Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 20 - 40 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
Pin It

08. எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - அன்னா ஸ்வீட்டி

ரேயாவுக்கு எங்கு எத்திசை நோக்கி ஓட வேண்டும் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் ஓடிக்கொண்டு இருந்தாள். இதற்குள் ஆம்னியிலிருந்து இரு தடிமாடுகள் இறங்கி வேறு இவளை துரத்துகிறது.

சாலையின் வலப்புறம் தெரிந்த சந்தில் நுழைந்து மீண்டும் அடுத்து இடபுறம் தெரிந்த தெருவில் நுழைந்து மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடினாள். என்னதான் அவள் அத்லெட்டாக இருந்தாலும், ஆம்னி அவளைப் பிடிக்க எவ்வளவு நேரமாகும்? ஆனால் இப்பொழுதுக்கு ஆம்னி சத்தம் கேட்கவில்லை…

ஆனாலும் இடம் தெரியாத பகுதியில் இவள் ஓடியே தப்பி விட முடியுமா? அந்த தெருவில் நுழைந்ததும் கண்ணில் பட்டது சற்று தொலைவில் வலது ஓரமாக ஒரு சுவர் புறமாக நின்றிருந்த கார்.

Eppadi solven vennilaveசாலையில் சிறுக கசிந்த வெளிச்சத்தில் பளபளக்கிறது அப் புதிய கார். அதன் பக்கவாட்டில் ஒழிந்து கொண்டால்? இருட்டாக இருந்தது அவ்விடம். ஆயிரத்தில் ஒரு வாய்ப்பாக காரின் ட்ரைவர் யாராவது இருந்தால் இவளுக்கு அது லைஃப் லைன்.

அந்த ஆம்னி இந்த தெருவில் நுழையும் முன் இவள் அந்த காரைப் போய் சேர்ந்துவிட வேண்டும். ஆடி கார். உரிமையாளர் எதாவது ஷாப்பிங் போயிருக்க டிரைவர் காரில் காத்திருக்கலாமே?

அருகில் சென்றுவிட்டாள், காரில் மனித அரவமே இல்லை. இருந்தாலும் இங்கு ஒழியலாம். காரின் டிரைவர் இருக்கை கதவுக்கு பக்கத்தில் போய் பம்மினாள்.

இருள்தான், இருந்தாலும்…..ஆம்னி இங்கு வந்தால் வெளிச்சத்தில் இவள் வெளிப்படுவாளா?

இதயம் வாய் பகுதியில் துடிக்கிறது. பயம்…. பயம்…. பயம்…..இவளது இதய துடிப்பின் சத்தமே முரசு போல் அறைந்து இவளை காட்டிக் கொடுத்துவிடுமோ?

இதற்குள் சாலையில் காலடி சத்தம். கேன்வாஷ் ஷூக்கள் தரையில் சற்றே வேகமாக எதையோ தேடியபடியே ஓடி  வரும் சத்தம். அந்த குடிகார தடியனில் எவனோ ஒருவன் இந்த தெருவில் நுழைந்துவிட்டான்….பிரிந்து பிரிந்து தேடுகிறார்களா? அல்லது இவன் பின் அடுத்தவன் வருவானா?

இது என்ன குழந்தைகள் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டமா…? எதை நம்பி இங்கு இவள் ஒழிந்தாள்? யேசப்பா ப்ளீஃஸ் ஹெல்ப் மீ….இப்பொழுது எழுந்து ஓடலாமா?

காலடி சத்தம் மிக அருகில் கேட்கிறது. இப்பொழுது எழுந்து ஓடுவதைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை.

ஒருவிதமான நிசப்தம்.

ஆம்னி இவள் இத் தெருவில் நுழைந்த முனைக்கு எதிர் முனையிலிருந்து இப்பொழுது தெருவுக்குள் நுழைகிறது.

திடுமென  அவளுக்கு பின்னிருந்து அவள் வாயைப் பொத்தி பின்னோடு இழுத்தது ஒரு கை.

ஷாலு வந்துவிட்டாளா என சரித்ரன் அழைத்து கேட்கும் வரையும் ஷாலுவின் சித்தப்பா வீட்டில் எல்லாம் இயல்பாகத்தான் போய்க் கொண்டு இருந்தது. ஒரு வித சந்தோஷ எதிர்பார்ப்பும் கூட, அவர்களுக்கு சரித்ரன் ஷாலு இருவருமே தங்கள் பிள்ளைகள் போலத்தான். அவர்கள் காண வளர்ந்த குழந்தைகள்…

சரித்ரன் கூப்பிட்டு கேட்டதாலேயே ஷாலுவின் பதில் என்னதாய் இருந்திருக்கும் என்பது அவர்களுக்கு புரிந்து போனாலும் அது இறுதியான முடிவல்ல என்றும் அவர்களுக்கு தோன்றியது. தன் தகப்பனுக்கு பயந்து மறுத்திருப்பாள், அவளது தந்தையே சரித்ரனை மணமகானாக சுட்டும் போது அவள் சம்மதித்துவிடுவாள் என்றுதான் எண்ணினர்.

ஆனால் நேரம் செல்ல செல்ல அவர்களுக்கும் பதற்றம் பிடித்துக் கொண்டது. எத்தனை ட்ராஃபிக் என்றாலும் இங்கு வந்து சேர இத்தனை நேரமா?

அவள் மொபைலும் ஸ்விட்ச் ஆஃப் எனவும் அடுத்து என்ன என யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஹாஃஸ்டலுக்கு 7 மணிக்கு மேல் மாணவிகள் யாரும் உள்ளே செல்ல முடியாது…..வெளி கேட்டை லாக் செய்து விடுவர் என்பதால் அவள் அங்கு போயிருக்க வழி இல்லை என அனைவருக்கும் தெரியும்.

எங்கும் தனியாக செல்லும் பழக்கம் இல்லாதவள் எங்கு சென்றிருக்க முடியும்? இருந்தாலும் ஒரு ஊகத்தில் அவளுக்கு பிடித்த இடம் என பீச்சிற்கு சென்று தேடினான் சரித்ரன். தேடாமல் எப்படி இருப்பதாம்? சித்தப்பாவோ சர்ச்சுக்கு அவளை தேடிச் சென்றார்.

ஆனால் அலைந்து திரிந்ததுதான் மிச்சம். அவள் எங்கும் இல்லை.

அவள் எங்கு சென்றிருந்தாலும் பத்திரமாக இருந்தால் இதற்குள் அடுத்தவர் எண்ணிலிருந்தாவது அழைத்திருப்பாளே. சித்தப்பா வீட்டில் தேடுவார்கள் என்று கூடவா அவளுக்கு தெரியாது?

சித்தப்பாவோ கோபத்தில் மகள் தன் தகப்பன் வீடு கிளம்பிவிட்டாளோ என்று எண்ண தொடங்கிவிட்டார். அப்படி அவள் இடையில் போய் நின்று சித்தப்பா வீட்டிற்கு வரும் சரித்ரன் இப்படி செய்தான் என்று அவள் தன் தகப்பனிடம் சொன்னால், ராஜ்குமார் தன் தம்பியை குறித்து என்ன நினைப்பார்? இவர் தன் அண்ணன் முகத்தில் எப்படி விழிக்க?

சரித்ரனை ஷாலுவின் பதில் ஒரு புறம் நோகடித்தால், அவளைக் காணவில்லை என்ற விஷயம் கொன்று குழியில் புதைத்தது.

இதற்காகவெல்லாம் ஒருத்தி இப்படி கோப படுவாளா? பிடிக்கவில்லை எனில் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு போக வேண்டியதுதானே…..இப்படி ஓடி ஒழிந்து கொண்டு எத்தனை பேரை கலங்கடிகிறாள் என முதலில் தோன்றிய எண்ணம், இதனால் தன் அத்தை குடும்பத்திற்குள்  பரச்சனை ஆகிவிடுமோ என்ற வேதனையை தாண்டி அவளுக்கு எதுவும் ஆபத்தோ என்ற நினைவில் அணு அணுவாக செத்துக் கொண்டிருந்தான் அவன்.

சித்தப்பா மகளை  தேடி ரயில் நிலையம் செல்ல, சரித்ரனோ கோயம்பேடு தனியார் பேருந்து நிலையம்…திருநெல்வேலி, தென்காசி செங்கோட்டை செல்லும் ஒவ்வொரு பேருந்தையும் ஓடி ஓடி விசாரித்தான். அம்மார்க்கமாக செல்லும் அனைத்து இரவு பேருந்துகளும் கிளம்பிச் சென்ற பின்னும் அவளைத்தான் காணவில்லை.

அவளை கண்ணால் பார்த்தால் போதும் என்ற நிலைக்கு வந்திருந்தான் அவன். இனி அவளது ஊருக்கே காரில் தேடிச்செல்லலாம் எனவும் அவனுக்கு தோன்ற தொடங்கிவிட்டது. பேருந்து அங்கு செல்லும் முன் இவன் சென்றுவிடுவான்.

அங்குள்ள பேருந்து நிலையத்தில் காத்திருந்தால் பிடித்துவிடலாம். தெய்வமே அவள் ஊருக்குத்தான் சென்றிருக்க வேண்டும்.

சித்தப்பாவிடம் மொபைலில் தன் திட்டத்தை சொல்லிவிட்டு, அவன் தன் காரை தாம்பரம் நோக்கி செலுத்த தொடங்கினான். வழியில் ஏதோ தோன்ற அவள் கல்லூரி விடுதிக்கு சென்றால் அதன் வெளி கேட் அருகில் அவளது பேக்கை பற்றியபடி ஒரு குட்டி உருவம். அவள்தான். அவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவளை அவனுக்கு தெரியுமே!!

பெரிய கல்லூரி வளாகத்தில் ஒரு ஓரத்தில் இருந்தது மாணவியர் விடுதி. அதுவே தனி காம்பவ்ண்ட் மற்றும் உயர கேட்டுடன் இருக்கும்….7 மணிக்கு மேல் மாணவியர் பாதுகாப்பு கருதி கேட் பூட்டப்பட்டு விடும். அதன் பின் மாணவியருமே உள்ளே செல்ல  அனுமதி இல்லை. ஆக செக்யூரிட்டி கேட் பக்கத்தில் அமர்வதெல்லாம் இல்லை.

விடுதிக்கும் காம்பவ்ண்ட் சுவருக்கும் இடையில் சில மரங்களுடன் பெரிய காலி இடம் உண்டு. அங்கு சில நேரம் மாணவிகள் இரவில் வாக்கிங் போவது உண்டு. ஆனால் மற்றபடி காம்பவ்ண்ட் கேட் போல விடுதி கேட்டும் 7 மணிக்கு பிறகு  பூட்டித்தான் இருக்கும் உள்புறமாக.

ஆக மாணவியர் யாராவது வாக்கிங் என விடுதிக்குள் இருக்கும் க்ரவ்ண்டிற்கு வந்தால் ஒழிய கேட்டிற்கு வெளியே காத்திருக்கும் மாணவியைப் பற்றி அறியவோ கதவை திறந்துவிடவோ வழியே கிடையாது.

ஷாலுவுக்கு இது தெரியும். ஆனாலும் அவள் இருந்த மன நிலைக்கு வேறு எதையும் யோசிக்க முடியவில்லை அவளால்.

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4 
 •  Next 
 •  End 

About the Author

Anna Sweety

Latest Books published in Chillzee KiMo

 • AppaAppa
 • DeivamDeivam
 • Kadhal deiveega raniKadhal deiveega rani
 • Oru kili uruguthuOru kili uruguthu
 • Puthagam Mudiya Mayil EragePuthagam Mudiya Mayil Erage
 • Putham puthu poo poothathoPutham puthu poo poothatho
 • Pottu vaitha oru vatta nila - Part - 1Pottu vaitha oru vatta nila - Part - 1
 • Yaar kutravaliYaar kutravali

Add comment

Comments  
+2 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 08 - அன்னா ஸ்வீட்டிmeera moorthy 2015-07-14 11:47
sweet epi anna.........
indha week adhik sweety hero agitaru...... (y)
choc-boy eppadiyo indha epi la action-hero agitaru........ :grin:
shalu vishayathula saran kobapadaradhu (y) but analum shalu vum pavamdhan.....avakitte saran eh sekaram purinjukka sollunge.......
andrew-vasi kum edavadhu problem irukka malar ini enna seiya poa..... :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 08 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-07-14 21:03
Thanks Meera :thnkx: :thnkx: aadhik pistol eduthum sweety hero thaana :lol: saran kopam :lol: nga thaan Meera nadunilamaiya shalukkum support seythurukeenga....saran ungalukku spl thanks solaar :thnkx: malar lov seyya pora :grin: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 08 - அன்னா ஸ்வீட்டிKeerthana Selvadurai 2015-07-13 10:21
Excellent update sweety :clap:

Reyu-vin aabathu kaalathil aadhik seyalpatta vitham (y) athuvum trip la kooda vanthavangalukku inform pannanum nu thoni inform panrathu (y) avanga appa kitaiyum maraikama solarathu (y)

Reyu-vin thanthaikku reyu-vai aadhik-ku katti kodukka aasaiya :Q: or shalu-vaiya :Q: (ean na ninga ippadi twist vaikka kooda chance irukku la :P )

Sarithran kovam :clap: Shaluvirkku thevai than :yes:

Idaiveliye avargalukkul irukkum anbai athiga paduthum..Sarithran pirinthu pona piragavathu Shalu avaludaiya kaadhalai purinthu kolvala :Q:

Malar eppadi athi kita pesa pora :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 08 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-07-13 11:43
:thnkx: keerthu :thnkx: aadik :lol: twist ai neenga guess seyyalaina thaan aacharyam ammu :yes: sarithrn sir unga kovathai vittutaatheenga ;-) :P :grin: exactly apidithaan shaluvai kavilkanumnu ninachuruken :lol: ippave pesida vendiyathaan... :o :D
:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 08 - அன்னா ஸ்வீட்டிSriJayanthi 2015-07-11 15:34
Semma viru viru update. Chasing, finding appadinnu pakkam paranthu pochu. Reyu yaaru unnai ippadi vidaathu karuppu maathiri thuratharathu. Athu yeppadi Aadhik correctaa entry koduththaan.

Shailu kaadhalikkarathu aththanai periya paavama. Ivlo ketta peyar vachirukke athukku. unga appa love vishayathula corrrectaathaan solli valarthirukkaar. Aanal athukku ippadi yellaaraiyum thavikka vittuttu poi irukka vendaam. Arisi mootai maathiri unnai chithapa veetula thalli vittuttu poittan Charan. Next what. Avan nallavan appadinnu realise panna aarambipiyaa.

Malar miss photo aalai paarthaachu. Next yeppadi avan kooda pesa poraangalaa?????
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 08 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-07-13 11:20
:thnkx: :thnkx: Jay :thnkx: :thnkx: aadik entry reason next epila solren Jay :lol: kadhalikirathu evlavu periya paavamnu niraiya books kooda irukuthu Jay :yes: :D true ellortayum proper ah behave seythurukalaam...during separation we realize the value of the person :lol: next epila malar Andrew tta pesa aarambipaanga.. :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 08 - அன்னா ஸ்வீட்டிKalaivani R 2015-07-11 15:03
Chooo Sweet episode :P kuttya olliya nu soningale superrrr.
Na atha thrumba thrumba padichen :lol: Aana sharan kovama poitare :sad: epo marupadi varuvar?? apram Vasi oda villan ah Andrew :Q: ila vera ethavathu twist ah :Q: Suspense vachutinga :-) anyway super episode :clap: (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 08 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-07-12 19:54
:thnkx: Kalai :thnkx: :thnkx: kutty ah olli ya...shalu maathiri thaan neengaluma (y) cute
saranai shalu ponnu kopamaakitu...bt neenga don't worry..kopa pattaalum avar enga poidaporaar :grin: vasi oda villan :eek: ;-) plot ennanu seekiram solren kalai :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 08 - அன்னா ஸ்வீட்டிNithya Nathan 2015-07-11 14:31
superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr ep sweety (y) (y) (y)

தெரிந்துவிட்ட காதல் மறுப்பாய் விலகவிட அதை தேடி செல்கிறான் சரன்

சொல்லப்படாத காதல் தன்னை தேடி எதிர்பாராமல் வர அழைத்து செல்கிறான் ஆதிக்

புரியாத தெரியாத நேசத்தை காத்திருந்து கண்டுவிட்டாள் மலர்.

அந்த மூன்று புள்ளிகளும் சந்திக்கமிடம் எது?

விடை தெரியாத கேள்வி ஒன்று கேள்வியின் நாயகனையே கண்டுவிட்டது. விடை தெரியாத கேள்வியாய் மலர் விடையாய் மாறிவிட விருப்பமிருந்தும் வசீகரன் என்ற பதில் மறுக்கப்பட கேள்வியே தெரியாத(?) விடையை எதிர்பார்த்திருந்தவளுக்கு கிடைக்கவிருக்கும் பதில் என்ன?
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 08 - அன்னா ஸ்வீட்டிNithya Nathan 2015-07-11 20:04
சித்தப்பாவின் அன்பிற்கு பாத்திரமானவன் என்றாலும் அவனை நட்பெனும் கோட்டைத்தாண்டி நினைக்காத ஷாலு (y) (y) (y)

வேற்று ஆண்களை தன்னிலருந்து தள்ளியே வைக்கும் தந்தையின் நன்மதிப்பையே பெற்றவனாக இருந்தாலும் தன் காதல் ஆசைக்கு இறக்கை கட்டி பறந்துவிடாமல் ஆதிக்கை எல்லையோடு வைத்து பழகும் ரேயா (y) (y) (y)

கோபம்
ஷாலுவின் கோபம் அவளுக்க அறிவை இழக்கச் செய்து பலரை தவிப்பில் ஆழ்த்தியது.

சரனின் கோபம் ஷாலுவின் பாதுகாப்பிற்கு அவளை பத்திரப்படுத்த உதவியது.

ஆதிக் .
எப்பொழுதும் போல சூழ்நிலைக்கு ஏற்றாற்போல
நடந்து கொள்ளும் நாயகன். ஒரு பெண்ணிற்கு தன் மனங் கவர்ந்தவளிற்கு ஆபத்து என்றபோதும் தன் கடமையையும் மறக்காது பொறுப்பையும் மறக்காது செயற்படும் திறன் (y) (y) (y)

ரேயுவை பாதுகாப்பது காதலனாய் அவன் கடமை என்றால் அவளை துரத்தி வந்தவர்களை செயற்படவிடாது வேறு யாருக்கும் தொல்லை ஏற்படாது தற்காலிகமாய் எனினம் முடக்குவது காவலனாய் அவனது கடமை.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 08 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-07-12 19:50
shalu Reya rendu perum neenga sonna mathiriyethaan....ellai thaanda kkoottu paravai...ingu koodu irupathu avarkal manathirku :lol: :thnkx: kopam :lol: Aadik :lol: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 08 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-07-12 19:46
:thnkx: Nithi :thnkx: :thnkx: moondru pulliyum santhikkum idathukku seekiram namma poiduvom Nithi :yes: :lol: pathil vanthukitte irukuthu :lol: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 08 - அன்னா ஸ்வீட்டிSharon 2015-07-11 13:53
Thrilling aana episode Sweety mam (y) (y) ..
Eppavum Adhik dan score pannuvaru, but indha epi ku highlight Saran dan ;-) .. Paavam payapulla.. ippadi pannitiyae Shalu nu kaekanum nu thonichu 8) ..
Saran koba padarathulaium oru care theriyudhu :) Inni Shalom- Saran ku nadula enna nadakumo :Q:
Unga heroes ellam sema alert, Correct ah vandhu kaapathuna Adhik ku :clap: .. but Adhik- Shalu :no:
Villan Doctor ah??? Yaaru pa neenga Andrew :Q:
Eagerly Waiting for ur next update :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 08 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-07-12 19:43
:thnkx: Sharon :thnkx: :thnkx: Saran kopam pidichutta :D :thnkx: shalom will be established btween saran and shalu :grin: heroine ai protect pandratha vida herokku vera enna velai :grin: Aadik shalu prachanai ennakuthunnu paarpom ;-) doctor villana :Q: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 08 - அன்னா ஸ்வீட்டிJansi 2015-07-11 13:08
Super epi Sweety
Paraparappaa irunatatu
Shaalu kuzappam, Sharitran kobam (y)
Reyu scenes Aadik hero rule-i meeraamal correctana neram vantu kaapaatidaar.
Reyu appa plan padi oru velai Aadik-i Shaalukaaga yosikiraangalonu oru doubt :Q:

Andrewku malar-i adayaalam teriyuma? Illai avar photo vaithu veru yaarum vilayaaduraangalaa?

Manathirku pidithamaana anta nabarai neril santhitatum Malar expression ennavaa irukum?
Very eagerly waiting for next epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 08 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-07-11 13:28
:thnkx: Jansi :thnkx: :thnkx: naan pona epi kke unga commentai romba miss seythen..ippo unga comment paarkavum padu happy :dance: :thnkx: shalu saran :lol: :thnkx: aadik hero rule padi vanthuttar :yes: :grin: unga doubt romba correct Jansi :yes: Andrew malar pahi seekiram solren :lol: Malar expression net epila solren :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 08 - அன்னா ஸ்வீட்டிJansi 2015-07-11 16:24
Quoting Anna Sweety:
:thnkx: Jansi :thnkx: :thnkx: naan pona epi kke unga commentai romba miss seythen..ippo unga comment paarkavum padu happy :dance: :thnkx: :


Oh last epi comment seyya miss aagitu. Aanaal vazakkam pola udaneye padichirunthen.(Friday evelirunte unga epi irukunnu njaabagam vantidum) :yes: Sila neram summa one line comment elutha manasu varaathu & detaila elutha tireda somberithanama irukum..ataan reason. :P

Anta epila namma 3 heroines m romba kuzappamaa iruntaanga atu kuripida takka similarity a iruntatu. Maatavan Malar padika poratai patri keddatum kobap padura scene konjam nerudala iruntatu. Oruvelai sila varudam munthaya situation athunnu kuripida virumbareenga nu ennik konden.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 08 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-07-12 19:16
Thanks Jansi :thnkx: so sweet... :thnkx:
vasikaran kopa padurathu 1990 la apdi iruntha families naan paarthiruken....so 1990 ngra feelm irukkum , athu inga story plotukkum thevaiyaaka irukkumngra thaala athai eluthiruken... :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 08 - அன்னா ஸ்வீட்டிManoRamesh 2015-07-11 10:00
Semma thik thik epi.
Sarithran reaction pakka en support saran Ku than. Shalu oda kobam ellam ok but chittappa veetukvathu poi irukanum.
Reyu Appa enna ninaikirar. Aadik shalukum senior o.
Athn avanga prachanaiku reason ah.
First pistol semma.
Malarvizhi enna panna povanga.
Enaku ennamo reyu chittappa suicide pannalayo nu oru doubt namma aadik than clarify pannanum
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 08 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-07-11 11:51
:thnkx: Mano :thnkx: :thnkx: thik thik aadhik :grin: :thnkx: hai ella ponnungalukkum her :thnkx: o kopa padurathu thaan pidikuthe ;-) appo pasanga kopa padaama ennaseyvaangalaam :grin: aadik shaalukku almost same age months la aadik senior ah irupaar..btw neenga guess seyra track thaan appa plan :yes: pistol :grin: Malar will fall in love nu ninaikiren ;-) exactly aadik thaan chithappa issue avi investigate seyya poraar :yes: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 08 - அன்னா ஸ்வீட்டிchitra 2015-07-11 07:57
super epi, namma valakamana pistol entry kuduthithadu, good, appuram sarithiran kovam classic, oru marriage proposal ivalo raction kudutha appadithan thakkanum, vasikaran deposit kaliyaa :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 08 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-07-11 09:22
Thanks Chithu :thnkx: :thnkx: ithuthaan actually naan eluthina first pistol scene...ennamo ithu romba pidichuttu enakku...athoda pinvilavu thaan thodar pistols.. ;-) :D sarithran kovam pass mark vaangittu :dance: vasikaran deposit kaliyaakuma :Q: seekirame solren Chithu :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 08 - அன்னா ஸ்வீட்டிThenmozhi 2015-07-11 00:52
super update Anna (y)

Enaku intha epi-la Sarithran kobam than romba pidichirunthathu :) Shalu kiteyum athe pola impact irukumaa???

Athik super-aa Shreyavai kapathitar. Good boy :)

Malarvizhi photovil parthavar per Andrew-a epadi photo maari poyirukkum :Q: :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - 08 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2015-07-11 09:13
Thanks a lot Thens :thnkx: :thnkx: Sarithran kopam pidichutha :lol: Shalutta kandipa impact irukum :yes: :lol: Aaadik :grin: Photo maaruna kathai seekiram solren Thens :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote

Latest Updates

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

KNY

KTKOP

PVOVN2

PMM

IOKK2

VTV

IOK

NIN

EEKS

KET

KKP

POK

EMS

NSS

NSS

KiMo

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top