(Reading time: 21 - 42 minutes)

ள்ளி எப்படி இருக்குறடா?...”

“நல்லா இருக்கேன் சின்னம்மா… நீங்க வந்ததே எனக்கு தெரியாது… சாரி சின்னம்மா…”

“அதென்ன மாப்பிள்ளை சொன்ன மாதிரியே நீயும் சொல்லுற?... ஹ்ம்ம்…” என கேள்வியாய் கேட்க…

அவள் முகத்தில் மெல்லிய புன்னகை வந்திருந்தது…

“காலையில பாலா வீட்டுக்கு வந்திருந்தாடா….” என ஆரம்பித்து அவளிடத்தில் அனைத்தையும் சொல்லிமுடிக்க,

“நிஜமாவா சின்னம்மா… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு தெரியுமா… என் இந்துக்கு உங்க மேல கோபம் போயிட்டே இப்போ… என் இந்து என் சின்னம்மாக்கு பெரிய சந்தோஷம் குடுத்துட்டாளே…” என குழந்தையாக ஆர்ப்பரித்தவளை ஆற்றாமையுடன் பார்த்தார் கஸ்தூரி…

“ஏண்டி இப்படி இருக்குற?...”

“எப்படி இருக்கேன் சின்னம்மா?...”

“அவ மேல இன்னும் பாசம் குறையாம இருக்குறியே… நிஜமாவே எனக்குப் புரியலை… அவ அப்படி உனக்கு என்ன செஞ்சா இதுவரை?... கஷ்டத்தையும், கவலையையும் கொடுத்ததைத் தவிர?...”

“என்ன செய்யலை அவ எனக்கு?... என்னை அக்கான்னு கூப்பிட்ட என் முதல் சொந்தம் என் இந்து… என் தங்கை… என் சின்னம்மா பொண்ணு… இதை விட வேற என்ன வேணும்? அவளை நான் நேசிக்க…?...” என்று கேட்க வாயடைத்துப் போனார் கஸ்தூரி…

“எனக்கு எதும்னா அவ துடிச்சது இப்பவும் என் கண் முன்னாடி வருது… என் மேல அவளை விட பாசம் வச்சவங்க யாரும் இல்ல… அந்த பாசம் இப்போ மறைஞ்சு போயிருக்கு… கண்டிப்பா அது ஒரு நாள் வெளியே வரும்… அன்னைக்கு என் இந்து எனக்கு கிடைப்பா… எனக்கு அந்த சந்தோஷம் போதும்…” என்றவளின் நெற்றியில் பாசத்துடன் முத்தமிட்டார் கஸ்தூரி…

“சரி உன் இந்து தான்… போதுமா…” என்றவர், “மாப்பிள்ளை நல்லவர்டா… அவர் மனசு கோணாம நடந்துக்க…. நிஜமா இந்த கல்யாணத்துல உனக்கு சந்தோஷம் தான??..” என்று கேட்க…

அவள் பதில் சொல்லாமல் அவரையேப் பார்த்தாள்…

“இந்த கேள்வியை இன்னும் 50 வருஷம் கழிச்சுக் கேட்டிருக்கலாம் தான சின்னம்மா?...  உங்க கொள்ளு பேரப்பிள்ளைகள் பதில் சொல்லியிருப்பாங்க…”

“ஏய்… வாலு… வாலு…” என்று அதட்டியவர், அவர் முகத்தினை நன்கு கூர்ந்து பார்த்துவிட்டு, “எங்கிட்ட நீ எதையும் மறைக்கல தான வள்ளி?...” என கேட்க…

“நான் மறைச்சாலும் இந்நேரம் உங்களுக்குத் தகவல் வந்திருக்குமே… மஞ்சரி மூலமா… அதான் நீங்க வந்ததும் ஒப்பிச்சிருப்பாளே… என்னைப் பத்தி… ஒன்னு விடாம…” என கிண்டலாக அவள் கேட்க…

“வாயாடி… அவ என்ன இல்லாததையா சொன்னா?... சரி… வா போகலாம்…” என்றார் கஸ்தூரி..

வெளியே சென்றிருந்த பாலா-வ்ருதுணன், மற்றும் மைவிழியனும் வந்துவிட, அனைவரும் சேர்ந்து மதிய உணவை உண்டனர்…

“சிவா… என்னடா?... ஏன் அமைதியா இருக்குற?...”

“அது ஒன்னும் இல்ல விஸ்வாண்ணா… சம்மந்தி ஆகிட்டோம் இல்லையா எல்லாரும்… அதான் அண்ணன் எப்படி உங்களை பழையபடி கூப்பிடன்னு யோசிக்குறார்…” என்றார் இந்திரன்

“இது என்னடா இப்படி சொல்லுற… நாம ஒரே ஊர்க்காரங்கடா… அங்க பார்த்து எப்படி பேசி பழகினோமோ, அப்படிதான் நாம இந்த ஊருக்கு வந்த பிறகும் பார்க்குறப்போ பேசிப்போம்… இப்ப மட்டும் என்ன புதுசா சம்மந்தி ரூல்ஸ் எல்லாம்?...” என வில்வமூர்த்தி கேள்வி கேட்க…

“அது வந்து வில்வா… நான் என்ன சொல்லுறேன்னா….” என சிவநாதன் இழுக்க…

“நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்… இந்த வாங்க போங்க, சம்மந்தி அப்படின்னு கூப்பிட்ட, அப்புறம் நண்பன்னு கூட பார்க்க மாட்டேன்… சொல்லிட்டேன்…” என்றார் விஸ்வ மூர்த்தி கோபமாக…

“அடடா… இப்போ எதுக்கு விஸ்வாண்ணா கோபப்படுறீங்க?... வில்வா… நீயாச்சும் சொல்லேண்டா… அண்ணனுக்கு எடுத்து சொல்லுடா…” என நீலகண்டனும் தன் பங்கிற்கு பேச,

“டேய்…. அடி படுவ… ராஸ்கல்… நானும் உன்னை பார்த்துட்டு தான் இருக்குறேன்…. மஞ்சரியைப் பொண்ணு பார்க்க வந்ததுல இருந்து, என்னமோ நானும் நீயும் பார்த்து பேசினதே இல்லங்குற மாதிரி ஓவர் பில்டப் கொடுக்குற?... என்னடா சின்ன வயசில எங்கிட்ட வாங்கின அடி மறந்து போச்சா?... நான் வேணா மறுபடி நினைவு படுத்தவா?...” என வில்வமூர்த்தி சொல்லி முடிக்கவும்,

“அய்யய்யோ… ஆளைவிடுப்பா சாமி….” என்றபடி பெரிய கும்பிடு ஒன்றை போட்டார் நீலகண்டன்…

“பார்த்தீங்களா அண்ணி, நண்பர்கள் சம்மந்தி ஆயிட்டோம்னு சந்தோஷத்தைப் பார்த்தீங்களா?...”

“இதுல என்ன விஜயா இருக்கு… ஏன் அவங்க மட்டும் தான் சந்தோஷப் படுறாங்களா?... நாம படலையா?... சொல்லு?...” என அம்பிகா சொல்ல…

“சரிதான் அம்பிகா அண்ணி… நாம யாரும் நினைச்சுக்கூடப் பார்க்கலைல்ல சம்மந்தி ஆவோம்னு…” என்றார் உமாவும்…

“உண்மைதான் உமா… இந்த ஊருக்கு வந்த பிறகும் கூட நாம சந்திச்சிக்கிட்டது என்னமோ ஒரு நாலைஞ்சு தடவை தான்… அப்புறம், வள்ளி, துணாவினால் தான் நாம மறுபடியும் ஒருத்தருக்கொருத்தர் நல்லா பார்த்து பேசி பழகிக்க முடிஞ்சது…” என தேவி சொல்லி முடிக்கும் முன்,

“ரொம்ப சரி துர்கா அண்ணி… நம்ம பசங்களால நாம ஒன்னு சேர்ந்துட்டோம்…” என கஸ்தூரி சொல்லிய போது அதை அனைவரும் ஆமோதித்தனர்…

“பார்த்தியாடீ… இவங்களுக்குப் பேச ஆள் கிடைச்சதுன்னு உட்கார்ந்து கதை பேசுறதைப் பார்த்தியா?...”

“உனக்கு ஏண்டி பொறாமை?... வேணும்னா நீயும் போய் பேசு… அவங்ககூட… உன்னை யாரு வேண்டாம்னு சொன்னா?...” என பட்டென்று மஞ்சரிக்கு பதில் கொடுத்தாள் பாலா…

“அடியே…. அடங்குறியா?... ரொம்பதான்… சரிதான் போடி…” என்று பாலாவை வம்பிழுத்தாள் மஞ்சரி…

“நீ அடங்குடி முதலில்… என்னை சொல்ல வந்துட்டா… ஒழுங்கா ஓடிடு… இல்ல அடிபடுவ… சொல்லிட்டேன்…”

“ஓஹோ… எங்க அடி… அடிடீ அதையும் பார்த்துடலாம்…” என்று மஞ்சரி சண்டைக்கு தயாரான போது, பெரியவர்கள் சிறியவர்கள் ஆறுபேரையும் அழைத்தனர்…

“நாங்க ஆசைப்பட்டபடி கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிட்டு… அதனால அடுத்து நாங்க ஒரு முடிவுக்கு வந்திருக்குறோம்…” என நீலகண்டன் சொல்ல…

“டேய்… தெளிவாதான் சொல்லேண்டா… பாரு… எல்லாரும் என்னன்னு குழம்புறாங்கல்ல…” என்றர் வில்வ மூர்த்தி..

“அந்த குழப்பத்தையும் நீ இப்போ சொல்லாமத்தான விட்டுட்ட வில்வா… சரி விடு… விஸ்வாண்ணா சொல்லுவார்….” என்றார் இந்திரன்…

“அட நீ ஏன்ப்பா… என்னை இழுக்குற?... சிவா சொல்லட்டும்… அதுதான் சரியா இருக்கும்…” என்றார் விஸ்வமூர்த்தியும்…

“அடடா… ஆளாளுக்கு பில்டப் தான் கொடுக்குறீங்களே தவிர, ஒன்னும் சொல்ல மாட்டிக்குறீங்களே….” என்றான் மைவிழியனும் பொறுக்கமாட்டாமல்…

“டேய்… அவசரக்குடுக்கை,… இருடா… சொல்லுவாங்க… ஏன் பறக்குற?...” என அவனை அடித்தான் வ்ருதுணன்…

“டேய்… உங்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன்… அடிக்காதன்னு… குரங்கே… சொன்ன பேச்சை கேட்கவே மாட்டியாடா நீ?...” என விழியன் அவனிடம் சண்டைக்கு செல்ல…

“டேய்… உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்… அவங்கிட்ட சண்டைக்குப் போகாதன்னு… நீ கேட்குறீயாடா ஒருதடவையாச்சும்?...” என அம்பிகா துணாவிற்கு ஆதரவாக பேச,

“ஆஹா… வந்துடுவீங்களே… என்னடா இன்னும் உங்களை இன்னும் ஆட்டத்துல காணாமேன்னு நினைச்சேன்… வந்துட்டீங்களா... நீங்க இப்படியே செல்லம் கொடுத்து இவனை கெடுத்து வைங்க… துணாம்மா…”

“டேய்… என்ன என் அம்மாவ கிண்டல் பண்ணுற?...” என வ்ருதுணன் சண்டைக்கு வர,

“டேய்… இப்போ ஒழுங்கா சிவாண்ணா என்ன சொல்லப் போறாங்கன்னு கவனிங்க… இல்ல இரண்டு பேருக்கும் அடிதான் விழும்… சொல்லிட்டேன்…” என தேவி சற்றே குரல் உயர்த்த…

“ம்ம்ம்மா… நீங்க இந்த குரங்கை சொல்லுங்க… அவன் தான் என்னை வம்புக்கு இழுத்தான்.. நான் எதும் பண்ணலைம்மா…” என மையனும், “இல்ல இல்ல இந்த வானரம் பொய் சொல்லுறான்… நம்பாதீங்க…” என துணாவும் சொல்ல…

“இரண்டு பேரும் இப்போ பேசாம இருக்கப்போறீங்களா இல்லையா?...” என யுவி அதட்டல் போட, இரண்டு பேரும் அமைதி ஆகினர்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.