(Reading time: 21 - 42 minutes)

13. பிரியாத வரம் வேண்டும் - மீரா ராம்

ன்ன கஸ்தூரி… என்ன யோசனையில் இருக்குற???...”

“ஒன்னுமில்லங்க… சும்மாதான்…” என்றார் தன் கணவர் இந்திரனிடம் கஸ்தூரி…

மனைவியின் கைப்பிடித்தவர், “இப்போ சொல்லு… என்னாச்சு???....” எனக் கேட்க…

Piriyatha varam vendum

“வ்ருதுணனும் பாலாவும் புரிஞ்சிகிட்டு கல்யாணம் பண்ணிகிட்டாங்க… சந்தோஷம்… ஆனா, வள்ளி???... அவளை நினைச்சு தாங்க… என் யோசனை எல்லாம் இருக்கு…”

மனைவி சொல்ல நினைப்பதை புரிந்து கொண்டவர், அவருக்கு பதில் சொல்லும் முன்னமே, “அப்பா….” என்ற தன் மகள் குரல் கேட்க, இருவரும் வேகமாக எழுந்து வாசலுக்கு விரைந்தனர்…

“வாங்க மாப்பிள்ளை… வா இந்து…” என்று வரவேற்றார் இந்திரன் புன்னகையுடன்…

“வாங்க மாப்பிள்ளை… வாம்மா…” என கஸ்தூரியும் வரவேற்க, அவள் தகப்பனிடம் செல்லம் கொஞ்சி விட்டு தாயிடம் சென்றாள்…

கஸ்தூரியின் முகத்தைப் பார்ப்பதும், பின் சொல்லாமல் இருப்பதுமாய் இருந்தவளை, கஸ்தூரி விநோதமாக பார்த்தார்…

“என்ன பாலா?... சொல்லுடா…”

“அம்மா…. வந்து…”

“என்னம்மா?... என்ன தயக்கம்?... சொல்லு?...”

“என்னை மன்னிச்சிடுங்கம்மா… நான் உங்ககிட்ட நடந்துகிட்ட முறை தப்புன்னு எனக்கு புரிஞ்சிட்டும்மா… சாரிம்மா….” என்றவள் கண்கள் கண்ணீரை சிந்தியது வேகமாக…

“ஹேய்… என்ன இது… அழுதுக்கிட்டு… முதலில் கண்ணைத்துடை….” என கஸ்தூரி சொல்ல…

“உங்களுக்கு என் மேல கோபம் போகலையாம்மா?... என்னை மன்னிக்க மாட்டீங்களா?...”

“லூசு… உன் மேல எனக்கு கோபம் கிடையாதுடா எப்பவும்… வருத்தம் தான்… புரிஞ்சிக்காம இருக்குறியே அப்படிங்கிற கவலைதான்… நீ என் பொண்ணுடா… உன் மேல அம்மா எதுக்கு கோபப்படப் போறேன் சொல்லு???” என கேட்டது தான் தாமதம் என்பது போல் தாயைக் கட்டிக்கொண்டாள் பாலா…

“அம்மாவ பார்க்கணும்… அம்மாவ பார்க்கணும்னு ஒரே அடம்… அதான் கூட்டிட்டு வந்தேன்… இங்க வந்து உங்களைப் பார்த்ததும் அவ முகத்துல தெரியுற சந்தோஷம் ஒன்னு போதும் அத்தை… என் பசி கூட பெரிசா தெரியலை…” என்றான் வ்ருதுணன்…

“அடடே… மாப்பிள்ளை… என்ன சொல்லுறீங்க?... இன்னும் சாப்பிடலையா?... நானும் கேட்க மறந்துட்டேன்… சாரி மாப்பிள்ளை…” என்றவர், “வந்தவங்களை இன்னும் நிற்க வைச்சே பேசுறோம் கஸ்தூரி… போய்… டிபன் எடுத்து வை… சீக்கிரம்…” என்று மனைவியிடம் கூற…

“சரிங்க…” என்று கணவரிடம் கூறியவர்,

“ஏண்டி… சாப்பிடக்கூட விடாமலா அவரை இங்க கூட்டிட்டு வந்த?...” என்று சற்றே அதட்ட…

“அய்யோ… அத்தை… அவ மேல தப்பு இல்லை… பார்க்கணும்னு காலையிலேயே சொன்னா, அதான் உடனே கூப்பிட்டு வந்துட்டேன்… அவளைத் திட்டாதீங்க…”

“நீங்க இப்படியே செல்லம் குடுத்தீங்கன்னா, அப்புறம் ஒன்னும் செய்ய முடியாது மாப்பிள்ளை பார்த்துக்கோங்க…” என்று சிரித்தவண்ணம் சொல்லிவிட்டு சமையலறைக்குள் நுழைந்தார் கஸ்தூரி…

ம்மாகிட்ட நான் உங்களை சாப்பிட விடாம கூட்டிட்டு வந்துட்டேன்னு உங்க வாயாலே சொல்லிட்டு, அப்புறம் என்னை திட்டாதீங்கன்னு வேற சொல்லுறீங்களா???... இருங்க இருங்க உங்களை கவனிச்சிக்கிறேன்…” என்று கணவனின் அருகே வந்து மெல்ல கிசுகிசுத்தாள் பாலா…

“நீ கவனிக்க நானும் காத்திட்டிருக்கேன் டார்லிங்க்….” என்றான் அவனும் குறும்புடன்….

“சீ… போங்க….” என்றபடி சமையலறைக்குள் சென்றவள், கஸ்தூரியுடன் சேர்ந்து, தகப்பனுக்கும் கணவனுக்கும் பரிமாறினாள் உணவை…

“சரிம்மா… நாங்க கிளம்புறோம்….” என்றபடி புன்னகையுடன் இருவரிடமும் விடைபெற்று காருக்கு விரைந்தாள் அவள்…

அப்போது, “மாப்பிள்ளை உங்க கார் கீ…” என்று இந்திரன் குரல் கொடுக்க…

“திரபா… நீ இரு… நான் போய் வாங்கிட்டு வரேன்….” என்றபடி வ்ருதுணன் சென்றான்….

வந்தவனிடம், “ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை… என் பொண்ணோட இந்த மாற்றத்துக்கு கண்டிப்பா நீங்க தான் காரணம் என்று எனக்குத் தெரியும்… ஆனா, என் விஷயத்தை விட, வள்ளி விஷயத்துல அவ மனம் மாறினா அது ஒன்னே எனக்கு போதும் மாப்பிள்ளை… என்னோட இந்த ஜென்மத்துக்கும்….” என்றார் கஸ்தூரி கண்கள் கலங்க…

“நீங்க சொல்லுறது போல, நான் எதுவுமே பண்ணலை அத்தை… பாலா புரிஞ்சிகிட்டா அவ்வளவுதான்… வள்ளியையும் அவ சீக்கிரம் புரிஞ்சிப்பா… அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு… அப்புறம் இதுல என்னோட சுயநலமும் நிறைய இருக்கு அத்தை…” என்றான்…

இருவரும் சுயநலமா?... என கேள்வியுடன் அவனைப் பார்க்க..

“உண்மைதான் அத்தை… என் தங்கையுடன் என் மனைவி சுமூகமான உறவு நிலையில் இருக்கணும்னு நான் விரும்புறேன்… அப்போ அது என்னோட சுயநலம் தானே…” என்றவன் சிரிக்க…

“மாப்பிள்ளை… ஆயிரம் தான் நீங்க அப்படி சொன்னாலும், நீங்க செஞ்ச, செய்யப்போற உதவிக்கு நாங்க எப்படி நன்றி சொல்லப்போறோமென்று தெரியலை…” என்றார் இந்திரன் வ்ருதுணனின் கையைப் பிடித்தபடி…

“அப்படி நன்றி சொல்லுறதுன்னா நான் தான் உங்க இரண்டு பேருக்கும் சொல்லணும்… என் மேல பாசம் வச்சிருக்குற தங்கை, என் மேல அன்பை வைச்சிருக்குற மனைவி, இரண்டு உறவும் என் வாழ்க்கையில கிடைக்குறதுக்கு காரணமே நீங்க இரண்டு பேரும் தான்… உங்ககிட்ட பட்ட அந்த நன்றிக்கடனுக்குத்தான் நான் இப்போ பாலா மனசை அவளுக்கே புரிய வைச்சு வள்ளியோட சேர்த்து வைக்க முயற்சி பண்ணுறேன்…” என அவன் சொல்லியதும் இந்திரன் அவனை அணைத்துக்கொண்டார் சந்தோஷத்துடன்…

ரு மணி நேரத்திற்குப் பிறகு, சிவநாதனின் இல்லத்தில்…

“வா கஸ்தூரி… வாங்க தம்பி…” என்று உமா சொல்லிக்கொண்டே கஸ்தூரியின் அருகே செல்ல…

சிவநாதனும், “வாங்க…” என்று வரவேற்றார்..

“நீயும் தம்பியும் இங்கேயே இருந்துடுங்களேன்… நீ என்ன சொல்லுற?...” என உமா ஆசையாக கேட்க, கஸ்தூரி, இந்திரனைப் பார்த்தார்…

“என்ன கஸ்தூரி, எதுவும் பேசமாட்டிக்குற?... என்ன விஷயம்?...” என்று கேட்ட உமாவிடத்தில், சற்று முன் நடந்ததை சொன்னார் கஸ்தூரி…

“ரொம்ப சந்தோஷம் கஸ்தூரி… என் மனசுக்கு இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?... ஆயிரம் சொல்லு என் பாலா பாலா தான்…” என்று குதூகலித்தவர்,

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்க மாப்பிள்ளையும், பாலாவும் வந்திருந்தாங்க… ஆனா, பாலா எங்கிட்ட எதுவும் சொல்லலை கஸ்தூரி, அம்மா வந்து சொல்லுவாங்க பெரியம்மா… அவங்க கிட்டயே கேட்டு தெரிஞ்சிக்கோங்க சரியான்னு சொல்லிட்டுப் போனா… இப்போதான் புரியுது அது என்ன விஷயம்னு…” என்று சிரித்தார் உமா…

“ஹ்ம்ம்… ஆமா அண்ணி… எல்லாத்துக்கும் காரணம்… நம்ம துணா மாப்பிள்ளை தான்…” என்றார் இந்திரனும்…

“எல்லாமே நல்லதாவே நடக்குது சின்னவனே… ஆனா, இன்னொன்னும் நடந்தா ரொம்ப நல்லா இருக்கும்…” என்ற சிவநாதனை என்ன என்ற பாவனையில் மூவரும் பார்க்க…

“நீயும், கஸ்தூரியும் இங்கேயே வந்துடுங்களேன்… பழைய மாதிரி நாம ஒன்னா இருக்கலாம்… பாலா மனசு மாறிடும்… அதனால தான் சொல்லுறேன்… நீ என்ன சொல்லுற கஸ்தூரி?...”

“சரிங்க மாமா… உங்க விருப்பம் தான் எங்க விருப்பமும்…” என்றார் கஸ்தூரி புன்னகையுடன்…

“இப்பதான் மனசுக்கு நிறைவா இருக்கு கஸ்தூரி…” என்றபடி கஸ்தூரியின் கைகளைப் பிடித்துக்கொண்டார் உமா…

“அக்கா… எனக்கு வள்ளியைப் பார்க்கணும் போல இருக்கு…. நாம போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடலாமா?...”

“சரி கஸ்தூரி… போகலாம்…” என்றவர், “ஆயிரம் தான் இருந்தாலும் என் பொண்ணு என் பொண்ணு தான்… பாரு உடனே என்னைப் பார்க்க வந்துட்டா… எனக்கு ரொம்ப சந்தோஷம் கஸ்தூரி…” என்று சொல்ல…

“பாலா பார்க்க வந்தது சந்தோஷமா இருக்குறதைப் பகிர்ந்துக்க…. ஆனா, என் பொண்ணு வள்ளி அந்த சந்தோஷம் நிலைச்சிருக்கணும்னு தான் வராம இருக்குறா…” என மனதுக்குள் சொல்லிக்கொண்டார் கஸ்தூரி…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.