(Reading time: 8 - 15 minutes)

என்ன தவம் செய்து விட்டேன் – 12 - புவனேஸ்வரி கலைச்செல்வி

ந்த பிரம்மாண்டமான நிறுவனத்தினுள் சீறி பாய்ந்தது சுபாஷின் கார் .. பொதுவாக இதுபோன்ற முக்கியமான வேலைகளின்போது , அவன் யாரையும் தன்னோடு அழைத்து செல்வது வழக்கம் அல்ல. இன்றும் அதேபோல தனியாய்தான் வந்திருந்தான் சுபாஷ் . அவனது வருகை , விக்ரமிற்கு முன்கூட்டியே தெரிவிக்க பட்டு இருந்தது .. இவனெதற்கு தன்னை தேடி வருகிறான் , என்ற கேள்வி மனதை அரித்தாலும் கூட , இன்னும் சில நிமிடங்களில் தெரிந்து விட போவதற்கு ஏன் இப்பொழுதே சிந்திக்க வேண்டும் என்று எண்ணியவனாய் இலகுவாகவே இருந்தான் விக்ரம்..

விக்ரம், தொழிலை பொருத்தவரை சுபாஷிற்கு இணையானவன்.. ஆனால்  குணத்திலோ  சுபாஷின் அருகில் கூட இவனால் நின்றுவிட முடியாது .. நினைத்ததை அடைந்துவிட தேடும் அவ்வழியும் நல்வழி தான் என்று நினைப்பவன் .. அதனால்தான் கொஞ்சமும் கூட யோசிக்காமல் அன்று சைந்தவியின் உயிருக்கு பங்கம் விளைவிக்க நினைத்தான் ..

தன்னை எவ்வளவு ஆசுவாசப்படுத்தி கொண்டாலும் சுபாஷால் தனது இறுகிய முகத்தை இயல்பாக்கி கொள்ள முடியாமல் இருந்தது . சட்டென அவனது நினைவில் வந்து போனாள்  சைந்தவி .. " சைந்துக்காக சுபாஷ் ... அவளுடைய நிம்மதிக்காக " என்று அவனது உள்மனம் நினைவு படத்தவும் , அடுத்தநொடி அவன் முகத்தில் புன்னகை மலர்ந்து விட்டது ..

Enna thavam seithu vitten

" ராட்சசி , எப்படித்தான் அருகில் இல்லாமலேயே என்னை ஆட்டி படைக்கிறா தெரியல " என்று தனக்குள்ளே கூறி கொண்டவன், புன்னகையுடனேயே விக்ரமின் அறைக்குள் நுழைந்தான் .

" உன்னை சும்மா விட மாட்டேன் டா " என்று அவனது சட்டையை கொத்தாக பிடித்து சண்டை போடுவான் என்று பார்த்தால் இவன் சாந்தசொரூபியாக நிற்கின்றானே என்று ஆச்சர்யப்பட்டான் விக்ரம்.

" என்ன மிஸ்டர் விக்ரம் .. உங்களை மீட் பண்ணுறத  விட உங்க முன்னாடி உட்கார அனுமதி வாங்குறது தான் ரொம்பவும் கஷ்டம் போல இருக்கே " என்றபடி வசீகரமாய் புன்னகைத்தான் சுபாஷ் ..

" அ .... அது ..... உட்காருங்க " என்றான் விக்ரம் .. சுபாஷின் இந்த முகத்தை எதிர்பாராததினாலொ  என்னவோ தன்னையும் மீறி அவனை மரியாதைகாவே அழைத்திருந்தான் விக்ரம் .. அவன் அமர்வதற்குள் தன்னிலையை அடைந்தவன் , திமிராகவே

" என்ன சுபாஷ் இந்த பக்கம் , ஏதாச்சும் பண உதவி வேணுமா ? " என்றான் .. அவன் தன்னை சீண்டும்படி பேசுவான் என்பதை சுபாஷ் தெரிந்துதான் வைத்திருந்தான் . அதனால் பொறுமையாகவே

" என் மேல உனக்கு மரியாதை இருக்கலாம் விக்ரம் , அதுக்காக இப்படி நிற்கனுமா  ? வா நீயும் உட்காரு " என்று அவன் இருக்கையை காட்டினான் அவன் ..இறுகிய முகத்துடன் அமர்ந்தான் அவன்..

" ம்ம்ம் சொல்லு என்ன விஷயம் ..?"

" இதை உன்கிட்ட கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன் " என்றபடி அந்த பைலை கொடுத்தான் சுபாஷ்

" என்ன இது ?"

" நீயே பாரேன் " ... சுபாஷ் சாந்தமாய் புன்னகைக்க , விக்ரமிற்கு ஏனோ அது உவர்ப்பாக இருந்தது .. எரிச்சலாய் அந்த பைலில் பார்வையை பதித்தவனின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன ..

" என்ன பிச்சை போடுறியா சுபாஷ் "

" உனக்கு அப்படியா தோணுது ? நான் கூட , நீ என்னை பார்த்து பயந்துட்டியான்னு கேட்பன்னு எதிர்பார்த்தேன் விக்ரம் "

" நீ ..... நீ ஏன் என்னை பார்த்து பயப்படனும் " என்று உளறினான் விக்ரம் ..

" ஆமா, வியாபாரத்தோடு சேர்த்து விக்ரம் சக்கரவர்த்தி கட்டபஞ்சாயத்து வேலையை பார்த்தா , கூட இருக்குறவங்க பயந்து தானே ஆகணும் ?"

" என்ன சொல்லுர ? என்ன கட்டபஞ்சாயத்து ?"

" ஓஹோ உனக்கு எதுவுமே தெரியாதா விக்ரம் ? " என்றான் சுபாஷ் காட்டமாய் .. மனைவியின் வார்த்தைகள் நினைவில் வர மீண்டும் அமைதியானான் ..

" சரி ஓகே .. லேட் மீ பினிஷ் திஸ் ஹியர் .... விக்ரம் லைப் ல வெற்றியை தவிர அழகான  முக்கியமான விஷயங்கள் நிறைய இருக்கு .. உனக்கு எப்படின்னு தெரியல .. ஆனா எனக்கு வெற்றி மீது எந்த மோகமும் இல்லை .. வெற்றி மமதையை தருகிற ஒரு போதை அவ்வளவுதான் .. "

" அப்போ ஏன்..."

" அப்போ ஏன் பிசினசில் போட்டி போடுறேன்னு கேட்க வர்ற அதானே ? என் அப்பா கஷ்டபட்டு முன்னேறின தொழிலை நான் பாதுகாக்குறேன் அவ்வளவு தான் .. ஆனா அது என் குடும்பத்தை பணயம் வைச்சு செய்யணும்னு நான் நினைச்சதே இல்லை .. எனக்கு என் குடும்பமும் நிம்மதியும்தான் முக்கியம் .. ஒருவேளை நான் செத்துட்டா , எனக்காக பணமா அழ போகுது ? நான் சேர்த்து வெச்ச உறவுகள் தான் எனக்காக கண்ணீர் விடும் ..எனக்கு அதுதன வேணும் .. நான் பயத்தில் பேசுறேன்னு நீ நினைச்சா , அப்படியே நினைச்சுக்கோ ..ஐ டோன்ட் மைண்ட் .."

"..."

" தான் செய்த ஒரு காரியத்தை மறைக்க முயல்பவன் தான் பயந்தவன் .. எனக்கந்த பயமில்லை " என்று இருபொருளாய்  பேசினான் சுபாஷ் ..

" இந்த காண்ட்ராக்ட் எனக்கு வேணாம் ... நீதானே ஆசைபட்ட ? நீயே வெச்சுக்க ...அவ்வளவுதான் நான் வந்த வேலை முடிஞ்சது " என்று எழுந்தான் சுபாஷ் ..

" பை " என்று அங்கிருந்து நடந்தவனை தடுக்க கூட தோன்றாமல் அமைதியாய் இருந்தான் விக்ரம் ..

" ஆனா ஒரு விஷயம் விக்ரம் , அதுக்காக உனக்கு வேண்டியதை எல்லாம் இப்படி குறுக்கு வழியில் எடுத்துக்கலாம்னு நினைக்காத .. நாம எதை ஜெயிச்சோம் என்பதை விட எப்படி ஜெயிச்சோம் அதான் முக்கியம் " என்று அழுத்தமாய் கூறி விட்டு அங்கிருந்து சென்றான் சுபாஷ் .. அவன் சென்ற வழியையே பார்த்து மௌனமாய் நின்றான்  விக்ரம் .. அவன் மௌனம் , சமாதானத்திற்கு வழிவகுக்குமா அல்லது அடுத்த  பூகம்பத்தை உருவாக்குமா ? பொறுத்திருந்து பார்ப்போம் ...!

காலை சூரியனின்  கதிரலைகள் முகத்தில் படிய, உறக்கம் களைந்து எழுந்தான் அருள்மொழிவர்மன் .. சாஹித்யாவின் அறையிலேயே தானும் உறங்கிவிட்டதை அப்போதுதான் உணர்ந்தான் ..பார்வையினாலேயே அவளை தேட, அங்கு அவள் இல்லை .. அவன் கொண்டு வந்த சாக்லேட் மட்டும் காணாமல் இருக்கவும் ,"ஹப்பாடா குரங்கு மரத்தில் இருந்து இறங்கி வந்துடுச்சு " என்று சந்தோஷமடைந்தான்  அவன் ..  அவளை தேடி கொண்டே மாடியில் இருந்து இறங்கி வந்தான் அவன் ...

"குட் மோர்னிங் சுமிம்மா "

" குட் மோர்னிங் கண்ணா ... ப்ரெஷ் ஆகிட்டு வா சாப்பிடலாம் " என்று புன்னகைத்தார் அவர் ..

" சத்யா எங்கமா ?"

" அவ அப்போவே கெளம்பிட்டாளே  ...!"

" எங்க ??'

" ஆபிஸ் தான் ... !"

" ஆபிசா , அவளா  "

" ஆமா டா .. உன்னையும் குளிச்சிட்டு வர சொன்னா .. உன்னை வயிறார சாப்பிட வெச்சிட்டு தான் அனுப்பனுமாம் ..மகாராணி உத்தரவு " என்று சிரித்தார் அவர் ...

" ஹூம்கும்ம்ம் ...பிள்ளையையும் கிள்ளி  விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவாளே அவள் " என்றான் அருள் போலியான கோபத்துடன் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.