(Reading time: 21 - 42 minutes)

நாங்க எல்லாரும் கிராமத்துக்குப் போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வரலாம்னு நினைக்கிறோம்… நீங்க என்ன சொல்லுறீங்க மாப்பிள்ளை?...” என மூன்று பேரிடத்திலும் சிவநாதன் கேட்க…

யுவி சட்டென்று தாயைப் பார்த்தான்…

“சிவாண்ணா சொல்லுறது உண்மைதான் வேலா…. நாங்க கொஞ்ச நாள் அங்க இருந்துட்டு வர்றோம்…” என தேவி சொல்லி முடிக்கும் முன்,

“அப்போ நாங்களும் அங்க வர்றோம்….” என்றான் யுவி….

“நீங்களும் அங்க வரணும்தான்… ஆனா இப்போ இல்ல… இன்னும் சில மாசத்துக்கு அப்புறம்…”

“அப்போ அதுவரை… நீ இங்க வர மாட்டியா தேவிம்மா?...” என பரிதவிப்புடன் யுவி கேட்க,

“அம்மா எங்கடா போறேன்… இதோ இங்க பக்கத்துல இருக்குற நம்ம சொந்த ஊருக்குத்தான…” என்று சொல்ல, அவன் முகம் இன்னமும் கவலையில் தான் இருந்தது…

“டேய்… யுவி…. உன் தேவிம்மாவ நான் பார்த்துக்குறேன் நல்லபடியா… சரியா…” என்று வில்வமூர்த்தி சொல்ல…

“ஹ்ம்ம்…” என்றான் அவன்…

“நாங்க ஊருக்கு கிளம்புற அதே நேரத்துல, நீங்களும் வெளியூர் போறீங்க…” என இந்திரன் சொல்ல…

“டேய்… தெளிவாதான் சொல்லேண்டா… பாவம் சின்னப்பிள்ளைங்க… பயப்படப்போறாங்க…” என்றார் நீலகண்டன்…

“நீங்க எல்லாரும் ஹனிமூன் போறதுக்கான டிக்கெட்ஸ்… பிடிங்க…” என்றபடி மூன்று மகன் களிடத்திலும் கொடுத்துவிட்டு

“இரண்டு மாதம் என்றாலும் ஓகே தான்… மூணு மாசம் என்றாலும் ஒகே தான்… சாய்ஸ் உங்களுடையது…” என்றார் விஸ்வமூர்த்தி…

“ஐ…. ஜாலி… சூப்பர்… அப்பா…” என்று குதூகலித்தான் மைவிழியன்…

“ஹனிமூன் போயிட்டு வரோம்… ஒகே தான்ப்பா… ஆனா, அதுக்கு எதுக்கு இத்தனை மாசம்??...” என வ்ருதுணன் கேட்க…

“டேய்… தேவை இல்லாம கேள்வி கேட்டு குட்டையை குழப்பாத…” என மையன் அவனுக்கு மட்டும் கேட்கும்படி முணுமுணுக்க…

“ஹ்ம்ம்… நிறைய இடம் சுத்தி பார்த்துட்டு பொறுமையா வாங்க… அதான் மாசக்கணக்கா டைம் உங்களுக்கு கொடுத்திருக்கோம்…” என்றார் அம்பிகா, விஸ்வமூர்த்தி பதில் சொல்லும் முன்னமே…

“கம்பெனி பொறுப்பை யார் பார்த்துப்பா அப்பா?... அத்தனை மாசம் நிர்வாகம் சரியா நடக்கணும்னா யாராவது ஒருத்தராச்சும் இங்க இருந்தாகணுமேப்பா?...” என யுவி சொல்ல

“ஹ்ம்… சரிதான் யுவி நீ சொல்லுறது… நாங்க இங்க பக்கத்துல கிராமத்துல தான இருக்குறோம்… நாங்க யாராச்சும் வந்து பார்த்துப்போம் வாரத்துல ஒருதடவை… மத்த நாள் எல்லாம் நம்ம மேனேஜர் பார்த்துப்பார்… அவர்கிட்ட அது விஷயமா நான் எல்லாம் பேசிட்டேன்…” என்றார் விஸ்வமூர்த்தி…

பின் சிவநாதன்-உமா, இந்திரன்-கஸ்தூரி, நீலகண்டன்-விஜயா தம்பதியினர் அனைவரும் கிளம்பி சென்றுவிட, வ்ருதுணனும், மையனும் சந்தோஷமாக இருந்தனர் யுவியைத் தவிர…

ன்ன சார் ரொம்ப குஷியா இருக்கீங்க போல?...” என மையனின் அறைக்குள் நுழைந்த மஞ்சரி அவனைப் பார்த்து கேட்க…

“ஹேய்…. மை டியர் மைனா… வா வா… உனக்காகத்தான் காத்திட்டிருக்கேன்…” என்றான் அவன்…

“வந்துட்டு தான இருக்கேன்… அப்புறம் என்ன?...” என்று அவள் சலித்துக்கொள்ள,

“என்னடி இப்போ என்ன ஆச்சு?... ஏன் இவ்வளவு சலிப்பு?...” என்று அவன் பாவமாக கேட்க…

“அச்சோ… மையன் செல்லம்… அதெல்லாம் எதுவும் இல்ல…” என்று அவள் கண்களில் காதலுடன் சொல்ல…

“ஹேய்… எனன் சொன்ன?... செல்லமா?... ஹ்ம்ம்… மைனா… அப்போ….” என்று அவன் இழுக்க…

“ஹனிமூன் போகுற சந்தோஷம் உங்களுக்கு மட்டும் இல்ல… எனக்கும் இருக்கு….” என்றாள் அவள் சிரிப்புடன்…

சிரித்த அவள் இதழ்களை சட்டென்று சிறை செய்தான் மைவிழியன்…

தே நேரம் மொட்டை மாடியில்,

நட்சத்திரம் நிலவின் மிக அருகே அந்த காரிருளில் அழகாக துயில் கொண்டிருப்பதை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான் யுவி…

அவன் தோளின் மீது ஒரு கரம் விழ, “தேவிம்மா….” என்றபடி திரும்பினான் அவன்…

“அம்மா மேல கோபமா வேலா?...”

“இல்ல தேவிம்மா… ஆனா, ஏன் இப்படி முடிவெடுத்த நீ?...”

“எனக்கு நீ மகன் அப்படிங்கிறது எவ்வளவு உண்மையோ, அதே அளவு நீ வள்ளிக்கும் கணவன் அப்படிங்கிறதும் மறுக்க முடியாத உண்மை… அவளுடன் தான் நீ இனி உன்னோட பெரும்பான்மையான நேரத்தை செலவிடணும்… பொறந்த வீடு அப்படிங்கிறது ஒரு பொண்ணுக்கு எப்போ புகுந்த வீடுன்னு ஆகுதோ, அதே நேரம், பெத்த மகன் தான் வீட்டுல வாழ வந்த மருமகளுக்கு கணவன் ஆகுறான்… இத்தனை நாள் நீ என் பையனா இருந்த… இனி அவளோட கணவனா தான் இருக்கணும்… என் பையன் அப்படிங்கிற உரிமை எனக்கு உன் மேல நிறைய இருக்கு… அதை யாரும் தடுக்கவோ பறிக்கவோ முடியாது… அதே நேரம் ஒரு மனைவியா அவளுக்கு உன் மேல அதிகப்படியான அதிகாரம் இருக்கு… அதையும் யாரும் தடுக்கவோ பறிக்கவோ முடியாது…. அந்த அதிகாரத்தை நானே அவ கையில உன்னை ஒப்படைச்சு கொடுக்கணும்னு ஆசைப்படுறேன்… அதுதான் உன்னை நம்பி இந்த வீட்டுக்கு வந்தவளுக்கு நான் கொடுக்குற மரியாதை வேலா… ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க, மனம் விட்டு பேச, அடுத்து பயணிக்க போற வாழ்க்கைப் பாதைக்கு இந்த ஹனிமூன் பயணம் ஒரு அச்சாரமா இருக்கும் வேலா… அதுக்காகத்தான், உன்னை அத்தனை மாசம் ஊருக்குப் போக சொல்லுறேன்…” என அவர் சொல்ல…

“என் தேவிம்மா எனக்கு எவ்வளவு முக்கியமோ, அது போல என் மனைவியும் இனி எனக்கு முக்கியம்… வள்ளியை நான் இனி நல்லா பார்த்துப்பேன் தேவிம்மா… உனக்கு அதுதான் சந்தோஷம்னா நான் செய்யுறேன் தேவிம்மா…” என்றான் தாயின் கையைப் பிடித்தபடி…

மகனின் வார்த்தையை கேட்டவருக்கு உள்ளம் குளிர்ந்து விட, அவனின் நெற்றியில் முத்தமிட்டார்…

“எனக்கு உன் மடியில படுக்கணும் தேவிம்மா… இனி எத்தனை மாசம் கழிச்சு உன்னைப் பார்ப்பேனோ தெரியலை… படுத்துக்கவா தேவிம்மா?...” என குரல் கம்ம அவன் கேட்க…

சட்டென்று அவனை அணைத்துக்கொண்டார் தேவி…

மகனை மடி சாய்த்துக்கொண்டவர் அவன் சிகையை கோதிவிட்டு மெல்ல பாடினார்…

அவன் அவரின் விரல்களோடு விளையாட, மகனின் பிள்ளைத்தனத்தை எண்ணி மகிழ்ந்தவர், புன்னகைத்தார் அவனைப் பார்த்து…

அவனும் அழகாய் புன்னகைத்தான் மலர்ந்த தன் தாயின் முகம் பார்த்து…

அதை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த வள்ளியின் இதழ்களிலும் புன்னகை விரிய, மெல்ல அங்கிருந்து அகன்றாள் அவள் மகிழ்வுடன்…

வரம் தொடரும்…

Episode # 12

Table of Contents

Episode # 14

{kunena_discuss:866}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.