நின்றாள்…

“இனி நீ தப்பிக்க முடியாது…” என்றவன் அவளின் இரண்டு புறமும் கைகளை வைத்து அணை போல் தடுக்க…

அவள் அவன் கைச்சிறைக்குள் நின்றபடி தவித்துக்கொண்டிருந்தாள்…

“எனக்கு உங்க மேல இருக்குற கோபம் இன்னும் போகலை…” என்றாள் படபடப்பான குரலில்…

“ஓஹோ… அப்படி கோபம் இருக்குறவ, எதுக்கு தூங்காம இருக்கணும்… ராத்திரி முழுக்க???...”

“அது… அது…. தூக்கம் வரலை… தூங்கலை…” என்றாள் அவளும் விடாமல்…

“ஆஹா.. அப்படியா…” என்றவன் மூச்சுக்காற்று அவள் மேல் பட, அவள் தன் வசம் இழக்க துவங்கினாள்…

“இப்போ வழி விடப் போறீங்களா இல்லையா?...” என்றவள் குரல் பலவீனமாக வர, அவன் சிரித்தான்…

“வழி விட முடியாதுடி… என்ன செய்வ?...” என அவன் கேட்க… அவள் பதில் சொல்லாது தரையை வெறித்தாள்…

அவளருகில் மேலும் நெருங்கியவன், “அன்னைக்கு நான் செஞ்சது தப்புதாண்டி… அது உன் மேல இருக்குற காதலில் தான்டி அப்படி செஞ்சேன்… எங்கூட நீ வாழப்போற வாழ்க்கையில அழுகையே எட்டிப்பார்க்க கூடாதுன்னு தாண்டி, அன்னைக்கு ஒருநாளில் உன் அழுகை எல்லாம் போயிடணும்னு தாண்டி அப்படி செஞ்சேன்… ஆனா அது உனக்கு என் மேல கோபத்தை இந்த அளவு ஏற்படுத்தும்னு நான் நினைக்கலைடி… நான் உன்னை தாண்டி விரும்புறேன்… உன்னை மட்டும் தாண்டி விரும்புறேன்… நேத்து என்னை தூங்கவிடாம செஞ்சிட்டு நீயும் தானடி தூங்காம இருந்துருக்குற?... இதுலயே புரியலையா என் மேல உனக்கும் காதல் இருக்குன்னு இன்னும் குறையாம?... எப்பதாண்டி புரிஞ்சிக்கப்போற?... என்னையும் என் காதலையும்???...” என்று தவிப்புடன் அவன் கேட்க…

அவள் விழிகளில் நீர் தளும்பியது…

“இதுக்குதாண்டி அன்னைக்கு அந்த பாடு பட்டேன்… இனி நீ அழக்கூடாதுன்னு… பாரு இப்போ நீ அழற?... கஷ்டமாயிருக்குடி… எனக்கு…”

“உங்கூட நான் வாழணும்னு ஆசையா இருக்குடி… உன்னை ரொம்ப அன்பான புருஷனா பார்த்துகணும்னு மனசு முழுக்க தோணுதுடி… என்னை மன்னிக்கமாட்டியாடி என் மைனா?...” என அவன் மனதை அவளிடம் கொட்டிவிட்டு அவள் முகத்தைப் பார்க்க…

அவள் அழுதுகொண்டே, அவனது கன்னத்தில் அடித்தாள் பட்டென்று…

அவள் அடித்ததை வாங்கிக்கொண்டு, சிரித்தவன், “சாரிடி மைனா… பட் ஐ லவ் யூ டி…” என்றான் காதலுடன்…

“போடா லூசு….” என்றபடி அவனது நெஞ்சில் சரமாரியாக அடித்து குத்தியவள், அவனது சட்டையைப் பிடித்து,

“இனி இப்படி கிறுக்குத்தனம் செய்வியாடா?... சொல்லு?... செய்வியா?..” என கேட்க…

“என் மைனாவ மீறி இனி நான் எதும் செய்யமாட்டேன்… சாரிடி… ஐ லவ் யூ டி மைனா…” என அவன் அழுத்தி சொல்ல,

“ஐ லவ் யூ டூ விழியா…” என்றபடி அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் மஞ்சரி…

சந்தோஷத்துடன் அவளை அணைத்துக்கொண்டவன், மெல்ல அவள் முகம் நிமிர்த்த, அவள் மறுத்தாள்…

பலம் கொண்டு நிமிர்த்தி அவள் விழியோடு விழி பார்க்க, அவன் விழியில் ததும்பி நின்ற காதலிலும், ஆசையிலும், மொத்தமாய் அவன் வசமானாள் அவள்…

மெல்ல அம்பி அவன் கன்னத்தில் முத்தமிட, அவன் அணைப்பு இறுகியது…

சிறிது நேரம் அவன் அணைப்பில் அடங்கியவள், மெல்ல விலகினாள்…

“ஏண்டி?... எங்க போற?...” என்ற அவனது குரலில் தவிப்பு அப்பட்டமாக தெரிய…

“காஃபி கொடுக்க வந்த நான் இன்னும் கீழே போகாம இருந்தேன்னா, அப்புறம் அவ்வளவு தான்…”

“அதெல்லம் யாரும் எதுவும் சொல்லமாட்டாங்கடி… ப்ளீஸ்… போகாதடி மைனா…” என அவன் கெஞ்ச…

அவன் நெற்றியில் முத்தமிட்டு, அவனை கொஞ்சி கெஞ்சி சமாதானப்படுத்தி விட்டு கீழே சென்றாள் அவள்…

ஹாய்… ஃப்ரெண்ட்ஸ்…

வேலனும் வள்ளியும் நடத்துற நாடகம் தேவிம்மாக்கு தெரிய வருமா???..

ஹ்ம்ம்… யோசிச்சிட்டே இருங்க…

நான் உங்களை மறுபடியும் அடுத்த வாரம் மீட் பண்ணுறேன்… டாட்டா… 

வரம் தொடரும்…

Episode # 11

Episode # 13

{kunena_discuss:866}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.