(Reading time: 8 - 15 minutes)

" ழு கழுதை வயசாகியும் உன்னை நீயே பிள்ளைன்னு சொல்லிக்கிறியே  , அததான்  என்னால் தாங்கிக்கவே முடியல " என்று கூறியப்படி அங்கு வந்தார் ரவிராஜ் ..

" அப்பா எனக்கொரு டவுட்டு "

" தெரியும் , ஏழு கழுதை வயசுன்னா , ஒரு கழுதைக்கு என்ன வயசுன்னு தானே கேட்க போற ? ஏன்டா  , இந்த ஜோக்கை நீ மாத்தவே மாட்டியா ? சுத்த போர் !"

" ஹ்ம்ம்ம்ம் அருள் கொஞ்சம் டவுன் ஆகிட்டா போதுமே , நீங்க கலாய்க்க  ஆரம்பிச்சிடுவிங்களே ... பொழைச்சு போங்க ... சத்யாவை கூட்டிட்டு வந்து வெச்சுக்குறேன் உங்களை எல்லாம் " என்று சிரித்தவன் உற்சாகமாய் ஆபிசிற்கு கிளம்பினான் .. அதே நேரம் சத்யா ஏன் சொல்லாமலே அங்கு சென்றாள்  என்று யோசித்தபடி வானதியை அழைத்தான் அருள் ..

" ஹெலோ நதி நான்தான் "

" நான் நதி இல்ல கடல் பேசுறேன் " என்றாள்  சாஹித்யா குறும்பாய் ..

" ஹே குட்டி குரங்கு !"

" ஏய், கொஞ்சம் மெதுவா பேசுடா காதுல ரத்தம் வந்திடும் போல "

" வந்துட்டாலும் .... ஆமா ஆபிஸ் ல என்ன வேலை இருக்குன்னு மேடம் சொல்லாமல் கொள்ளாமல் போனிங்க ? "

" எனக்கு இங்க ஆயிரம் வேலை இருக்கு , அதெல்லாம் உன்கிட்ட சொல்லனுமாக்கும் ... என்னையும் வானுவையும் டிஸ்டர்ப் பண்ணாதே ..போனை வை " என்று சிரித்தபடி கட் பண்ணினாள்  சாஹித்யா .. மெல்ல வானதி பக்கம்  திரும்பியவள்

" உனக்கு ஒன்னும் நான் இப்படி பேசுறதில் கஷ்டம் இல்லையே ?" என்றாள்  பரிதவிப்பாய் ..

" சத்யா, வானதி இல்லாமல் கூட அருள் இருப்பார் .. ஆனா சத்யா இல்லாமல் இருக்கவே மாட்டார் எனக்கு தெரியும் ,.. எனக்கு இதில் எப்பவும் கஷ்டமில்லை "

" ஐயோ அப்படி எல்லாம் இல்லை..அருளுக்கு நீயும் முக்கியம்  வானதி "

" அதானே உங்க நண்பனை விட்டு கொடுப்பிங்களா ? " என்று சிரித்தாள்  வானதி ..

" மறுபடியும் ஐ  எம் சாரி வானதி ... நேத்து உன் கிட்ட நான் சரியா பேசல ... என்னால டக்குனு அந்த அதிர்ச்சியில் இருந்து வரவே முடியல அதுதான் " என்றாள் சத்யா ..

" ஐயோ போதும் சத்யா .. எத்தனை தடவை  மன்னிப்பு கேட்பிங்க ? பட் அதே மாதிரி அருளையும் மன்னிச்சிட்டா நல்லா இருக்கும் ... ப்ரண்ட்ஸ் குள்ள சண்டைகள் சகஜம் தான் ..எனக்கும் இதில் தலையிட விருப்பம் இல்லைதான் .. ஆனா இருந்தாலும் தெரிஞ்சும் தெரியாத மாதிரி என்னால இருக்க முடியல "

என்றாள்  நிதானமாய் .. அவளையே கூர்ந்து நோக்கினாள்  சாஹித்யா .. தனது மனதில் இருக்கும் காயத்தை இவளுக்கு எப்படி புரிய வைப்பது ? எனினும் இவளும்தான் எத்துனை தெளிவானவள் என்று வியந்தாள் அவள் ..

" எனக்கு உன்னை ஆரம்பத்திலேயே பிடிக்கும் வானதி .. ஒருவேளை நீங்க ரெண்டு பேரும்  காதலிக்காமல் இருந்திருந்து அருளுக்கு பெண் பார்த்திருந்தா என் மனசுல நீதான் நின்னு இருப்ப.,.. உன்னை முதன்முதலில் பார்த்தபோதே , வேலையை பொறுத்தமட்டிலும் நீ அருளுக்கு சரியான ஜோடின்னு நினைச்சேன் .. ஆனா இப்போதான் தெரியுது எல்லா விதத்திலும் நீதான் அருளுக்கு சரியானவள்ன்னு  " என்றாள்  சத்யா உண்மையாய் ..

என்ன சொல்வது என்று தெரியாமல் லேசாய் வெட்கப்பட்டாள் வானதி ..அதற்குள் "சத்யா " என்று அலறல் சத்தம் கேட்டது ..

அது யாருன்னு அடுஹ்த எபிசொட் ல சொல்றேன் .. மனிக்கவும் ப்ரண்ட்ஸ்  ... உடலும் மனமும் கதை எழுதும் நிலையில் இல்லை .. கூடிய விரைவில் சந்திக்கிறேன் அனைவரையும் ...

தவம் தொடரும்

Episode # 11

Episode # 13

{kunena_discuss:838}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.